"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

22 May 2012

ஆயிரம் ரூபாத்தாளில் முஸ்லிமின் புகைப்படம்.

நாம் பயன்படுத்தும் 1000 ரூபாத் தாளை நான்றாக உற்றுப் பாருங்கள். அதில் ஒரு யானையுடன் தொப்பி அணிந்த ஒரு மனிதர் காணப்படுகின்றார். இப்படத்தின் பின்னால் பெரியதொரு சரித்திரமே காணப்படுகின்றது. ஆனால் அதனை இன்றைய முஸ்லிம் பொதுமக்களோ, ஏன் பெரும்பான்மை சிங்கள மக்களோ அறிவார்களோ என்னவோ? இன்று புனித பூமிச் சட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களது வணக்கஸ்தளங்கள் அகற்றப்படுவதற்கான சதித்திட்டங்கள் சில பௌத்த தீவிரத் துவேசவாதிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இத்தருனத்தில் இக்கட்டுரை மூலம் முஸ்லிம்கள் பௌத்த புனிதஸ்தளமான தளதா மாளிகைக்கு எத்தகைய சேவை செய்துள்ளனர் என்பதனை இச்சிறு சம்பவத்தின் மூலம் உணர்த்த முனைகின்றேன்.

ஆயிரம் ரூபாத் தாளில் காணப்படும் தொப்பி அணிந்த அம் மனிதர் ஒரு முஸ்லிம். உமர் லெப்பை பனிக்கார் என்ற இவர் கிழக்கு மாகானத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூரைச் சேர்ந்தவர். 1925 இல் ஏறாவூர் வனப்பகுதியிலிருந்து பிடிக்கப்பட்ட ஒரு யானையை இவர் கண்டி தளதா மாளிகைக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். ஆனால் சில நாட்களிலேயே அந்த யானை உமர் லெப்பை அவர்களைத் தேடி ஏறாவூர்வரை சென்றதாகவும் மீண்டும் அவர் அதனை எடுத்து வந்து தளதா மாளிகைக்கு அன்பளிப்புச் செய்ததாகவும் கூறப்படுகின்றது.
யே நாம் பயன்படுத்தும் 1000 ரூபாத் தாளில் காணப்படுகின்றது. அத்தோடு யானையுடன் பக்கத்தில் இருப்பவரும் அவரே. இந்த யானையை அவர்
அவரது மகத்தான இச் சேவையை கௌரவிக்கும் விதத்தில் 1984 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர் ஜயவர்தனா அவர்கள் அந்த யானையை தேசிய சொத்தாகப் பிரகடனம் செய்தார். அதற்கு ராஜா என்றும் பெயர் சூட்டப்பட்டிருந்து. அத்தோடு உமர் லெப்பை அவர்களை கொளரவிக்கும் விதமாக அரசால் அவரையும் அவரது யானையையும் சித்தரிக்கும் வண்ணம் அவர்களது புகைப்படம் ஆயிரம் ரூபாத் தாளில் அச்சிடப்பட்டது.
குறித்த யானை ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தளதா மாலிகையில் இருந்துவிட்டு 1988 ஜுலை 15 அம் திகதி இறந்துபோனது. உமர் லெப்பை பனிக்கார் அவர்களும் இறந்துவிட்டார். அவர்கள் இறந்தாலும் அவர்களது வரலாறு இறந்துபோகா வண்ணம் ஆயிரம் ரூபாத் தாளில் அவர்களது புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளமை மிகுந்த வரவேற்புக் குரியது. என்றாலும் தற்போது புதிதாக அச்சிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபாத் தாள்களில் குறித்த புகைப்படம் அச்சிடப்படவில்லை.
இவர் மாத்திரமன்றி இன்னும் அதிகமான முஸ்லிம்கள் தளதா மாளிகைக்கு யானைகளைப் பிடித்துக்கொடுக்கும் பங்களிப்பைச் செய்துள்ளனர். மன்னார், கரடிக்குழியைச் சேர்ந்த முஹம்மது யூசுப் என்பவரின் தலைமையில் ஒரு குழு ஐம்பது, அறுபதுகளில் சில யானைகளைக் கையளித்துள்ளனர்.
பனிக்கார் என்பது யானைகளைப் பிடித்து விற்பவர்களுக்கு சூட்டப்படும் புனைப் பெயர். ஏராவுரில் தற்போதும் பனிக்கார் வீதி என்றொரு பாதையும் உள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

fathima......
enakku perumaiyaha ullathu bcz me also Eravur...

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...