நன்றிக்கும் விசுவாசத்துக்கும் பெயர் போன உயிரினம்தான்
நாய். மற்றைய விலங்குகளைவிடவும்
மனிதனுடன் நெருங்கிப் பலகும் சினேகபூர்வமான குணப்பண்புகளை இது கொண்டிருக்கின்றது.
மனித மொழியை விரைவில் புரிந்து செயல்படக்கூடிய திறனை அல்லாஹ்வே நாய்களுக்கு
வழங்கியிருக்கின்றான். முஸ்லிம் அல்லாதவர்கள் நாயை செல்லப் பிராணியாக
வளர்ப்பதுண்டு. புதைபடிவ எச்சங்களில் இருந்து பெறப்பட்ட DNA க்களைக் கொண்டு
ஆராய்ந்து பார்த்த்தில் நாய்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வருவதாகவும்
அக்காலம் முதலே அவை மனிதர்களுடன் நெருங்கிப் பலகி வந்துள்ளன என்றும் அறியக்கிடைத்துள்ளது.
நாய்கள் ஓநாய் வர்க்கத்தை சேர்ந்தவையாகும். தோற்றத்தில் இவை ஓநாய்களை ஒத்திருந்தாலும்
குணப் பண்புகளில் ஓநாய்களை விடவும் நாய்கள் சாதுவானவையும், மனிதனுடன்
இலகுவில் பலக்க்கூடியவையுமாகும். பொதுவாக விலங்குகளில் ஒரு இனத்தில்
குறைந்த அளவிலான வகைகளே காணப்படும். ஆனால் நாய் இனத்தில் அளவிட
முடியாத அளவு பல்வேறு வகைகள் காணப்படுகின்றன. பொதுவாக இவை அனைத்தும்
வீட்டு நாய்கள், காவல் நாய்கள், வேட்டை
நாய்கள், காட்டு நாய்கள், சவாரி நாய்கள்
என பரித்தறியப்படுகின்றன. நாய்க்குத் தமிழில் ஞாளி, எகினம், அக்கன், அசுழம், குக்கர், கூரன், கொக்கு, ஞமலி, ஞெள்ளை, முலவை, முவ்வை, குக்குரன், கடுவாய், வடி, வங்கு, நயக்கன், பாகி, பாசி, முடுவல் என்றெல்லாம்
பெயர்கள் உண்டு.
முஹம்மத் (ஸல்) அவர்களது பொன்மொழிகளில் அவர்கள் நாய் பற்றி பல்வேறு
இடங்களில் கூறியுள்ளார்கள். நாயைக் குறிக்கும் ”கல்புன் – ” என்ற அரபுப் பதம் அல்குர்ஆனில் ஐந்து இடங்களில்
பயன்படுத்தப்பட்டுள்ளது. நாய் இருக்கும் வீடுகளுக்கு மலக்குகள்
வரமாட்டார்கள் என்பது நாமறிந்த நபிமொழி. அதேபோன்று மலக்குகளால்
எந்த உருவத்தோற்றத்தில் வர முடியுமாக இருந்தாலும் அவர்கள் நாயினதும் பன்றியினதும் உருவத்தில்
வருவதில்லை என்பதையும் நாம் அறிவோம். நாம் வாழும் பகுதியில் புதிய
கருப்பு நாய்களைக் கண்டால் அதனை அடித்துக் கொல்லுமாறு நபியவாகள் கூறியிருக்கின்றார்கள்.
ஏனெனில் ஷைத்தான்கள் பொதுவாக கருப்பு நிற நாயின் தோற்றத்தில்தான் வருகின்றன.
நாய் ஒரு நஜீசான உயிரினமான இருந்தாலும் அதுவும் ஒரு அல்லாஹ்வின் படைப்பு
என்பதை விலங்கி அவற்றுடனும் கருணையோடு நடக்கவேண்டும்.
அன்றாடம் நாம் கண்டு பலக்கப்பட்ட ஒரு விலங்கினம் என்றாலும் அவற்றின்
உடலிலும் பண்புகளிலும் இறைவன் வைத்திருக்கின்ற பல அற்புதங்களை இத்தொடரில் ஆராய்வோம்.
உறுதிமிக்க கால்கள்
நாயின் நான்கு கால்களும் உறுதிமிக்கவை. வேகமாக ஓடுவதற்கும் பாய்வதற்கும் ஏற்றவிதத்தில்
அவை படைக்கப்பட்டுள்ளன. அதிகமான சந்தர்ப்பங்களில் அவற்றின் முன்
கால்களை கைகளாகவும் பயன்படுத்திக் கொள்கின்றன. கால்களின் விரலிடுக்குகளில்
அவை பதுக்கி வைத்துக்கொண்டிருக்கும் நீண்ட நகங்கள் மிக்க் கூர்மையானவை. எதிரியைத் தாக்கவும், இறையைப் பிடித்து கீறிக் கிழித்து
உண்ணவும் இதனைப் பயன்படுத்துகின்றன.
நிமிர்த்த முடியாத வால்
“நாய் வாலை நிமிர்த்த முடியாது” என்று சொல்வார்கள்.
நாயின் வால் அமைப்பு
இனத்திற்கேற்ப வேறுபடும். சில நாய்களது
வால் கீழ் நோக்கி வலைந்திருக்கும், சிலதின் வால் வான் நோக்கி
நிமிர்ந்திருக்கும். மற்றும் சுருண்டதாகவும் நீண்டதாகவும் குட்டையாகவும்
வாலே இல்லாமலும் இருக்கும். நாய்கள் தகவல்களை பரிமாறிக்கொள்ள
வாலைப் பயன்படுத்திக் கொள்கின்றன. சந்தோஷமான தருணத்தில் அது தன்
வாலை ஆட்டிக் கொண்டிருக்கும். குறிப்பாக வாலை ஆட்டி மனிதர்களிடத்தில் விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றன.
அதேபோன்று தமது உடலை பூமியில் சமநிலைப்படுத்தி வைத்துக்கொள்ளவும் வாலைப்
பயன்படுத்துகின்றன. நாயின் வால் அதன் கால்களுக்கு நடுவில் தரையை
நோக்கி இருந்தால் அது பயந்து உள்ளது என்று அர்த்தம். அதுவே அது மிகுந்த கோபத்துடன்
இருந்தால் அதன் வால் வானத்தை நோக்கி உயர்ந்திருக்கும்.
சக்திமிக்க காதுகள்
நாயிற்கு அல்லாஹ் நுணுக்கமான செவிப்புலனைக் கொடுத்துள்ளான். காதினை தரையில் வைத்து கண்களை மூடிப்
படுத்திருந்தாலும் காதுகள் மேல் நோக்கி விழிப்புடனேயே இருக்கும். சிறிய சப்தமாயினும் அது என்ன சப்தம் என்பதனைப் பிரித்தறிந்துவிடும்.
எப்போதும் ரேடார் போன்று இங்கம் அங்கும் காதுகள் திரும்பிக்கொண்டே இருக்கும்.
இவற்றால் மிகக்குறைந்த அதிர்வெண் கொண்ட (16 Hz – 20 Hz) ஒலி அலை
முதல் மிக அதிக அதிர்வெண்கொண்ட (70 kHz – 100 kHz) ஒலி அலைகளையும் கேட்கும் திறன் உண்டு.
கூர்மையான கண்கள்
கூர்மையான பார்வைப் புலன் இவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளன. இருளிலும் தெளிவாகப் பார்க்க்க் கூடிய
கண்வில்லைகளை அவை பெற்றுள்ளன. எனவே சிறியதொரு பொருளின் அசைவையும்
கண்டுகொள்ளும். நாய்களால் ஜின்களையும் பார்க்க முடியும்.
அதனால்தான் அதான் ஒலிக்கும்போது ஷைத்தான் ஓட்டமெடுப்பதைக் கண்டு நாய்கள்
எல்லாம் ஒரே நேரத்தில் ஊலையிட ஆரம்பிக்கின்றன. இந்த அளவு கூர்மையான
பார்வைச் சக்தியை அல்லாஹ் அவற்றுக்கு வழங்கியுள்ளான்.
பலமான மோப்ப சக்தி
நாய்களின் மோப்ப சக்தி அவற்றுக்கு இருக்கும் மிகப் பலமானதொரு
ஆயுதமாகும். பல மீட்டர்களுக்கு
அப்பால் உள்ள பொருளைக்கூட மோப்பம் பிடித்துவிடும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு.
மனித மோப்பசக்தியைவிட நாட்பது மடங்கு அதிகமான மோப்ப சக்தியைக் கொண்டுள்ளன.
திருடர்கள், போதைப் பொருள், வெடிகுண்டுகள், இடிபாடுகளில் சிக்கியவர்கள் போன்ற பல
தேடல் நடவடிக்கைக்காக நாயின் மோப்பசக்தி பயன்படுகின்றது. காவல்
துறையில் மோப்ப நாய்களுக்கென தனிப்பிரிவே உண்டு.
நீளமான நாக்கு
எம்மைப்போன்று, நாய்களால் அவற்றின் வியர்வையை உடல் மூலம் வெளியேற்ற முடியாது.
காரணம் அவற்றின் உடலில் வியர்வைச் சுரப்பிகள் காணப்படுவதில்லை.
நாக்கின் மூலமே அவை வியர்வையை வெளிவிடுகின்றன. நாய்களின் உடல் வெப்பம் எமது உடல் வெப்பத்தை விடவும் அதிகமாக இருப்பதால் உஷ்ன
காலங்களில் நாக்கை வெளியே தொங்கப்போட்டபடி சுற்றித்திரிவைதைப் பார்த்திருப்பீர்கள்.
இக்காலத்தில் அவற்றுக்கு கல்லால் அடித்தாலும் சரி அடிக்காது விட்டாலும்
சரி அவை நாக்கைத் தொங்கப் போட்ட நிலையிலேயே இருக்கும். இந்நிலையை
அல்லாஹ் இறை நிராகரிப்பாளர்களுக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றான்.
“நம் வசனங்களைப் பொய்ப்பிப்பவனுக்கு உதாரணம்
நாயைப் போன்றது. அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விட்டபடி
இருக்கும், அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க
விட்டபடி இருக்கும்” (7:176)
உடல் உறுப்புகளில் பல அற்புதங்கள் உள்ளது போலவே அவற்றின் பண்பு நடத்தையிலும் பல அற்புதங்கள் உள்ளன.
எல்லைக் கோடுபோட்டு வாழும் இயல்பு
நாய்கள் கூட்டமாக தமக்கென ஒரு பகுதியை வகுத்து வாழும் தன்மை கொண்டவை. தமது சிறுநீரைப் பயன்படுத்தி தாம் வாழும் பகுதியைச் சூழ ஒரு எல்லைக் கோட்டை வரைந்துகொள்ளும். அதனைத் தாண்டி இலகுவில் அவை செல்லாது. அதேபோன்று பிற பகுதி நாய்கள் இதனை நுகர்ந்து பார்த்துவிட்டு உள்ளே நுழையவும் மாட்டாது. அதையும் மீறி தமது பகுதிக்குள் பிற நாயொன்று நுழைந்தால் அதன் கதி அதோ கதிதான். எல்லா நாய்களும் ஒன்று சேர்ந்து புதிய நாயைக் கடித்துக் குதறி வெளியே விரட்டி விடும். ஒரு நாய் மற்றொரு நாயின் பின் பகுதியை அடிக்கடி நுகர்ந்து பார்ப்பது ஏனென்றால் குறித்த நமது ஏரியா நாய்தானா அல்லது அது வேறு ஏரியாவுக்கு சென்று வந்துள்ளதா என்பதை அறியத்தான். எம்மை அண்டி வாழும் இந்த நாய்களுக்கு எந்த அளவு புத்திக் கூர்மை உள்ளது பார்த்தீர்களா?
எஜமானின் உணர்வை விளங்கிக்கொள்ளும் நாய்கள்
ஹங்கேரியன் விஞ்ஞான பீடத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் 11 நாய்களை பயிற்றுவித்து
நடத்திய ஆய்வின் மூலம் செல்லப்பிராணியாக
வளர்க்கப்படுகின்ற நாய் தனது உரிமையாளரின் உணர்வை புரிந்துகொள்கின்றது என்ற விடயம் கண்டறியப்பட்டுள்ளது. MRI இயந்திரத்தின் உதவியுடன் மனிதர்களுடன் தொடர்புகொள்ளும்போது நாயின் மூளையில்
ஏற்படுகின்ற மாற்றங்கள் மனித மூளையுடன் ஒப்பிடப்பட்டு கண்டறியப்பட்டது. இதன் மூலம் நாயின் மூளை மனிதனின் மூளையைப்போன்று சமூகத்தொடர்புகளை புரிந்துகொள்ளக்கூடியது
என்ற விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதனாலோ என்னவோ மிக அன்பாக வளர்க்கப்பட்ட
நாய்கள் அவற்றின் எஜமான் இறந்ததும் உண்ணாமல், பருகாமல் இருந்து அவையும்
உயிரை விட்ட சம்பவங்கள் நிறையக் கேள்விப்பட்டிருக்கின்றோம்.
சீனா மற்றும் கொரியாவில் நாயை
இறைச்சிக்காக்க் கொல்கின்றனர். ஆனால் இந்துக்களோ நாயை கடவுளாக (பைரவர்) எண்ணி வணங்குகின்றனர். மேற்குலகில் பரவலாக (எமது நாட்டிலும் கூட) நாயை செல்லப்பிராணியாக வளர்க்கும் பலக்கம் உள்ளது. ஆனால்
இஸ்லாம் வேட்டைக்கு, மந்தைகளின் பாதுகாப்புக்கு, வழிகாட்டுவதற்கு, தேடல் நடவடிக்கைகளுக்கு அல்லாமல் நாய்
வளர்ப்பதைத் தடுக்கின்றது.
1 comments:
தங்களின் எல்லா ஆக்கங்களும் மிக மிக பயனுள்ளதாக உள்ளது.அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...