"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

07 May 2015

யூனுஸ் நபியை விழுங்கிய திமிங்கிலம்

யூனுஸ் நபியின் சரித்திரத்தைப் படித்திருப்பீர்கள். அல்லாஹ் அவரை சிலை வணக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுமார் நூராயிரம் பேரைக்கொண்ட நீனவா என்ற நகருக்கு நபியாக அனுப்பினான். அம்மக்கள் அவரது போதனையை ஏற்கவில்லை என்ற கவலையில் அவ்வூரை விட்டு அவர் கடலோரம் நடந்துசென்று ஒரு கப்பலில் ஏறினார். கப்பலில் ஆட்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர் கடலில் குதிக்கவேண்டியதாயிற்று. கடலில் குதித்ததும் ஒரு பெரிய மீன் அவரை விழுங்கியது. நாட்பது நாட்கள் அதன் வயிற்றுக்குள் அல்லாஹ் அவரை வைத்திருந்தான்.

அவர் தொடர்ந்தும் அல்லாஹ்வைத் துதி செய்துகொண்டிருந்ததால் அல்லாஹ்வின் கட்டளையால் அம் மீன் அவரை கரையிலே தள்ளியது. இவ்வாறு யுனுஸ் நபியின் சரித்திரத்தை அல்லாஹ் திருமறையில்  பல இடங்களில் (37:141) குறிப்பிடுகின்றான். ஒரு மனிதனையே விழுங்கி உடலில் வைத்திருக்குமளவு மீன் என்றால் அனேகமாக அது திமிங்கிலமாகத்தான் இருக்கவேண்டும் என்பது அறிஞர்களின் கருத்து. எனவே அல்லாஹ்வின் இவ்வற்புத்த் திமிங்கிலங்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி சற்று அவதானிப்போம்.

அறிமுகம்
உலகிலே உள்ள நீர் வாழ், நில வாழ் உயிர்கள் அனைத்துடனும் ஒப்பிடுகையில் மிகப் பெரிய உயிரினம் நீலத் திமிங்கிலம்தான் (Blue Whale). இது சுமார் 100 அடி நீளமும் 150 டன் எடையும் கொண்டதாக இருக்கும். நீலத் திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்குமாம். இத்தகைய திமிங்கிலங்கள் மிகவும் சாதுவான குணம் கொண்டவை. பொதுவாக இவை 70 முதல் 100 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. பொதுவாக நாம் திமிங்கிலங்களையும் மீன்கள் என்றே கருதுகின்றோம். ஆனால் திமிங்கிலம் மீன் வகையைச் சார்ந்ததல்ல. மீன்களுக்கும் திமிங்கிலங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. திமிங்கிலம் வெப்ப இரத்தம்கொண்ட பிராணி. ஆனால் மீன்கள் குளிர் இரத்தம்கொண்ட பிராணி.

திமிங்கிலம் நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றது. மீன்களோ தமது இருபக்கமும் உள்ள செவுள்கள் (Gill) மூலம் சுவாசிக்கின்றன. மீன்கள் கடலில் பாறை இடுக்குகளில் முட்டைகளை இட்டு குஞ்சு பொறிக்கின்றன. ஆனால் திமிங்கிலம் குட்டி ஈன்று அதற்குப் பால் கொடுத்து வளர்க்கின்றது. திமிங்கிலத்தைப் பொறுத்தவரை அதன் உடலில் செதில்கள் காணப்படுவதில்லை. தோலும், மயிர்களும் அதன் உடலில் இருக்கும். ஆனால் மீன்களின் உடலில் செதில்கள் நிறைந்திருப்பதைக் காணலாம். இவ்வாறான பல்வேறு வித்தியாசங்கள் திமிங்கிலங்களை மீன்களிலிருந்து பிரித்துக்காட்டுகின்றன.

உடலமைப்பு
திமிங்கிலங்களில் (Whales) 75 வகைகள் காணப்படுகின்றன. இந்த 75 வகைகளையும் விஞ்ஞானிகள் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். ஒன்று வாயின் இரு புறங்களிலும் வலிமையான தாடைகளுடன் கூடிய பற்களுடையவை. Sperm whale, Beaked, Narwhals, Beluga, Shark whales, killer whales, Dolphin மற்றும் Porpoises போன்ற வகைகள் இதற்குள் அடங்கும். இரண்டு பற்கள் அற்றவை அல்லது வாயில் baleen என்ற சீப்பு போன்ற அமைப்பைப் பெற்ற திமிங்கிலங்கள். இதில் Rorquals, Gray whales, Blue whales, Right whales என்பன அடங்குகின்றன. பொதுவாக இவை கடலில் நீந்திப் பயணிப்பதற்கு ஏற்றவாறான அமைப்பைக் கொண்டுள்ளன. இரண்டு பக்கங்களிலும் பெரிய அளவிளான துடுப்புகள், வலம், இடம், மேல், கீழ் என சுற்றிச் சுழன்று நகர வால்கள், கூர்மையான செவிப்புலன், மந்தமான பார்வைப் புலன் என்பவற்றைக்கொண்டுள்ளன.

திமிங்கிலம் வெப்ப இரத்தப்பிராணி என்பதால் அதனைத் தக்கவைத்துக்கொள்ள இவற்றின் தோலின் உட்புறத்தில் புரதத்தை உள்ளடக்கிய Bubbler என்னும் மிகத்தடித்த ஒரு கொழுப்புப் படலம் படிந்துள்ளது. இது இவற்றின் உடல் வெப்பத்தை உறை நிலையைக் கடந்த துருவப் பகுதிகளிலும் சீராக வைத்துக் கொள்ளவும் தங்களுக்குத் தேவையான சத்துக்களை சேகரித்து வைத்துக் கொள்ளவும் உதவுகின்றது.
மனிதனின் மூளையைக் காட்டிலும் அளவில் நிறையில் பெரிய மூளையுடைய பாலூட்டிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று யானை மற்றது திமிங்கிலம். உலகில் உள்ள பாலூட்டிகளில் (அல்லது உயிரினங்களில்) மிகப் பெரிய மூளையுடையது என்ற சிறப்பும் இதற்கு உண்டு. எம்மைப்போன்றே இவற்றுக்கும் இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன.

சுவாச முறை
திமிங்கிலங்கள் நீரில் வசித்தாலும் அவை மற்ற மீனினங்களை போல செவுள்களால் (Gill) சுவாசிப்பதில்லை. அவை மனிதனைப்போன்று நுரையீரலைக் கொண்ட பிராணிகள் என்பதால் எப்பொழுதெல்லாம் சுவாசிக்க வேண்டுமோ அப்பொழுதெல்லாம் நீரின் மேற்பரப்புக்கு வந்து காற்றை உள்ளிழுத்துச் செல்லவேண்டும். திமிங்கிலங்களின் நுரையீரல் மிகவும் பெரிதாக இருப்பதால் ஒரே தடவையில் பெருமளவிலான காற்றை உட்சேமிக்க முடியும். மேலும் இவைகளின் தலையின் மேற்பரப்பில் அமைந்துள்ள Blow hole என்ற சுவாசக் குழாய் அமைப்பு நுரையீரலுடன் நேரடியாக இணைக்கப் பட்டுள்ளதாலும் மற்ற பாலுட்டிகளைப் போன்று தொண்டையின் மூலம் சுவாசம் செல்ல வேண்டிய அமைப்பு இல்லை.

மற்ற விலங்குகளுக்குப் போலல்லாது இவற்றின் மூக்கை (Blow hole) அல்லாஹ் தலையின் மேற்பகுதியில் வைத்துள்ளான். அவை நீரின் மேல் மட்டத்திற்கு வந்து தேவையான அளவு காற்றை வாயாலும், தலைப்பகுதியில் அமைந்துள்ள மூக்கின் வழியாகவும் உள்ளிழுத்துக்கொண்டு நீருக்கடியில் சென்றுவிடுகின்றன. இம் மூக்குத்துளை (Blow hole) பலீன் வகை திமிங்கிலங்களுக்கு இரண்டும் பற்திமிங்கிலங்களுக்கு ஒன்றும் உள்ளது. இவ்வாறு ஒருமுறை காற்றை நுரையீரலில் நிரப்பிக்கொள்ளும் திமிங்கிலங்கள் 7,000 அடி வரை நீரின் ஆழத்திற்கு சென்று இரை தேடும் வல்லமை பெற்றவை. இத்தகைய சிறப்பமைவுக்கு மற்றுமொரு காரணமும் சொல்லப்படுகிறது. நாம் காற்றை சுவாசிக்கும்போது, அதில் இருந்து 15 சதவிகித ஒட்சிசனை மட்டுமே நமது நுரையீரல் எடுத்துக்கொள்கிறது, ஆனால் திமிங்கிலங்கள், உள்ளிழுக்கும் காற்றில் இருந்து 90 சதவிகித ஒட்சிசனை எடுத்துக் கொள்ளும் திறமை பெற்றிருப்பதே இவ்வகையான நீண்ட நேர மூச்சடக்கும் திறமைக்கு காரணமாகும். சுபஹானல்லாஹ்!

சுவாசிப்பதற்காக இவை தண்ணீரின் மேற்பரப்பிற்கு வரும் போது ஒரு வகையான பாடலைப்பாடிக்கொண்டு பெரும் சப்தத்தோடு தங்கள் தலையின் மேற்பரப்பில் அமைந்த சுவாசக் குழாய் (Blow hole) மூலம் தண்ணீரை 9 மீட்டர் உயரம் வரை நீர் கம்பம் (Water Spout) போல பீய்ச்சி அடிக்கின்றன. இதனை நிறையக் கடற் பிரயாணிகள் கூட கண்டு புகைப்படம், வீடியோ எடுத்திருக்கின்றார்கள்.

உணவு முறை

திமிங்கிலங்கள் மீன்களையும், சிறிய மீன்களையும் சிறிய, பெரிய கணவாய்களையும் வேட்டையாடி உண்கின்றன. தங்களின் முக்கிய உணவாக உட்கொள்ளும் Giant squid என்னும் மீன் இனத்தின் நீளம் 10 மீட்டர் என்றால் இவற்றின் வாயின் அளவையும் பற்களின் வல்லமையையும் எண்ணிப் பாருங்கள். இவை இத்தகைய வாய் மற்றும் பல் அமைப்பை பெற்று விளங்குவதனால் மிகப் பெரிய அளவிளான மீன்களைக் கூட ஒரே நேரத்தில் பிடித்து விழுங்க முடிகின்றது. குறிப்பாக இவை ஆயிரக் கணக்கில் திரளாக இருக்கும் மீன்களைத் தேடிச் சென்று அவற்றை  ஒரே நேரத்தில் விழுங்கிவிடுகின்றன. திரளாக உள்ள மீன் கூட்டத்தைக் கண்டால் திமிங்கிலம் தன் வாயை அகலத் திறந்த நீரை உறிஞ்சி தலைமேல் உள்ள மூக்குப் பதியால் நீரை வெளியேற்றும். இதன்போது மீன்கள் நீருடன் இழுபட்டு திமிங்கிலத்தின் வாயிற்குள் சென்றுவிடும். இனி கதை அவ்வளவுதான்.

திமிங்கிலங்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 கிலோ கிராம் வரையான உணவை உட்கொள்ளுகினன்றன. இவை தங்களின் உணவை பிடித்து உண்டதன் பின்னர் தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை காற்றை நன்கு சுவாசித்து ஆக்ஸிஜனை சேமித்துக்கொண்டு மீண்டும் ஆழ் கடலை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்கின்றன. சிலபோது இரையைத் தேடி கடலின் இருண்ட ஆழத்திற்கும் செல்கின்றன. 1000 மீட்டர் முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது. ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க இவை எதிரொலி உத்தியைப் (echo location) பயன்படுத்துகின்றன.

வாழும்போது பல உயிர்களையும் தின்று வளர்ந்த ஒரு திமிங்கிலம் அது இறந்த்தும் பல லட்சம் உயிரினங்களுக்கு உணவாக மாறுகின்றது. இறந்ததன் பின் ஒரு மாமிச மலைபோலக் கடல் அடியில் போய் அடங்கும் திமிங்கிலங்களின் உடலை எண்ணற்ற நுண்ணுயிரிகளும், பெயர் அறியாத உயிரினங்களும் ஆண்டுக் கணக்கில் உண்டு வாழ்கின்றன. அல்லாஹ் எவ்வாறானதொரு உணவுச் சமநிலையை வைத்திருக்கின்றான் என்று பாருங்கள்.

தொடர்பாடல் முறை
நீரில் ஒலியலைகள் மிக வேகமாகப் பரவ வல்லவை. எனவே திமிங்கிலங்கள் ஒலி சமிஞ்ஞைகளை நீரில் பரவவிட்டு ஒன்றை ஒன்று தொடர்பு கொள்கின்றன. ஒலி எழுப்பும்போது இவை வாயை மூடி மூக்குப் பகுதியால் அதிர்வெண் கூடிய ஒலியலைகளை எழுப்புகின்றன. இந்த ஒலியை நீரில் பல ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள மற்றைய திமிங்கிலங்களால் கூட உணர முடியுமாக இருக்கும். இந்த ஒலியை எம்மாலும் கேட்க முடியும். இது அழகான பாடல் போன்று இனிமையாக, வித்தியாசமாக இருக்கும்.

இனப்பெருக்கமுறை
இனப்பெருக்க காலங்களில் ஆண் திமிங்கிலங்கள் நீண்ட இசையுடன் கூடிய சப்தங்களை தொடர்ச்சியாக எழுப்புகின்றன. இந்த இசையொலி அலைகளால் கவரப்பட்ட பெண் திமிங்கிலங்கள், துல்லியமாக ஆண் திமிங்கிலத்தின் இருப்பிடத்தை கண்டறிந்து வருகின்றன. கருக்கொண்ட பெண் திமிங்கிலங்களின் கர்ப்ப காலம் 12 மாதம் முதல் 17 மாதங்கள் வரை ஆகும். இது இனத்திற்கு ஏற்ப வித்தியாசப்படும். பிரசவ காலத்தில் மற்ற திமிங்கிலங்கள் கர்ப்பிணியை சூழ்ந்து கொண்டு செவிலித் தாயார் போன்று உதவுகின்றன.

குட்டித் திமிங்கிலம் பிறந்த உடன் மற்ற செவிலித் திமிங்கிலங்கள் அதை நீரின் மேல் மட்டத்திற்கு தூக்கிவந்து முதல் சுவாசத்தை ஏற்படுத்துகின்றன. குட்டித் திமிங்கிலம் உடனடியாக, தானே நீந்தக்கூடிய திறமையைப் பெறுகிறது. திமிங்கிலக் குட்டி பிறக்கும்போது 25 அடி நீளமுடன் ஒரு யானையின் எடையுடன் இருக்கும். ஒரு நாளைக்கு 200 லிட்டர் பாலைத் தம் தாயிடம் இருந்து குடித்து மணிக்கு 5 கிலோ நிறையில் வளருகிறது. பெண் திமிங்கிலங்கள் இரண்டு அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே குட்டி போடக்கூடியவை.

அறிவுக் கூர்மை
மனிதர்களின் மூளையைக் காட்டிலும் அளவில் பெரிய மூளை திமிங்கிலங்களுடையதாகும். மூளையின் அளவிற்கும் அறிவுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகளினால் நம்பப்படுகின்றது. 1970 ஆண்டு வாக்கில்தான் திமிங்கிலங்கள் புத்திக் கூர்மையான செயல்பாடுகள் முதல் முதலாக அறியப்பட்டது. விஞ்ஞானிகள் திமிங்கிலங்களை புத்திசாலி உயிரினமாகவே கருதுகின்றார்கள். ஏனென்றுச் சொன்னால் மூளையின் முன் புறமாக அமைந்த cerebral cortex என்ற அடுக்கு யானை, நாய் மற்றும் மனிதர்கள் போன்ற புத்திசாலி உயிரினங்களுக்கு இருப்பது போல ஏன் மனிதர்களுக்கு இருப்பதை விட அதிகமாகவே இவற்றிற்கு இருக்கின்றது. ஆராய்ச்சியின் முடிவுகள் கூட இவற்றை நிரூபிக்கும் வண்ணமாகவே உள்ளன. சில வகை டால்பின்கள் சுயமான சிந்தித்து சமயோசிதமாக செயல்படுவதை ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளார்கள். இவற்றின் செயல்பாடுகளே இவற்றின் அறிவுக்கூர்மைக்குச் சான்று.

யூனுஸ் நபியை மீன் விழுங்கியபோது அவர் லாஇலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினழ் ழாலிமீன்என்று அல்லாஹ்வை துதிசெய்துகொண்டே இருந்தார். இவ்வாறு மட்டும் தஸ்பீஹ் செய்யாதிருந்திருந்தால் மறுமை நாள் வரை அந்த மீனின் வயிற்றிலேயே அவரை வைத்திருப்பேன் என்று அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான். அவ்வாறு நடந்திருந்தால் ஒருவேலை யூனுஸ் நபியின் மீன் இன்றும் கடலில் எங்கோ ஒரு இடத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும். அல்லாஹ்வே மிகப்பெரியவன்! எதனையும் செய்யக் கூடியவன்!

ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து கொண்டு இருக்காவிட்டால், (மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே அவரை தங்கியிருந்திருப்பார்” (37:144)

ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...