"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

18 November 2013

ஒலியுணரும் சாதனம் செவி

இப்பூவுலகில் மனிதனைத் தவிர மற்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் அல்லாஹ் ஐயறிவைக் கொடுத்துள்ளான். மனிதனுக்கு பகுத்தறிவுடன் சேர்த்து ஆறு அறிவுகளை வழங்கியுள்ளான். பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், தொடுதல் என்பனவே மற்ற ஐந்து அறிவுகளுமாகும். இவற்றுடன் தொடர்பான உறுப்புகளை புலணுறுப்புகள் என்போம்.

எமது புலணுறுப்புகளில் மிக அவசியமானது எது என்று கேட்டால் யாரும் கண் என்றுதான் கூறுவர். கண்கள் உண்மையில் மிக அவசியமானவைதான். என்றாலும் கண்களைவிடவும் மிக மிக அவசியமான ஒரு உறுப்புதான் எமது காதுகள். அமெரிக்க பிரௌன் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் SETH HOROWITZ அவர்கள் எழுதிய “THE UNIVERSAL SENSE: HOW HEARING SHAPE THE MIND” என்ற ஆய்வு நூல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி அறிஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் அவர் மனிதனின் பார்வைப் புலனை விட செவிப்புலனே மிக மிக முக்கியமானது. அதன் செயல்பாடுகள் பார்வைத் திறனை விட பல மடங்கு சிறப்பிற்குரியவை என்று அறிவியல் ரீதியாக ஏராளமான சான்றுகளை காட்டி நிரூபிக்கிறார். பார்வையை விட செவி ஒரு மனிதனுக்கு மிக மிக முக்கியம் என்று ஆய்வு செய்து கூறுகிறார். எந்தளவு என்றால், அப் பேராசிரியர் தான் செவிடனாக இருப்பதை விட குருடனாக இருப்பதையே விரும்புவதாக கூறுகிறார். அந்நூலை வாசிப்போரும் அதனையே விரும்புவர். அந்த அளவு செவிப்புலன் மிக முக்கியமானவொன்றாகும்.

பார்வையிழந்த ஒருவரால் நன்றாகப் பேச முடியும். ஆனால் கேள்விப்புலனை சிறுவயதிலே இழக்கும் குழந்தை வளரும்போது பேசவும் இயலாமல் வளர்வதைக் காணமுடியும். செவிப்புலன் இல்லாவிட்டால் பேச்சாற்றல் தானாகவே இல்லாதுபோகிறது. நாம் ஓர் அறைக்குள் இருந்தால் நமது பார்வை அவ் அறைச் சுவர்களுக்குள் வறையறுக்கப்படுகின்றன. ஆனால் நமது காதுகளோ அவ் அறைக்கு வெளியே தொலைவில் நடைபெறும் சப்தங்களையும் கேட்கும் ஆற்றல் படைத்தது. இருளுக்குள் என்ன நடக்கின்றது என்பதை அறிய முடியாவிட்டாலும் செவிகளைப் பயன்படுத்தி என்ன நிகழ்கின்றது என்பதை அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு பல விடயங்களை வைத்துப் பார்க்கையில் செவிதான் புலணுறுப்புகளில் பிரதாணமானது என்பதை விளங்களாம்.

ஏனைய உறுப்புகளை விட செவிதான் பிரதானமானது என்பதை பேராசிரியர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறுவதற்கு 1400 வருடங்களுக்கு முன்பே, திருமறையும் திரு நபியின் கூற்றுகளும் செவியின் முக்கியத்துவத்தைக் கூறிவிட்டுள்ள பாங்கைப் பாருங்கள்.

அல்குர்ஆனில் குறைந்தது 20 இடங்களுக்கு மேல் செவியையும் பார்வையையும் பற்றிய வசனங்கள் வருகின்றன. இந்த இடங்களில் எல்லாம் அல்லாஹ் செவிக்கு முதல் இடம் கொடுத்து பின்புதான் பார்வையைப் பற்றிக் கூறுகின்றான்.

அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்” (2:20)

"அல்லாஹ் உங்களுடைய செவிப்புலனையும், பார்க்கும் சக்தியையும் எடுத்துவிட்டு, உங்கள் இருதயங்களின் மீது முத்திரையிட்டு விடுவானானால்…” (6:46)

உங்கள் செவிக்கும், பார்வைக்கும் உரிமையாளன் யார்?” (10:31)

உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான்.” (16:78)

இவ்வசனங்களையும் பாருங்கள். (17:36 / 23:78 / 32:9 / 41:20,22 / 41:44 / 45:23 / 43:40 / 46:26 / 47:23 / 67:23 / 76:2 / 16:78 / 32:9 / 76:2) இதுபோல் ஏராளமான வசனங்களில் அல்லாஹ் காதுக்கு முதல் இடம் கொடுத்துவிட்டு இரண்டாவதாகத்தான் கண்களைப்பற்றிக் கூறுகிறான். ஐம்புலன்களையும் படைத்தளித்த   நுண்ணறிவாளன் அல்லாஹ்விற்கே அதன் சிறப்பும் முக்கியத்துவமும் முழுமையாகத்தெரியும். அல்ஹம்துலில்லாஹ்.

அதனால்தான் தனது படைப்பாகிய  மனிதனின்   புலன்களில்   செவிக்கு  முக்கியத்துவம் கொடுத்த  அல்லாஹ்,   தன்னைப்  பற்றிக்   கூறும்போதும் செவியையே   முதன்மைப்படுத்தியுள்ளான்.

அல்குர்  ஆனில்  49 இடங்களில்   அல்லாஹ்  (தான்) அனைத்தையும்  செவியுறுவோனும், அறிபவனுமாயிருக்கிறான்.என்று  கூறுகிறான்.   அதில் இடங்களில் அல்லாஹ் அனைத்தையும்  செவியுறுவோனும், பார்ப்பவனாகவும்  இருக்கிறான்.என்று கூறுகின்றான்.  இவ்வாறு எல்லா  வசனங்களிலும்  அல்லாஹ்  தன்னை  செவியுறுவோன்   என்று   செவிக்கு முதலிடம்  கொடுத்துள்ளான்.

செவியின் உருவாக்கம்

கருவறையில் கரு  வளர்ச்சியின்  13 வது  வாரத்தில்  செவி  உருவாக ஆரம்பித்து  20 வது வாரத்தில்  முழு  வளர்ச்சி பெற்றுவிடுகிறது. கர்ப்பத்திலிருக்கும் குழந்தையால் வெளியே நடக்கும் சப்தங்களைக் நன்றாகக் கேட்கமுடிவதாக நவீன ஆய்வுகள்  கூறுகின்றன. அதேசமயம் பார்வைப்புலனான கண்கள் சிசு வளர்ச்சியின் 26 வது வாரத்திலேயே உருவாக ஆரம்பிக்கிறது. வயிற்றிலிருந்துகொண்டு குழந்தையால் பார்க்க  முடியாது. பிறந்தபின்தான் பார்க்க முடியும்.

செவியின் கட்டமைப்பு

மனிதனுடைய செவியானது வெளிச்செவி (செவிமடல்)  நடுச்செவி, உட்செவி என மூன்று பாகங்களைக் கொண்டிருக்கிறது. அவற்றை சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

வெளிச்செவி

வெளிச்செவி  கண்ணால் காணக்கூடியது. இதில் செவி மடலும் செவிப்பறையை நோக்கிச் செல்லும் செவிக்குழாயும் அமைந்துள்ளன. செவி மடலால் காதுக்கு அழகும் பாதுகாப்பும்  கிடைப்பதோடு  ஒலி வரும் திசையையும் அதனால் அறிய முடிகிறது. பெண்கள் தோடு அணிவதும் இதில்தான். ஆடு மாடு போன்ற பிற உயிரினங்கள், தங்கள் காது மடலைத் திருப்பியும் வளைத்தும் வரும் ஒலியைச் சேகரித்து உள்ளே அனுப்புகின்றன. காது மடலிலிருந்து உள்நோக்கிச் செல்லும் செவிக்குழாய் சுமார் இரண்டு செ. மீ நீளமுள்ளது. இதுவே ஒலியை செவிப்பறை நோக்கிக் கொண்டு செல்கிறது. 

நடுச்செவி

நடுச்செவி என்பது ஒரு குறுகிய அறை போன்றது.   இது செவிப்பறைக்கும் உட்செவிக்கும் இடையே அமைந்துள்ளது.  நடுச்செவியில் சங்கிலி போன்ற அமைந்துள்ள மூன்று எலும்புகள் உள்ளன.  இவை காற்றலை அதிர்ச்சிகளை உட்செவிக்கு எடுத்துச் செல்கின்றன.  நடுக்காதில் உள்ள காற்றழுத்தத்தை வெளியிலுள்ள காற்றின் அழுத்தத்திற்கு ஏற்ப சமநிலையில் வைத்திருப்பது இதன் முக்கியப் பணியாகும். இச் சமநிலை குழம்பினால் காதுகேளாமை, காதுவலி, சீழ் உருவாதல் போன்ற நோய்கள் உறுவாகின்றன.

உட்செவி

நடுச்செவிக்கு அப்பால் உள்ள பகுதி உட்செவியாகும் . இது ஒரு சங்கு போன்ற  அமைப்பைக் கொண்டது. காது கேட்பதற்கு இதுவே அடிப்படையக அமைகிறது. இப்பகுதி மூளை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஒலியுணரும் சக்தி

20 HZ (ஹேட்ஸ்) இற்கு க்  குறைந்த  ஒலியலைகள் Infrasonic என்றும்  20,000 HZ (ஹேட்ஸ்) இற்கு க்  மேலுள்ள  அதிர்வெண்  ஒலியலைகள் Ultrasonic என்றும் அழைக்கப்படுகின்றன. மனிதர்களுக்கு  கேட்கக்கூடிய  ஒலி  அளவு  20 Hz முதல் 20,000 Hz வரை மட்டும்தான். இதற்க்கு மேலோ அல்லது கீழோ  ம்மால்  செவியேற்க்க  முடியாது.  ஆனால் சில  மிருகங்களால்  20 HZ இற்கு க்  குறைந்த  அதிர்வெண்  ஒலிகளையும்  20,000 Hz இற்கு மேலுள்ள ஒலியலைகளையும் செவியுற முடியும். இது அல்லாஹ் அமைத்துவைத்துள்ள ஒரு அருளாகும்.

உதாரணமாக யானைகள் மிகக்குறைந்த அதிர்வெண் ஒலியலைகளை 5 Hz—12,000 Hz கேட்கமுடியும். புறாவால் மிக மிக குறைந்த 1 Hz ஒலியலைகளையும் கேட்க முடியும். நாய் 50—45,000 Hz, பூனை 45—65,000 Hz அதிர்வெண் ஒலியலைகளை கேட்க முடியும்.  மொட்டுக்கள் மலரும் சப்தம் 20,000 Hz ஐ விடவும் அதிகமான ஒலியலைகளைக் கொண்டது என்றால் ஆச்சரியப்படுவீர்கள். இவற்றை மனிதனால் கேட்கமுடியாது.இங்கு ஒரு அற்புதம் உள்ளது. மனிதனின் ரூஹ் கைப்பற்றப்படும்போதும், ஜனாஸாவைத் தோளில்வைத்து சுமந்துசெல்லும்போதும், மண்ணறையில் வேதனைசெய்யப்படும்போதும் அவன் எழுப்பும் அலரல் ஓலத்தை மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற ஜீவராசிகள் கேற்பதாக நபியவர்கள் கூறுகின்றார்கள் (புஹாரி). அப்படியாயின் எம்மால் கேட்கமுடியாத அதிகூடிய சப்தத்தில் (20,000 Hz இற்கு மேல்) அவர்கள் ஓலமிடுவதாகவும் இறுக்கலாம். அல்லாஹ்வே அறிந்தவன்.

மிகப் பெரும் அருளாக செவியைத் தந்து அதில் பல அத்தாட்சிகளையும் வைத்த அல்லாஹ் நாம் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றே விரும்புகின்றான்.

 “உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான்.” (16:78)

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...