"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

23 August 2011

காலநிலை மாற்றமும் தோல்வியுறும் மாநாடுகளும்

ஆலிப் அலி (இஸ்லாஹி)
அண்மைக் காலமாக என்றுமில்லாதவாறு சர்வதேச ரீதியில் அவதானத்திற்குற்பட்டு, பேசப்பட்டு வருகின்ற ஒரு முக்கிய விடயம்தான் காலநிலையும் காலநிலை மாற்றமும். அதிகூடிய வெப்பமும் கடுமையான வறட்சியும் அதனைத் தொடர்ந்து பனிப் பொழிவும் அடை மழையும் திடீர் வெள்ளமும் என மனிதன் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கின்றான். காநிலைக்கென்று இயற்கையிடம் முன்பெல்லாம் ஒரு ஒழுங்கு (Schedule) இருந்து வந்தது. ஆனால் அது தற்போது குழம்பிப்போய் எதிர்பார்க்காத விதத்தில் ஏதாவதொன்று நடந்துவிடுகின்றது. ஒரு அணர்த்தத்திலிருந்து சுதாகரித்துக்கொண்டு எழுவதற்குள் இன்னுமொரு பேரணர்த்தம் வந்து உண்டு இல்லை என்று பண்ணிவிடுகின்றது. மரத்திலிருந்து வீழ்ந்தவனை மாடு குத்துவதுபோல.

இவையாவும் சமீபகாலமாக நாம் உலகளவில் அவதானித்து வருகின்ற விடயங்கள். ஆனால் அவைபற்றி நாம் லட்சியம் செய்வதே இல்லை. வழமைக்கு மாற்றமான இக்காலநிலையின் மாறுதல்கள் ஏதோவொன்றைக் கட்டியம் கூறிக்கொண்டிருக்கின்றன என்பதனை மட்டும் உணரமுடியுமாக உள்ளது.

காலநிலை மாற்றம் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு விஞ்ஞானிகள் குழு 2007ஆம் ஆண்டில் ஒரு எச்சரிக்கை விடுத்தது. காலநிலை மாற்றம் காரணமாக இயற்கையின் சீற்றங்கள் இனிவரும் காலங்களில் தற்போதைவிட அதிகரித்திருக்கும் என்பதே அவ் எச்சரிக்கையாகும். மேலும் உலகளாவிய காலநிலை பற்றிய ஆய்வொன்றை மெற்கொண்ட அட்லெண்டிக் கவுன்சில்என்ற அமைப்பின் 250 விஞ்ஞானிகள் சுமார் 4வருடங்கள் தீவிரமாக ஆராய்ந்ததன் பின் வெளியிட்ட அறிக்கை பற்றி இங்கு ஞாபகிப்பது பொருத்தமாயிருக்கும்.

அவ்வறிக்கையில் புவியின் ஏனைய பகுதிகளை விட வடதுருவம் இரு மடங்கு அதிகமாக வெப்பமடைந்து வருகிறது. இதனால் 20% ஆன பனிக்கட்டிகள் இப்போதைக்கு உருகிவிட்டன. 2100ஆம் ஆண்டாகும்போது அங்கு வாழும் துருவக்கரடிகள், கடல்சீல்கள், பென்குயின் பறவைகள் போன்ற உயிரினங்கள் முற்றாக அழிந்து விடும். அது மட்டுமன்றி துருவப்பகுதியின் பனிக்கட்டிகள் உருகி மத்திய பகுதிகளை நோக்கி வடிவதனால் இப்பகுதியிலுள்ள கடல் நீரின் மட்டம் அதிகரித்து புவியின் பெரும் பகுதி கடலினால் காவு கொள்ளப்படும்.என குறிப்பிடப்பட்டிருந்தது.
அல்லாஹ் இயற்கையில் வைத்திருக்கும் சமநிலைத் தன்மையை மனிதன் புரிந்துகொள்ளாது அதனுடன் இயைந்து வாழ முயலாது தன்னிச்சையாக, சுயநலமியாக வாழத் தலைப்பட்டதன் விளைவுதான் இன்று நாம் எதிர்நோக்கியிருக்கும் காலநிலை மாற்றங்களும் அதனால் விளைந்திருக்கும் இயற்கையின் அனர்த்தங்களும்.

காலநிலை குறித்து ஆராய்வதற்காகவும் விழிப்பூட்டுவதற்காகவும் பல்வேறு மாநாடுகள் கூடப்படுவதும் முடிவுகள் எட்டப்படாத நிலையில் கழைந்து செல்வதுமே இன்றைய நாட்களில் தொடர்கதையாக மாறியுள்ளது. இதற்கு வளர்முக, மேற்குலக நாடுகளின் சுய நலமும் பேராசையும் மற்றுமொரு காரணமாகும். நாடுகளுக்கிடையே நடைபெற்று வருகின்ற விஞ்ஞான தொலில்நுட்பரீதியான போட்டி, அதோடு அரசியல் மற்றும் பொருளாதாரரீதியான போராட்டம் என்பனவும் இதில் பங்களிப்புச் செலுத்துகின்றன. கடந்த 20 வருடங்களாக உலக நாடுகளின் தலைவர்கள் மாநாடுகளை ஏற்பாடுசெய்து கூடி, புவிவெப்பமடைதல் பற்றியும் காலநிலை மாற்றம் குறித்தும் மிக மும்முரமாக அளவளாவுகின்றனர். ஆனால் அப்பேச்சுக்களின் இறுதியில் எந்தவிதமான ஆக்கபூர்வமான முடிவுகளும் அடையப்பெறவில்லை என்பதே நிதர்சனம்.

19ம் நுற்றாண்டின் கடைசிப் பகுதியில்தான் கைத்தொழில் புரட்சி ஆரம்பித்தது. பிற்பட்ட காலங்களில் தோன்றிய சகலவிதமான தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும் முன்னேற்றங்களுக்கும் அக்கைத்தொழில் புரட்சியே காரணமாகும். கைத்தொழில் புரட்சியின் ஒரு எதிர்மறை விளைவே இன்று நாம் எதிர்நோக்கியுள்ள புவி வெப்பமடைதலாகும். கைத்தொழில்துறையின் வளர்ச்சியால் எரிபொருள் பானை அதிகரித்து நகரமயமாக்கல் மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்காகவும் விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கைக்காகவும் காடழிப்பு துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டது.

இதன் விளைவாக வளிமண்டலத்தில் உள்ள காபனீரொட்சைட்டின் விகிதாசாரம் அதிகரித்தது. இதனால் சூழலும் வெப்பமடைய ஆரம்பித்தது. புவி வெப்பமடைதலில் நேரடியாகவே தாக்கம் செலுத்துவது எமது பாவனைப் பொருட்களிலிருந்து விடுவிக்கப்படும் பச்சை வீட்டு வாயுக்களான (Green House gases) காபனீரொட்சைட் (Co2), மெதேன் (CH4), நைதரொட்சைட்டு (NO2) போன்றவையே புவியை வெப்பமடையச் செய்கின்றன.

உலகளவில் நித்தம் இயங்கிக்கொண்டிருக்கும் போக்குவரத்து வாகனங்கள், ஆகாய விமானங்கள், எரிசக்தி நிலையங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து காபனீரொட்சைட்டு அதிகளவில் சூழலுக்கு விடுவிக்கப்படுகின்றது. சூழலில் காணப்படுகின்ற காபனீரொட்சைட்டை உள்ளெடுத்து நாம் சுவாசிக்கும் ஒட்சிசன் வாயுவை வெளியேற்றி சூழலில் உள்ள காபனீரொட்சைட்டின் அளவை சம அளவில் கட்டுப்படுத்தி முகாமைத்துவம் செய்வது தாவரங்களாகும்.

ஆனால் கைத்தொழில் புரட்சியின் பின்னர் நகரமயமாக்களுக்காகவும் விவசாய கைத்தொழில் அபிவிருத்திகளுக்காகவும் காடுகள் அழிக்கப்பட்டன. இதனால் முன்பைவிட சூழலில் உள்ள காபனீரொட்சைட்டை சமநிலைப்படுத்துவதில் குறைவு ஏற்பட்டுவிட்டது. காபனீரொட்சைட்டின் அளவு கூடியது. சுமார் 200 வருடங்களுக்கு முன்பு வளிமண்டலத்தில் இருந்த காபனீரொட்சைட்டின் அளவு 275 ppm (parts per million) ஆகும். அது தற்போது ppm ஆக அதிகரித்துள்ளது. எனவே வெகுவிரைவாக சூழல் வெப்பமடைய ஆரம்பித்துள்ளது.  கடந்த 2010 ஆம் ஆண்டு, வரலாற்றிலேயே அதி உஷ்னம்வாய்ந்த ஆண்டாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய காலநிலை மாற்றத்தின் எதிர் விளைவுகள் உணரப்பட்டு காலநிலை மாற்றம் போகப்  போக இன்னும் பல பாதக விளைவுகளைத் தரப்போகின்றதென்றும் காலநிலை மாற்றம் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்று விஞ்ஞனிகள் கூறுகின்றனர். அதன்படி சூழல் மாசடைதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விஞ்ஞானிகள் உலக அரசாங்கங்களை எச்சரித்தனர்.

அதன் விளைவுகளை, பாரதூரங்களை எடுத்துக்காட்டினர். ஐக்கிய நாடுகள் சபையை முன்வைத்து செயற்றிட்டங்களையும் விழிப்புணர்வு மாநாடுகளையும் ஆரம்பித்தனர். அதன்படி 1992ல் ஐ.நாவின் புவி உச்சி மாநாடு பிரேஸிலின் ரியோடி ஜெனிரோ என்ற நகரில் நடைபெற்றது. அம்மாநாட்டில் காலநிலை மாற்றத்திற்கான செயற்றிட்டப் பேரவை United Nations Frame work Convention on Climate Change (UNFCCC) என்ற பெயரில் செயற்றிட்டப் பேரவை ஒன்றும் உருவாக்கப்பட்டது. அதனடிப்படையில் வருடா வருடம் காலநிலை மாற்றத்திற்கான மாநாடுகள் உலக நாடுகளெங்கும் (Conference of Parties – cop) நடாத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி 1997ம் ஆண்டு ஜப்பானின் கியோட்டோ நகரில் காலநிலை மாற்றத்திற்கான மாநாடு நடாத்தப்பட்டது. இது கியோட்டோ மாநாடு என அழைக்கப்படுகின்றது. புவிச் சூழலுக்கு காபனீரொட்சைட்டை அதிகம் விடுவிக்கும் நாடுகள் இங்கு பட்டியலிடப்பட்டன. பின்பு குறித்த நாடுகள் 1991ம் ஆண்டில் எந்த அளவு காபனீரொட்சைட் வாயு மற்றும் ஏனைய பச்சைவீட்டு வாயுக்களை சூழலுக்கு விடுவித்தனவோ அந்த அளவை 2012 ஆம் ஆண்டளவில் 5.2 சதவீதத்தால் குறைக்க வேண்டும் என ஒரு உடன்படிக்கையும் கைச்சாத்தானது. இதுவே கியோட்டோ உடன்படிக்கைஎனப்படுகின்றது. கியோட்டோ உடன்படிக்கையும் புவிவெப்பமடைதலில் மிக முக்கியமானதும் வரலாற்று முக்கியம் வாய்ந்ததுமானதொரு உடன்படிக்கையாகக் கருதப்படுகின்றது. 5.2 என்ற இந்த சதவீதம் அனைத்து நாடுகளுக்குமென பொதுவாக எடுக்கப்பட்ட ஒரு அளவுப் பெருமானமாகும். ஒவ்வொரு நாட்டையும் தனித்தனியே எடுத்துப் பார்த்தால் அவை சூழலுக்கு விடுவிக்கும் இந்த நச்சு வாயுக்களின் அளவு வித்தியாசப்படுகின்றது. அதன்படி ஒவ்வொரு நாடும் குறைக்கவேண்டிய சதவீதமும் கூடிக் குறைகின்றது.

அப்பட்டியலில் வளிமண்டலத்தை அதிகளவில் மாசுபடுத்தும் நாடாக முதலிடத்தில் இருப்பது அமெரிக்காவே. உண்மையில் அமெரிக்கா 5.2 சதவீதத்தால் அல்ல 10 சதவீதத்தால் குறைத்தாலும் அவ்வுடன்படிக்கையின் நோக்கத்தின்படி போதாது. ஆனால் அமெரிக்கா 5.2 ஆல் குறைப்பதற்குக்கூட முழுவிருப்பம் கொள்ளவில்லை. இந்தியாவும் சீனாவும் தமது பச்சைவீட்டு வாயுக்களின் வெளியேற்றத்தைக்  குறைப்பதை நேரடியாகவே மறுத்துரைத்தன. அதற்கு அவை முன்வைத்த காரணம் தாம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என்பதாகும்.

கியோட்டோ உடன்படிக்கையில் ஆரம்பத்தில் இணைந்துகொண்ட அமெரிக்கா அதன் பின்னர் மெதுவாக நழுவிக்கொண்டது. காரணம் இதனால் அவர்களது உற்பத்திகள் பாதிப்படையும் என்பதனாலாகும். கியோட்டோ உடன்படிக்கையின் பின்னரும் ஆராய்ந்துபார்த்ததில் 5.2 சதவீதத்தால் குறைப்பதென்பது எதற்குமே பயனளிக்காத ஒரு பெருமானம். உலக உற்பத்திகளால் வெளியிடப்படும் பச்சைவீட்டு வாயுக்களின் பெருமானத்தோடு இதனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது போதவே போதாது எனக் கண்ட ஐ.நாவின் பன்னாட்டு விஞ்ஞானிகள் குழு 1990ம் ஆண்டிலிருந்து விடுவிக்கப்பட்டுவரும் பச்சைவீட்டு வாயுக்களின் வெளியேற்றம் 2012ஆம் ஆண்டாகும்போது 80 சதவீதத்தால் குறைக்கவேண்டும் என்று 2007ம் ஆண்டு பரிந்துரைத்தது. அப்போதுதான் இதனை ஓரளவுக்கேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறினர்.

இதுபற்றி ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்காகவும் நடைமுறையில் இருந்து வருகின்ற கியோட்டோ உடன்படிக்கையின் கால அளவை நீடிப்பதற்காகவும் உடன்படிக்கையில் இருந்து விலகிக்கொண்ட அமெரிக்காவை மீண்டும் அதில் இணைத்துக்கொள்வதற்காகவும் 2007ம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலித்தீவில் காலநிலை மாற்றத்திற்கான மாநாடு கூட்டப்பட்டது. இதற்காக ஒரு வழிகாட்டியும் தயாரிக்கப்பட்டது. அதுவே பாலி வழிகாட்டி எனப்படுகின்றது. அதில் 2009ம் ஆண்டிற்கான கோப்பன்ஹேகன் மாநாடும்திட்டமிடப்பட்டது. ஆனால் அமெரிக்காபோன்ற சில வளர்ச்சியடைந்த நாடுகளின் பிடிவாதத்தால் கோப்பன்ஹேகன் மாநாடு தோல்வியில் முடிவடைந்தது.

என்றாலும் இதுகுறித்து 2010ஆம் ஆண்டில் ஒரு அவசரக் கூட்டம்கூடி ஆக்கபூர்வமான முடிவுகள் எடுக்கப்படும் என்று பாலிமாநாட்டின் இறுதியில் முடிவாக்கப்பட்டது. அதன்படி 2010ஆம் ஆண்டு ஏப்ரல், ஜுன், ஓகஸ்ட் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் கூட்டம் கூடப்பட்டு ஆரயப்பட்டது. எனினும் அதிலும் எந்தவித காத்திரமான முடிவுகளும் எட்டப்படாத நிலையில் தோல்வியிலேயே முடிவடைந்தது.

இவ்வாறு வளர்ச்சியடைந்த நாடுகளின் விடாப்பிடிக்கும் சுயநலத்திற்கும் மத்தியில்தான் கடந்த வருடமும் நவம்பர் மாதம் 26ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 16ஆவது காலநிலை மாற்றத்திற்கான மாநாடு மெக்சிக்கோவின் கான்குன்நகரில் நடைபெற்றது. ஆனால் இம் மாநாடு ஆரம்பிக்கப்பட முன்பே மாநாடு குறித்து மேற்குக நாடுகளின் பதிவு வேறுவிதமாகத்தான் இருந்துள்ளது.

ஐரோப்பிய யூனியனின் புதிய தலைவரான ஹேர்மன் வொன்ரம்யூ’ “இம்மாநாடும் கோபன்ஹேகன் மாநாட்டைப் போன்று ஒரு அனர்த்தமாகவே  இருக்கும்என்று குறிப்பிட்டிருந்ததையும் மேலும் அவர் கோபன்ஹேகன் மாநாட்டை மிகக் கடுமையாக விமர்சித்திருந்ததுபற்றியும் விக்கிலீக்ஸ் கேபில் தகவல் வெளியிட்டிருந்தது. காலநிலை மாற்றம் தொடர்பாக மேற்கு நாடுகளின் மனப்பாங்கு எப்படியுள்ளது என்பதற்கு இதுவே போதுமானது. எதிர்பார்த்ததுபோன்று கான்குன் மாநாடும் போதிய பயனையோ வெற்றியையோ தரவில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம்.

மனிதன் இயற்கையை மதித்து அதனுடன் இயைந்து தனது உற்பத்திகளையும் கண்டுபிடிப்புக்களையும் அமைத்துக்கொள்ளத் தவறியதன் விளைவாக ஒட்டுமொத்த உயிர் ஜீவிகளுமே இன்று பலத்த அனுகூலங்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றன. 

வருங்காலங்களில் இது இன்னும் விபரீதமாக இருக்கும். காரியம் தலைக்கு மேல் போன பின்பு உணர்ந்துகொண்ட மனிதன் இன்று இயற்கையுடன் இயைந்த தொழில் நுட்பத்தைக் கொண்டு நடாத்த சிந்திக்கின்றான். காலம் கடந்தபின் ஞானப் பிறந்துள்ளது போலும். அதன் ஆரம்பகட்டம்தான் இந்த Green Technology, Green Computing,  Green Drive என்பன.

அல்லாஹ் மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையில் வைத்திருக்கும் பிணைப்பை சரியாகப் புரிந்துகொள்ளும்போதுதான் இது சாத்தியப்படும். இல்லாவிட்டால் பெரும் செவுகளுக்கு மத்தியில் வெறுமனே கூடிக் கலையும் மாநாடுகளாகவே இவை மிஞ்சியிருக்கும் என்பதுதான் உண்மை.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...