"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

12 August 2013

நிறங்களில் இறை அற்புதம்

நாம் பார்க்கும் திசையெல்லாம் அழகுரக் காட்சியளிக்க முக்கிய காரணம் அல்லாஹ் அவனது படைப்புகள் அனைத்தையும் பல்வேறு நிறக்கலவையினால் படைத்திருப்பதால்தான். பறவைகள், மிருகங்கள், பூச்சிகள், தாவரங்கள், புற்பூண்டுகள், தரைத்தோற்றங்கள் என அனைத்திலும் இறைவன் தீட்டிய வண்ணங்களின் மகிமையைக் கண்டுகொள்ள முடியும். மனிதன் செயற்கையாகச் செய்யும் பொருட்களிலும்கூட வண்ணங்கள் முதலிடம் பெறுவதை அவதானிக்கலாம். அல்லாஹ் திருக்குர்ஆனிலும் பல்வேறு இடங்களில் நிறங்கள் பற்றிக் கூறி அவனது படைப்புகளை பல்வேறு நிறங்களில் படைத்திருப்பதாகவும் அதுபற்றி சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சிகள் இருப்பதாகவும் கூறுகின்றான். 
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், பற்பல நிறங்களையுடைய விதவிதமான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன. இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சவோரெல்லாம் அறிஞர்கள்தாம். [35:27 ,28]

மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் அகிலத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. [30:22]

நிறம் எவ்வாறு தோன்றுகின்றது?

ஒளிக்கதிர் ஒன்று பொருளொன்றின் மீது பட்டுத் தெறிப்படைந்து அது
நமது கண்களை வந்தடைவதால்தான் அப்பொருள் எமது கண்களுக்குப் புலப்படுகின்றது. நாம் வாழும் புவியைப் பொறுத்தரை ஒளியின் மூலம் சூரியனாகும். அடிப்படையில் சூரிய ஒளி “வெள்ளொளி” எனப்படுகின்றது. இதில் ஏழு நிறங்கள் கலந்திருப்பதாக விஞ்ஞானி ஐஷாக் நியுட்டனே (1671இல்) முதலாவதாகக் கண்டுடறிந்தார். இந்த ஏழு நிறங்களும் சேர்ந்தே இந்த உலகில் பலகோடி வண்ண மாயாஜாலங்களைப் புரிந்துவருவதாக அவர் நம்பினார்.

சிவப்பு (Red), செம்மஞ்சள்  (Orange), மஞ்சல் (yellow), கரு நீலம் (indigo), பச்சை (green), நீலம் (blue) ஊதா (violet) என்பனவே அந்த அடிப்படை ஏழு நிறங்களுமாகும். சூரிய ஒளியிலிருந்து தோன்றும் வானவில் கூட இந்த ஏழு நிறங்களையும் வெவ்வேறாகப் பிரதிபளிப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். ஒரு அரியத்தினூடாக ஒளியைப் பாய்ச்சும்போது அவ்வொளி ஏழு நிறங்களையும் வெவ்வேறாகப் பிரித்து வெளிப்படுத்துவதைச் செய்முறையூடாகவும் அவதானிக்கலாம். சிலர் அடிப்படை நிறங்கள் மூன்று என்றும் கூறுவர். என்றாலும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டது ஏழு என்பதேயாகும்.

அடிப்படை நிறங்கள் ஏழு என விஞ்ஞானம் கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அல்குர்ஆன் இதனை சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளது. அரபு மொழியில் நிறத்தைக்கு குறிக்க “லவ்ன்” என்ற பதமும் அதன் பண்மை வடித்தில் நிறங்கள் என்பதைக் குறிக்க “அல்வான்” என்றும் பயன்படுத்தப்படுகின்றது. அல்குர்ஆனில் நிறங்கள் “அல்வான்” என மொத்தமாக ஏழு தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சூரியனிலிருந்து புவியை நோக்கி வரும் பல்வேறு கதிர்களில் ஒரு சிறு பகுதி மட்டுமே பூமியின் மேற்பரப்பை அடைகின்றன. புவியை அடையும் கதிர்கள் அணைத்தையும்கூட எம்மால் பார்க்க முடியாது. அவற்றிலும் சில கதிர்கள் மட்டுமே எமது கண்களுக்குத் தெரிகின்றன. கண்ணுக்குப் புலப்படக்கூடிய கதிர்கள்கூட வெறும் 400 தொடக்கம் 700 நானோமீட்டர் (nanometer) அலைநீளத்திற்கு உட்பட்டவையாகும். (நனோமீட்டர் என்பது ஒரு மீட்டரை ஒரு பில்லியனால் பிரித்தால் வரும் மிக நுட்பமான பகுதியாகும்.) இந்தக் கதிர்களின் ஒரு முனையில் சிவப்பு நிற ஒளியும், மறு முனையில் ஊதா நிற ஒளியும் உள்ளன.
அல்லாஹ்வின் அற்புதமானதொரு படைப்பு
இந்த அடிப்படையான ஏழு கதிர்கள் அல்லாது இன்னும் கோடிக்காணக்கான எமது கண்களுக்குப் புலப்படாத கதிர்கள் இப்பிரபஞசத்திலும், எம்மைச் சூழவும் இருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள். தற்போது அல்லாஹ்வின் ஒரு படைப்பு பற்றி விளங்க முயற்சிப்போம். அல்லாஹ் மலக்குமார்களை ஒளியால் படைத்திருக்கின்றான். ஒளி என்பதும் ஒரு கதிர்தான். எனவே மலக்குகள் 400 – 700 நனோமீட்டர்களுக்கு அப்பாற்பட்ட கதிர்வீச்சினால் படைக்கப்பட்டவர்களாக இருக்கலாம். எனவேதான் அவர்கள் எமது பக்கத்தில், எம்மைச் சூழ இருந்தபோதிலும் எம்மால் அவர்களைப் பார்க்க முடியாதுள்ளது. ஜின்கள் நெருப்பின் சுவாலையினால் படைக்கப்பட்டதொரு இனம் என்பதாலும் அவற்றையும் எமது ரூஹ்- ஆன்மாவையும் நமது கண்களால் காணமுடியாதிருக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இறை மறுப்பாளர்கள் கூறுவதுபோன்று கண்களால் காண முடியாது என்பதற்காக மலக்குகளோ, ஜின்களோ ஏன் அல்லாஹ்வோ இல்லை என்று ஆகிவிடாது. அவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களைப் பார்க்க்க்கூடிய சக்தி, ஆற்றல் எமது கண்களுக்கு வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் ஸினாய் மலையில்வைத்து நபி மூஸா அவர்கள் அல்லாஹ்விடம் உன்னைப் பார்க்கவேண்டும் என்று கூறியபோது “நீர் என்னைப் பார்க்க முதல் இந்த நெருப்பைப் பாரும். அதனைப் பார்க்க உம்மால் முடிந்தால் என்னைப் பார்க்கலாம்” என்று கூறி ஒரு நெருப்புக் குண்டத்தை அல்லாஹ் உருவாக்கினான். அதனைப் பார்க்க முடியாமல் மூஸா அவர்கள் மயக்கமுற்று கீழே வீழ்ந்தார்கள். ஆக இவ்வுலகில் பார்வைச் சக்தி 400nm முதல் 700nm என்ற அளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இங்கு மலக்குகளையோ, அல்லாஹ்வையோ பார்க்க முடியாது.
ஒருவகையில் இந்த மட்டுப்படுத்தப்பட்ட பார்வைப் புலன் அல்லாஹ்வின் ஒரு அருளும்தான். ஏனெனில் எல்லாக் கதிர்களையும் பார்க்கும் சக்தியை அல்லாஹ் இக்கண்களுக்குத் தந்திருந்தால் எக்ஸ் கதிர்கள் (X-Ray), கலியூதாக் கதிர்கள் (Ultra Violet Rays), காமாக் கதிர்கள் (Gamma Rays), கொஸ்மிக் கதிர்கள் (Cosmic Rays) என எல்லாக் கதிர்களும் எமது கண்களுக்குத் தெரிந்திருக்கும். நாம் நமது உடலை எக்ஸ்ரே (X-Ray) எடுத்துப் பார்த்தால் எப்படி எழும்புகள் மட்டும் தெரிகின்றதோ அதேபோன்று பார்ப்பவர்களெல்லாம் அழகின்றி பயங்கரமாக எழும்புகளாகக் காட்சியளித்திருப்பர். அல்லாஹ் பாதுகாத்துவிட்டான். மட்டுப்படுத்தப்பட்ட பார்வைச் சக்தியால்தான் தற்போது பார்ப்பவை அழகாகத் தோன்றுகின்றன.
ஆனால் நாம் மரணிக்கும்போது (ஸகராத் நிலையில்) அல்லாஹ் எமக்கு பிற கதிர்களையும் நிறங்களையும் பார்க்கும் அபார சக்தியைத்தருகின்றான். அதனால்தான் ரூஹைக் கைப்பற்றவரும் மலக்கையும் மண்ணறையில் வேதனை செய்யும் மலக்குகளையும் எமது ரூஹ் பிரிந்து செல்வதையும் பார்க்க முடிகின்றது. இங்கு மூஸா நபியால் பார்க்கச் சக்திபெறாத அல்லாஹ்வை சுவனத்தில் பார்க்க முடிவதும் மரணத்துடன் அல்லாஹ் எமது கண்களுக்கு தற்போதிருப்பதைவிட மேலதிகமான சக்தியைத் தருவதால்தான்.
பிரபஞ்சத்தில் அதிக வேகத்தில் பயணிக்கும் பொருள் ஒளி என்றும், ஒளி செக்கனுக்கு 300,000Km வேகத்தில் பயணிக்கிறது என்றும் நவீன விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. மலக்குகளும் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள் என்றவகையில் அவர்களும் ஒளியிற்கு சமாந்திரமான கதியில் பயணிக்கிறார்கள் என்பதை இஸ்லாமிய அறிஞர்கள் பின்வரும் மூன்று அல்குர்ஆனிய வசனங்களையும் (32:5,70:4,10:5) அடிப்படையாகக் கொண்டு நிறுவுகின்றனர். (பார்க்க : அல்ஹஸனாத் / டிசம்பர் / 2006 / பக்.36)  
உளவியலில் நிறம்.
மனிதனின் உணர்வுகள் மற்றும் நடத்தைகளில் நிறம் எவ்வாறு சம்மந்தப்படுகிறது என்பதைப் பற்றி கற்கும் கற்கைக்கு நிற உளவியல்” (Colour psychology) என்று கூறப்படுகின்றது. ஒவ்வொருவருக்கும் மிகவும் பிடித்தமான ஏதோ ஒரு நிறம் இருக்கும். அந்த நிறம் விழித்திரையை அடைந்து மின்தூண்டல்களாக மாற்றப்பட்டு பார்வை நரம்புகளினூடாக மூளைக்குக் கடத்தப்படுகின்றன. பின்னர் அங்கு அது ஒரு அதிர்வை (vibrations) உண்டாக்கும். அது அவருக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும். அதனால்தான் பூந்தோட்டங்களுக்கு நாம் சென்றால் இனம்தெரியாததொரு மனநிம்மதியும், புத்துணர்ச்சியும் எம்மை ஆட்கொள்கின்றது.
அதேபோன்று ஒருவருக்கு பிடிக்காத நிறங்களும் உண்டு. அது அவரை வெருப்படையச் செய்யும். கருப்பு நிறத்திற்கு அஞ்சுபவர்கள் இருக்கின்றனர். அதனால்தான் இருளுக்கு அஞ்சுகின்றனர். பிடித்த, பிடிக்காத நிறங்களை வைத்து ஒருவரது உள்ளத்தின் தன்மையை, அவரது ஆளுமையை இனங்கானும் முறை உளவியலில் மேற்கொள்ளப்படுகின்றது. மனிதனுக்கு மட்டுமன்றி தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் என அனைத்தும் ஏதோ ஒரு நிறத்தினால் தூண்டப்படுவதாக உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிற உளவியலில் ஆபத்தைக் குறிக்கும் நிறங்களாக மஞ்சளும் கருப்பும் காணப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு நிறமும் ஒரு உளவியல் கருத்தைக் கூறுகின்றது.
நிறம் பற்றி அல்குர்ஆன்

நபியவர்கள் வெள்ளை நிறத்தை அதிகம் விரும்பினார்கள், கருப்பு நிறத்தையும் காவி நிறத்தையும் தவிர்ந்துகொள்ளுமாறு கூறினார்கள். இவ்வாறு நபிகளாரும் நிறம் பற்றி கரிசனை செழுத்தியுள்ளார்கள். விஞ்ஞானம் அடிப்படையில் 7 நிறங்கள் உள்ளதாகக் கூறுகிறது. அல்குர்ஆன் நிறம் என்ற வார்த்தையை 7 இடங்களில் பயன்படுத்தியுள்ளது. சுவனம் பசுமையானது என்று கூறும் இஸ்லாம் அதன் நிறமான பச்சை நிறம் அல்குர்ஆனில் 8 இடங்களில் பிரயோகிக்கப்பட்டுள்ளது. நபியவர்கள் சுவனத்தின் வாயில்கள் 8 என்றும் கூறியுள்ளார்கள். அதேபோன்று கருப்பு நிறம் அல்குர்ஆனில் 7 இடங்களில் வந்துள்ளது. நரகின் நிறமும் கருப்பு என்பதாக நபியவர்கள் கூறினார்கள். அதன் வாயில்களின் எண்ணிக்கையும் 7 என்று அல்குர்ஆன் கூறுகின்றது. மஞ்சல் நிறம் 5 தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அல்குர்ஆனில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள நிறம் வெள்ளையாகும்.

இம்முழுப் பிரபஞ்சமும் தட்செயலாகத் தோன்றியது என்று கூறும் டாவினிஸவாதிகள் ஒவ்வொரு படைப்பிலும் காணப்படும் வர்ணஜாலங்களைப் பார்த்து வியக்கின்றனர். சாதாரணமாக மனிதன் தயாரிக்கும் ஒரு வீட்டிற்கே பல கடின முயற்சிகளால் பல்வேறு நிறங்களைத் தீட்டி அழகுபடுத்துகின்றான். அப்படியானால் இப்பாரி உலகம் மட்டும் எவ்வாறு தற்செயலாக அழகழகாக வர்ணம்பெற்று வந்திருக்க முடியும். இல்லை. நிச்சயமாக இது வல்லவன் அல்லாஹ்வின் ஒப்பற்ற படைப்பாற்றலின் வல்லமைதான், அவனது தூரிகையிலிருந்து சிந்திய வண்ணங்களால்தான் இவ்வுலகம் நிறம்பெற்றிருக்கிறது என்பதற்கு நிறங்களே சாட்சி.

இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள் கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது. [16:13] 

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...