"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

27 July 2011

ஒட்டகச் சிவிங்கியின் அதிசயம்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

விலங்குகளிலேயே மிகவும் உயரமான உயிரினம் இந்த ஒட்டகச் சிவிங்கிதான். இதனை ஆங்கிளத்தில் ஒட்டகச் சிவிங்கி "Giraffe" என அழைப்பர். இவ்விலங்கில் அல்லாஹ் எவ்வாறான அத்தாட்சிகளை எமக்குக் காண்பிக்கின்றான் என்று சற்று அவதானிப்போம்.

ஒட்டகச் சிவிங்கியின் உடற்தோற்றம் பார்ப்பதற்கு மிகவும் அழகானது. நீளமான கால்கள், நீண்ட கழுத்து, குட்டையான வால், தலையில் இரண்டு சிறிய கொம்புகள், பார்ப்பதற்கும் இயல்பிலேயும் காணப்படுகின்ற சாந்தமான அப்பாவியான தன்மை அத்தோடு அவற்றின் தோலில் காணப்படுகின்ற வெள்ளை நிறக் கோடுகளும் பழுப்பு நிறப் பெட்டி பெட்டியான வடிவங்களும் ஒட்டகச் சிவிங்கிகளுக்குத் தனியானதொரு தோற்றத்தை வழங்குகின்றன.

இவற்றின் கால்களும் கழுத்தும் பாலைவன ஒட்டகைகளினது கால்களையும் கழுத்தையும் போன்று நீண்டு உயரமாக இருப்பதனால்தான் தமிழில் இவற்றுக்கு ஒட்டகச் சிவிங்கிஎனப் பெயர் வழங்கப்படுகின்றது.

இந்த ஒட்டகச் சிவிங்கிகள் ஆப்ரிக்காக் கண்டத்தில் உள்ள செவானா (Savanna) என்ற காடுகளிலேயே அதிகமாக வாழ்கின்றன. அதுவல்லாமல் மிகக் குறைந்த அளவில் வேறு சில நாடுகளிலும் வாழ்கின்றன. இவ்விலங்குகளின் உயிர்வாழ்க்கைக்குத் தோதுவான தட்ப வெப்பமும், இவை விரும்பி உண்ணும் அகாஸியா (Acacia) எனும் உணரமான மரங்களும் சமனான தரைத்தேற்றமும் ஆப்ரிக்காவில் காணப்படுவதால்தான் அங்கு ஒட்டகச் சிவிங்கிகளது உருவாக்கம் அதிகமாக உள்ளது.

ஆண் ஒட்டகச் சிவிங்கிகளைவிடவும் பெண் ஒட்டகச் சிவிங்கிகள் உயரத்திலும் நிறையிலும் குறைவானவையாகும். பொதுவாக ஓர் ஆண் ஒட்டகச் சிவிங்கி 19 அடி உயரத்தையும் 2,400 முதல் 3,000 பௌண்ட்ஸ் (pounds) வரையிலான நிறையையும் கொண்டிருக்கும். அதுவே ஒரு பெண் ஒட்டகச் சிவிங்கி 16 அடி உயரத்தையும் 1,600 முதல் 2,600 பௌண்ட்ஸ் வரையிலான நிறையையும் கொண்டிருக்கும்.

இவை உயரமான மரங்களில் உள்ள இலை குலைகளையும் மிகவும் சுலபமாகப் பற்றி உண்டுவிடுகின்றன. இதற்கு உயரமான அவற்றின் கால்களும் நீண்ட கழுத்தும் நீளமான நாக்கும்தான் உதவிசெய்கின்றன. தரையில் இருக்கும் உணவுகளை உட்கொள்ள இவை சற்று சிறமம்படவேண்டியுள்ளது. அதனால் கூடுதலாக உயரமான மரங்களில் உள்ள இலை குளைகளையே உண்கின்றன. இங்கு அல்லாஹ்வின் படைப்பாற்றலின் ஒரு நுணுக்கத்தை எம்மால் அவதானிக்க முடியும். 

அகாஸியா மரங்கள் ஆப்ரிக்காப் பகுதிகளில்தான் கூடுதலாக வளர்கின்றன. ஆப்ரிக்காவின் தட்ப வெப்பம்தான் குறித்த தாவரம் சிறப்பாக வளர உதவுகின்றது. இவை உயரமாக வளரக்கூடிய ஒரு தாவரமும்கூட. ஒட்டகச் சிவிங்கிகளது விருப்பமான உணவும் இந்த அகாஸியா தாவரம்தான். ஒட்டகச் சிவிங்கிகள் உயரமான விலங்குகள் என்பதால் உயரமாக உள்ள தாவரங்கள் மீது நாட்டம் கொள்கின்றன. ஆக அகாஸியா தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆப்ரிக்காவின் கால சூழ் நிலை காரணமாக உள்ளது. 

ஒட்டகச் சிவிங்கிகளின் வாழ்க்கைக்கு அகாஸியா தாவரங்களும் ஆப்ரிக்காவின் கால சூழ்நிலைகளும் காரணமாயுள்ளன. ஆப்ரிக்காவின் வெப்பத்தைத் தாங்கும் விதத்தில் அவற்றின் தோல்களும் சற்று கடினமான விதத்தில் அமையப்பெற்றுள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றில் தங்கி மற்றொன்றின் ஆதரவோடு சரியாகப் பொருந்தி இருக்கும் விதத்தில் அல்லாஹ் எவ்வாறு அமைத்துள்ளான் என்று பார்த்தீர்களா? “அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன். தீர்க்கமான அறிவுடையவன்.” (33:40;)

ஒட்டகச் சிவிங்கிகள் எப்படி தரையில் உள்ள உணவை உட்கொள்ள சிரமப் படுகின்றனவோ அதேபோன்று அவை நீர் அருந்தும்போதுகூட சற்று சிறமப் படுகின்றன. உண்மையில் எமது பார்வைக்கு அது சிறமமாகத் தெனிபட்டாலும் ஒட்டகச் சிவிங்கிகளைப் பொறுத்தவரையில் அது மிகவும் சுலபமான ஒரு விடயம். அவை நீர் குடிக்கும் காட்சி பார்க்கும் எமக்கு மிகவும் விசித்திரமாக இருக்கும். ஆற்றோரத்திலோ அல்லது குலக்கரையிலோ ஒட்டகச் சிவிங்கிகள் வந்து வரிசையாக நின்று கொள்ளும். பின்னர் தமது முன், பின் கால்களை இருபுறமாக அகல விரித்து கழுத்தை முன்னே நீட்டி நீர் பருக ஆரம்பிக்கும். ஒரே தடவையில் இவை பெருமளவு நீரைப் பருகிவிடுகின்றன.

இவை பகற்பொழுதுகளில் ஓய்வெடுப்பதற்காக நிலத்தில் சாய்வதில்லை. மாறாக நின்றுகொண்டேதான் இளைப்பாறுகின்றன. ஏனெனில் கீழே அமர்ந்திருக்கும் போது ஏதும் ஆபத்துக்கள் ஏற்பட்டால் விரைவாக எழுந்துகொள்ள முடியாது. சற்று தாமதித்தே எழுந்து நிற்க முடிகின்றது. எனவே நின்ற நிலையில் இளைப்பாருகின்றன. ஆனாலும் இரவு நேரங்களில் தரையில் சாய்ந்து தூங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளன. அதுவும் ஒரு இரவில் சுமார் 4 மணிநேரங்கள் மாத்திரமே தூங்கவும் செய்கின்றன.

வேட்டையாடும் மிருகங்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அல்லாஹ் இவற்றுக்குச் சிறப்பானதொரு பாதுகாப்பு ஆயுதத்தைக் கொடுத்துள்ளான். அதுதான் பலமான நீண்ட அவற்றின் கால்களாகும். சிவிங்கிகள் மிக உயரமாக இருப்பதாலும் கழுத்து உயரே நீண்டிருப்பதாலும் கூர்மையான கண்களாலும் செவிப்புலன்களாலும் தூரத்தில் எதிரிகளின் நடமாட்டத்தை விரைவில் இவற்றால் இனங்கண்டுகொள்ள முடியும். எனவே எதிரி விலங்கு தம்மை நெருங்கும் முன்பே நீண்ட கால்கள் உள்ளதால் மிகவேகமாகத் தப்பியோடவும் முடியும். அல்லது எதிரி விலங்கு அருகே நெருங்கினால் கூட அவற்றின் தலை நொருங்கிவிடும் அளவுக்கு ஒட்டகச் சிவிங்கிகளின் கால்களால் ஒரு உதைவிட்டாலேபோதும். அவ்வளவு பலம் ஒட்டகச் சிவிங்கிகளின் கால்களில் காணப்படுகின்றது. இதனால்தான் ஒட்டகச் சிவிங்கிகளுக்கு எதிரிகளும் மிகக் குறைவு. எப்போதாவது ஒரு முறை சிறிய ஒட்டகச் சிவிங்கிகள் சிங்கம் அல்லது புலிக்கு இறையாவதுண்டு.

அல்லாஹ் ஒட்டகச் சிவிங்கிகளுக்குப் பலமானதோர் இதயத்தைக் கொடுத்துள்ளான். ஏனெனில் உயரமானதோர் இடத்தில் பொறுத்தப்பட்டுள்ள நீர் தாங்கிக்கு கிணற்றிலிருந்து நீரைச் செழுத்தவேண்டுமானால் எவ்வளவு சக்திவாய்ந்த ஒரு தண்ணீர் மோட்டார் பொறுத்தப்பட வேண்டும். அதேபோன்றுதான் மிக உயரத்தில் உள்ள ஒட்டகச் சிவிங்கியின் மூளைக்கும் கீழே உள்ள கால்களுக்கும் இதர உறுப்புகளுக்கும் இரத்தத்தைப் பம்பியடிக்க இதயம் பலமாகச் செயற்படக்கூடியதாகவும் வேகமாகத் தொழிற்படக்கூடியதாகவும் இருக்கவேண்டும். அவ்வாறுதான் ஒட்டகச் சிவிங்கிகளின் இதயத்தை அல்லாஹ் பலமான ஒன்றாகப் படைத்துள்ளான்.

ஒட்டகச் சிவிங்கி;கள் எப்போதும் கூட்டமாகத்தான் வாழ்கின்றன. அத்தோடு அவை ஓரிடத்தில் தங்கி வாழ்வதுமில்லை. தமது தலைமையைப் பின்துயர்ந்து எப்போதும் பிரயாணித்துக்கொண்டேதான் இருக்கும். பிரயாணத்தின்போது நீரருந்தும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும்கூட நீண்ட நாட்களுக்கு நீர் அருந்தாமல் பிரயாணிக்க முடியும். ஒட்டகச் சிவிங்கிகளால் ஒலியெழுப்ப முடியாது. ஆனால் ஏதோவொரு விதத்தில் அவை தமக்கிடையே உறவாடிக்கொள்கின்றன.

ஆப்ரிக்கா வெப்ப வலய நாடு என்பதால் அங்குள்ள தாவரங்களையும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் கடினமாகவும் முட்கள் நிறைந்ததாகவுமே அல்லாஹ் படைத்துள்ளான். இத்தாவரங்களைக்கூட மிக எளிதான முறையில் உண்ணக்கூடிய விதத்தில் அல்லாஹ் ஒட்டகச் சிவிங்கிகளின் உடலுறுப்புக்களைப் படைத்துள்ளான். பாருங்கள் அல்லாஹ் ஒவ்வொன்றையும் எவ்வளவு நுணுக்கமாகப் படைத்துள்ளான் என்று. இலைகுலைகளை சுருட்டி எடுத்து வாயினுள் செலுத்த இலகுவாக அல்லாஹ் அவற்றின் நாக்குகளை நீளமாகவும் கடினமானதாகவும் அமைத்துள்ளான். இவற்றின் நாக்கு 18 அங்குலம் நீளமானது. அத்தோடு ஒட்டகச் சிவிங்கிகளின் இறைப்பைகூட எவ்வளவு கடினமான உணவையும் அரைத்து சமிபாடடையச் செய்தும விதத்தில் அமையப்பெற்றுள்ளது.

பொதுவாக கொம்புள்ள பிற விலங்குகள் அனைத்துக்குமே அவை பிறந்து சிறிது காலத்தில்தான் கொம்பு முளைக்கின்றது. ஆனால் ஒட்டகச் சிவிங்கிகளின் அற்புதம் அவை தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும்போதே கொம்புடன்தான் பிறக்கின்றன. பிறக்கும்வரை மென்மையாக இருக்கும் கொம்புகள் பிறந்து சில நாட்களில் கடினத்தன்மை பெறுகின்றன. இக்கொம்புகள் 5 அங்குலம் வரை வளர்கின்றன. அடுத்தது பிற விலங்குகளில் ஆண் விலங்குக்கு மட்டுமே கொம்பு காணப்படும். ஆனால் இங்கு ஆண் பெண் இரண்டுக்குமே அவற்றின் தலையில் இரண்டு கொம்புகள் காணப்படுகின்றன. இரண்டு ஆண் ஒட்டகச் சிவிங்கிகள் சண்டையிட்டுக்கொள்ளும் போது ஒவ்வொன்றும் தம்மைத் தற்காத்துக்கொள்ளவும் மற்றையதைத் தாக்கவும்தான் இதனை பயன்படுத்துகின்றன.

ஒட்டகச் சிவிங்கிகள் பிறந்து ஐந்தாவது வயது முதலே இணப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடுகின்றன. ஒரு குட்டி ஒட்டகச் சிவிங்கி 15 மாதங்கள் தாயின் வயிற்றில் வளர்ந்துவிட்டுத்தான் இப்பூவுலகைத் தரிசிக்கின்றது. குட்டி ஒட்டகச் சிவிங்கி பிறக்கும்போது 6 அடி உயரத்தில் இருக்கும். பிறந்து சில மணிநேரங்களிலேயே குட்டி ஒட்டகச் சிவிங்கி; எழுந்து தள்ளாடித் தள்ளாடி நடக்கவும் தாயின் பால் மடியைத் தேடிச் சென்று பாலருந்தவும் துள்ளிக் குதிக்கவும் ஆரம்பிக்கின்றது. முதல் வாரத்தில் தாய் குட்டி ஒட்டகச் சிவிங்கிக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றது. அதன் பின்னர் குட்டி படிப்படியாக சுயமாக உணவு உண்ணவும் தனித்து இயங்கவும் பலகிக்கொள்கின்றது. ஒரு பெண் ஒட்டகச் சிவிங்கி அதன் முழு வாழ் நாளிலும் 12 குட்டிகளை மாத்திரமே இடுகின்றது. வருடத்திற்கு ஒரு குட்டிதான் இட முடியும். இவ்வாறு ஒட்டகச் சிவிங்கி ஆரோக்கியமான  விதத்தில்  25 வருடங்கள்வரை உயிர் வாழ்கின்றன.

டாவினின் பரிணாமவாதக் கோட்பாட்டின்படி ஆரம்பத்தில் ஒட்டகச் சிவிங்கிகளும் தற்போதிருக்கின்ற ஆடு, மான் போன்றுதான் இருந்துள்ளன. ஆனால் படிப்படியாக தரையிலும் தமது உயரத்திற்கும் இருந்த தாவரங்கள் தீர்ந்து போகவே ஒட்டகச் சிவிங்கிகள் அதற்கு மேலால் உள்ள உணவைப் பெறுவதற்காக எட்டி எட்டி காலப்போக்கில்  அவற்றின் கழுத்து நீண்டு கால்கள் நீண்டு உயர்ந்துவிட்டன. உண்மையில் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான விளக்கம் என்று பாருங்கள். அப்படியானால் இன்று ஆடு, மாடு, மான், மறைகள்கூட ஒட்கச் சிவிங்கிபோன்றுதான் உயர்ந்து நீண்டிருக்கவேண்டும்.

ஆரம்பத்தில் அல்லாஹ் எவ்வாறு இதனைப் படைத்தானோ அதேபோன்றுதான் இன்று வரைக்கும் இவ்வுயிரினங்கள் காணப்படுகின்றன. அவன் (தான்) அல்லாஹ், படைப்பாளன், (அவனே படைப்பினங்களை ஒழுங்குபடுத்தி) உண்டாக்குகின்றான். (அவனே படைப்பினங்களின்) உருவத்தை அமைக்கின்றான். அவனுக்கு அழகான பெயர்களிருக்கின்றன. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அவனையே துதிசெய்கின்றன. அவனே யாவரையும் மிகைத்தோன். தீர்க்கமான அறிவுடையோன்.” (59:24)

குறிப்பு : ஜுலை அகரம் சஞ்சிகையில் பிரசுரமானது.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...