"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

01 June 2015

நபிகளாருக்கு இறைவன் கற்றுக்கொடுத்த முதல் பாடம் விஞ்ஞானம்.

இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு உம்மி நபி. “உம்மி” என்பதன் பொருள் எழுதவோ, வாசிக்கவோ, படிக்கவோ தெரியாதவர் என்பதாகும். என்றாம் இந்த உம்மி நபிக்கு வல்லவன் அல்லாஹ் கற்றுக்கொடுத்த முதலாவது பாடம் எது தெரியுமா? சற்று சிந்தித்துப் பாருங்கள்… இஸ்லாம் பாடமா? கணிதப் பாடமா? அரசியல் பாடமா என்று கேட்டால் எதைக் கூறுவோம்? நபியவர்களுக்கு ஹிராக் குகையில் வைத்து நபித்துவம் வழங்கப்படும்போது இறங்கிய முதலாவது அல்குர்ஆனிய வசனம்…

اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ﴿١ خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ ﴿٢اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ ﴿٣ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ ﴿٤ عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ ﴿٥ 

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. அவன் மனிதனை 'அலக்' என்ற நிலையிலிருந்து படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக்கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.[96:1-5]

நபியவர்களுக்கு அல்லாஹ் விஞ்ஞானப் பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளான். அதிலும் பௌதீகவியல் ((Physics), இரசாயனவியல் (Chemistry), உயிரியல் (Biology) என்ற மூன்று பகுதிகளில் உயிரியலைப் பற்றிக் கற்றுக்கொடுத்துள்ளான். அதிலும் தாயின் கருவறையில் மனித உருவாக்கம் பற்றிக் கற்கும் கருவியல் அல்லது முளையவியல் (Embryology) பற்றிக் கற்றுக்கொடுத்துள்ளான். இத்தனைக்கும் முஹம்மத் நபியவர்கள், அதுமட்டுமன்றி அதன் பின்பு எழுதுகோலைக்கொண்டு மனிதன் அறியாத அனைத்தையும் கற்றுத்தந்துள்ளாதாகக் கூறுகின்றான். சுபஹானல்லாஹ்!

இஸ்லாம் கல்விக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்று பார்த்தீர்களா?
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...