சிலர் எந்நேரமும் தமது கையடக்கத் தொலைபேசியை இயக்கிக்கொண்டே இருப்பார்கள். யாருக்காவது sms அல்லது Missed call பண்ணிக்கொண்டே இருப்பார்கள். யாராவது தனக்கும் sms, call பண்ணமாட்டார்களா என்று ஏங்குவார்கள். இவர்கள்தான் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையானவர்கள். இதனை அவர்களே உணரமாட்டார்கள். இது MPA (Mobile Phone Addiction) என அழைக்கப்படுகின்றது.
கொரியாவில் MPA தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னர் அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் பின்வருமாரு சில அதிர்ச்சித்தகவல்களைக் காண முடியுமாக இருந்தது. கையடக்கத் தொலைபேசி உபயோகித்துக்கொண்டிருக்கும்போது பற்றரியின் ஆயுள் நின்றுவிடுமோ என 68.1 சதவீதமானோர் அன்றாடம் பயப்படுகின்றனர். இன்னும் 67.9 சதவீதமானோர் கையடக்கத்தொலைபேசியை மறதியாக எங்கேயும் விட்டுவிடுவோமா என்று அஞ்சுகின்றனர்.
இன்னும் 36.2 சதவீதமானோர் தூங்கும்போதுகூட தமது தொலைபேசியை நிறுத்திவைக்க விரும்புவதில்லை. இவ்வாறு இன்று மனிதனின் சிந்தனை புராகவும் அவனிடமிருக்கும் கைத்தொலைபேசியைச் சுற்றியே வந்துகொண்டிருக்கின்றது. இதனால் ஏற்படும் மன அழுத்தத்தினால் மனநோயாளியாகவும் வாய்ப்புள்ளது.
எனவே எதனையும் அளவோடு பயன்படுத்துவதுதான் யாருக்கும் நல்லது. சொல்லிட்டேன்…
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...