ஆலிப் அலி (இஸ்லாஹி)
நகரங்களிலும் பஸ் நிலையங்களிலும் சிலர் தமக்கென்றும் தமது தாய், தந்தை, சகோதரன், மனைவி அல்லது பிள்ளை என யாருக்காவது பெரியதொரு நோய் இருப்பதாகவும் அதனைக் குணப்படுத்த பெருமளவு நிதி தேவைப்படுவதாகவும் சில தாள்களையும் பத்திரிகைப் பிரதிகளையும் எடுத்துவந்து காட்டுவர். பின்னர் அந்நோயைக் குணப்படுத்துவற்கான தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு பஸ் வழியே ஏறி இறங்கவேண்டியுள்ளதென்றும் அதற்கு உங்களது உதவியை நாடுவதாகவும் கூறி பணம் கறப்பர். இன்னும் சிலர் தாம் தூரப் பிரதேசத்திலிருந்து தொழில் தேடி வந்ததாகவும் தமது மூட்டை முடிச்சுக்களுடன் அனைத்தும் தொலைந்து போனதாகவும் கூறி உணவுக்கும் ஊர் திரும்புவதற்கென்றும் கொஞ்சம் பணம் கேட்பர்.
வழக்கமாக பஸ் பிரயாணத்தில் ஈடுபடுவோர் இவ்வாறான நிகழ்வுகளை அதிகம் கண்டிருப்பீர்கள். அதுமட்டுமன்றி இவ்வாறு பொதுமக்களிடம் பணம் கறந்துவிட்டு மாலைநேரங்களில் நகர இடுக்குகளில் போதையில் அவர்கள் இருக்கும் நிலையையும் கண்டிருப்பீர்கள். தற்போது இந்நபர்கள் பணம் கறப்பதற்காகப் புதியதொரு உத்தியைக் கையாழுகின்றார்கள்.
அதாவது இதுபோன்ற நபர்கள் தூரப்பகுதிகளிலிருந்து வருகின்ற வாகனங்களுக்கு முன்னால் பாய்ந்து சிறிய காயங்களை ஏற்படுத்திக்கொண்டு வலி பொறுக்க முடியாததுபோல் கத்துவார்கள், கதறுவார்கள். பின்னர் அடிபட்டவருக்கு உதவுவதற்காக ஏழவே ஏற்பாடுசெய்யப்பட்ட அவரது சில நண்பர்கள் அவ்விடத்திற்கு விரைவார்கள். விடயத்தைப் பெரிதாக்குவார்கள். வாகன சாரதிக்கு திட்டித் தீர்ப்பார்கள். சாரதியோ செய்வதறியாது தினறி நிற்கும் வேளையில் விபத்துக்குள்ளானவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவேண்டுமென்று பெரியதொரு தொகையை சுருட்டிக்கொண்டு நகர்ந்துவிடுவார்கள்.
இதுபோன்ற நிகழ்வுகள் அண்மையில் பல இடங்களிலும் பரவலாக நடைபெற்றுள்ளது. அண்மையில் பானதுரைப் பகுதியில் இதுபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்தது. அடிபட்டவரது நண்பர்கள் அங்கு வரவே சாரதி 119 இற்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். அவ்வளவுதான் அனைவரும் மாயமாய் மறைந்துவிட்டார்கள்.
பொதுமக்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...