பூவுலகில்
உயிர்கள் சுமக்கும்
ஓர் உயிர்த் தாய்
பொறுமையின்
மனித உரு
தாய்
அன்பின்
பேரண்டம்
தாய்
தாய்
எம் போல் ஒரே முறை பிறப்பதில்லை
ஒவ்வொரு பிரசவத்திலும்
பிறப்பெய்துகின்றாள்
தாய்
ஒரே முறை இறப்பதுமில்லை
ஒவ்வொரு பிரசவத்திலும்
இறப்போடு சங்கமிக்கின்றாள்
தாய்
தன் உதிரத்தைப் பாலாக்கியவள்
தன் கரங்களால் எமைக் குளிப்பாட்டியவள்
முதல் ஆசானாய் அறிவூட்டியவள்
ஒரு புணிதனாய் எமக்கு வழிகாட்டியவள்
தாயே இப்போதுதான்
உணர்கிறேன்
“சீ” எனறும் சொல்லாதே
என்ற திருமறையின் சீற்றத்தை
இப்போதுதான் உணர்கின்றேன்
தாயே!
நீ மகோன்னத மணிரத்தினம்
புகழின் உச்சம்
தயவுகூர்ந்து
உன் பாதத்தைக் காண்பி
வணங்கவல்ல,
அதன் கீழே என்
சுவனத்தைத் தேட…
ஆலிப் அலி (இஸ்லாஹி)
1 comments:
fathima.....
very exellent poem and best.........
பெண்ணாய் பிறந்த ஒவ்வொருவரும் தாய் எனும் உன்னத நிலையை அடைந்து, அதில் பெண்மையையும் தாய்மையையும் சிறப்பாக பேண வேண்டும்....
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...