"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

04 February 2015

ஊனுண்ணித் தாவரங்கள்

அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் 54 வகையான தாவரங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் மூன்று வகை தவிர்ந்த மற்ற அனைத்தும் பூமியில் காணப்படுகின்ற தாவரங்களாகும். அல்குர்ஆனில் தாவரங்கள் தொடர்பாக வருகின்ற வசனங்களை ஆராயுமிடத்து அவை தாவரங்களுக்கு உயிர், உணர்ச்சி இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. விஞ்ஞானமும் இதனையே கூறுகின்றது.

மனிதர்களைப்போன்று தாவரங்களுக்கும் சிந்தித்து உணரும் ஆற்றல் இருக்கின்றது என்ற ஒரு ஆய்வியல் தகவல் அண்மையில் பிளாண்ட் பயாலஜிஎன்ற சஞ்சிகையில் வெளியாகியிருந்தது. மட்டுமன்றி அவை தமக்கிடையில் உரையாடுவதாகவும் பல்வேறு ஒலி சமிக்ஞைகளை வெளியிடுவதாகவும் அவ்வாய்வில் அறிவித்திருந்தனர். இதற்கு ஒரு கட்டுரையாளர் பின்வரும் அல்குர்ஆனிய வசனத்தைக் கூறி மனிதன் மட்டுமன்றி தாவரங்கள், மரங்கள், மலைகள் போன்ற அல்லாஹ்வின் இதர படைப்புக்களுக்கும் சிந்தித்து முடிவெடுக்கின்ற ஆற்றல் இருக்கின்றது என்ற கருத்தை ஒரு கட்டுரையில் தெளிவுபடுத்தியிருந்தார். இதுதான் அந்த அல்குர்ஆனிய வசனம்.

நிச்சயமாக வானங்கள், பூமி, மலைகள், என்பவற்றுக்கு (இரை) அமானிதத்தை சுமந்துகொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம். ஆனால் அதைச் சுமந்துகொள்ள அவை மறுத்தன. அதைப் பற்றி அவை அஞ்சின. ஆனால் மனிதன் அதைச் சுமந்தான். (ஆனால்) நிச்சயமாக மனிதன் அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கிறான் (சூரா அஹ்ஸாப் 72)

தாவரங்கள் சிந்தித்து செயற்படுகின்றன என்பதற்கு தொட்டால் சினுங்கி மற்றும் புழு, பூச்சிகளை உண்டு வாழும் ஊனுண்ணித் தாவரங்கள் மிகச் சிறந்த உதாணரமாகும். ஏனெனில் இவற்றின் செயற்பாடுகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. இத்தொடரில் ஊனுண்ணித் தாவரங்களில் உள்ள அற்புத இயல்புகள் பற்றி அறிந்துகொள்வோம்.

ஊனுண்ணித் தாவரங்கள்.

புழு, பூச்சிகளை உண்டு வாழும் இத்தகைய தாவரங்கள் ஊனுண்ணித் தாவரங்கள் (Carnivorous plant) என்றும் பூச்சியுண்ணித் தாவரங்கள் (insectivorous plants) என்றும் அழைக்கப்படுகின்றன.

இவை கடும் பணி, கடும் உஷ்னம் தவிர்ந்த மற்ற எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை கடல் மட்டத்திலிருந்து 1,000 அடி முதல் 10,000 அடி உயரம் வரையுள்ள பகுதிகளில் வளரக்கூடியன. ஈரப்பதம் மற்றும் அமிலத் தன்மை கொண்ட காடுகள், சதுப்பு நிலங்கள், ஆற்றங்கரைகள், குட்டை ஓரங்கள் போன்ற இடங்களில், இவ்வகைத் தாவரங்கள் அதிகமாக வளர்கின்றன. "டோசோரியா' வகையை சார்ந்த, பூச்சி உண்ணும் தாவரம், தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது.

இவ்வகைத் தாவரங்கள் 6 குடும்பங்களைச் சேர்ந்தவை என்பதோடு இவற்றில் 16 பேரினங்கள் காணப்படுகின்றன என்றும் இதுவரை ஆராய்ந்ததில் சுமார் 450 வகைச் செடிகள் இருப்பதாகவும் அவற்றில் 30 க்கும் மேற்பட்டவை கலப்பினச் செடிகள் என்றும் தாவரவியல் ஆய்வாளர்கள் ஒரு பட்டியலைத் தருகின்றனர். இவை சுமார் 100 வருட ஆயுளைக்கொண்டவை.

உணவு முறை.

பொதுவாக தாவரங்கள் நீரையும், காபனீரொட்சைட்டையும், சூரிய ஒளியையும், கனியுப்புக்களையும் பயன்படுத்தி உணவுட்பத்தி செய்வதுதான் வழக்கம். ஆனால் அவற்றிலிருந்து வித்தியாசமாக இரைகளை உண்டு உயிர் வாழும் முறையை அல்லாஹ் இத்தாவரங்களுக்குக் கொடுத்துள்ளான். எனவே இவை அசைவ (No veg) தாவரங்களாகும். ஈ, எறும்பு, தேனி, தும்பி, சிலந்தி போன்ற கணுக்காலிப் புச்சிகளையும் நத்தை, தவலை, பல்லி, எலி போன்ற ஜந்துக்களையும் இவை இரையாக்கிக்கொள்கின்றன.

தமது உயிர்வாழ்க்கைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிலும் குறிப்பாக நைட்ரஜன் மிகவும் குறைவான மண்ணில், சதுப்பு நிலங்களில் இத்தாவரங்கள் அதிகம் வளர்கின்றன என்பதால் தமது உயிர்வாழ்க்கைக்கு அத்தியவசியமான  நைட்ரஜனை இவை பூச்சிகளின் உடலில் உள்ள புரதத்தில் இருந்து பெற்றுக்கொள்கின்றன. இதற்காகத்தான் இவை இரைகளை வேட்டையாடுகின்றன. தாவரவியல் அறிஞரான பேராசிரியர் ஹூக்கர் (J.D.Hooker) என்பவர் பூச்சிகளைச் செமிக்கச் செய்யும் செயல்முறை விலங்குகளைப் போல இத்தகைய தாவரங்களிலும் நடக்கிறது. மனிதனின் வயிற்றில் சுரக்கும் நொதியங்கள் போல தாவரங்களிலும் நொதியங்கள் சுரக்கின்றன”  என்கிறார்.

பூச்சிகளைப் பிடிக்கும் பொறி முறை

இத்தாவரங்கள் பூச்சிகளைப் பிடிக்கப் பின்பற்றும் முறைகள் மிகவும் வியப்பானவை. கண்டறிந்துள்ள அனைத்துத் தாவரங்களையும் ஆராய்ந்ததில் அவை இரைகளைப் பிடிக்க முக்கியமாக ஐந்து பொறி முறைகளைத் தம்வசம் கொண்டுள்ளன. இரைகளைப் பிடிக்கும் அமைப்பைவைத்து இத்தாவரங்களையும் ஐந்தாக வகைப்படுத்தலாம்.

1. Pitfall traps –

இதனை குழி அமைப்பிலான பொறிமுறை என்று குறிப்பிடலாம். சில தாவரங்களது உடல் பெரிய அளவில் கிணறு போன்று அமைந்திருக்கும். அத்தோடு மேலால் மூடி போன்ற பகுதியொன்றும் திறந்திருக்கும். அதன் வாய் விளிம்புப் பகுதி இரைகளைக் கவரும் நிறத்தில் இருப்பதோடு விளிம்பில் சுவையான தேனும் இருக்கும். இதனைப் பருக வரும் இரை ஆரம்பத்தில் தேனில் சுவைகண்டு அதன்பின் குழிக்குள் இரங்க ஆரம்பிக்கும். ஆனால் அவற்றின் அடிப்பகுதியில் இருப்பது உணவைச் செரிக்கச் செய்யும் ஆபத்தான நொதியங்களும் பக்டீரியாக்களுமாகும்.

இதனை அறியாது விளிம்பில் இருந்து சற்று உள்ளே காலை வைத்ததும்தான் தாமதம் அதன் சுவற்றில் இருக்கும் வழுவழுப்பான தன்மையால் வழுக்கி இரை நொதியத்தில் வீழ்ந்துவிடும். அதோடு மேலே இருக்கும் மூடி அதன் வாயை அடைத்து இரை வெளியே வராத வண்ணம் செய்துவிடும். இனி இரை அந்த நொதியத்தில் மூழ்கி, கரைந்து இறந்து இரையாகிவிடும். இதற்கு Pitcher plant வகைத் தாவரங்கள் சிறந்த உதாணரம். (படம்)

2. Fly paper traps

இந்த வகைத் தாவரங்களின் இலைகளில் ஒருவகையான ஒட்டும் தன்மை வாய்ந்த பிசின் அல்லது பசை காணப்படுகின்றது. இவை சிறு சிறு பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து இரையாக்கிக் கொள்ளும். பார்ப்பதற்கு அழகாக மினு மினுப்புடனும் நல்ல நுறுமணத்துடனும் இருப்பதால் சிறிய புச்சிகள் இவற்றை நாடி வரும். தலைகளையும் இவை பிடித்துக்கொள்ளும். இவற்றின் இலைகளில் இரை வந்து அமர்ந்ததும்  மேற்பரப்பில் இருக்கும் பசையில் ஒட்டி நகர முடியாமல் தடுமாறும்போது தாவரத்தின் இலை இரையை அப்படியே சுருட்டிவிடும். பின்னர் சாற்றை உறிஞ்சிவிட்டு சக்கையை கீழேபோடும். இதற்கு sundews வகைத் தாவரங்கள் சிறந்த உதாணரம் (படம்)

3.Snap traps

இலைகளை வேகமாக அசைத்து மூடி இரைகளைப் சிறைப்பிடிக்கும் ஊனுண்ணித் தாவர வகையை இது குறிக்கும். இவ்வகைத் தாவரங்கள் தமது இலைகளை இரண்டு பகுதிகளாகத் திறந்து வைத்திருக்கும். அதன் உட்பகுதி சிவப்பு, இளஞ்சிவப்பு நிறங்களில் கண்களைக் கவரும் விதத்தில் அமைந்திருக்கும். அதுமட்டுமன்றி மெல்லிய உணர்ச்சிக் கொம்புகள் மத்தியில் நீண்டிருக்கும். இனி இத்தாவரங்களின் அழகில் மயங்கி ருசிக்கவரும் பூச்சிகள், வெட்டுக்கிளிகள் அவற்றில் ஊர்ந்து செல்லும்போது உண்ர்ச்சிக்கொம்புகளில் பட்டுவிட்டால்போதும் உடனே இரண்டாகப் பிரிந்துகிடந்த இலைகள் நடுவே இரையைவைத்து நசுக்கி மூடிக்கொள்ளும். அவற்றால் வெளியேற முடியாது அதுக்குள்ளே அகப்பட்டு இரையாகிவிடும். இதற்கு  Venus flytrap (Dionaea muscipula) மற்றும் waterwheel plant (Aldrovanda vesiculosa)  என்பவை உதாரணங்களாகும். (படம்)

4. Bladder traps

நீரை அண்டி வாழும் இத்தாவரங்களின் உடலில் காற்றுப் பை போன்ற நிறைய பைகள் இருக்கும். இத்தாவரங்களில் இரைகள் சிக்கியதும் அவற்றைச் சுற்றி தமது உறிஞ்சும் உறுப்புகளை அதில் பதித்து ஒருவகை அமிலத்தை உடலில் செழுத்தி உறிஞ்சி உணவாக்கிக் கொள்கின்றன. Utricularia vulgaris என்ற தாவரம் இதற்கு உதாரணமாகும். (படம்)

5. Lobster-pot traps

இவை மிக நுண்ணிய வகையான இரைகளை மாத்திரம் உணவாகக் கொள்கின்றன. எளிதில் காண்பதும் கடினம். செரிமான உறுப்புக்கு இரையைச் செலுத்தும் வண்ணம் உள்நோக்கிய முட்களை பயன்படுத்தி  இரைகளைப் பிடிக்கும்.

இதுபோன்ற பொறிமுறைகளை வைத்து இத்தாவரங்கள் இரைகளைப் பிடித்து உண்டு வாழ்கின்றன. இவ்வகையான தாவரங்கள் அச்சம் தரக்கூடிய பல ஆங்கிலத் திரைப்படங்களுக்குக் (English Horror Films) கருவாகவும் அமைந்துள்ளன.

உண்மையில் இத்தாவரங்களின் செயற்பாடுகள் ஆய்வாளர்களை மட்டுமன்றி பார்ப்போரையும் வியப்பில் ஆழ்த்தும் நடைமுறையைக் கொண்டுள்ளன. தாவரங்களுக்கு உயிர் இருப்பதோடு உணர்வும் இருக்கின்றது என்பதை தெளிவாகவே இவ்வகைத்தாவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. தாவரங்களும் இறைவனைத் துதிக்கின்றன என்ற உண்மையை விளங்கிக்கொள்ள இதுவொன்றே போதுமான ஆதாரமாகும்.

வானங்களிலுள்ளவர்களும், புமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸுஜுது செய்கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவைகளும் அல்லாஹ்வைக் துதி செய்கின்றன. இன்னும் அல்லாஹ்வைப் புகழ்ந்து துதி செய்யாத பொருள் எதுவும் இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள். நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும் மிக மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான். (சூரா பனீ இஸ்ராயீல் 44)

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...