"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

28 August 2011

இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவை 1.9 மில்லியன்களே!

ஆலிப் அலி (இஸ்லாஹி)

எமது கண்களுக்குப் புலப்படுவதைவிடவும் நாம் அறிந்திருப்பதைவிடவும் இப்பூமியின் விசாலத்தன்மையானது மிகப் பிரம்மாண்டமானது. இங்கு நான் பூமியின் பரப்பளவை வைத்து இதனைக் கூற விளையவில்லை. பின்னால் நீங்கள் வாசிக்கப்போகின்ற பத்திகளிலிருந்து இதனை விளங்கிக் கொள்வீர்கள்.

எமது பூமியில் 9 மில்லியனுக்கும் அதிகமான உயிர் வகைகள் (Species) காணப்படுகின்றன. ஆனால் அவற்றில் கால்பங்கையே (1/4) ஐயே மனிதன் கண்டுபிடித்துள்ளான். அதாவது இதுவரை 1.9 மில்லியன் வரையான உயிரினங்களே விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் கண்டுபிடிக்கப்படாத எத்தனையோ கோடி உயிரினங்கள் நாம் வாழும் இதே பூமியில் இதே நிலப்பரப்பில் எம்மைச் சூழ வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. நாம் அறியாத எத்தனையோ உயிரினங்கள் எமது வீட்டின் கொல்லைப் புறத்திலும் இருக்க முடியும் என்பதுதான் விஞ்ஞானிகளின் கூற்று.

உண்மையிலேயே நாம் இந்த சிக்கல்நிறைந்த ஆனால் வண்ணமயமான, அற்புதமான எமது பூமியைவிட்டும் பொடுபோக்கு நிறைந்தவர்களாகவே இருக்கின்றோம் என்று கெனடாவின் Dalhousie பல்கலைக்கழகத்தின் உயிரியற்துறைப் பேராசிரியர் Boris Werm குறிப்பிடுகின்றார்.

இந்த அற்புதங்களை நாம் மக்கள் முன் எடுத்துக்காட்டவேண்டும். அது நாம் வாழும் இப்புவியைப் பற்றிய வித்தியாசமானதொரு சிந்தனையை அவர்களிடத்தில் தோற்றுவிக்கும். என்ற அடிப்படையில் விஞ்ஞான உலகம் இன்று முனைப்புடன் பல்வேறு தேடல்களில் ஈடுபட்டிருக்கன்றது.

பூமியானது 79% நீர்ப்பரப்பையும் 21% நிலப்பரப்பையும் கொண்டுள்ளது. இதில் மனிதன் வாழ்வது நிலப்பரப்பிலேயே! அந்நிலப்பரப்பிலும் வறண்ட பாலைவனங்கள் காணப்படுகின்றன. கடுங்குளிருடைய துருவப் பிரதேசங்கள் அமைந்துள்ளன. மனிதன் இதுவரை உட்புகாத உட்புக முடியாத அடர்ந்த வனாந்தரங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் கழித்துவிட்டுப்பார்த்தால் மிகவும் சொற்பமான நிலப்பரப்பிலேயே மனிதன் வாழ்கின்றான்.

இந்த சொற்ப நிலப்பரப்பிலேயே இத்துனை உயிரங்களைக் கண்டுபிடித்துள்ளான் என்றால கண்டுபிடிக்கப்படாத எத்துனை உயிரினங்கள் எப்படி எத்தகைய தோற்றத்தில் எங்கெல்லாம் வாழ்கின்றனவாக இருக்கும். சிந்தித்துப் பார்க்கவேண்டிய விடயம்.

தேவையில்லாமல் இவற்றுக்கெல்லாம் பொன்னான காலத்தையும் நேரத்தையுமு; செலவுசெய்கிறார்களே! சிலபோது உயிரையும் அநியாயமாய் விடுகின்றார்களே! என தொழில் உலகத்தில், இயந்திர வாழ்க்கையில் மூழ்கிப்போன பலரும் இத்தேடல் முயற்சிகளில் ஈடுபடுவோரைப் பார்த்து நகைப்பதனையும் எம்மால் காணமுடிகின்றது. ஆனால் இதன் தாத்பரியத்தை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை என்பதே உண்மை.

இறைவனின் அத்தாட்சிகளை கண்களால் பார்த்து, அவை பற்றி காதினால் கேட்டு, பின்பு ஆராய்ந்து உள்ளத்தினால் உணர்வதில் ஒரு அளாதியான இன்பம் இருக்கின்றது. இதன் மூலம் அல்லாஹ்வின் பால் நெருக்கம் ஏற்படுகின்றது. புவியில் பரந்து திரிந்து வல்லவனின் படைப்பாற்றளின் நுணுக்கங்களைப் பார்க்குமாறு அல்லாஹ் அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் கூறுகின்றான்.

பூமியில் நீங்கள் சுற்றித்திரிந்து படைப்பை எவ்வாறு அவன் ஆரம்பித்து பின்னர் மற்றொரு உற்பத்தியை (எவ்வாறு) அவன் உண்டு பண்ணுகின்றான் என்பதைப் பாருங்கள். (29:20)

இவ்வாறு படைப்புக்களைப் பற்றி ஆராய்ந்துணரும் அறிவாளிகள்தான் அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்கள் என்பதையும் அல்குர்ஆன் கூறுகின்றது. அடியார்களில் அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்கள் நிச்யமாக அறிவார்ந்தவர்களே!

அல்லாஹ் வழங்கியிருக்கும் புலனுருப்புக்களை வைத்து யார் சற்றேனும் பார்த்து, கேட்டு, சிந்தித்து, உணரவில்லையோ அவர்களது நிலமையைப் பற்றியும் அல்லாஹ் கூறுகின்றான்.

நிச்சயமாக ஜின்களிலும் மனிதர்களிலும் அநேகரை நரகத்திற்கென்றே நாம் படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இதயங்களிருக்கின்றன, அவற்றைக்கொண்டு அவர்கள் உணர்வு பெறமாட்டார்கள். அவர்களுக்குக் கண்களிருக்கின்றன, அவற்றைக்கொண்டு (அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப்) பார்க்கவும் மாட்டார்கள். அவர்களுக்குக் காதுகளும் உண்டு, அவற்றைக்கொண்டு நல்லவற்றைக் கேட்கவும் மாட்டார்கள். அவர்கள் கால்நடைகளைப்போன்றவர்கள். இல்லை இல்லை அவற்றைவிடவும் கேடுகெட்டவர்கள் (7:179)

அல்லாஹ்வின் படைப்புக்களை ஆராய்பவர்கள் எத்தகைய உணர்வைப் பெறுகின்றார்கள் என்பதனைப் பாருங்கள். ஆல்லாஹ் மீண்டும் கூறுகின்றான்.

நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும் இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்குப் பலஅ த்தாட்சிகள் இருக்கின்றன. அவர்கள் நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் தங்கள் விலாப் புறங்களின் மீது சாய்ந்தும் அல்லாஹவையே நினைத்து வானங்கள் மற்றும் பூமியின் படைப்பைப்பற்றி சிந்தித்து எங்கள் இரட்சகா! நீ இவற்றை வீணுக்காகப் படைக்கவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ பாதுகாப்பாயாக என்று பிரார்த்திப்பார்கள். (3:190 195)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...