"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

07 August 2013

செயற்கைக் கருவூட்டலால் நோயுற்றுப் பிறக்கும் குழந்தைகள்

ஆண்-பெண் மலட்டுத் தன்மை என்பது சந்ததியைப் பெருக்க முடியாத உடல் சார்ந்த உயிரியல் குறைபாடாகும். மாறிவரும் சுற்றுச்சூழல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைமுறைத் தேர்வுகளினால் உலகளவில் பெண்களைவிடவும் ஆண் மலட்டுத்தன்மை அபாயகரமான அளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வீரியமுள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல் அல்லது அவற்றின் ஊர்தலில் (Motility) வேகம் குறைதல் போன்றவை மருத்துவ ரீதியாக ஆண் மலட்டுத் தன்மை ஏற்படக் காரணமாயுள்ளன.
குடிப்பழக்கம், புகைபிடித்தல், கஞ்சா போன்ற போதைப் பொருட்களைத் தொடர்ந்து உபயோகித்தல், சத்துக்குறைவான உணவு, விட்டமின் C குறைபாடு, தொடர்ச்சியான மன அழுத்தம், அளவுக்கதிகமான உடற்பயிற்சி, இறுக்கமான உள்ளாடைகள் அணிதல், ஆபாசத்திற்கு அடிமையாதல், மொபைல்போன் பாவனை, அதிகளவில் மடிக்கண்ணி பயன்படுத்தல் போன்ற தனிப்பட்ட வாழ்க்கை முறைகளும் ஆண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பூச்சிக்கொல்லிகள் போன்ற பல வேதி நச்சுக்கள், காரீயம், பெயிண்ட், போன்ற சிலவகை வண்ணப்பூச்சுகள், கதிர்வீச்சு, பாதரசம், போரான், பென்சீன், தலேற்று, BCB, அடர் உலோகங்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் எனப் பல காரணிகள் மூலம் நமது ஆரோக்கியமான வாழ்க்கையில் மலட்டுத்தன்மை உட்பட பல நேரடி மற்றும் மறைமுக எதிர்விளைவுகளை உண்டாக்குகின்றன.
ஆண், பெண் மலட்டுத் தன்மையினால் குழந்தைப்பேறு இல்லாமல் போகும் நிலை வெறும் தனிப்பட்ட பிரச்சனை அல்ல, உலகம் முழுதும் இது ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையாக இன்று நோக்கப்படுகின்றது. நமது அண்டை நாடான இந்தியாவில் ஆண், பெண் மலட்டுத் தன்மை அச்சுறுத்தும் வேகத்தில் வளர்ந்து வருவதாக மும்பையில் இயங்கி வரும் பன்னாட்டு மக்கள் தொகை ஆய்வியல் நிறுவனம் [international institute of population sciences / iips) 2010 இல் வெளியிட்ட அறிக்கையில் 1981 ஆம் ஆண்டுக்குப் பின் ஒவ்வொரு பத்தாண்டு இடைவெளியிலும் முறையே 1991, 2001 இல் எடுக்கப்பட்ட கணக்கீடுகள் 50 சதவிகிதத்திற்கும் மேல் மலட்டுத்தன்மை பெருகியுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 10% இந்திய இளைஞர்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை, தரம், உற்பத்தி ஆகியவற்றில் தீவிரமான பாதிப்புகள் இருப்பதாகவும் அவை சொல்கின்றன. 16% பெண்கள் குழந்தைப்பேறில்லாமல் இருக்கிறார்கள். 17% பெண்களுக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சனை அல்லது மணமுறிவு உண்டாகக் காரணம் குழந்தைப்பேறின்மையே. ஒன்பது கோடி இந்திய ஆண்களுக்கு ஆண்குறி விறைத்தல் கோளாறு இருக்கிறது. இதற்கான மருந்துகள் விற்பனையில் புழங்கும் பணம் மட்டும் தொண்ணூறு கோடி ரூபாய். 2000ல் வெறும் ஏழாயிரமாக இருந்த மலட்டுத் தன்மைச் சிகிச்சை/செயற்கைக் கருவூட்டல் சிகிச்சைச் சுழற்சிகள் 2010ல் நாற்பதாயிரமாக உயர்ந்திருக்கிறது. இப்போது இந்தப் பிரச்சினையின் தீவிரம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பாரம்பரியமாக குழந்தைகளைத் தத்தெடுக்கும் முறை  பின்பற்றப்பட்டு வந்த்து. என்றாலும் இதில் கருவில் சுமந்து பிரசவித்து தாய்மைப் பேற்றை அடையும் திருப்தி காணப்படவில்லை. நவீன மருத்துவ வளர்ச்சியின் காரணமாக இந்தக் குறைக்குத் தீர்வாக செயற்கைக் கருவூட்டல் முறைகள் அறிமுகமாகின. செயற்கைக் கருவூட்டல் முறைகள் பல்வேறு விதங்களில் நடைபெறுகின்றன. உதாரணமாக்க் கூறின்.
உடலுறவின் போது ஆணின் விந்து 48 – 56 மணி நேரங்களில் பெண்ணின் சினை முட்டையைச் சென்றடையவில்லை என்றால் விந்தணு இறந்து விடும். எனவே நிமிடத்திற்கு 10 அங்குல தூரம் விந்தணு நீந்த வேண்டும். குறைவாக நீந்துவதால் குறித்த நேரத்தில் சினைமுட்டையை அடைய முடியாது விந்து இறந்து பிள்ளைப் பேறு அற்றுப்போகிறது. அப்படியான சந்தர்ப்பங்களில் கணவனினதும் மனைவியனும் விந்தையும் முட்டையையும் வெளியே எடுத்து அவற்றை ஆய்வு கூடத்தில் குழாய்முறைப்படி கருக்கட்டவைத்து பின்னர் தாயின் கருவறையில் செலுத்தி வளரச் செய்வர். இதுவே Testtube முறை எனப்படுகின்றது. இஸ்லாத்தில் இம்முறையே அங்கீகரிக்கப்பட்ட முறையாகக் கொள்ளப்படுகின்றது.
மற்றுமொரு முறையாக குழந்தைப் பேற்றிற்கு ஆணிடம் விந்து வள
ம் இல்லாதிருந்தால் வேறு ஒரு ஆணின் விந்தை மாத்திரம் பெற்று அதனை குறித்த பெண்ணின் யோனி வழியாக உட்செலுத்தி கருத்தரிக்க வைப்பர். இதற்காக விந்து தானம் செய்வோர் விந்தினை கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்வோர் உலகில் உள்ளனர். உலகப் பிரசித்தி பெற்ற விளையாட்டு வீர்ர்கள், சினிமா நடிகர்கள், உலக முக்கியஸ்தர்கள், பிரபலங்கள் என பலரும் தமது விந்தை கோடி விலைக்கு விற்கின்றனர். இது போல மதம், இனம், கல்வித்தகுதி, விளையாட்டு, கலைகளில் தேர்ச்சி, வீரம், அழகு போன்றவற்றை அடிப்படையாக வைத்து விந்தணுக்களை விற்கும், வாங்கும் வழக்கம் உலக நாடுகளில் உண்டு,
விந்துகளைப் பத்திரமாக உறைபதனப்படுத்தி வைக்கும் கூடங்களும் காணப்படுகின்றன. அவை “விந்து வங்கி (Sperm Bank)” என அழைக்கப்படுகின்றன. 1980ல் ராபர்ட் கிரஹாம் என்னும் அமெரிக்கர்தான் நோபல் பரிசு பெற்றவர்களின் விந்தணுக்களைச் சேகரித்து முதன் முதலாக ஒரு விந்தணு வங்கியை உருவாக்கினார்.

விந்தணு தானம் செய்தல் அல்லது விற்றல் போன்றே பெண்களும் தமது கருமுட்டையை தானம் செய்ய ஆரம்பித்துள்ளனர். பெண்ணிடம் சினை முட்டை உற்பத்திக் குறைவு காணப்படின் வங்கிகளில் உள்ள முட்டையை விலைக்கு வாங்கி அதன் மூலம் குழந்தை உருவாக்கம் செய்கின்றனர். இன்னுமொருபடி மேல்சென்று குழந்தை மீது ஆசை உள்ள பெண்கள், தம் வயிற்றில் சிசுவைச் சுமப்பதால் தமது அழகு மங்கிப் போகும் என்று நினைப்பவர்கள் தனதும் கணவனினதும் செயற்கையாகக் கருக்கட்ட வைத்த கருவை வேறு ஒரு பெண்ணின் கருவில் சுமக்கவைத்து அது பிறந்ததும் தாம் அதனை வளர்த்தெடுப்பர். சிசுவைச் சுமக்கும் பெண்ணுடன் ஏழவே ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தாகும். எனவே இக்குழந்தையை அவள் சுமந்து பிரசவித்தாலும் அவளால் உரிமை கொண்டாட முடியாது. அவள் பிரசவித்து சுகமடையும் வரையிலான செலவீனங்களை கருவின் சொந்தக்கார்ர்களே பொறுப்பேற்க வேண்டும்.
உண்மையில் விந்தணு, சினை முட்டை தானம் அல்லது விற்பணை மூலம் குழந்தைப் பேறு அடைவது இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது. ஆனால் அதனையும் மீறி இன்று வளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் இம்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய முறைகளால் பிறக்கும் குழந்தைகள் இன்று பல்வேறு மரபணுப் பாதிப்புகளுக்குட்பட்டு நோய் வாய்ப்பட்டு பிறக்கும் நிலை கண்டறியப்பட்டுள்ளது.

விந்தணு, சிணை முட்டையைப் பெற்று சேமிக்கும் முன்பு உரிமையாளரின் உடலாரோக்கியம் பரிசோதிக்கப்பட வேண்டும். தொற்று நோய்கள், மரபணுக் கோளாறுகள் போன்றவை முக்கியமாகப் பரீட்சிக்கப்பட வேண்டும்.  ஆனால் வெறும் தொழில் நோக்கிற்காக டாத்தப்படும் இந்த செயற்கைக் கருவூட்டல் முறைகளிலும் விந்தணு வங்கிகளிலும் இந்தப் பரிசோதனைகள் முழுமையாக உரிய கவனத்துடன் மேற்கொள்ளப்படுகின்றனவா? என்பது ஒரு மிகமுக்கியமான கேள்விக்குறி. ஏனெனில் இதுவரை இவ்விடயத்தில் பெரிதாக கவனத்தில் கொள்ளப்படாத ஒரு நடைமுறைப் பிரச்சனை 2012 அளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அமெரிக்க கள ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது. அதைப் பற்றி ‘The New York Times நாளேடுஒரு கட்டுரையை வெளியிட்டு இப்பிரச்சினையின் பாரதூரத்தை வெளிக்கொணர்ந்தது.

குழந்தைப் பேற்றை விரும்பிய ஒரு அமெரிக்கத் தம்பதியினர் செயற்கைக் விந்தூட்டலின் மூலம் (Artificial Insemination) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தனர். பிறந்த குழந்தையின் குடல் அசைவில் ஏற்பட்ட பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி ஏற்பட்டபோது சந்தேகம் கொண்ட மருத்துவர்கள் மரபணுப் பரிசோதனை செய்துபார்த்த்தில் குழந்தைக்கு சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ்’ (Cystic Fibrosis) என்னும் மரபணுக் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது நுரையீரல், கல்லீரல், கணையம், குடல் என்பவற்றில் அளவுக்கு மீறி அடர்த்தியாக வளரும் இழைநார்கள் (fiber) மற்றும் கோழை (mucous layer) என்பவற்றால் உருவாகும் ஒரு வகை நோய். இது உருவாக அடிப்படைக் காரணம் விந்தணுவைப் பெற்றவரிடம் இருந்த பரம்பரை நோயே என தெரியவந்த்து. இதனால் மூச்சுவிடுவதில் சிரமம், உணவு செரித்தலில் குறைபாடு, ஆண் மலட்டுத் தன்மை, நீரிழிவு, சில சமயம் உயிருக்கே ஆபத்து ஏற்படல் பல உடல்நலக் குறைபாடுகளை இது ஏற்படுத்துகின்றது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்ற மரபணு ரீதியிலான பிரச்சனைகளின் எல்லா
சாத்தியக்கூறும் ருமுட்டையை தானம் செய்யும் பெண்களிலும் உண்டு. ஆனால் விந்தணு தானத்தில் தான் மரபணுப் குறைபாடுகள் கடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. காரணம் ஒரு முறையில் வெளியாகும் 4மி.லீ அளவு விந்தில் சுமார் 500 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுகின்றன. இவற்றை தானம் செய்வதன் மூலம் எத்தனை நூறு குழந்தைகளையும் உருவாக்க முடியும். 500 மில்லியனிலும் ஒன்று மட்டுமே சினை முட்டையுடன் சேரும். எது சேர வேண்டும் என்பதை அல்லாஹ்வே தீர்மானிக்கிறான். அது ஆரோக்கியமான விந்தாக இருக்கும். செயற்கையாக விந்தூட்டல் மேற்கொள்ளும் போது 500 மில்லியனிலும் எது ஆரோக்கியமானது என்பதை எவ்வாறு மனிதனால் தேர்வு செய்ய முடியும்? எனவே ஆரோக்கிய மற்ற விந்துகள் மூலம் நோயுள்ள சந்த்திகள் பிறக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

உதாரணமாக அமெரிக்காவில் ஒரு விந்தணுக் கொடையாளரின் விந்தணுக்களின் மூலம் உருவாக்கப்பட்ட ஐந்து குழந்தைகள் வெள்ளையணு மற்றும் மூளைப் புற்று நோயை உருவாக்கும் மரபணுக் கோளாறுடன் பிறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல இருதய பாதிப்பு, மூளைக் கோளாறு, நரம்பு மண்டலப் பிரச்சினைகள், புற்று நோய் என்று பல நோய்களுக்கான மரபணுக்கோளாறுகளுடன் பிறந்த விந்தணு தானத்தில் உருவாக்கப்பட்ட பல நூறு குழந்தைகள் உண்டு. பலர் இள வயதிலேயே இறந்ததும் உண்டு.
பெண்கள் தமது கருமுட்டை தானம் செய்வதற்காகவும் விற்பனை செய்வதற்காகவும் உடலுக்கு வெளியில் ஆய்வகத்தில் விந்தணுகளுடன் கருவடையச் செய்வதற்காகவும் (invitro fertilization, artificial insemination) பெண்களின் முட்டையை அதிகளவில் உற்பத்திசெய்து மாதவிடாயின் போது பிரித்தெடுப்பதற்காகவும் ஒருவகை ஹோர்மோன் ஊசிமூம் ஏற்றப்படுகின்றது. இதனால் ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹோர்மோனின் அளவு சாதாரன அளவை விட பதிமூன்று மடங்கு அதிகமாகிறது. இளம் வயதில் இத்தகைய ஹோர்மோன் ஊசி கொடுக்கப்படும் பெண்களுக்கு அடுத்து 16வருடங்களில் மார்பகப் புற்றுநோய் வர அதிக வாய்ப்பிருப்பதாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஆக ஹராமான வழிமுறை மூலம் உருவாக்கிக்கொள்ளும் கருக்கள் அடுத்த பரம்பரையையே பாதிக்கும் மரபணு ரீதியான நோய்களைச் சுமந்துகொண்டு பிறக்கின்றன. இதனால் எதிர்காலத்தின் எத்தகைய சந்த்திகள் உருவாவார்கள் என்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...