பாரிஸில்
இடம்பெற்ற சார்லி ஹெப்தே
தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டது பற்றி
பிலிப்பைன்ஸ் வந்திருந்த போப் பிரான்சிஸ் அவர்களிடம் நிருபர்கள் கேள்வி
கேட்டபோது அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாற்றமாக இருந்தது போப்
அவர்களின் அதிரடிப் பதில்கள்.
"கருத்து
சுதந்திரத்திற்கு வரம்புகள் உள்ளன. அது பாதுகாக்கப்படவேண்டிய அதே
வேளையில், நீங்கள் மற்றவர்களின் நம்பிக்கையையும் அவமானப்படுத்த
முடியாது. ஒவ்வொரு மதத்துக்கும் அதற்குரிய கண்ணியம் உண்டு. இதோ
என் அருகே நிற்கும் என்னுடைய நல்ல நண்பர் ((பிலிப்பைன்ஸில் போப்பின் பயண
ஏற்பாடுகளை கவணிக்கும்))
டாக்டர் ஆல்பர்டோ கஸ்பர்ரி, என்
தாய்க்கு எதிரான சாப வார்த்தையை சொன்னால், என்னிடமிருந்து
ஒரு கும்மாங்குத்தைத்தான் (punch என்று
சொல்லி இருந்தார்) அவர் எதிர்பார்க்க வேண்டும். இது
சாதாரண விஷயம். இது சாதாரண விஷயம். நீங்கள் பிறரை கோபமூட்டி தூண்ட முடியாது.
நீங்கள் மற்றவரின் நம்பிக்கையையும் அவமானப்படுத்த முடியாது. நீங்கள் மற்றவர்களுடைய
நம்பிக்கையை கேலி செய்ய முடியாது. பிற மதங்களை மதிக்கவேண்டும்"
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...