ஆலிப் அலி (இஸ்லாஹி)
“அடிமைகளாய் ஆக்கப்பட்டார்கள் ஒரு பெரும் கூட்டம் மக்கள் உலகில். காரணம் அவர்கள் நிறத்தால் கறுப்பர்கள் என்பதே! அவர்களை அடிமைகளாக ஆக்கியவர்கள், அவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழ்க்கையில் உயர்ந்தார்கள். காரணம், அவர்கள் நிறத்தால் வெள்ளையர்கள்.
இந்த நிறவெறிக் கொடுமைகளுக்கெதிராகப் போராடிய மாவீரரே மால்கம் x என்ற மாலிக் அல் ஷாபாஸ் ஷஹீத். மால்கம் x இஸ்லாத்தை முன்வைத்து கறுப்பர்களின் விடுதலைக்காகப் போராடியவர். பல லட்சம் கறுப்பர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளக் காரணமாக அமைந்தவர். மால்கம் x தன்னுடைய வேகமான இஸ்லாமியப் பிரச்சாரத்தின்போது, “கறுப்பர்களின் சொந்த நாடு அமெரிக்கா அல்ல. அது ஆப்ரிக்கா!” என்ற வாதத்தை முன்வைத்தார். அதற்கு வரலாற்றிலிருந்து பல மேற்கோள்களையும் காட்டினார்.
அவரது ஆதாரங்கள் நிறைந்த உரைகள் மக்களைப் பெரிய அளவில் கவர்ந்தன. இந்த ஆதாரங்களின் உண்மைத்தன்மைகளைச் சோதிக்க விரும்பினார் “அலெக்ஸ் ஹேலி”. பல வினாக்களை மால்கம் x ஐ நோக்கி வீசினார். மலைக்கும் விதமாகப் பதிலளித்தார் மால்கம் x. வரலாற்றுத் துறையில் தன்னைவிட மால்கமிற்கு அதிக அறிவு இருப்பதைக் கண்டார் அலெக்ஸ் ஹேலி. எனவே வரலாற்றாசிரியர்களைக்கொண்டே மால்கமை மடக்கிப்போட விரும்பினார் அவர்.
வரலாற்றாசிரியர்கள் வளைத்து வளைத்துக் கேட்ட கேள்விகளுக்கு அதிரும்படி ஆதாரங்களை அள்ளி வீசினார் மால்கம். பின்னர் அலெக்ஸ் ஹேலி மால்கம் கூறும் வரலாற்று இடங்களைத் தானே நேரில் சென்று கண்டுவர முயற்சிகளை மேற்கொண்டார். அது அலெக்ஸ்ஹேலியின் சொந்தப் பூர்வீகத்தையே ஆழ ஊடுறுவியிருந்த அவரது அடி “வேரையே” கண்டெடுக்கும் பெரும் சாதனைப் பயணமாக முடிந்தது.
தான் மேற்கொண்ட பயணத்தை, ஆராய்ச்சியைப் புதினமாக வடித்தார். பல இலட்சம் வாசகர்களைக் கவர்ந்தார். அது திரைப்படமாகவும் வெளிவந்தது. அத்தோடு பல இலட்சம் கறுப்பர்களை இஸ்லாத்தின்பால் மீளவைத்தது.”
மேற்குறிப்பிட்டவற்றை அலெக்ஸ் ஹேலி எழுதிய “Roots” என்ற புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான “வேர்கள்” என்ற நூலின் பதிப்புரையிலிருந்து எடுத்துத் தந்துள்ளேன். அருமையான நாவல். 1750 ஆண்டு மேற்கு ஆபிரிக்காவின் ஜுஃபூர் கிராமத்தில் பிறக்கும் ஒரு ஆண்குழந்தையிலிருந்து கதை ஆரம்பித்து ஆயிரத்தித் தொல்லாயிரமாம் ஆண்டுகளில் அமெரிக்காவில் வந்து முடிவடைகின்றது. அற்புதமான நாவல். ஆபிரிக்கர்கள் பட்ட அல்லல்களையும் இன்னல்களையும் துன்பங்களையும் துயரங்களையும் போட்டோபிடித்துப் பர்த்தால்கூட இப்படி வராது. அவசியம் அனைவரும் வாசிக்கவும். இதனை இந்தியாவைச் சேர்ந்த ஆ.ளு.அப்துல் ஹமீத் அவர்கள் தமிழில் தந்துள்ளார். இலக்கியச்சோலை பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. இன்றே வாங்கிப்படியுங்கள். தொடர்புகளுக்கு :
இந்தியாவில் - இலக்கியச்சோலை, 25, பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை – 3.
இலங்கையில் - இஸ்லாமிக் Book ஹவுஸ், 77, தெமடகொட வீதி, கொழும்பு – 9
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...