"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 July 2013

பழங்களுக்கு நிறம் தந்தது யார்?

இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள் கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது. [16:13]
பழங்கள், காய்கள், தாவரங்கள் மற்றும் இன்னும் மற்றவை அனைத்தினதும் நிறங்களுக்கும் காரணம் அந்தோசயனின் என்ற நிறமிதான். நிறமி என்பது ஒரு வண்ணக்கூட்டுப்பொருள். இதில் இரண்டும் வகைகள் உள்ளன. ஒன்று இயற்கை நிறமிகள் அல்லது உயிரிய நிறமிகள். பச்சையம், பசுங்கணிகம், நிறக்கணிகம் போன்றவை இப்பிரிவில் அடங்கும். இவை ஒளிச்சேர்க்கையுடன் தொடர்பு உடையவை.
இரண்டாவது வகை வேதி நிறமிகள் ஆகும். குரோமியம் ஆக்ஸைடு, ஃபெரஸ் ஆக்ஸைடு போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை. அந்தோசயனின் முதல் வகையைச் சார்ந்தது. தண்ணீரில் கரையக்கூடியது.தான் இருக்கும் பொருளின் அமிலத்தன்மையைப் பொறுத்து சிவப்பு, நீலம்ஊதா போன்ற ஏதேனும் ஒரு நிறத்தில் காணப்படும்.
அந்தோசயனின் உருவாவது பலகூறுகளைப் பொறுத்து இருக்கிறது; பொருள் மீது படும் ஒளியின் செறிவு, ஒளியின் அலைநீளம், சுற்றுப்புற வெப்பநிலை, நீர், மாப்பொருள் அளவுகள், நைட்ரஜன், பாஸ்பரஸ், போரான் (boron) ஆகியவற்றின் அடர்வு போன்ற பல காரணிகள் அந்தோசயனின் உற்பத்திக்கு காரணமாகின்றன.
மிதவெப்ப நாடுகளில், இலையுதிர்காலங்களில் பச்சை நிற இலைகள் மஞ்சள் நிறம், பொன்னிறம், சிவப்பு நிறம், பழுப்பு நிறம் போன்று ஏதேனும் ஒரு நிறம் அடைவதை பார்த்திருப்போம். இதற்கான காரணங்களில் ஒன்று, இலைகளில் உள்ள பச்சையம் சிதைவுற்று, ஏற்கனவே அதில் உள்ள நிறமி வெளிப்படுவதால்,அவை காவி, மஞ்சள், சிவப்பு போன்ற நிறங்களை அடைவதுதான். காவிநிறமிக்கு கரோட்டினாயிடும், மஞ்சள்நிறமிக்கு ஸாந்தோஃபில்லும் சிவப்பு நிறமிக்கு அந்தோசயனினும் காரணமாகின்றன.
இலைப்பொழிவு காலங்களில் இம்மாற்றங்களை கூர்ந்து அவதானிக்கமுடியும். இலைப்பொழிவு காலங்களில் இலைகளின் நிறம் மாற்றம் அடைவதை நாம் கவனித்திருக்கிறோம். இதற்கு வெப்பநிலை, சூரியஒளி, ஈரப்பதம் போன்ற பல காரணிகள் இருக்கின்றன. வெப்பமான பகல்பொழுதுகளும் குளிர்ந்த இரவுகளும் கொண்ட முதுவேனிற்காலத்தின் பிற்பகுதியில் சில மரஞ்செடிகளின் இலைகள் சிவப்பதைக் காணலாம். இலைகள் மஞ்சள் நிறம் அடைவதற்கும் சிவந்த நிறம் அடைவதற்கும் ளிச்சேர்க்கை தடைபடுவது போன்ற பொதுவான காரணம் இருந்தாலும் சில மாறுபாடான காரணங்களும் இருக்கின்றன.
இக்காலங்களில் இலைகளின் அடிப்பகுதியில் ஒரு படலம் (அப்சி
ஷன் லேயர்) உருவாகிறது. தண்ணீரின் ஓட்டத்தை முதலில் தடுக்கிறது, பச்சையம் உற்பத்தியாவது நின்று போகிறது, இருக்கும் பச்சையம் சிதைவுற்று, அதிலுள்ள நிறமிகள், மஞ்சள் நிறமியான ஸாந்தோஃபில், காவி நிறமியான கரோட்டினாயிட்ஸ் (காவிக்கிழங்கிலும் இதே நிறமி உள்ளது) வெளிப்படுகின்றன.
இதே நேரத்தில் சர்க்கரையின் ஓட்டம் தடைபடுகிறது, இலைகளிலேயே தங்கிவிடும் சர்க்கரை அந்தோசயனின் ஆக மாறி விடுகிறது. செடிகளின் தன்மையைப் பொருத்து அந்தோசயனின் சிவப்பு, ஊதா அல்லது கபில நிறம் பெறுகிறது. வேனிற்காலம் நிறைவுறும்போது உதிர்தல் நடைபெறுகிறது. அபிசிஷன் என்பதன் நேரடியான எளிமையான விளக்கம் , உதிர்தல் என்பதே.
வேனிற்காலம் முடிவடையும்போது அந்தோசயனின் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இக்காலத்தில் ஒளிச்சேர்க்கை தடைபடும்போது, ஓட்டம் தடைபடுவதால் சர்க்கரைப்பொருள்கள் இலைகளிலேயேத் தேங்கி, அந்தோசயனினின் உற்பத்தியை அதிகரிக்கிறது. அச்செடியின் அல்லது மரத்தின் தன்மையைப் பொறுத்து இலைகள் சிவப்பு, ஊதா அல்லது செம்பழுப்பு நிறம் அடைகின்றன. (பூமத்தியரேகைக்கு அருகில் இருக்கும் நாடுகளில் உள்ள மரங்களின் இலைகள் எப்போதுமே பச்சை நிறத்துடன் இருக்கும் காரணத்தை இப்போது நாமாகவே புரிந்துகொண்டிருப்போம்.) பச்சை நிறக் குடமிளகாய், பச்சை மிளகாய், கோவைக்காய், இவையெல்லாம் பழுக்கத்துவங்கும்போது இதேபோல் பச்சையம் சிதைவுற்று அதிலுள்ள நிறமிகள் வெளிப்படுகின்றன. சிவப்பு நிறத்திற்கு காரணம் மீண்டும் அந்தோசயனின் தான். செடி வளர்ச்சியாக்கிகளான எதிலீன் முதலியவை பச்சையத்தை சிதைவுற வைத்து, இலையை உதிர்க்க, ஆக்சின் என்ற வளர்ச்சியாக்கி காரணியாகிறது. இந்த ஆக்சினின் செயல்பாடு பகல் பொழுதில் கிடைக்கும் சூரிய ஒளியைப் பொறுத்தே அமைகிறது.
பச்சையம் சிதைவுறும்போது பழத்தின் சதைப்பகுதி மெதுமையடைகிறது. குடமிளகாயில் இம்மாற்றம் மெதுவாக நடக்கிறது. மற்றபடி காய்கள் எல்லாம் கனியாகும்போது பன்மசர்க்கரையான ஸ்டார்ச், கரிம அமிலங்கள் வளர்சிதைமாற்றம் அடைந்து சர்க்கரையாக மாறுகின்றன. இதனால் கனி இனிப்பாகிறது. பச்சையம் சிதைவுற்று இதிலுள்ள நிறமிகள் வெளிப்படுவதால், கனி வண்ணம் பெறுகிறது. அந்தோசயனின் நிறமி வெளிப்படும் கனிகள் சிவப்பு வண்ணம் பெறுகின்றன.

அந்தோசயனின் பல இயற்கையான பயன்பாடுகளைக் கொண்டது. அந்தோசயனின் இருப்பதால் வண்ணமயமாய் உள்ள பழங்களும் பூவிதழ்களும் உயிரினங்கள், மகரந்த சேர்க்கைக் காரணிகள் போன்றவற்றின் கவனத்தைக் கவர்கின்றன. இதனால் விதைகள், மகரந்தத் தூள் போன்றவை பரவுகின்றன. இலைகள், சிலசமயங்களில் தண்டுகள் ஆகியவற்றிலுள்ள ஒளிச்சேர்க்கைத் திசுக்களில் அந்தோசயனின் ஓர் ஒளி செறிவொடுக்கியாகச் செயல்படுகிறது. (செறிவொடுங்கல்- பொருளின் வழியே சூரியக் கதிர்வீச்சு செல்லும்போது அதன் அடர்த்தியும் செறிவும் ஒடுங்குவது) இதனால் புற ஊதா ஒளி, நீல பச்சை ஒளி ஆகியவற்றை உள்வாங்கிக்கொள்வதால் , அதிக ஒளிபட்டு கண்ணறைகள் பழுதாகாமல் பாதுகாக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் நாம் கடுமையான வெயிலிலிருந்து அல்லது வெளிச்சத்திலிருந்து பாதுகாக்க கண்களுக்கு அணியும் குளிர்கண்ணாடி போல இயற்கையாகவே கண்ணறைகளைக் காக்கிறது.
பழங்களின், செடிகளின் நிறங்கள் பற்றி அல்லாஹ் திருமறையில் கூறும் விளக்கங்களைப் பாருங்கள்.

நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம்.” (35:27)

நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி,
அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெள; வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. [39:21]

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

கவியருவி ம. ரமேஷ் said...

எடுத்துரைப்புக்குப் பாராட்டுகள்

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...