"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

19 August 2011

இலங்கை முஸ்லிம், தமிழ் மக்களுக்கெதிரான விசமப் பிரச்சாரம்

தம்மைப் பூர்வ குடிகளாகவும் பிறரை வந்தேறு குடிகளாகவும் சித்தரிக்கும் அவலம்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

சிங்கள மொழி அறிந்தவர்களாயின் கீழே உள்ள பிரசுரங்களை முழுமையாக வாசித்துவிட்டு கீழுள்ள விளக்கத்தையும் பூரணமாக வாசியுங்கள். கட்டாயம் இதுபற்றிய உங்களது கருத்துக்களையும் கீழே கருத்துப் பெட்டியில் எழுதுங்கள்.

இலங்கையின் அசல் பூர்வ குடிகள் நாம் மட்டும்தான் என்பதுதான் அநேகமான பௌத்தர்களினதும் சிங்களவர்களினதும் எண்ணம். இங்கு வாழும் ஏனைய முஸ்லிம்களும் தமிழர்களும் பிற்காலத்தில் இங்கு வந்து குடியேறிய வந்தேறு குடிகள் (நம்ம ஊறு வார்த்தைய சொல்றதுன்னா வந்தான் வறத்தான்”) என்றும் எண்ணுகின்றார்கள். இது மிக அண்மையிலிருந்துதான் அவர்களிடத்தில் பதிக்கப்பட்டிருக்கவேண்டும். அதனால்தான் இதனை வெளிப்படையாகவே “இது புத்த தேசம் - மே புதுன்கே தேசயய் - என்ற சுலோகமெல்லாம் நாட்டின் பல பகுதிகளிலும் பலராலும் பல்வேறு வடிவங்களில் பேசப்பட்டுவருகின்றது. இதற்கு வலு சேர்க்கும் விதமாகவே புத்த மதபோதகர்களாளும் குறிப்பிடத்தக்க சில அமைச்சர்களாளும் இவ்விடயம் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

மாணவர்கள் கற்கும் பாடப்புத்தகங்களில் கூட இந்த வரலாற்றுத் திரிபுகள் தாராளமாக இடம்பெற்றுள்ளன. தமிழர்களை அடக்கியாகிவிட்டது இனி முஸ்லிம்கள் மூச்சுக்காட்டக் கூடாது. இருக்கும் உரிமைகளையும் பறித்துவிட்டு நாடுகடத்தி விடுவோம்என்றெல்லாம் ஆங்காங்கு உத்தியோகபூர்வமற்ற முறைகளில் கதைகள் வெளியாகியுள்ளன. ஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதிவியேற்றதன் பின்னர் இதன் வீச்சு இன்னும் அதிகரரித்துள்ளது. ற்போது ஊசலாடும் கிறீஸ் மர்ம மனிதன் விவகாரமும் இதனோடு தொடர்புருவதாகவே எண்ணத்தோன்றுகின்றது.

இக்கருத்துக்களை அப்படியே பிரதிபலிப்பதாகவே மேற்போந்த பிரசுரங்கள் அமைந்துள்ளன. தமிழ் சகோதரர்களுக்கும் தமிழ் வாசிக்கக்கூடிய சகோதரர்களுக்கும் இப் பிரசுரங்களை முழுமையாக வாசிப்பதற்கு என்னால் இவற்றை தமிழில் மொழிபெயர்க்க நேரம் கிடைக்காததையிட்டு பெரிதும் வருந்துகின்றேன்.

இலங்கையின் தேசிய இனங்களில் சிங்களவர்கள்போன்றே தமிழர்கள், முஸ்லிம்களும் அடங்குகின்றனர். தேசிய இனங்கள் யாரும் வந்தேறு குடிகளாக இருக்க முடியாது. ஏனெனில் தேசியம் எழுவது காலா காலமாக தமக்கான வரலாற்றுடன் ஒரு தாயகத்தில் வாழ்ந்துவரும் மக்களில் இருந்துதான். ந்தவகையில் முஸ்லிம்களும் இந்நாட்டின் பூர்வீக மரபுரிமையைப் பெற்றவர்களே!

இலங்கையின் முன்னேற்றத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் முஸ்லிம்களும் தமது பொருளாலும் உடலாலும் பல பங்களிப்புக்களைச் செய்துள்ளமையை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. (இக்கட்டுரையையும் வாசிக்கவும் : Click) அக்காலத்தில் முஸ்லிம்கள் பல நகரங்களை ஆட்சிசெய்துள்ளனர். அரண்மனைகளில் பங்கேற்றுள்ளனர். சிங்கள மக்களோடு இணைந்து தோளோடு தோள் நின்று போராடியுள்ளனர். இவைபற்றியெல்லாம் இவர்கள் மறந்துவிட்டார்கள் போலும்.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு முன்பே மத்திய தரைப் பகுதி மக்கள்  சிங்கள இலக்கியங்களில் யோனகஎனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதுவே இன்றும் இலங்கையில் சிலபோது முஸ்லிம்களை சோனகர்கள்என்று அழைக்கின்றனர். த்தோடு புத்தரது காலத்தில் நாகர்என்ற சொல் மத்திய தரை மக்களைக் குறிக்கப் பயன்பட்டுள்ளது. விஜயனும் அவனது 700 தோழர்களும் இலங்கைக்கு வந்த சமயம் இங்கு ஏழவே “இயக்கர் மற்றும் நாகர்என்று இரண்டு கோத்திரங்கள் வாழ்ந்ததாக வரலாறு குறிப்பிடுகின்றது. இதன்படி பார்த்தால் இலங்கையில் மத்திய தரை மக்களது வரலாறு சிங்கள யுகத்திற்கு முன்பிருந்தே தொடர்ந்து வருகின்றமையை அவதானிக்கலாம்.

இற்றைக்குப் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆரம்ப நிலை ஹோமோ சபியன்கள் ஆப்ரிக்காவிலிருந்து வெளியேறியதன் பின்னேய காலப்பகுதிகளில் அவர்கள் மத்திய கிழக்குப் பிரதேசத்திலிருந்து இலங்கைக்கு வந்துள்ளனர். தன் பின்புதான் மத்திய கிழக்கிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் மனிதர்கள் அலை அலையாக வந்து குடியேறினர். புத்தரது காலத்தில் நாகர்கள் இந்திய உபகண்டமெங்கும் பரந்து வாழ்ந்தனர். புத்தருக்கு மழை காலத்தில் தற்காலிகமாக அணிவதற்கு ஆடையை வழங்கி உதவிய மிச்சலிந்தவும் ஒரு நாக இளவரசன்தான்.

இரு நாக இளவரசர்களுக்கிடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கே புத்தர் இலங்கைக்கு விஜயம் செய்தார். நாகர்கள் தவிர யக்ஷ திராவிடர்களும் இங்கு இருந்துள்ளனர். புத்தர் தனது வாழ்நாட்களில் அதிகமான தடைவைகள் இந்தியாவிலும் இலங்கையிலும் யக்ஷ திராவிடர்களைச் சந்தித்துள்ளார்.

ரியப் போராளிகளது வருகையுடன்தான் சிங்களப் பாரம்பரியம் ஆரம்பிக்கின்றது. அதன் பிறகுதான் அது பௌத்த பாரம்பரியமாக மாறுகின்றது. எனவே ஏழவே இங்கு இருந்த இந்த முஸ்லிம், தமிழ் மக்களை வந்தேறு குடிகள் எனப் பெயரிட்டு அழைப்பதும் சிங்களவர்களே இலங்கை மண்ணின் மைந்தர்கள் என்று கூறுவதும் அபத்தமானது.

எது எப்படியோ சிங்களவர்கள்தான் இத்தேசத்தின் பூர்விகர்கள் மற்றையவர்கள் வந்தேறுகுடிகள் என்பது வரலாற்றுப் பிழை. இலங்கையில் தற்போது வாழும் எந்தவொரு இனத்திற்கும் தாங்களை ஆதிக் குடிகள் என்று கூற முடியாது என கலாநிதி சுசந்தா குணதிலக்க தனது Ethnicity and Social Change in Sri Lanka எனும் நூலில் குறிப்பிட்டுள்ளமையும் இங்கு ஞாபகிக்கின்றேன்.

மீண்டும் ஒரு முறை : மறவாமல் கருத்தை எழுதுவிட்டுச் செல்லுங்கள்.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...