"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

12 October 2011

உறுப்புக்களை விற்றுப் பழைக்கும் ஈராக் மக்கள்

ஆலிப் அலி (இஸ்லாஹி)
உலகில் போரினால் சிதைக்கப்பட்ட நாடுகளில் ஈராக் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் இருப்பது சோமாலியா.

இப்போது ஈராக்கில் நடப்பது ஆயுத பலம் வாய்ந்த இராணுவ ஆட்சியாகும். சதாமின் ஆட்சிக் காலத்தில் குடிநீர், மின்சாரம், நகர அபிவிருத்தி, உணவுப் பொருள் விநியோகம், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தடையின்றிக் கிடைத்தன. அதனால் பெரும்பான்மையான ஈராக்; மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர் என்றே கூறலாம். ஈராக்கியர்கள் பெருமிதத்துடனும் தன்மானத்துடனும் அன்று வாழ்ந்தனர்.

ஆனால் அமெரிக்கப் படையெடுப்பின் பின் ஈராக் தலைகீழாக மாறியுள்ளது. ஈராக் வரலாற்றில் என்றுமில்லாதவாறு முதன் முறையாக, பெரிய அளவில் போதைப்பொருள் விநியோகம் நடைபெறுகிறது. பல்வேறு மத, மொழி, இனம் என்பவற்றின் பெயரால் மக்கள் திட்டமிட்டுப் படுகொலைசெய்யப்படுகின்றனர்.

ஈராக்கின் தெருக்களையும் சாலைகளையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஈராக்கின் உள்துறை அமைச்சர் எலெக்ட்ரிக் டிரில் எனும் புதுவகையான சித்திரவதை முறையை அறிமுகம் செய்துள்ளார். இதன் மூலம் மாத்திரம் பல்லாயிரக்கணக்கானவர்கள் மாண்டுள்ளனர். இதுவரை சுமார் 10 இலட்சம்பேர் இந்த எலெக்ட்ரிக் டிரில் சித்திரவதைக்கு இரையாகியுள்ளனர். இன்னும் 60 இலட்சம்பேர் ஈராக்கைவிட்டு சிரியா, லெபனான், ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.

ஈராக்கின் பொதுமக்கள் தமது அன்றாட வாழ்க்கைச் செலவினங்களைக்கூட கவனித்துக்கொள்ள பணமில்லாமல் தங்கள் உடல் உறுப்புக்களையே விற்றுப் பிழைக்கிறார்கள். மருத்துவமனைகளைநோக்கி உறுப்புகளை விற்பனை செய்ய வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்கின்றது. ஈராக் மக்களது உறுப்புகளை விலைக்கு வாங்கிச் செல்ல உலகின் பல பகுதிகளிலும் ஆட்கள் உள்ளனர். சாதாரண பொதுமகன் மாத்திரமல்ல ஈராக்கின் எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகளுக்குக் கூட இதே நிலைதான்.

ஈராக்கின் மக்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் வியாபாரிகளாக மாறிவருகின்றனர். தமது கைவசம் உள்ள எதையும் விற்கத் துணிந்துவிட்டனர். TV, பிரிட்ஜ், வீட்டுத் தளபாடங்கள், ஆபரணங்கள் என்று அனைத்தையும் விற்றுவிட்டு அன்றைக்குத் தங்களுக்குத் தேவையான உணவுப் பண்டங்களை வாங்கிச் செல்ல கடைவீதிகளுக்கு வருகின்றனர். தமது வீடுகளில் பல வருடங்களாகப் பாதுகாத்துவைத்திருந்த அரிய நூல்களையும் மலிவு விலைக்கு விற்கவேண்;டிய அவலநிலைக்கு அறிவு ஜீவிகள் உட்பட்டுள்ளனர்.

இவற்றையெல்லாம் வாங்கிச் செல்லவும் பிற நாடுகளில் கொண்டுபோய் விற்கவும் ஏராளமான வியாபார ஏஜண்டுகள் (முகவர்கள்) ஈராக்கில் நிறுவனமாக இயங்குகின்றனர்.

சிரியாவிலும் ஜோர்தானிலுமாக 40 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் அகதிவாழ்க்கை வாழுகின்றனர். அவர்;களில் பெரியவர்களும் பெண்களும் சிறுவர்களும் அந்த நாட்டு குப்பைமேடுகளில் எச்சில் புறக்குவதையும் தாராளமாக அவதானிக்கலாம். சிலர் தெருக்களிலெல்லாம் கையேந்திய வண்ணம் யாசகம் கேட்டுத்திரிகின்றனர்.

ஈராக்கில் பெண் குழந்தைகள் சிலர் பாலியல் தொழிலில்  ஈடுபடுகின்ற அவளமும் நடக்கின்றது. தாய், தந்தையரை இழந்த குழந்தைகள் பலர் அகதிகளில் உள்ளனர். இவர்கள் ஆபாசப் பேர்வழிகளால் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். சுமார் 10 இலட்சம் ஈராக்கியக் குழந்தைகள் இரவு உணவின்றி தெருக்களில் உறங்கச் செல்கின்றனர். அண்மைய செய்தியொன்றில் ஈராக்கியர் ஒருவர் தனது 9 வயதுக் குழந்தையை 300 டொலர்களுக்கு விற்றுள்ளார். இதனைத் தாங்க இயலாமல் அத்தாய் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அமெரிக்க ஆக்கிரமிப்பின் பின்னர் இதெல்லாம் ஈராக்கில் சர்வ சாதாரணமாகிவிட்டன.  

மொத்தத்தில் ஈராக் என்ற ராவணன் கோட்டையில் இன்று மனிதர்கள் தப்ப வேண்டுமெனில் உயிரைவிடவேண்டும். வாழவேண்டுமெனில் உடலுறுப்புக்களை விற்றுப் பழைக்கவேண்டும்.

குறிப்பு : சமநிலைச் சமுதாயம் சஞ்சிகையில் பிரசுரமான ஈராக்கிய எழுத்தாளர் மஹ்மூத் சயீத் அவர்களது ரோ்காணலை ஒட்டி எழுதியது.

உங்கள் கருத்து:

2 comments:

Kannan said...

எப்போது இந்த நிலை மாறும்....... நன்றி, கண்ணன் http://www.tamilcomedyworld.com

சிநேகிதி said...

நாம் முனைந்து மாற்றாத வரை நிலைமைகளும் மாறாது....
சரியா? தவறா?

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...