"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

28 September 2011

9/11 தாக்குதலும் அமெரிக்காவின் நீளும் போர்த்திட்டமும்

 ஆலிப் அலி (இஸ்லாஹி)

2001 செப்டம்பர் 11ம் திகதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதல் நடைபெற்று 27 நாட்களுக்குள் அமெரிக்கா ஆப்கானிஸ்தான்மீது படையெடுத்தது. பச்சிளம் குழந்தைகள் முதல் வயோதிகர்கள்வரை ஆண் பெண் என பல இலட்சம் மக்களைப் படுகொலைசெய்தது.

2003 மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மறுப்புரையையும் பொருட்படுத்தாது ஈராக்கில் இரசாயன, வேதியியல் மற்றும் அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் அங்கு நடைபெறும் சதாமின் சர்வாதிகாரத்தை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டவேண்டும் என்றும் கூறிக்கொண்டு ஈராக்கின்மீது படையெடுத்த அமெரிக்கா அங்கும் இலட்சக்கணக்கான பொதுமக்களைக் கொன்றொழித்து இன்னும் இலட்சக்கணக்காணவர்களை அகதிகளாக்கி ஈராக்கையே துவம்சம்செய்தது.

இவ்வாறு செப்டம்பர் 11ஐ வைத்து ஆரம்பிக்கப்பட்ட உலகின் புதிய ஒழுங்கு (New world Order) பத்தாவது வருடத்தையும் தாண்டிச் செல்கின்றது. உண்மையிலேயே பெண்டகன் தாக்குதல் என்பது அமெரிக்காவினாலேயே நடாத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட நாடகம் என்ற பேருண்மை இன்றளவில் கட்டடக்கலையுடன் தொடர்புடைய அமெரிக்க ஆய்வு நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும்பல நிறுவனங்களினாலேயே முன்வைக்கப்படுகின்றது. இதற்கும் முஸ்லிம்களுக்கும் குறிப்பாக அல்கைதாவுக்கும் எவ்விதத்திலும் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என பல ஆய்வறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் ஜிம்மி வோல்டர் (Jimmy Walter) செப்டம்பர் நிகழ்வு வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதல்ல என்று யாராவது நிறுவினால் அவருக்கு நான் ஒரு மில்லியன் டொலர் வழங்கத்தாயாராயுள்ளேன்என்று சவால் விடுத்துள்ளார். என்றாலும் இதுவரை அவரது சவாலை எவரும் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.  இவற்றையெல்லாம் அமெரிக்கா மூடி மறைத்துவிட்டுத்தான் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது.

செப்டம்பர் தாக்குதல் என்பது நீண்டகால தூரதிட்டத்துடன் நடாத்தப்பட்ட ஒரு பயங்கதரமான தாக்குதலாகும். இனி முழு உலக வளங்களையுமே சூறையாடுவதற்காகவும் முழு உலகையுமே தமது ஆத்திக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்காகவும் என்றும் எப்பொழுதும் உலக வல்லரசாகத் தம்மை இருத்திக்கொள்வதற்காகவும் நடாத்தபட்ட சிறியதொரு நாடகம்தான் செப்டம்பர் 11 தாக்குதல். முழு உலகமும் எப்படிப்போனாலும் சர்வ வளமும் கொழிக்கும் மத்திய கிழக்கை முதலில் எப்படியாவது ஆக்கிரமித்தாலே போதும். பின்பு படிப்படியக பிற நாடுகளைக் கவணித்துக்கொள்ளலாம் என்பதுதான் அமெரிக்காவின் நீண்டகாலத் திட்டம். இதனை அமெரிக்காவைச் சேர்ந்த பேரறிஞர் நோம்சோம்ஸ்கி பின்வருமாறு அழகாகக் குறித்துக்காட்டுகின்றார்.

உலக வளங்களின் மையமாக மத்திய கிழக்கு அமைந்திருப்பது பேருண்மைதான். அதனால்தான் மாறிமாறிவரும் ஒவ்வொரு அமெரிக்க அதிகாரபீடமுமம் தனது வெளிநாட்டுக்கொள்கையை வரைவதில் மத்திய கிழக்கின் ஆளுகையை முதன்மைப்படுத்துகின்றது. ஒவ்வோர் அதிகாரமும் இப்பிராந்தியத்தைத் தனது ஆளுகையின் கீழ் கொண்டுவருவதில் வெற்றிகாண பல வழிகளிலும் முயற்சிகளைச் செய்துவருகின்றது. அது சாத்தியப்படும்போது அமெரிக்கா தான் வெற்றியடைந்துவிட்டதாகக் கருதும்என்கின்றார்.

இரட்டைக் கோபுரத்தாக்குதல் நடைபெற்ற மறுகணமே எந்தவொரு விசாரணையையும் மேற்கொள்ளாது அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோஜ் w புஷ் ஏழவே திட்டமிட்டிருந்த பிரகாரம் அல்கைதாவைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தினார். அதனைத்தொடர்ந்து அடுத்த 27 நாட்களுக்குள் ஆப்கான்மீது அமெரிக்க இராணுவம் படையெடுத்தது. உஸாமா தேடுதல் வேட்டை ஆரம்பித்தது.  பின்னர் இஸ்லாம் அடிப்படைவாத தீவிர மதமாகவும் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகவும் அமெரிக்க ஊடகங்களால் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதுமுதல் தீவிரவாதத்திற்கு எதிரான போர் (War on Terrorism) சர்வதேச அளவில் முஸ்லிம்களை இலக்குவைத்து ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு பல மேற்கு நாடுகளும் ஒத்தூதினதென்பதே உண்மை.

அமெரிக்கா ஆரம்பித்த இந்தத் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்பது ஆப்கானிஸ்தானுடனோ ஈராக்குடனோ முற்றுப்பெறும் போர்த்திட்டமல்ல. அது காலாகாலம் தொடர்ந்தும் கொண்டு நடாத்தப்படவிருக்கும் மகா யுத்தம் என்பதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எண்ணமும் நப்பாசையும். அதன் போர்த்திட்டமும் ஆக்கிரமிப்பு எல்லைகளும் மிகவும் விசாலப்பட்டவையாகும். நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் 2001 செப்டம்பர் 27ம் திகதி தோமஸ் புரூட்ஸ்மன் எழுதியிருந்த செய்தி இதற்கு வலு சேர்க்கின்றது. இத்தாக்குதல் மூன்றாம் உலக மகாயுத்தத்திற்கான ஆரம்பமாகும். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என வல்லரசுகள் இத்தாக்குதலுக்கான பதிற்குறிகளைக் காட்ட விழைந்துள்ளன. இங்கு பயங்கரவாதம் என்பது ஒரு அடை மொழி மட்டும்தான். மாறாக இது ஒரு கருத்தியல், நாகரிகத்திற்கு எதிரான போரட்டமாகவே இருக்கும். படைவீரர்களுக்கிடையிலான மோதலாக மட்டும் இது இருக்காது. மதம், இஸ்லாமிய அமைப்புகள், மத்ரஸாக்கள், ஊடகங்கள் என எல்லாவற்றுடனும் இணைந்ததாகவே தொடரும்

2001 ஒக்டோபர் மாதம் லண்டனில் நடைபெற்ற செப்டம்பர் தாக்குதல் தொடர்பான மாநாட்டில் ஒக்ஸ்போட் பல்கலைக்கழக விரிவுரையாளர் நைல் பிரிக்ஸ{ன் ஆற்றிய விரிவுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார். இனிவரும் நாட்களில் அரபுலகம், இஸ்லாமிய நாடுகளும் இன்னும் சில பிராந்திய நாடுகளும் செப்டம்பர் தாக்குதலின் எதிர்விளைவுகளாக இருக்கப்போகின்றன. இவை இராணுவ ஆக்கிரமிப்புக்களாகவே அதிகளவில் இருக்கும்என்றார்.

மேற்போந்த மேற்கோள்கள் அமெரிக்காவின் போர்த்திட்டத்தின் ஆழ அகளங்களை நன்கு புலப்படுத்துகின்றன. போர் நிறுத்தம், மத்திய கிழக்கு நாடுகளுடனான மிதமான போக்கு, சமாதானம், ஜனநாயகம் என்றெல்லாம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தேர்தல் பிரசாரங்களில் முழங்கி மக்கள் மனங்களைக் கவர்ந்து ஜனாதிபதியானாலும் முன்னாள் அதிபர் ஜோஜ் புஷ்ஷின் அதே போர்த் திட்டங்களைத்தான் இவரும் நடைமுறைப்படுத்துகின்றார்.

ஜோஜ் புஷ்ஷின் ஆட்சிக்காலத்தைவிடவும் தற்போதைய ஒபாமாவின் ஆட்சியில் இந்நீண்டகால போர்த்திட்டங்கள் இன்னும் வீரியம் பெற்று வருகின்றன. அமெரிக்காவின் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரொபர்ட் கேட்ஸ் 2009ம் ஆண்டு நடைபெற்ற செய்தி ஊடக மாநாடொன்றில் ஈராக் மற்றும் ஆப்கான்  போன்ற முடிவில்லா நீண்ட போர்களை நடாத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய இராணுவ வரவுசெலவுத்திட்டத்தை முன்வைத்தார்.

இத்திட்டத்தைத் தயாரித்தவரும் கேட்ஸ்தான். புஷ் நிருவாகத்தின் இறுதிக்காலத்தின் தொடர்ச்சியே இப்போர் நடவடிக்கைகள் என்ற கருத்தை கேட்ஸ் Public Broadcasting System இற்குக் கொடுத்த  பேட்டியொன்றிலும் கூறியுள்ளார். ஏனெனில் புஷ் நிருவாகத்தின் கடைசி இரு ஆண்டுகளிலும் கேட்ஸ் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் செயற்றின் மிக்கவராகவும் ஊக்கமுடையவராகவும் காணப்பட்டார். சமாதானம் சமாதானம் என்று ஒபாமா பதவியேற்றாலும் அமெரிக்க மக்கள் போரை எதிர்த்து அவரை ஜனாதிபதியாக்கினாலும் மக்களது போர் எதிர்ப்பு உணர்வுகள் அவ்வாறே இருக்க போர் வெரிபிடித்த ரொபர்ட் கேட்ஸை ஒபாமா பெண்டகன் தலைவராக நியமித்துள்ளமை ஒபாமாவாவைப் பற்றிய பல கேள்விகளை எழுப்புகின்றது.

கேட்ஸ் தனது உத்தியோகபூர்வ அறிவிப்பின்போது இராணுவம்  தொடர்பான திட்டங்களனைத்திலும் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி ஒபாமா தனக்கு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். அத்தோடு தனது இவ்வதிகாரத்திற்குக் கூட்டுப்படைகளினது தலைவரும் துனைத்தலைவரும் இயைந்தே உள்ளதாகவும் தெரிவித்தார். ஒபாமா பெண்டகனை நோக்கி ஒரு தடைவ இதோ 640 பில்லியன் டொலர்கள் உள்ளன. இதனை என்ன செய்வதென நீங்களே தீர்மானியுங்கள்என்று கூறி தீர்மானமெடுப்பதில் கட்டற்ற சுதந்திரத்தையும் வழங்கியுள்ளார். முன்னேய அரசைவிடவும் ஒபாமா ஆட்சியில் தேசியக் கொள்கையைத் தீர்மானிப்பதில் இராணுவம் அதிக பங்கைக்கொண்டுள்ளது என்பதனை இதன் மூலம் விழங்களாலம்.

இப்போர் வியூகங்களை மேலும் முன்னெடுத்துச் செல்லும் முகமாக மூன்று முன்னாள் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் உயர்மட்டக் கொள்கைகளை இயற்றும் பங்குடையவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 ஓய்வுபெற்ற தளபதி ஜேம்ஸ் ஜோன்ஸ் - தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகவும்
2 ஓய்வுபெற்ற கடற்படை அட்மிரல் டெனிஸ் பிளேயர் தேசியப் பாதுகாப்பு உளவுத்துiறையின் இயக்குனராகவும்
3 ஓய்வுபெற்ற தளபதி எரிக் ஷீன்செகி - மூத்த படையினர் நிர்வாகப்பிரிவிற்குத் தலைமை வகிப்பவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் வட்டமேசைக் கூட்டமொன்றின்போது இனிவருங்காலங்களில் இப்போர்களை இன்னும் தீவிரப்படுத்த ஆப்கான், ஈராக் போர்களில் பெற்ற படிப்பினைகள், அனுபவங்களோடு அதில் அனுபவம் பெற்ற போர்த் தளபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கவதற்குத் தான் ஆசைப்படுவதாகவும் கேட்ஸ் கூறியுள்ளார். அதற்காக கேசி, சியாரெல்லி, டெம்ப்சே, பெட்ரீயஸ், ஒடியர்னோ, ஒஸ்டின் போன்ற முன்னணித் தளபதிகளின் பெயர்களை உயர் நியமனத்திற்காகப் பரிந்துரைத்துள்ளார்.

ஏழவே புஷ் தொடங்கிவைத்த யுத்தங்களை முற்கொண்டு நடாத்துவதற்காக 83.4 பில்லியன் டொலர்களை வழங்குமாறு கோரி ஒபாமா 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதப்பகுதியில் அமெரிக்க காங்கிரஸற்குக் கடிதமொன்றை எழுதியிருந்தார். அக்கடிதத்தில் ஒபாமா ஆப்பானில் அமெரிக்க ஆக்கிரமிப்பு நிலைகுழைந்துள்ளதாகவும் தலிபான்கள் எழுச்சியுற்றுவருவதாகவும் அல்கiதாத் தீவிரவாதிகள் அதன் புகலிடமான ஆப்கான் பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளிலிருந்து தலைகாட்டிவருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் அல்கைதா, தலிபான் என்பதெல்லாம் அமெரிக்கா தனது போர்ப்பட்டியலை நீட்டிச்செல்வதற்காகப் பயன்படுத்துதம் அழங்காரப் பெயர்களேயாகும். பில்லியன் கணக்கான டொலர்களைத் தீவிரவாதத்தை அழிப்பத்றகாகச் செலவிடுதல் என்பதைவிட ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் குவிக்கப்பட்டிருக்கும் துருப்புகளின் தேவைகளையும் நலன்களையும் கவனிப்பதோடு புதிய போர்களை ஆரம்பிப்பதற்கான களத்தை அமைத்துக்கொள்ளவுமே அத்தனை டொலர்களும் செலவிடப்படுகின்றன என்பதுதான் உண்மை.

அமெரிக்காவின் இராணுவமும் உளவுப்பரிரிவுகளும்கூட ஆப்கானில் அல்கைடாவின் ஆளுகை மிகக் குறைவு அல்லது இல்லை என்பதனை ஒத்துக்கொள்கின்றன. அமெரிக்க பாதுகாப்பு உளவுத்துரை அமைப்பின் இயக்குனர் தளபதி மைக்கல் மாபல்ஸ் செனட் குழுவின் முன்பு ஆப்கானில் அல்கைடாவின், தலிபானின் ஆதிக்கம் என்பது ஒப்புவமையில் சிறு அளவுதான்என்று கூறியுள்ளார். மத்தியாசியாவிலும் அதன் எரிசக்தி மூலவளங்களிலும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதே இப்படைக்குவிப்புகளினதும் நிதிக்கோரிக்கைகளினதும் பின்புல உண்மையாக உள்ளது.

பதவிக்கு வந்து சில நாட்களிலேயே ஒபாமா இந்நீண்ட போர்த்திட்டங்களை முற்கொண்டு செல்லும் முகமாக முப்படைத்தளபதிகளுடனும் இரண்டு மணிநேர பேச்சுவார்த்தையொன்றை நடாத்தியுள்ளார். அதில் அமெரிக்கா நடாத்தும் போர்களில் பங்கேற்கும் இராணுவத்தினருக்குப் போதுமான வளங்களும் பலமான ஆதரவும் வழங்கப்படும் என்று கூறி அவர்களை ஆர்வமூட்டி உற்சாகப்படுத்தியுள்ளார்.

இதே கருத்தை ஆரம்பமாகவே வெள்ளை மாலிகையின் வரவு செலவுத்திட்ட அலுவலகச் செய்தித்தொடர்பாளர் கென்னத் பேர்க் ஈராக், ஆப்கானில் எமது எதிர்ப்பைப் பூர்த்திசெய்ய உழகை;கும் இராணுவத்தினது தேவைகளை முழுமையாகப் பூர்த்திசெய்துகொடுக்கவேண்டும்என்று கூறியிருந்தார். இக்கருத்திற்குத் தலைசாய்ப்பதுபோன்று ஒபாமாவும் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

வெள்ளை மாளிகையின் ஆரம்ப அறிவிப்பின்படி 2010 இற்குள் போரிடும்  துருப்புகளைத் திரும்பப்பெறுவதாகவும் 2011 இறுதிக்குள் அனைத்து அமெரிக்க இராணுவ ஊழியர்களும் திரும்பிவிடுவார்களென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அமெரிக்க அதிபர் ஒபாமாகூட இதனைத்தான் ஆரம்பத்தில் கூறியிருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு வெளியான வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் புதிதாக மேலும் 1400 கடற்படைச் சிப்பாய்களை நிறுத்த பெண்டகன் தீர்மானித்துள்ளதாக் குறிப்பிடப்பட்டிருந்தது. துருப்புகளை மீளப்பெருதல் என்பது அமெரிக்காவைப் பொருத்தவரையில் குறிப்பிட்ட கெடு முடியும்போது இருக்கும் துருப்புகளை வரவழைத்து, அவர்களுக்கு ஓய்வுகொடுத்துவிட்டு அவ்விடத்திற்குப் புதிய துருப்புகளை நியமிப்பதுதான். இவ்வாறு ஆக்கிரமிப்புகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

சகல நாடுகளுக்கும் மத்தியில் இருப்பதாலும் ஈரானின் எல்லையை ஒட்டியமைந்துள்ளதாலும் மத்தியாசியப் பகுதியில் கிடைக்கும் எண்ணைய் வளத்தை அரபிக்கடல்வழியாக எடுத்துச்செல்தவற்கான தரைமார்க்கமாக இருப்பதாலும் ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்தும் தனது முழுக்கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கவே அமெரிக்கா விரும்புகின்றது. அதேபோன்று ஈராக் ஆக்கிரமிப்பும் காலவரையறையின்றித் தொடரும் என்றே கேட்ஸும் கூறியுள்ளார்.

இவை அனைத்தையும் வைத்து இனிவருங்காலங்களில் அமையவிருக்கும் அமெரிக்காவின் விரிந்த போர்த்திட்டத்திற்காகவும் அமெரிக்க இராணுவத்தின் சகல மட்டங்களிலும் மாறுதல்களும் விரிவுபடுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு சிலவற்றை அவதானிக்க முடியும்.

விமானங்கள்:-
பெண்டகனின் F&35 Joint Strike Fighter ரக விமானங்கள் தற்போதிருப்பதில் இருமடங்கிற்கும் மேல் அதிகரிக்கப்படும். FY09 விமானங்கள் 14 இல் இருந்து FY10  30ஆக அதிகரிக்கப்படும். இவை தவிர மிகப் பெரிய அளவில் 2443 விமானங்கள் புதிதாக உற்பத்திசெய்யப்படும்.

ஏவுகனைப் பாதுகாப்பு:-
பெண்டகன் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டொலரைக் குறைந்த தூர ஏவுகணைத் திட்டமுறைகளுக்கும் THAAD, Aegi ஏவுகணை எதிர்ப்பு விமானதளங்களைக்கொண்ட கப்பல்களுக்கும் செலவிடும்.

கடற்படைக் கப்பல்கள்:-

அமெரிக்க ஆயுத முறைகளில் மிக அதிக செலவுவாய்ந்த அழிப்புச்சக்தி கூடிய புதிய விமானதளங்களைக்கொண்ட கப்பல்கள் தயாரிக்கப்படும்.

இராணுவ அலுவர்கள்:-
முப்படைகளினதும் ஆள் அதிகரிப்பு விசாலமாக்கப்படும். Black Water, Halliburton போன்ற பல்லாயிரக்கணக்கான இராணுவ ஒப்பந்தக்காரர்களுக்குப் பதிலாக பெண்டகனின் நேரடி ஊழியர்கள் நியமிக்கப்படுவர். இவர்களுக்கான ஊதியங்கள், சலுகைகள் இன்னும் விரிவாக்கப்படும்.

தொழில்நுட்பங்கள்:-
அமெரிக்க இராணுவத்தின் எதிர்காலப் போரிடும் திட்டம் (Future Combat Systems – FCS) என்பது உணர்திரன் வாய்ந்த கருவிகள், தானியங்கி இயந்திரங்கள் (Robots), நவீன ரக துப்பாக்கிகள், குண்டுகள், போரிடும் புதிய இராணுவ இயந்திரங்கள், டாங்கிகள், முக்கியமாக ஆளில்லா விமானங்கள், புறதொலைக்கட்டுப்பாட்டுக்குற்பட்ட கருவிகள் என பல்வேறு போர்த் தொழில்நுட்ப சாதனங்கள் உற்பத்திசெய்யப்படுவதன் மீது அதிகளவு கவனக்குவிப்பு செலுத்தப்படும்.

இணைய இராணுவம்:-
இந்த 21ம் நூற்றாண்டு எதிர் நோக்கியிருக்கும் சைபர் யுத்தத்தை எதிர்கொள்வதற்காக 100 மில்லியன் டொலர் செலவுடன் NCCIC – “National Cyber Security and Communications Integration Centre” என்ற மத்தியஸ்தம் நிறுவப்பட்டுள்ளது. அத்தோடு 2010ம் ஆண்டு பெண்டகனினால் United State Cyber Command என்ற இணையப் பாதுகாப்புப் படையும் நிறுவப்பட்டுள்ளது. இவை இன்னும் பலப்படுத்தப்படுவதோடு விஸ்தரிக்கப்படும் என்றும் பெண்டகன் செய்தியறிவித்துள்ளது. மேலும் National Cyber Range என்ற பெயரில் 50 கோடி டொலர் செலவில் பாரியதொரு பாதுகாப்பு வலையமைப்பும் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

மலைபோல் பெருகிவரும் பணிநீக்கங்கள், ஊதியக் குறைப்புகள், வேலையில்லாத் திண்டாட்டங்கள், வீட்டு அடமானங்கள், வீடுகள் முன்கூட்டியே விற்கப்படல் இதனால் அதிகரிக்கும் வீடற்ற தெருவோர வாழ்க்கை நிலை, பசி, பட்டினி என அமெரிக்க மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பெரும் இன்னல்களுக்கு மத்தியில் அமெரிக்க அரசாங்கம் மக்கள் நலன்பேணாமல் அநியாயமாக இந்த இராணுவச் செலவினங்களை அதிகரித்துச் செல்கின்றது என்று தற்போது ஒபாமா அரசுக்கெதிராக மக்கள் எதிர்ப்பு வலுத்துவருகின்றது.

சவாலுக்கு சவால் என்ற வகையில் இந்தளவு பாரிய இராணுவ, தொழில்நுட்ப, ஆயுதப் பலங்களுடன் அமெரிக்காவை எதிர்த்து யுத்தம் செய்ய எந்த நாடும் இல்லை என்றபோதிலும் அமெரிக்காவோ இன்னும் இன்னும் தம்மைப் பலப்படுத்திக்கொள்வதும் அதற்காக மில்லியன் கணக்கான டொலர்களைச் செலவிடுவதும் அதன் நீண்ட, விரிந்த எல்லைகளைக்கொண்ட போர்த்திட்டத்தைச் சுட்டிக்காட்டுகின்றது.

அமெரிக்கா ஆரம்பித்த இந்தத் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்பது ஆப்கானிஸ்தானுடனோ ஈராக்குடனோ முற்றுப்பெறும் போர்த்திட்டமல்ல. அது காலாகாலம் தொடர்ந்தும் கொண்டு நடாத்தப்படவிருக்கும் மகா யுத்தமாகவே இருக்கப்போகின்றது. அதன்படி அமெரிக்காவின் கழுகுப் பார்வை தற்கோது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் ஆபிரிக்காவின் பெரும்பகுதியிலும், மத்தியகிழக்கு முழுவதிலும் மெக்சிக்கோ மற்றும் கரீபியன் வளைகுடாப் பகுதிகளிலும் வீழ்ந்துள்ளது. அதன்படி அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு உரமூட்டும் நாடுகள் என்றொரு பட்டியலைத் தயாரித்து அந்நாடுகளைக் குதருவதற்காகத் தருனம் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றது.

அமெரிக்காவின் கணிப்பீட்டில் எகிப்துதான் பயங்கரவாதத்துக்கு உரமூட்டும் முதன்மை நாடு. பலஸ்தீன், ஈரான், சூடான், ஆப்கான், பாகிஸ்தான், இந்தோனேசியா, சிரியா, லெபனான், என்பன இரண்டாவது எதிரிகள் பட்டியலிலும் மத்தியாசியாவில் எண்ணைய் வளம் கொழிக்கும் அஸர்பைஜான், கஸகஸ்தான், துருக்மேனிஸ்தான் என்பன அடுத்தடுத்த இடங்களிலும் இருக்கின்றன.

உஸாமா பின் லாதினினை பாகிஸ்தானில் வைத்து அதுவும் இராணுவக் கட்டுப்பாட்டுமையத்திற்கு அருகாமையில்வைத்து சுற்றி வளைத்து சுட்டுக்கொண்டதாக ஒரு நாடகத்தை நடாத்தி பாகிஸ்தான் தீவிரவாதத்தை வளர்ப்பதாகக்கூறி அதன்மீது தாக்குதல் நடாத்த அமைத்த வியூகம் பலிக்காது போகவே தற்போது அதற்கு வேறு வழிகளை யோசித்து வருகின்றது அமெரிக்கா.

அமெரிக்காவுக்குத் தேவை இந்நாடுகளின் மக்கள் எழுச்சியை ஆயுத ரீதியாக அடக்கி, அங்கு தம் சார்பான பொம்மை ஆட்சியை இருத்தி, மத்தியாசியாவின் எண்ணெய் வளங்களனைத்தையும் எடுக்கப்பயன்படும் குழாய்த்திட்டங்கள் மீது ஆதிக்கம் செலுத்தி என்றும் தமது நலன்களைப்பேணிக்கொண்டு உலக வல்லரசாக இருக்கப்பதாகும்.

ஆனால் மத்திய கிழக்கில் தற்போது சூடுபிடித்துள்ள மக்கள் புரட்சி அமெரிகாவின் திட்டங்களுக்குப் பெரிதும் இடையூராக அமைந்துவிட்டுள்ளது. அமெரிக்கா இதனை எதிர்பார்த்திருக்கவே மாட்டாது. ஆனாலும் லிபியாவின் விவகாரம் அங்கு தமது மூக்கை நுழைத்துக்கொள்வதற்குச் சற்று அவகாவமிருப்பதாக அமெரிக்கா எண்ணுகின்றது. அதற்கான உச்சகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றது. எது எப்படியோ மத்திய கிழக்கின் மக்கள் புரட்சி இன்னுமொரு புதிய உலக ஒழுங்கை (New world Order) உருவாக்கும் என்பதே அரசியல் அவதானிகளின் எதிர்பார்ப்பு.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...