"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

25 June 2017

தேசம் கடந்து பயணிக்கும் சால்மன் மீன்கள்.

சாலமன், சால்மன் அல்லது செமன் (Salmon) என்றதும் நாம் உணவுக்காக எடுத்துக்கொள்ளும் செமன் டின் மீன் ஞாபகத்திற்கு வருகின்றதா? ஆம் அதுவே தான். பதனிடப்பட்டு அடைக்கப்பட்டு கடைகளில் விற்பணைக்கு வரும் அந்த மீனினத்தைப் பற்றித்தான் நாம் இத்தொடரில் பார்க்க இருக்கின்றோம். இவற்றின் விசித்திரமான வாழ்க்கை வட்டத்தைப் படித்துப் பார்த்தால் ஆச்சரியப் படுவீர்கள். அற்புதமான, நம்ப முடியாத பல இயல்புகளைக் கொண்டு வாழ்க்கை நடாத்தும் இம் மீன்கள் வல்ல அல்லாஹ்வின் படைப்பாற்றலை ஒரு முறை மீட்டிப் பார்க்கவைக்கின்றன.

வாழும் பிரதேசங்கள்

எல்லா இடங்களிலும் இந்தவகை மீன்கள் இருப்பதில்லை. அத்திலாந்திக் மற்றும் பசுபிக் சமுத்திரங்களிலும் அமெரிக்காவின் அலாஸ்கா கடல் பகுதிகளிலும் இவை கனிசமாக வாழ்கின்றன. அமேசன் காடுகளிலும் அவுத்திரேலியா, நியுஸிலாந்துக் காடுகளிலும் ஆசியக் கண்டத்தின் இந்தியா, சீனா, இந்துனேசியா காடுகளிலும் உள்ள நன்னீர் ஆறுகளிலும் இவை உயிர் வாழ்கின்றன. கடல் நீரில் வாழும் மீனினங்களால் நன்னீரில் வாழ முடியாது. அதே போன்று நன்னீரில் வாழும் உயிரினங்களால் கடல் உப்பு நீரில் வாழவும் முடியாது. ஆனால் அல்லாஹ்வின் இவ் அற்புதப் படைப்பான சால்மன் மீன்களால் கடல் நீரான உப்பு நீரிலும் வாழ முடியும் கரை நீரான நன்னீரிலும் வாழ முடியும்.

உடலமைப்பு

பொதுவாக எல்லா மீனினங்களையும் போன்ற உடலமைப்பைத்தான் இவையும் கொண்டுள்ளன. நன்கு வளர்ந்த ஒரு சால்மன் மீனின் நீளம் ஒன்றரை அடி வரை இருக்கும். நான்கு முதல் ஐந்து வருடங்கள் வரை இவை உயிர் வாழும். அவற்றின் உடல் சிவப்பு நிறத்திலும் தலையும் வாலும் பச்சை நிறங்களிலும் இருக்கும். ஆண் மீனின் முகம் நீண்டும் அவற்றின் வாய்கள் முன்னோக்கி நீண்டு வளைந்தும் வாயில் கூறிய பற்களும் இருக்கும். நன்னீரிலும் உப்பு நீரிலும் வாழத்தக்க அமைப்பில் அவற்றின் உடல் உற்பாகங்கள் வடிவமைக்கப்பட்டும் இருக்கும்.

தேசாந்திரப் பயணம்.

சால்மன் மீன்களின் விஷேட அம்சமே இதுதான். மூன்று வருடங்கள் கடலிலே உயிர்வாழ்ந்து நன்றாக வளர்ந்து இனப்பெருக்கப் பருவத்தை அடையும் சால்மன் மீன்கள் அடுத்து இன்னும் ஒரு வருடத்திற்குள் தமது வாழ்க்கை முடிவுறப் போகிறது என்பதை அறிந்துகொள்ளும். எனவே தாம் இறந்துவிட முன்பு அடுத்த சந்ததிகளை உருவாக்கிவிட்டுச் செல்லவேண்டும் என்பதற்காக அற்புதமானதொரு பணியை இவை செய்கின்றன. அதுதான் அவை பயணிக்கும் தேசாந்திரப் பயணம்.

இணப்பெருக்க காலம் வந்ததும் பல ஆயிரக்கணக்கான சால்மன் மீன்கள் அவை பிறந்த இடத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கின்றன. எனவே அவை ஆறும் கடலும் ஒன்று சேரும் முகத்துவாரங்களை நோக்கிப் படையெடுக்கின்றன. உப்பு நீரில் வாழ்ந்து பழகிய இவற்றால் உடனடியாக நன்னீரில் வாழ முடியாது.

அவை இறந்து விடும். எனவே உப்பு நீரும் நன்னீரும் சங்கமமாகும் முகத்துவராத்தில் இருந்துகொண்டு நன்னீர் வாழ்க்கைக்காத் தமது உடலைத் தயார் படுத்திக்கொள்கின்றன. அப்படி சில வாரங்கள் இந்தப் பயிற்சி தொடரும். அதன் பின்பு ஒவ்வொரு மீனாக நீரின் திசைக்கு எதிர்த்திசையில் நீந்தி கடலிலிருந்து ஆற்றை நோக்கிப் படையெடுத்துப் பயணிக்கும்.

ஏன் இவை அடுத்த சந்த்தியைப் பெருக்குவதற்காக கடலைத் தெரிவுசெய்யாமல் நன்னீர் ஆறுகளைத் தெரிவுசெய்கின்றன என்றால் கடலின் உப்புச் செரிவுமிக்க நீரில் முட்டைகளை இட்டால் அவை அழிந்துவிடுவதாலும் பிறக்கும் சிறிய குஞ்சுகளால் செரிவுமிக்க கடல் நீரில் வாழ முடியாது என்பதாலும்தான். எனவே அவை நன்னீரை நோக்கிப் பயணிக்கின்றன. இன்னும் பல ஆயிரம் உயிரினங்களுக்கு உணவாகும் விதத்திலும் அல்லாஹ் இந்த ஏற்பாட்டைச் செய்திருப்பானாக இருக்கும்.

பயணத்தில் எதிர்கொள்ளும் சவால்கள்

அவற்றின் முதல் சவால் ஆறுகளிலிருந்து கடலை நோக்கித் தீவிரமாகப் பாய்ந்து வரும் நீர்தான். எம்மால் கூட வேகமாகப் பாயும் அந்த ஆற்று நீரை எதிர்த்து நீந்துவது மிகவும் கடிணம். அப்படியிருக்க அளவில் சிறிய இந்த மீன்கள் அந்த நீரின் தீவிரத்தைக் கூட எதிர்த்து நீந்தி முன்னேறும் உடற் பலத்தைப் பெற்றிருக்கின்றன.

இவற்றின் இரண்டாவது எதிரி செல்லும் பாதையில் குறுக்கிடும் நீர் வீழ்ச்சிகள். எதிர்த்திசையில் பிய்ச்சி அடிக்கும் நீரையும் எதிர்த்து சுமார் 20, 30 அடிகள் உயரமான நீர் வீழ்ச்சிகளையும் தாவிக் குதித்து நீந்தி மேலே ஏறிவிடுகின்றன.

சால்மன் மீன்களின் மூன்றாவது மிகப் பெரும் எதிரி மனிதன்தான். ஒவ்வொரு வருடமும் நடக்கும் இடப்பெயர்வின் பருவ காலத்தை அறிந்துவைத்திருக்கும் மீனவர்கள் இலட்சக் கணக்கில் படையெடுக்கும் இம் மீன்களை சமுத்திரத்தில் வைத்தும் முகத்துவாரங்களில் வைத்தும் வலைவிரித்தும் பாரிய மீன் பிடி இயந்திரங்களைப் பயன்படுத்தியும் பிடித்துவிடுகின்றனர். அவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்கள்தான் டின்களில் அடைக்கப்பட்டு எமக்கு உணவுக்காவும் வருகின்றன.

இவற்றின் நான்காவது எதிரி கரடிகள். பனிக்காலம் முடிந்து ஆறு மாதங்களாக குகைக்குள் அடைந்து உறங்கிக் கிடந்த கரடிகள் பசியெடுத்து சால்மன் மீன்களின் இடப்பெயர்ச்சிக் காலத்தில்தான் வெளியேற ஆரம்பிக்கின்றன. ஆறு மாதகாலம் பசியுடன் இருந்துவிட்டு தீர்ந்துபோன கொழுப்புச் சத்தைச் சேகரிக்க நீர்வீழ்ச்சிகளில் சாலமன் மீன்களின் வருகையை எதிர்பார்த்து கூட்டமாக காத்திருக்கும் காரடிகள். நீர் வீழ்ச்சிக்கு எதிரே தாவித் தாவி இம் மீன்கள் மேலே ஏறும்போது கரடிகள் லபக் லபக் எனப் அவற்றைப் பிடித்து உண்டு ஏப்பம் விடும்.

இவை மட்டுமன்றி ஆங்காங்கே நரிகளும் ஓநாய்களும் கூட்டமாக வேட்டைக்குத் தயாராயிருக்கும். நன்னீர் ஏரிகளில் வாழும் அனகொண்டா வகை மலைப் பாம்புகளிடமிருந்தும் முதலைகளிடமிருந்தும் அவை தப்பிக்கவேண்டும். மேலும் பருந்து, கழுகு போன்ற இதர பறவைகளிடமிருந்தும் இவை தப்ப வேண்டும். இவ்வாறு பல்வேறு சவால்களையும் தாண்டித்தான் இந்த சால்மன் மீன்கள் தமது தேசாந்திரப் பயணத்தை வெற்றிகரமாக சென்று முடிக்கின்றன. இந்தக் கடினமான பயணத்தில் பல ஆயிரம் மீன்கள் இறந்துபோயிருக்கும். இந்தச் சவால்களையெல்லாம் கண்டு அவை தயங்குவதில்லை. வாழ்வு அல்லது சாவு என்ற திடமான நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்வது எமது வாழ்க்கைக்கும் மிகப்பெரும் பாடமாகும். இவ்வாறு சுமார் 7000 கி.மீ.களைக் கடந்து இவை பயணிக்கின்றன.

தற்காப்புத் திட்டங்கள்

இத்தகைய ஆபத்துக்களிலிருந்து தப்பிச் செல்வதற்கான யுக்திகளையும் அல்லாஹ் அவற்றுக்கு வழங்கியுள்ளான். ஒன்று சால்மன் மீன்களால் துரு துருவென அதி வேகமாக நீந்திச் செல்லமுடியும். மற்றையது அவை பயணிக்கும் நன்னீர் பாதையில் முழைத்திருக்கும் சிவப்புப் பச்சைப் பாசிகளின் நிறத்தில் சாலமன் மீன்களின் உடல் நிறமும் இருப்பதால் பறவைகளால் இவற்றைக் கண்டுபிடித்து வேட்டையாடுவது சிரமமாக இருக்கும்.

சாலமன் மீன்கள் புத்திக் கூர்மை மிக்கவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவை தமது புத்திக் கூர்மையைப் பயன்படுத்தி தப்பிக்கவும் முயல்கின்றன. நீந்திச் செல்லுப்போது நீரில் ஏற்படும் அழுத்த மாற்றங்களைக் கணித்து திசையை மாற்றிக்கொள்கின்றன. கடலில் மீன் வலைத் தடுப்பு இருப்பதை உணர்ந்துகொண்டால் அவை ஒட்டு மொத்தமாக தகல்களைப் பரிமாறகிகொண்டு கடலுக்குள் பின்வாங்கி விடுகின்றன. அவ்வை இல்லாத பகுதிகளைப் பார்து தப்பித்து முன்னேறிவிடுகின்றன.

அதேபோன்று நீர் அருவிகளைக் கடந்துசெல்லும்போது அங்கே வேட்டைக்குக் காத்திருக்கும் கரடிகள், நரிகள், ஓநாய்கள் என்பற்றின் பிடியிலிருந்தும் மறைந்து தப்பித்துச் செல்லும் தொடர்பாடல் வழிமுறைகள் அவற்றிடம் உண்டு. நீரின் மேல் விழும் நிழல்கள் குறித்தும் அவை மிகக் கவனமாக இருக்கின்றன. இராஜாலிப் பருந்துகள் பறந்து வந்து மீன்களைத் தாக்குவதை இவை அவற்றின் நிழல்களை வைத்தே ஊகித்து திசையை மாற்றி மறைந்துவிடுகின்றன. தமது சிரம சாத்தியமான பயணத்தைத் தொடரும்போது ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து தப்பித்துக்கொள்ள இவ்வாறான பல்வேறு தற்காப்புத் திட்டங்களை அவை கொண்டுள்ளன.

தாய் மண்ணை வந்தடைதல்

இவ்வாறு பல தடைகளையும் தாண்டி இறுதியாக தாம் பிறந்த தாய் மண்ணை மீண்டும் இவை வந்தடைகின்றன. சமுத்திரத்தில் இருந்து இவ்வளதூரம் அவை பயணித்தது தாம் பிறந்த தமது பெற்றோர் தம்மை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்துவிட்டு இறந்த அந்த இடத்தை நோக்கித்தான். தாம் பிறந்த இடம் இதுதான் என்பதை சுமார் நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும் அவை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு மீண்டும் அதே இடத்தை வந்தடைவது ஆராய்ச்சியாளர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இணப்பெருக்கம்

குறித்த இடத்தை வந்தடைந்தபின்னர்தான் ஆண், பெண் சால்மன் மீன்கள் இணப்பெருக்கத்தில் இணைகின்றன. வாழ் நாளில் ஒரு முறைதான் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. இணைந்த சில நாட்களில் பெண் சால்மன் மீன் ஆற்றில் நீரோட்ட வேகம் குறைவான பாதுகாப்பான இடங்களில் தனது வாலினால் பள்ளங்களைத் தோண்டும். தோண்டி அங்கே முட்டைகளை இடும். ஒரு தடவையில் ஒரு பெண் மீன் 3000 முதல் 4000 வரையில் முட்டைகளை இடும். ஒரு சால்மன் மீன் இவ்வளவு தொகையான முட்டைகளை இடும் என்றால் அங்கே குழுமியிருக்கும் ஆயிரக் கணக்கான மீன்களும் எத்தனை முட்டைகளை இடும் என்று எண்ணிப் பாருங்கள். சுப்ஹானல்லாஹ்.

முட்டைகளை இட்டு ஓரிரு மாதங்களில் பெண் மீன்கள் எல்லாம் இறந்துபோகும். அம் முட்டைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆண் மீன்களைச் சாரும். அடுத்த இரண்டு மாதங்களில் ஆண் மீன்களும் கொத்துக் கொத்தாக இறந்துவிடும். கடல் போன்று சரியான உணவு கிடைகாததும் நீரில் உள்ள குறைபாடுகளும் பல மைல்கள் தொடர்ந்து பயணித்து வந்த கலைப்பு அனைத்தும் சேர்ந்து இவற்றை ஆட்கொள்ள இவை பலவீனப்பட்டு ஆற்று ஓரங்களில் உள்ள மர வேர்களுக்குள் தஞ்சம் புகு கின்றன. இறுதியில் பிறந்த மண்ணிலேயே அவை இறந்து விடுகின்றன.

முட்டையிட்டு சரியாக நான்கு மாதங்களில் குஞ்சு சால்மன் மீன்கள் முட்டைகளைவிட்டு வெளியே கிளம்பும். இலட்சக் கணக்கில் வெளிக்கிளம்பும். இக்குட்டி மீன்களுக்கு சுமோல்ட் என்று பெயர். உடல் பலம் பெரும் வரையில் அங்கேயே சில வாரங்கள் காத்துக்கிடந்துவிட்டு தமது பெற்றோர் எவ்வளியில் இங்கே வந்து சேர்ந்தார்களோ அதே வழியில் மீண்டும் இந்தக் குஞ்சுகள் அநாதையாக கடலை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கின்றன. இவை அளவில் மிகச் சிறியவையாக இருப்பதனால் பெரிய மீன்கள் வரும்போது இருந்த மிகப் பெரும் சவால்கள் இவற்றுக்கு இருப்பதில்லை. நீரின் திசையிலேயே இவை செல்ல வேண்டி இருப்பதனால் மிக இலகுவாக கடலைச் சென்றடைய முடியும். கடலை நோக்கிச் செல்லும் பயணத்தை சுமோல்டிபிகேஷன் (Smoltification) என்பார்கள்.

முகத்துவாரங்களில்

குதித்தோடும் நீர்வீழ்ச்சிகளிலும் பாய்ந்தோடும் பள்ளத்தாக்குகளிலும் பல ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்து இறுதியாக நன்னீர் கடலில் வந்துகொட்டும் முகத்துவரங்களை இவை வந்தடைகின்றன. வந்தவுடன் கடலுக்குள் பிரவேசித்தால் இக் குஞ்சு மீன்கள் உடனடியாக உயிரிழக்கவேண்டி ஏற்படும் என்பதனை இவற்றுக்கு அல்லாஹ் முன்கூட்டியே கற்றுக்கொடுத்திருப்பதனால் இவை உப்பு நீரில் வாழத்தக்கவாறு தமது உடலைத் தயார் படுத்திக்கொள்ள சில நாட்கள் முகத்துவாரங்களில் இருந்து பயிற்சி எடுக்கும். பயிற்சியை முடித்துக்கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக சமுத்திரத்திற்குள் பிரவேசித்துவிடும்.

மீண்டும் வழமைபோல் அவற்றின் சமுத்திர வாழ்க்கை ஆரம்பமாகும். அங்கேயே உண்டு அங்கேயே வளர்ந்து மூன்று வருடங்களை ஓட்டிவிட்டு இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை அடைந்ததும் மீண்டும் இவை தமது பெற்றோர் பயணம் செய்ததுபோன்று, தாம் சிறு பருவத்தில் எந்த வழியில் கடலை வந்தடைந்தனவோ அதே வழியில் மீண்டும் தமது பிறப்பிடம் நோக்கிச் செல்ல ஆயத்தமாகும். இவ்வாறு ஒவ்வொருவருடமும் இந்த சால்மன் மீன்களின் தேசாந்திரப் பயணம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

படிப்பினைகள்

இம்மீன்களின் வாழ்க்கை மூலம் சவால்களை எதிர்க்கொள்ளும் திறன், தப்பிச் செல்லும் தந்திரம், தன்நம்பிக்கை, விடா முயற்சி, தியாகம் போன்ற பல படிப்பினைகளை அல்லாஹ் எமக்குக் கற்றுத்தருகின்றான். அவை மட்டுமன்றி இலட்சக் கணக்கான இம் மீன்களின் பயணத்தால் பல ஆயிரம் ஜீவராசிகள் உணவைப் பெறுகின்றன. எனவே பல உயிர்கள் உயிர்வாழ உணவும் கிடைக்கின்றது சால்மன் மீன்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. அல்லாஹ்வின் இத்தகையதொரு துல்லியமான திட்டமிடலையும் இவற்றின் வாழ்க்கை வட்டத்திலிருந்து அறிந்துகொள்ளலாம். அல்ஹம்துலில்லாஹ்!

அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A
Special in Al-Quran & Science Researches
Dip. In psychological Counseling
www.aliaalif.tk / aalifali@gmail.com

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...