"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

07 June 2016

உடல், உள நோய்களுக்கு நிவாரணி நோன்பு

ரமழான் மாத இத்தொடரில் நோன்பு தொடர்பான தலைப்புடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். நாம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நோன்பும் எம்மை வந்தடைந்துவிட்டது. ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை அல்லாஹ் எமது உள்ளங்களைச் சுத்தப்படுத்துவத்தற்காக மட்டுமன்றி உடலையும் நோய்க் கரைகளில் இருந்து சுத்தப்படுத்தி வாழ்வுக்குப் புத்துணர்ச்சியளிப்பதற்காகவுமே கடமையாக்கியிருக்கின்றான். நோன்பினால் ஏற்படும் உடலியல் மற்றும் உளவியல் சிகிச்சைகளைப் பட்டியலிடும் ஆய்வுகளைப் பார்க்கும்போது அவ்வாறுதான் கருதத் தோன்றுகின்றது. எமது உடலையும் உள்ளத்தையும் புடம்போட வந்திருக்கும் நோன்பின் மறுத்துவப் பயன்பாடுகள் பற்றி இத்தொடரில் சற்று நோக்குவோம்.

பழங்காலம் முதல் நோன்பு.
உலகில் மிகப்பெரிய மதங்களான கிறிஸ்தவம், யூதம், பௌத்தம், இந்து என்பவற்றிலும் நோன்பு சில மிக முக்கியமானவொன்றாகக் கருதப்படுகின்றது. விரதம், உபவாசம், உண்ணா நோன்பு என்ற பெயர்களால் நோன்பு அழைக்கப்படுகின்றது. உடலின் நோய்களை நீக்கி உள்ளத்தை சுத்தமாக்கி ஒரு முழுமையான இயற்கை வாழ்வினை அடைந்துகொள்ள பழங்கால மக்கள் நோன்பைப் பயன்படுத்தினர். கிரேக்க தத்துவ ஞானி பைதகரஸ் தனது தத்துவவியலைக் கற்பிக்க முன் நாற்பது நாற்கள் நோன்பு நோற்குமாறு தனது மாணவர்களை வேண்டினார். அதனால் அவர்களது உள்ளம் பக்குவப்படும் என்று நம்பினார். இவ்வாறு ஆரம்ப காலம் முதல் நோன்பைப் பல சமூகங்களும் கடைபிடித்து வந்துள்ளனர். முன்பிருந்தவர்கள் மீதும் இறைவன் நோன்பை விதித்திருந்தான் என்ற செய்தியை பின்வருமாறு திருமறை கூறுகின்றது.
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது.” (2:183)
மனிதர்கள் மட்டுமன்றி விளங்குகளும் நோன்பிருக்கின்றன.
மனிதன் மட்டுமன்றி மற்றைய உயிர்ப் பிராணிகளும் கூட நோய் வாய்ப்படும்போது அவை உண்பதை நிறுத்திவிடுகின்றன. இவ்வாறு உண்ணாமல் இருப்பதால் அவற்றின் நோய் விரைவில் குணமடைவதாக மறுத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எங்களைச் சுற்றியுள்ள பிராணிகள் குறிப்பாக நாய், பூனை, பசு போன்ற வீட்டு விலங்குகளும் அவ்வாறுதான். கோழிகள் அவற்றின் நோய்ப்பருவத்தில் பெரிதளவு உணவு, நீர் எடுக்காமல் ஒரு மாதம் வரை குருக்குகாகி இருக்கும். பருந்து தனது நாட்பதாவது வயதில் தொடர்ந்து ஐந்து மாதங்கள் இப்படியிருக்கும். கரடிகள் ஆறு மாத காலம்வரை உணவின்றி இருக்கும். இவை யாவும் இவ்விலங்குகளின் நோன்பென்றே ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆக! மனிதன் மட்டுமன்றி விலங்குகளும் நோன்பிருக்கின்றன. இது அவை செய்யும் இறை வணக்கமாகவும் இருக்கலாம். மட்டுமன்றி இப்படி நோன்பிருப்பதால் அவற்றின் உடலாரோக்கியத்தையும் அவை பேணுகின்றன.

ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் நோன்பு.
நோன்பு நோற்பதன் மூலம் ஆரோக்கியமடையுங்கள்என நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே முறையாக நோன்பு நோட்பதால் உடல், உள்ளம் என அனைத்தும் ஆரோக்கியமடைகின்றன என்ற யதார்த்தத்தையே நபியவர்கள் இங்கு குறிப்பிட்டுள்ளார்கள். ஆரோக்கியம் என்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) வழங்கியுள்ள வரைவிலக்கனத்தின்படி ஒருவன் தனது உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக ரீதியாக அவனது அன்றாட வாழ்வின் நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறற்றவனாக அமையும்போது மாத்திரமே சுகதேகியாகிறான்.என்கின்றது. நோன்பானது ஒரு மனிதனின் இந்த நான்கு பகுதிகளையும் அற்புதமான முறையில் சீர் செய்கின்றது. இது தொடர்பாக இன்றைய நவீன மறுத்துவ விஞ்ஞானம் பல்வேறு ஆராய்ச்சித் தகவல்களை நமக்கு முன்வைத்துள்ளது. தற்கால மருத்துவ விஞ்ஞானம் ஒரு மனிதன் ஆரோக்கியத்தை பேணுவதற்கு சற்று நேரம் உணவு உட்கொள்ளாது (நோன்பு) இருத்தல் “(Fast)” என்பது சிறந்த முறையாகும் என அறிமுகப்படுத்தியுள்ளது. இதனையே நோன்பும் நமக்கு சொல்லித்தருகின்றது.

உடல் நோய்க்கு நிவாரணியாகும் நோன்பு.
நவீன மருத்துவ விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் நோன்பு ஒரு இயற்கை மருத்துவக்குணமாக்கியாக கருதப்படுகிறது. இதுதொடர்பாக பல நூல்களும் எழுதப்பட்டுள்ளன. இதில் பிரபல வைத்தியரான ஷெல்டன்என்பவரின் நோன்பின் மூலம் பரிகாரம்எனும் நூல் குறிப்பிடத்தக்கது. நோன்பானது எமது உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கும் நிவிரணியாக இருக்கின்றது. இன்று நாம் உட்கொள்ளும் அதிக உணவுகளில் நச்சுப் பதார்த்தங்கள் கலந்திருக்கின்றன. உடலில் தங்கியுள்ள கழிவுகள் மட்டுமல்லாது பல வருடங்களாக நோய்களுக்குப் பயன்படுத்திய ஊசி, மருந்து, மாத்திரை ஆகியவற்றின் நச்சுக்களும் கூட நோன்பின் போது வெளியேற்றப்படுகின்றது என்பது ஆச்சரியமானதொரு தகவல்.

நோன்பின் மூலம் குடலில் ஈரப்பதன் குறைவடைவதால் குடற்புண்களும்  எளிதில் குணமடைகின்றன. பதினொரு மாத காலமாக தொடராக இயங்கிக்கொண்டிருந்த உடல் உறுப்புகள் நோன்பு காலங்களில் உண்ணல் பருகளைக் குறைத்துக்கொள்வதால் அவை ஓய்வெடுப்பதோடு இக்காலத்தில் சமிபாடடைவதற்கு செலவழிக்கின்ற சக்தியை சேமித்து, உடலின் ஏனைய உறுப்புகளின் செயற்பாடுகளுக்கு அதனை வழங்கி அவற்றின் செயற்பாட்டைத் தூண்டுகின்றது.

நோன்பானது உடலில் காணப்படும் குளுக்கோசின் அளவை சமப்படுத்துவதோடு எண்ணெய்ப் படலங்கள் உருகுவதற்கும் வழி கோலுகின்றது. இதனால் உடலில் கொலஸ்ட்ரோல் குறைவடைகின்றது. மேலதிகமாக உள்ள கொழுப்புகள் அகற்றப்படுகின்றன. அவற்றுடன் சிறுநீரகம், பெருங் குடல் என்பன இரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையை வழமையை விட திறனுடனும் உத்வேகத்துடனும் நோன்பின்போது செய்யும்.

லீன் ஞதேவ் என்கிற மருத்துவ ஆய்வாளர், “இயற்கை மாற்றீடுகள்எனும் தனது புத்தகத்திலே, “நோன்பானது உடலின் இயற்கை நோயெதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் உடற்பாகங்களை தூண்டி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. மேலும், பக்டீரிய எதிர்ப்பு இரத்தக் கலங்களை அவற்றினது திறனில் பல மடையச் செய்கிறதுஎனக் குறிப்பிடுகிறார்.

இன்று எம்மை ஆட்டிப் படைக்கும், நீரிழிவு, கொலஸ்ட்ரோல், உயர் குருதி அழுத்தம் மற்றும் முக்கியமாக புற்று நோய் போன்ற மோசமான நோய்களையும் நோன்பு குணப்படுத்த வல்லது. புற்றுநோயை குணப்படுத்த அறிவியல் ரீதியான மருத்துவமுறையாக கருதப்படும் 'கீமோதெரபி' உடன் நோன்பையும் கடைபிடிப்பதால் புற்றுநோயை இலகுவில் குணப்படுத்தலாம் என்பதும் நவீன மறுத்துவத்தின் அறிவிப்பாகும். புற்றுநோயை ஆரம்பத்தில் இனங்கண்டுகொண்டவர்கள் நோன்பு பிடிக்கும் போது புற்றுச் செல்களின் வளர்ச்சி தாமதமாகிறது. காலப்போக்கில் முற்றிலுமாக இச்செல்கள் அழிந்து குணமடையவும் வாய்ப்புள்ளதாக மறுத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுவதாவது "நோன்பு (உண்ணாவிரதம்) மேற்கொள்வது, புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும். அதற்கான சிகிச்சைக்கும் ஊக்கமளிக்கும் என்று தெரிய வந்திருக்கிறது. புற்றுநோய்க்கான 'கீமோதெரபி' சிகிச்சையுடன் உண்ணாவிரதத்தையும் கடைபிடிக்கும் போது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும், பரவலையும் அது தாமதப்படுத்துகிறது. அதன் இறுதியில் அவை தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின்றன. 'இதை புற்றுநோய் செல்களின் தற்கொலை என்று கூறலாம்'. என்று முன்னணி ஆய்வாளரான வோல்டர் லோங்கோ கூறுகிறார்." தங்களின் இந்தக் கண்டுபிடிப்பு, மேலும் சிறப்பான புற்றுநோய் சிகிச்சை முறையை உருவாக்கப் பயன்படும் என்றும், இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவே மறுந்தில்லாமல் நோயில்லைஎன்ற நபியவர்களுடைய பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாக பலவிதமான நோய்களுக்கும் நோன்பானது வருமுன் காக்கும் கேடயமாகக் காணப்படுகின்றது. நோன்பு ஒரு கேடயமாகும்என்பதும் நபியர்வகளது ஒரு பொன்மொழிதான்.

 உள நோய்க்கு நிவாரணியாகும் நோன்பு.
உளவியல் வைத்திய நிபுணரான டாக்டர் ஹஷ்ணுஎன்பவர் கூறுகிறார் நோன்பின் போது உடலில் என்டோபீன் (Endorphin) எனும் பதார்த்தம் சுரக்கிறது. இது மனிதனின் சிந்தனையை தூய்மையாக்குவதோடு, நேரிய சிந்தனை (Positive thinking) ஐயும் ஏற்படுத்துகிறதுஎன்று நோன்பின் முக்கியத்துவத்தை அவர் விஞ்ஞான ரீதியில் விளக்குகிறார். இதனால்தான் யார் என்ன செய்தாலும், என்ன சொன்னாலும் நான் நோன்பாளிஎன்று மறியாதையுடன் அவ்விடத்தைவிட்டு நகர நபிகளார் வழிகாட்டித் தந்தார்கள். ஒருவர் தூற்றினாலும், அடித்தாலும் திருப்பித் தாக்காது இது எம்மைத் தடுக்கின்றது.

மனிதனின் உள்ளத்தில் ஏற்படுகின்ற பயம்,பதகளிப்பு, கவலை, பதற்றம், மன உழைச்சல், அழுப்புத்தன்மை போன்ற மனதிற்கு ஏற்படும் பல அசௌகரீகங்களை, கோளாருகளையும் நோன்பு அகற்றிவிடுகின்றது. இன்று உளக்கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பலர் அதிலிருந்து மீள பலவகை மருந்துகளை உபயோகித்து வருவதை காண்கிறோம். நோயின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப மருந்து பாவிக்க வேண்டிய தேவையிருந்தாலும் மருந்து மாத்திரைகள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதைவிட நோன்பு நோற்பதன் மூலம் மூளை முழுமையாக அமைதியடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கடந்த 10 ஆண்டுகளாக எண்ணம் செயல் ஆகியவை மாறுபட்டுச்செயற்படும் மனக்கோளாறான முரண் மூளைஸ்கிசோபேர்னியா நோயைக் குணப்படுத்துவதற்கான பயணுள்ள சிகிச்சையாக நோன்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பல்வேறுவிதமான மனத்தாக்கங்கள், கோளாறுகளால் பாதிக்கப்பட்ட 7000 நோயாளிகளுக்கு நோன்பு நோற்க வைத்ததன் மூலம் அவர்களின் நோயை குணப்படுத்த முடிந்தது என மொஸ்கோ மனநோயியல் நிறுவனத்தின் நோன்புப்பிரிவிற்கான பனிப்பாளர் வைத்தியர் யூரி நிகலோயேவ் குறிப்பிடுகிறார். 70 வீதமான முரண் மூளை நோயாளிகள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு திரும்ப நோன்பு காரணமாக இருந்தது என அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

குடிப் பழக்கம், புகைத்தல் என எந்தத் தீய பழக்கங்களுக்கும் அடிமைப்பட்டிருப்பவர்களை பூரணமாகக் குணப்படுத்தி அதிலிருந்து மீட்டெடுக்க 29 நாட்கள் போதுமானதென்பதே உளவியல் நிபுணர்களின் கருத்து. ஆனால் இஸ்லாம் ரமழான் மாதத்தில் 30 நாட்கள் தொடராக நோன்பு பிடிக்க வலியுருத்துவது மட்டுமல்லாமல் நோன்பை முறிக்கும் பல காரணிகளைக் கூறி அவற்றிலிருந்தும் தூரமாகி இருக்கும்படி எம்மைப் போதிப்பதனூடாக எம்மை முழுமையாக மாற்ற முனைகிறது. புகைத்தலை விடவே முடியாது என்பவர்கள் கூட நோன்பின் பகல் காலங்களில் புகைக்காதிருப்பது நோன்பு செய்யும் அற்புத சாதனைதான். தொலைக் காட்சியை விடவே முடியாது என்பவர்கள் நோன்பு காலங்களில் தொலைக்காட்சியை மூடிவைக்கச் செய்வதும் நோன்பின் மற்றுமொரு அற்புத சாதனைதான். இன்று புனர்வாழ்வு மையங்களில் கூட தொடர்ச்சியான நோன்பை ஒரு வழிமுறையாகக் கையாளுகின்றனர். அதுமட்டுமின்றி நோன்பு நோற்ற மனிதன் தன்னை கட்டுப்படுத்துவதன் மூலமாக தன்னம்பிக்கையை (Self confident) வளர்த்துக் கொள்கின்றான்.

முறையாக நோன்பு நோற்பது எப்படி?
இவ்வாறு உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பல்வேறு நன்மைகளை அள்ளித் தருகின்றது நோன்பு. இத்தகைய பயன்களை நாமும் அடையவேண்டுமென்றால் முறையாக நோன்பு நோற்க வேண்டும். அதெப்படி முறையாக நோன்பு நோற்பது? கீழே படியுங்கள். பொதுவாக ஏனைய காலங்களில் நாம் மூன்று வேலை உணவுண்கின்றோம் ஆனால் நோன்பு காலங்களில் இரண்டுவேலைதான் உணவெடுக்கவேண்டும். ஒன்று சஹர் உணவு இரண்டாவது இப்தார் உணவு. நோன்பு காலங்களில் இதுவே ஆரோக்கியம்.

1.         சஹர் உணவு

சஹர் நேரத்தில் வயிறு புடைக்க உணவு உண்டால் பகல் காலத்தில் பசி எடுக்காது என்பது தவறான எண்ணமாகும். அளவுக்கு அதிகமாக சஹரில் உண்பவர்களுக்கு நோன்பின் பகல் நேரம் கடினமானதாகவும் அசதி நிறைந்ததாகவுமே காணப்படும். மேலும், சஹர் உணவென்பது ஒரு சாப்பாடு நேரம் அல்ல மாறாக அது ஒரு நபிவழி சுன்னத்தாகும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. எனவே சஹர் உணவை வயிற்றில் நீருக்கும், காற்றுக்கும் இடம் வைத்து கொஞ்சமாக உண்ணவேண்டும். மரக்கறி, கீரைகள், பழங்களுடன் சிறிது சோறு போதுமானது. அதே போன்று சஹர் நேரத்தில் அதிகமாக தண்ணீர் குடிப்பது சமிபாட்டிட்கும் நோன்பிருக்கும் பகல் நேரத்தில் கிட்னியின் இயக்கத்திற்கும் உதவியாக இருக்கும். சஹர் உணவில் அல்லாஹ் விசேட பறகத் செய்துள்ளான் என்பதையும் பறகத் என்பது அளவில் இல்லை என்பதையும் புறிந்து கொள்ள வேண்டும்.

2.         இப்தார் உணவு
இஃப்தார் வேலையில் தண்ணீர், பேரித்தம், பசும் பால், கனி வகைகள், பழச்சாறு, கஞ்சி, சூப், போன்றவற்றையே நாம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக உப்பு, காரம் மற்றும் கொழுப்பு வகையான உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த உணவு வகைகளையும் வயிறு நிரம்ப உட்கொள்ளாமல் நடுத்தரமாக, வயிற்றில் இடம் இருக்கும் விதத்திலேயே உட்கொள்ள வேண்டும்.

இஃப்தாரின் போது, எண்ணையில் பொரித்த, தாளித்த உணவுகள் பெட்டிஸ், சமூசா, கட்லட் போன்ற உணவுகளும் சுவையூடட்டிகள் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளும், போத்தலில் அடைத்த மென்பானங்களும் அதிக இனிப்பான தீண் பண்டங்களும் தவிர்க்கப்பட வேண்டும். இவை நோன்பு காலங்களில் மட்டுமன்றி எல்லாக் காலங்களிலும் நமது உடலுக்குக் கேடு விளைவிப்பவையே. இழந்த நீரை ஈடுசெய்ய உடலுக்கு அதிகமாக நீராகாரங்களையே வழங்கவேண்டும்.

இந்த முறையில் அதிகம் உண்ணாமல் முறையாக நீங்கள் நோன்பு நோற்பீர்களாயின், நோன்பின் ஆரம்ப நாட்களில் உங்களது உடலில் ஏற்படும் சில மாற்றங்களை அவதானிக்கலாம். குறிப்பாக தலைவலி, அசதி, வாய் நாற்றம் மற்றும் அதிக சிறு நீர், மஞசள் நிறத்தில் சிறுநீர் வெளியேறல் என்பன ஏற்படுவதானது, உங்களது உடலில் நஞ்சகற்றல் இடம்பெறுகிறது என்பதற்கான இயல்பான அடையாளங்களாகும். சஹரிலும் இப்தாரிலும் அதிக நீர் மற்றும் பாணங்களை அருந்துவதன் மூலம் இவற்றிலிருந்து மீளலாம். நோன்பின் மூலம் உள்ளம், உடல் இரண்டையும் சுத்தப்படுத்திக்கொள் முயற்சிப்போம்.

aliaalif.blogspot.comஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...