ஆலிப் அலி (இஸ்லாஹி)
ஜோஜ் புஷ் தனது போர் ஆதரவுப் பிரச்சாரத்திற்காகப் பாடசாலை ஒன்றுக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு தனது உரையை முடித்த ஜோர்ஜ் புஷ் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாரானார். பொப் என்ற மாணவன் எழுந்து ஜனாதிபதி அவர்களே! என்னிடம் மூன்று கேள்விகள் உள்ளன. என்று கேள்வி கேட்க ஆரம்பித்தான்.
1. நீங்கள் குறைந்தளவு வாக்குகளைப் பெற்றிருந்தபோதிலும் எவ்வாறு தேர்தலில் வெற்றி பெற்றீர்கள்?
2. எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில் ஈராக்கை ஏன் தாக்க முயல்கின்றீர்கள்?
3. ஹிரோஷிமாவில் நடந்ததுதான் உலகில் மிகப் பெரிய தாக்குதல் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
கேள்விகள் முடியும் தறுவாயில் இடைவேளைக்கான மணி அடித்தது. எல்லோரும் வகுப்பறையைவிட்டு வெளியே சென்றனர். இடைவேளையின் பின்னர் மீண்டும் வகுப்பறைக்கு வந்த புஷ் மீண்டும் மாணவர்களிடம் கேள்வி கேட்குமாறு வேண்டிக்கொண்டார்.
தற்போது ஜோன் என்ற மாணவன் எழுந்து கேள்வி கேட்க ஆரம்பித்தான். ஜனாதிபதி அவர்களே! என்னிடம் ஐந்து கேள்விகள் உள்ளன என்று அவன் துவங்கினான்.
1. நீங்கள் குறைந்தளவு வாக்குகளைப் பெற்றிருந்தபோதிலும் எவ்வாறு தேர்தலில் வெற்றி பெற்றீர்கள்?
2. எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில் ஈராக்கை ஏன் தாக்க முயல்கின்றீர்கள்?
3. ஹிரோஷிமாவில் நடந்ததுதான் உலகில் மிகப் பெரிய தாக்குதல் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
4. வழமைக்கு மாறாக ஏன் இன்று 20 நிமிடங்களுக்கு முன்பாகவே இடைவேளைக்கான மணி அடித்தது?
5. எனக்கு முன்பு கேள்விகேட்ட பொப் தற்போது எங்கே?
குறிப்பு : அமெரிக்கா உலகை ஆக்கிரமிப்பதற்கும் உலக மக்களுக்கு வேறுவகைக் காரணங்களைக் கற்பிக்கும் ஊடக அயோக்கியத்தனத்திற்கும் இந்த உருவகக் கதை சிறந்ததோர் உதாரணம் எனலாம். இது www.Robertfisk.com என்ற இணையதளத்தில் வெளியானது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...