"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

01 November 2014

கடவுள் தண்ணீரின்மீது இருந்தான்

இப் பிரபஞ்சம் படைக்கப்பட முன்பு அல்லாஹ் தன் அர்ஷில் தண்ணீரின் மீது இருந்தான். இதனை நபியவர்களின் பொன்மொழி பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றது. “ஆதியில் அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத்தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (அப்போது) அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்பூல் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விசயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப்படைத்தான்.என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (புஹாரி.3191)

பைபிளின் பின்வரும் வசனமும் இக்கருத்தையே கூறுகின்றது. தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.” (ஆதியாகமம்-1:2) இந்து மத புராணங்களும், “வைகுண்டத்தில் திருப்பாற்க் கடலில் மகா விஷ்ணு பள்ளிகொண்டிருப்பதாக கூறுகிறது.எனவே அனைத்துக்கும் முன்பு நீர் இருந்துள்ளது என்பதையும் அனைத்தினதும் மூலம் நீர்தான் என்பதையும் அறிய முடியும். திருமறை பகர்வதைப் பாருங்கள் நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் நிராகரிப்பாளர்கள் பார்க்கவில்லையா?” (21:30)இதன் மூலம் பிரபஞ்சப் படைப்புகள் யாவும் நீரின் மீது தேவையுடையவை என்பதை விளங்கலாம், புவியிலும் இதனால்தான் 79 வீதமான பரப்பை நீராலும் எஞ்சிய சிறு 21 வீதமான பகுதியை நிலத்தாலும் ஆக்கியுள்ளான். இத்தகு தேவைகளையுடைய நீரை அல்லாஹ் உயிர் வாழ்க்கையின் அச்சாணியாக அமைத்துள்ளான்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...