"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

29 October 2015

ஆணும் பெண்ணும் சமமானவர்களல்லர் – ஒரு உளவியல் பார்வை

وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنثَىٰ
ஆண், பெண்ணைப் போன்றவனல்ல. (3:36)

ஆணையும் பெண்ணையும் படைத்த அல்லாஹ் திருமறையில் ஆணும் பெண்ணும் சரி சமமானவர்கள் அல்லர் என்று கூறுகின்றான். இந்த வசனம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் அடிப்படை வித்தியாசங்களைக் வேறுபிரித்துக் காட்ட விளைகின்றது. அத்தோடு இந்த வித்தியாசத் தன்மைதான் இருவரும் சேர்ந்து வாழ வழியமைக்கின்றது. ஆண் பெண்ணின் மீதும் பெண் ஆணின் மீதும் தேவையுடையவர்கள் என்பதை உண்ர்த்துகின்றது. ஆணோ, பெண்ணோ இருவரும் அரைகுறையானவர்கள். இருவரும் இணையும்போதுதான் அங்கு பூரணத்துவம் ஏற்படுகின்றது.

திருமண வாழ்க்கையில் இந்த ஆண் பெண் வித்தியாசத்தை விளங்கியிருக்கும்போது பிரச்சினைகள் ஏற்படுவது மிகவும் குறைவு. இதனை விளங்காதிருக்கும்போதுதான் என்னால் முடியும் என்றால் ஏன் உன்னால் முடியாது? உன்னால் முடியுமென்றால் ஏன் என்னால் முடியாதா?” என்ற வெடுக்குத்தனமான கேள்விகளெல்லாம் எழுகின்றது. அதன் தொடராக பிரச்சினைகளும் வெடிக்கின்றன.

எனவே இல்லரத்தில் இணைந்தவர்களும் குறிப்பாக இணையவிருக்கின்றவர்களும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உளவியல் மற்றும் பண்பியல் ரீதியான வித்தியாசங்களை அறிந்துகொள்வது மிக முக்கியமானதாகும்.

1.நிறமூர்த்தத்தில் உள்ள வேறுபாடு.

பரம்பரையைத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செழுத்தும் நிறமூர்த்தங்களில் ஆணினது நிறமூர்த்தம் XY என்ற அமைப்பிலும் பெண்ணுடைய நிறமூர்த்தம் XX என்ற அமைப்பிலும் காணப்படுகின்றது. இவைதான் ஒரு பிள்ளை ஆணாகப் பிறக்குமா? அல்லது பெண்ணாகப் பிறக்குமா? என்பதனைத் தீர்மானிக்கின்றது. பார்த்தீர்களா? அடிப்படையே வித்தியாசம். இனி எப்படி ஆணும் பெண்ணும் சமமாக முடியும்?

2. பார்வைப் புலன்

மேலுள்ள படத்தின் துணையுடன் இதனைப் படியுங்கள். பெண்களைப் பொருத்தவரை அவர்களால் 180 பாகைக் கோணத்தில் தமக்கு அருகாமையில் உள்ளவற்றை நன்கு தெளிவாகப் பார்க்க முடியும். ஆனால் தூர இருப்பவற்றை அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியாது. இதேவேளை ஆண்களைப் பொருத்தவரை அவர்களால் 90 பாகைக் கோணத்தில் தூர இருப்பவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியும். அருகில் உள்ளவற்றை அவர்களால் சரியாகப் பார்க்க முடியாது. 

உங்களது வீட்டிலும் இந்தப் பிரச்சினை இருக்கும். கணவன் வேலைக்குச் செல்ல தயாராகிக்கொண்டு எண்ட பைக் கீ எங்க? கார் கீ எங்க? ஒபீஸ் கீ எங்க?, சொக்ஸ கண்டீங்களா? சூவக் கண்டீங்களா? என்று மனைவியைப் போட்டு வதைப்பதும் மனைவியும் இது என்ன? கண்முன்னுக்கு வச்சிக்கிட்டு தேடுறீங்க? எப்பவுமே நானே வந்து தேடிக் கையில தரனும்என்று திட்டிக்கொண்டே அருகில் உள்ள பொருளைத் தேடிக்கொடுப்பதும் வீடுகளில் அன்றாடம் நடக்கும் சங்கதி. இப்போது இதற்குக் காரணம் புரிந்திருக்கும். ஆண்களைவிட பெண்களால் இலகுவாக ஊசிக்கு நூல் கோர்க்க முடிவதும் இதனால்தான்.

3. கவனம் செழுத்தும் திறன்

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை Multi Personality என்போம். உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்யவும் முடியும். உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.

ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை மட்டுமே செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை Single Personality என்போம். உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்சியைப பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது. அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது. கணவன் பத்திரிகையைத் திறந்து சோபாவில் அமர்ந்தால் மனைவி வாயைத் திறப்பா இந்த மனுசனுக்கு உலகமே அழிஞ்சாலும் ஒன்னும் தெரியாது. பேப்பர்தான் அவருக்கு உலகம்

4. நிறங்கள் புலப்படும் விதம்

ஆண்கள் ஆடைக் கடைகளுக்குச் சென்றால் குறுகிய நேரத்தில் தமக்கான ஆடையை பிடித்த நிறத்தில் பார்த்து எடுத்துக்கொண்டு வருவார்கள். ஆனால் பெண்கள் மிக நீண்ட நேரம் எடுப்பார்கள். காரணம் ஆண்களின் கண்களுக்குப் புலப்படும் நிறங்களை விட பெண்களின் கண்களுக்குப் புலப்படும் நிறங்கள் துல்லியமானவையாகவும் ஒரு நிறத்தில் உள்ள பல உப நிறங்களை வேறு பிரித்தறியும் விதத்திலும் இருப்பதனால்தான். எனவே ஆண்கள் மொத்தமாகப் பார்க்கும் பார்வையைவிடவும் பெண்கள் துல்லியமாகப் பார்ப்பதால் ஆடைகளைத் தெரிவுசெய்வதில் தாமதம் ஏற்படுகின்றது. கீழுள்ள படத்தைப் பார்த்தால் புரியும்.

5.மொழி.

பெண்களால் இலகுவாக பல மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியும். அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம். அவ்வாறே ஒரு நாளைக்குப் பெண்கள் சுமார் 7000 வார்த்தைகளைப் பேசுகின்றார்கள். 

ஆண்கள் ஒரு நாளைக்குப் பேசும் வார்த்தைகள் சுமார் 2000 மட்டும்தான். அனேக கணவன்மார் மனைவியைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைதான் வாய மூடு, ஏன் எப்ப பாத்தாலும் சும்மா வள வளண்டு பேசுற?” பெண்கள் தமக்குள் உள்ளவற்றையெல்லாம் வாய் திறந்து பேசவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். கணவன் அன்றி வேறு யாரிடம்தான் அவர்களால் வாய் திறந்து பேச முடியும்? கணவன்மாரே மனைவியருக்கு சற்று செவிதாழ்த்தினால் என்ன?

6. பகுத்துணரும் திறன் (Analytical Skills)

ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆண்களின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.

உதாரணமாக வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் (Signal) என்பவற்றை முன் கூட்டியே விரைவாகக் கணித்து அதற்கு ஏற்றாற்போல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.

ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும். ஆண்களால் இவ்வாறு செய்ய முடிவதற்குக் காரணம், ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறனும் 90 பாகையில் தூரப் பார்க்கும் திறனுமாகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.

7. உடல் மொழிகளைப் பிரித்தறிதல்

பெண்களால் இலகுவாக ஆண்களின் உடல் மொழிகளைப் (Body languages) படித்திட முடியும். சோர்வு, விரக்தி, கவலை, கோபம், சந்தோசம் என எதனையும் ஒரு பெண்ணால் இலகுவாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக இது பொய்தான் என்பதை அறிந்துகொள்வார்கள். ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை.  காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20%  உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் பிரித்தறிந்து உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை.

8. பிரச்சனைக்கான தீர்வுகள்.

பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும். இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.

ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்ணின் மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது.  யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதனூடாகவே திருப்தியடைந்துகொள்வார்கள். சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் சரி தீராவிட்டாலும் சரி அவர்கள் நிம்மதியாக படுத்துறங்குவார்கள்.

உதாரணமாக ஆண்கள் ஒரு பிரச்சினைக்கான தீர்வை யோசித்து, திட்டமிட்டு நடைமுறை ரீதியாக அதனைத் தீர்க்க முனையும்போது பெண்களோ அப்பிரச்சினையை உணர்ச்சி மூலம் தீர்த்துக்கொள்ள முற்படுகின்றனர். சிறு பிரச்சினைக்கும் பெண்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவது இதனால்தான்.

9. மகிழ்ச்சியின்மை:

ஒரு பெண்ணிற்கு தனது அன்புறவுகளிடையே பிரச்சினை அல்லது திருப்தியின்மை இருந்தால் அவர்களால், அவர்களின் வேலையில் ஒழுங்கு முறையாகக் கவனம் செலுத்த முடியாது. அதேபோன்று ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சினை இருந்தால் அவனின் அன்புறவுகளின் மீது சரியாகக் கவனம் செலுத்த முடியாது.

10. ஞாபக சக்தி

இலக்கங்களை ஆண்களால் அதிகம் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம் படுவான். பிள்ளையின் பிறந்த திகதி, வயது, எத்தனையாம் ஆண்டில் படிக்கிறான் என்று தந்தைமாரைக் கேட்டால் மனைவியைத்தான் திரும்பிப் பார்ப்பார்கள். மனைவியிடம் கேட்டுத்தான் சொல்வார்கள். எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும் மறந்துவிடுவார்கள். காரணம் ஆண்களின் இயல்புத் தன்மை அப்படித்தான். ஆனால் இதுவிடயத்தில் பெண்கள் நல்ல ஞாபக சக்தி உள்ளவர்கள். கணவன், பிள்ளைகள் என எல்லோருடைய பிறந்த தினத்தையும் அவர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.

மேலே கூறிய அல்குர்ஆன் வசனத்தின் யதார்த்தத்தை அவதானித்திருப்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி கரமாணதாக இருக்கத்தேவையான காரணிகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை கணவன், மனைவி இருவரும் அறிந்துகொள்வது தலையாய அம்சம் என்று நினைக்கின்றேன். மகிழ்ச்சிகரமாண குடும்ப வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்!
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

09 October 2015

இரத்தத்தில் இறைவன் வைத்துள்ள அற்புதங்கள்

மனித உடலை அல்லாஹ் வடிவமைத்திருக்கும் நேர்த்தியையும், அதிலுள்ள நுணுக்கங்களையும் சற்று உற்றுப்பார்த்தால் அதில் அல்லாஹ்வின் அருளையும் அவனது ஆற்றலையும் புரிந்துகொள்ளலாம். மனித உடலே இறை இருப்புக்கான ஓர் அத்தாட்சிதான். அல்லாஹ் கூறுகின்றான்.

سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنْفُسِهِمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ
நிச்சயமாக (அவனே) உண்மையானவன் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், (ஏன்) அவர்களுக்குள்ளேயும் நாம் காண்பிக்கின்றோம். (41:53)

அந்தவகையில் எமது உடம்பில் உள்ள அல்லாஹ்வின் மற்றுமொரு அத்தாட்சியும் அற்புதமானவொன்றும்தான் இரத்தம் (Blood). திரவ நிலையில் சிவப்பு நிறத்தில் உடலில் உள்ள குருதிக் கலங்களுடாக இதயம் எனும் பம்பியின் உதவியுடன் உடல் முழுக்கப் பயனித்து மனிதனின் மட்டுமன்றி உயிர்ப்பிராணிகள் அனைத்தினது வாழ்க்கைகைகும் உதவும் அவசியமானவொன்றாக இரத்தம் இருக்கின்றது.

குருதிச் சுற்றோட்டம்.

எமது உடலில் தலை முதல் கால் பாதங்கள் வரை எண்ணிலடங்காத கலங்கள் காணப்படுகின்றன. அந்த கலங்களின் தொழிற்பாடுகளுக்கும் உயிர் வாழ்க்கைக்கு சக்தி அவசியம். சக்தி என்பது கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, புரதம், தாதுப் பொருள்கள் என்பவற்றைக் கொண்டவை. ஒக்ஸிஜனும் மிக அவசியம். உடலின் மூலை முடுக்குகளில் எல்லாம் உள்ள கலங்களுக்கு இவற்றைச் சுமந்து சென்று சப்ளை செய்யும் வேலையையே இரத்தம் செய்கின்றது. சப்ளை செய்துவிட்டு சும்மா வெட்டியாகத் திரும்பி வருவதுமில்லை.

கலங்கள் உபயோகித்துவிட்டு எஞ்சியிருக்கின்ற கார்பன் டைஒக்சைடையும் இதர கழிவுகளையும் மீண்டும் சுமந்து கொண்டுவந்து காபனை நுரையீரலில் விட்டு விடுகின்றது. அது மூக்கு வழியே வெளியேறுகின்றது. மற்ற கழிவுகளை சிறுநீரகங்கள் சுத்திகரிக்கின்றன. 24 மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகரிப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.

இவ்வாறு நாடி நாளங்கள் எனும் குருதிக் கலன்கள் (blood vessels) ஊடாக இரத்தம் உடல் முழுதும் சுற்றுவதே குருதிச் சுற்றோட்டம் எனப்படுகின்றது. இதயத்தை மையமாக்க்கொண்டு சுற்றிவரும் ஒரு சுழற்சியில் ரத்தம் உடல் முழுதும் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்களாம். சுபஹானல்லாஹ்! நம்மை அறியாமல், நமது கட்டலைகள் எதுவும் இன்றி உடம்புக்குள் நடக்கும் பிரம்மாண்டமானதொரு வேலைதான் குருதிச் சுற்றோட்டம்.

இரத்தம் உற்பத்தி

காயங்கள் மூலம் இரத்தம் வெளியேறுதல் மற்றும் கழிவுகளாக வெளியேறுதல் என்ற சில செயற்பாடுகளால் குறையும் இரத்தம் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யப்பட்டு அவ்வெற்றிடம் நிரப்ப்ப்படவும் வேண்டும். இந்த இரத்த உற்பத்தியை எமது எலும்பு மஜ்ஜைகள் செய்கின்றன. எலும்புகளுக்கு நடுவில் உள்ள வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை Bone Marrow இருக்கின்றது. இந்த எலும்பு மஜ்ஜைகளில்தான் சிவப்பு இரத்த அணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் குருதிச் சிறு தட்டுக்கள் உற்பத்தியாகின்றன. மாதுளை, பீட்ரூட், கீரைகள், பழங்கள், இரைச்சி ஈரல் போன்ற இரத்த உற்பத்தியை தூண்டும் உணவுகளை நாம் உட்கொள்வது இதற்குத் துணை செய்யும்.

இரத்தத்தில் உள்ள அணுக்கள்.

இரத்தம் சிவப்பு அணுக்கள் (சென்குருதிச் சிறுதட்டுக்கள்), வெள்ளை அணுக்கள் (வெண் குருதிச் சிறுதட்டுக்கள்), குருதிச் சிறுதட்டுக்கள் என்பவற்றைக்கொண்ட ஒருவகை நீர்மப்பொருளாகும். அத்தோடு ப்ளாஸ்மா என்ற திரப் பொருளும் உண்டு. இதில் திண்மப்பொருள்களின் அளவு 40% எனவும், திரவப்பொருள்கள் 60% எனவும் கண்டுள்ளனர். திண்மப்பொருள்களில் பெரும்பாலானவை சிவப்பணுக்கள்தாம். 96% ஆனவை இந்த சிவப்பு அணுக்களே. அத்தோடு வெள்ளை அணுக்கள் 3% உம் குருதிச் சிறுதட்டுக்கள் 1% உம் இரத்தத்தில் காணப்படுகின்றன.

1.சிவப்பு இரத்த அணுக்கள்.
இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே ஹீமோகுளோபின் (hb)” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் இரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. இவற்றின் பிரதான தொழில் ஒக்ஸிஜனை சுமந்து சென்று அவற்றைக் கலங்களுக்கு சேர்க்கின்றன. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் சிவப்பு இரத்த அணுக்கள் இருக்கும். இதன் கூடுதல் எண்ணிக்கையால்தான் இரத்தம் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றது. சுபஹானல்லாஹ்! ஒரு சொட்டு இரத்தத்திலே இவ்வளவு தொகை என்றால் முழு உடலிலும் எவ்வளவு இரத்த அணுக்களை அல்லாஹ் வைத்திருப்பான்.

இந்த சிவப்பு இரத்த அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள்வரைதான். இவற்றில் அடங்கியுள்ள ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்துள்ள உணவுகள் மிக அவசியம். கீரைமுட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றில் இரும்புச் சத்துகள் அதிகம். பள்ளிப் பருவ மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு இரும்புச் சத்துள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது. இரத்த சோகை போன்ற நோய்களும் வராது.

2.வெள்ளை இரத்த அணுக்கள்
இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை படைவீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போரிட்டு அழித்துவிடுவபை இந்த வெள்ளை இரத்த அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரமாக உள்ளன. கண்டவற்றையெல்லாம் வாயில் போட்டும் அரைத்து உண்ணும் வேலையை மட்டும்தான் நாம் செய்கின்றோம்.

ஆனால் அவை உடலுக்குள் சென்றதும் இந்த வெள்ளை இரத்த அணுக்கள்தான் அவற்றை ஆராய்ந்து நோய்க்கிருமிகளைக் கண்டால் உடனே அவற்றை அழித்து எமது ஆரோக்கிய வாழ்வுக்கு உதவுகின்றன. இப்படியொரு காரியம் நடப்பது உண்மையில் எமக்கு தெரியாமலும் இருக்கலாம். வல்லவன் அல்லாஹ் எம்மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக எப்படியெல்லாம் எமது உடலை வடிவமைத்துள்ளான் என்று பார்த்தீர்களா?

3.குருதிச் சிறு தட்டுக்கள்.

உடலில் எங்காவது ஒரு இடத்தில் காயம் ஏற்பட்டவுடன் இரத்தம் வெளியேற ஆரம்பிக்கும். ஆனால் அது அப்படியே தொடர்வதில்லை. சிறிது நேரத்தில் இயற்கையாகவே அது நின்று விடும். இது அல்லாஹ்வின் மற்றுமொரு நுணுக்கமான ஏற்பாடு. இரத்தத்தில் உள்ள குறுதிச் சிறு தட்டுகளின் பிரதான செயல் இரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி ஒரு வகை அடைப்பை ஏற்படுத்தி இரத்தக் கசிவை தடுத்துவிடுவதுதான். இரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியான ஃபிப்ரினோஜன் என்ற வேதிப்பொருள்தான் இரத்தத்தை உறைய வைக்கிறது. இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் இரத்தம் உறையாது. இதனைத்தான் குறுதி உறையா நோய் (ஈமோபீலியா) என்போம். இந்தக் இரத்தம் உறையும் செயற்பாட்டை நிஜமாகவே நாமாக செய்துகொள்கின்றோமா? அல்லது இறைவனின் கட்டலைப்படி இந்த குருதிச் சிறு தட்டுக்கள் இயங்குகின்றனவா? சுபஹானல்லாஹ்! அல்லாஹ்வே சகல வல்லமையும் படைத்தவன்.

இரத்தத்தின் வகைகள்

வெளிப்பார்வைக்கு அனைவரினது இரத்தமும் சிவப்பு நிறத்தில் ஒரே விதமாக இருந்தாலும் அல்லாஹ் அதிலும் வெவ்வேறு வகைகளை வைத்துள்ளான். 1900 ஆம் ஆண்டில் டாக்டர். லான்ஸ்டைனர் என்பவர்தான் இரத்தத்திலுள்ள பிரிவுகளைக் கண்டு பிடித்தார். இரத்தமானது பொதுவாக 4 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை “A” வகை இரத்தம், “B” வகை இரத்தம், “AB” வகை இரத்தம் மற்றும் “O” வகை இரத்தம் என்பனவாகும்.

இவ்வாறு இரத்தம் குரூப் வாரியாக பிரிக்கப்படுவது இரத்த சிவப்பணுக்களில் உள்ள அன்டிஜன் (Antigen) எனும் ஒருவகைப் புரதப் பொருளை வைத்துத்தான். அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிரிக்கப்படுகிறது. இரத்த சிவப்பணுக்களில் A அன்டிஜன் இருந்தால், A குரூப் என்றும் B அன்டிஜன் இருந்தால் B குரூப் என்றும் AB என்ற இரண்டு அன்டிஜன்களும் இருந்தால் AB குரூப் என்றும் எந்தவிதமான அன்டிஜனும் இல்லையென்றால் அது O குரூப் என்றும் தரம் பிரிப்பர்.
மேற்கூறிய இரத்தத்னி வகைகளுக்கு ஏற்ப உலகில் A இரத்த வகையினர் 42% உம், B வகையினர் 8% உம், AB வகையினர் 3% உம், O வகையினர் 47% உம் உள்ளனரென ஓர் கணிப்பு சுட்டுகின்றது. ‘O’ வகை இரத்தத்தை யாருக்கும் வழங்கலாம் எனவே அதனை “Universal Donor” என்போம். காரணம் ‘O’ வகை இரத்தமுள்ளவர்கள் A, B, AB, O போன்ற இரத்த வகையினருக்கும் ரத்தம் கொடுக்கலாம். அதுபோன்று AB இரத்த வகையினரை Universal Recipient என்று அழைப்பார்கள். இவ்வகை இரத்தமுள்ளவர்களுக்கு A, B, AB, O, வகை இரத்தங்களைச் செலுத்த முடியும்.

நீர்ப் பம்பியல்ல குருதிப் பம்பி

தாயின் கருவறையில் கருக்கட்டல் நடைபெற்று 21ம் நாளிலிருந்தே இதயம் எனும் குருதிப் பம்பி தொழிற்பட ஆரம்பிக்கின்றது. மனிதனுக்குத் தேவையான ஆரம்ப கட்ட இரத்த்த்தை தாயின் உடலிலிருந்து கரு உறிஞ்சி வளர்கின்றது. 21ம் நாள் முதல் அவனது உயிர் பிரியும்வரை ஓய்வே இன்றி இரத்தத்தை உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் அனுப்ப பம்பியாகச் செயற்படுகின்றது இதயம். மனித உடலில் சுமார் 4 - 5 லீட்டர் குருதி இருக்கின்றது. 72 கிலோ கிராம் எடை உள்ள ஒருவரின் உடலில் சுமார் 4.5 லீட்டர் அளவில் இரத்தம் இருக்கும். இந்த இரத்தத்தை மீண்டும் மீண்டும் இதயம் சுழற்சி முறையில் உடல் முழுதும் விணியோகிக்கின்றது. இதயத்திலிருந்து புறப்படும் இரத்தத்தின் அளவு ஒரு நாளைக்கு 8300 லீட்டர்களாகும்.

சுபஹானல்லாஹ்! எமது வீட்டு நீர்த்தாங்கியின் கொள்ளவு 1500 அல்லது 2000 லீட்டர் நீரையே நீர்ப் பம்பி பாய்ச்சுகின்றது. ஆனால் இதயம் ஒரு நாளைக்கு 8300 லீட்டரை அதுவும் வருடக்கணக்கில் பாய்ச்சுகின்றதென்றால் அல்லாஹ்வின் படைப்பாற்றல் எம்மால் புரிந்துகொள்ள முடியும். அல்லாஹ்வின் படைப்புகளைப் பற்றி ஆராய்பவர்களுக்கு அதில் நிறையப் படிப்பினைகளையும், அத்தாட்சிகளையும் அவன் வைத்திருக்கின்றான். படைப்பினங்களுடாக படைப்பாளனைக் கண்டுகொள்ளலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...