ஏலியன்ஸ் என்ற பெயரில் பிரபஞ்ச வெளியில் ஏதோ ஒரு படைப்பிருக்க
வேண்டும் என்பதாக விஞ்ஞானிகள் சுமார் 50 வருடங்களாக பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்து
வருகின்றனர். அது தொடர்பாக பல திரைப்படங்களையும் நாவல்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
அண்மையிலும் Pacific Rim என்றொரு திரைப்படம் வெளிந்துள்ளது. வேற்றுக் கிரக வாசிகளான ஏலியன்கள் அவர்களது
செல்லப்பிராணிகளை இப்புவிக்கு ஏவிவிட்டு புவியை அழிக்க முணைவதாகவும் அதற்கு எதிராக
மனிதர்கள் போராடுவதுபோன்றும் அத்திரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.
உண்மையில் அத்தகைய வேற்றுக் கிரக ஜீவிகள் இருக்கின்றனவா என்று இதுவரை
உறுதியான எந்தத் தகவலும் இல்லை. 1927 ஆம் ஆண்டு பேராசிரியர் பிரான்சிஸ் யங்ஹஸ்பெண்ட் என்பவர் “Life
in Stars -நட்சத்திரங்களில் உயிர்கள்” (Sir.Fransis
Younghusband - Published. John Murray-London.) என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதுகிறார். “. இதில் நட்சத்திரங்களில் உயிரினங்கள் வசிக்க
வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார்.
அதேபோன்று 1980 களில் விஞ்ஞானிகளான பெய்ன் பர்க், மற்றும் ஷாப்பிரோ (G.Feinberg &
R.Shapiro) என்போர் ஒரு ஆய்வு நூலை எழுதுகிறார்கள் “Life Beyond Earth” பூமிக்கு அப்பால் உயிர்கள். (Published by
William Morrow and co.Inc.New York-1980.) அதில் அவர்கள், நட்சத்திரம் மற்றும் நமது சூரியனின் பிளாஸ்மாக்களில்
வேறு உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ளது என்றும் இவ்வுயிரினங்களுக்கு பிளாஸ்மா பீஸ்ட்
(Plasma Beast) என்றும் பெயரிட்டனர்.
பூமியில் கார்பன் மற்றும் நீரின் இரசாயன மாற்றத்தால் வாழும் மனிதன் மற்றும் பல
ஜீவ ராசிகள் இரசாயன உயிரிகளாக (Chemical Life) அழைக்கப்படுவது போன்று, சூரியனின் பிளாஸ்மா வெப்பத்தில்
வாழும் உயிரிகள் இயற்பியல் உயிரிகளாக (Physical life) இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருத்துறைக்கின்றனர். ஏற்கனவே ஜின்கள் எரியும் நெருப்பின் கொழுந்தினால் (ப்ளாஸ்மாவினால்)
படைக்கப்பட்டவர்கள் என்று நாம் பார்த்த்தற்கு இனங்க நமது சூரியனும் ஒரு
நட்சத்திரம் என்ற வகையில் ஜின்கள் சூரியனில், சூரியக் கதிர்களை
சக்தியாகக் கிரகித்து (Radiant energy) செயல்படுவனவாக இருக்கலாம். கீழ்வானை
நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தியிருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்வே
அனைத்தையும் அறிந்தவன்.
சூரிய வெப்பத்தில் உருவாகும் பிளாஸ்மாக்கள் பிரபஞ்சத்தில் உள்ள தூசு (Cosmic Dust) உடன் சேர்ந்து
மின்னூட்டம் பெற்று பூமியில் உள்ள DNA உயிர்கள் போன்று மாறுவதாக
ஜெர்மனி மாக்ஸ் பிளாங்க் ஆய்வகம் கூறுகிறது. இதே ஆய்வை விண்ணில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச
விண்வெளி ஆய்வு மையத்தில் (ISS- International Space Station) ரஷ்ய விஞ்ஞானிகள் நிகழ்த்தி
பிளாஸ்மா உயிர் உருவாவதை கண்டு பிடித்துள்ளனர். இந்த ஆய்வு இன்னும் ஆரம்ப
நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏலியன்களைத் தொடர்பு கொள்ளவென ரேடியோ அலை தொலை நோக்
கி (Radio Telescope) மூலம் கடந்த ஐம்பது வருடங்களாக கடும் முயற்சிகள் செய்தும் பலனில்லை
என்று கூறும் விஞ்ஞானிகள் அதற்கான காரணத்தை நட்சத்திரங்களில் ப்ளாஸ்மா சக்தியாக
இருக்கும் உயிர்களை எலெக்ட்ரோ மாக்னடிக் ரேடியன்ட் ஆற்றல் மூலம்
தொடர்புகொள்ள முடியாது என்கின்றனர். “ப்ளாஸ்மா அமைப்பிலான உயிர்கள்” என்ற ஊகம்
அண்மையில்தான் தெரியவந்துள்ளது என்பதால் இனி அதற்குப் பொருத்தமானதொரு தொலைநோக்கி
மூலம் ஆராய்ச்சிகளைத் தொடர ஆரம்பித்துள்ளனர்.
இந்த வருடம் ஜூன் (2013) மாதத்தில் வெளிவந்த புகழ்பெற்ற “ASTRONOMY” இதழில் பிரபல்யமான ஐந்து விண்ணோக்கி ஆய்வாளர்கள்
செய்த ஆய்வு முடிவு வெளி வந்தது. கடந்த நாற்பது
வருடமாக ரேடியோ டெலஸ்கோப் (Radio
Telescope) மூலம் ஏலியன் என்னும்
பிற உயிரினத்தை தேடி அலைந்து தோல்வியுற்றார்கள். தோல்விக்குக் காரணம் பிரபஞ்சத்தில்
வெப்பத்தை அடிப்படையாக கொண்ட உயிரினங்கள் உள்ளது தற்போதுதான்
தெரியவந்துள்ளது. அவை அகச் சிவப்புக் கதிர்களை
வெளியிடக்கூடியவை.
(“The energy footprint of life and civilization appears as infrared
heat radiation,” says Kuhn, the project’s lead scientist University of Hawaii’s
Institute for Astronomy,.)
எனவே வெப்பத்தை இனங்காட்டும் (Heat Seeking) அகச் சிவப்புக் கதிர் தொலைநோக்கிகள் (Infra-Red Telescope) மூலம் இனி ஆய்வுகளை மேற்கொள்ள விஞ்ஞானிகள்
முடிவு செய்துள்ளார்கள். இந்த தொலை நோக்கி (The Colossus Telescope) ஒரு பில்லியன் டொலர் செலவில் தயாரிக்கப்பட்டு
இன்னும் ஐந்து ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வருமாம்.
அல்லாஹ்வின் பிரதான படைப்புகளான மனிதன், மலக்குகள், ஜின்கள் என்பவற்றோடு நாம்
அறியாத இன்னும் படைப்புகள் இப் பிரபஞ்சத்தின் எங்காவது ஒரு கோடியில் வாழ்கின்றனவோ
என்னவோ. அவை பற்றிய சரியான தகவல்கள், நம்பகமான ஆதாரங்கள் இல்லை. இக்கட்டுரை ஒரு
ஆய்வு என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டதால் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...