"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

17 January 2016

பால் தரும் பசுக்கள்

நிச்சயமாக உங்களுக்கு கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். (16:66)

அல்லாஹ்வின் படைப்புகள் அனைத்திலும் மனிதனுக்கு ஏராளமான படிப்பினைகள் காணப்படுகின்றன. அப்படைப்புகளிலிருந்து கால்நடைகளைக் குறிப்பாக்கி அவற்றிலும் படிப்பினைகள், அத்தாட்சிகள் உள்ளன என்பதைத்தான் மேலே உள்ள திருமறை வசனம் குறிப்பிடுகின்றது. இங்கு கால்நடைகள் எனும்போது அதில் குறிப்பாக ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகள் உள்ளடங்குகின்றன. இத்தொடரில் பசு மாட்டில் இறைவன் வைத்திருக்கும் அற்புதங்களையும் அதிலிருந்து நாம் எடுத்துக்கொள்கின்ற படிப்பினைகளையும் பயன்களையும் பார்ப்போம்.

இனப் பல்வகைமை
பாலூட்டி இனத்தைச்சேர்ந்த மாடு பொதுவாக ஆங்கிலத்தில் Cow என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று பெரும் பிரிவுகள் காணப்படுகின்றன. அவற்றில் முதல் வகையானது போஸ் டெரஸ் (Bos taurus) என்பதாகும், இது ஒருவகை ஐரோப்பிய இன மாடாகும். ஆபிரிக்க மற்றும் ஆசிய மாடுகளை ஒத்திருக்கும். இரண்டாவது வகை மாடானது போஸ் இண்டிகஸ் (Bos Indicus) வகையைச் சார்ந்ததாகும். இவ்வகை ஆங்கிளத்தில் zebu என்றும் அழைக்கப்படுகின்றன.

மூன்றாவது வகை மாடானது ஒரொய்ச் (aurochs) என்பதாகும் இவ்வகை மாடுகள் உலகில் இருந்து அழிந்துவிட்ட ஒரு இனமாகவும் மேலே குறிப்பிட போஸ் டாரஸ் மற்றும் போஸ் இண்டிகஸ் இனங்களின் மூதாதைய இனமாகவும் கருதப்படுகின்றன. 2009ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலகில் மொத்தமாக 1.3 பில்லியன் இற்கும் அதிகமான மாடுகள் இருந்துள்ளன. இன்றளவில் அதன் எண்ணிக்கை இன்னும் அதிகரித்துள்ளது.

அல்குர்ஆனில் மாடு
இஸ்லாத்தைப் பொறுத்தவரை மாட்டை அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்க்கின்றது. அரபு மொழியில் மாட்டை பகரா (بقرة) என்று அழைப்பர். அல்குர்ஆனில் பகரா என்று ஒரு அத்தியாயமே காணப்படுகின்றது. அதுதான் அல்குர்ஆனின் சூறாக்களின் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பகரா என்ற பிரயோகம் மொத்தமாக 4 இடங்களில் அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில் கூறிய அல்குர்ஆனிய வசனம் மாட்டிலும் பல அத்தாட்சிகள் உட்பட பயன்கள் இருப்பதாக்க் கூறுகின்றது.மாடுகளில் உள்ள படிப்பினைகள்
ஆரம்பத்தில் கூறிய அல்குர்ஆன் வசனத்தின் (16:66) முதல் பகுதியில் கால்நடைகளிடம் படிப்பினைகள் உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். அந்தப் படிப்பினைகளைப் பற்றி அறிய ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தோடு கீழே உள்ள பந்திகளைப் படியுங்கள். ஆராய்ச்சிக்காக மேற்கூறிய வசனத்திலிருந்து முக்கிய ஐந்து விடயங்களை எடுத்துக்கொள்வோம்.
1) அவற்றின் வயிற்றுப்பகுதி
2) வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில் உள்ள அம்ஷம்
3) கலப்பற்ற பால்
4) அருந்துபவர்களுக்கு இனிமை
5) தாராளமாக புகட்டுகிறோம். இவற்றை சற்று விரிவாக ஆராய்வோம்.

1. வயிற்றுப் பகுதி
பொதுவாக எமது வயிற்றுப் பகதியில் உள்ள சமிபாட்டுத் தொகுதியில்தான் உணவுகள் செரிமானமடைந்து பின்பு அந்த செரிமானமாகிய உணவு புரதச்சத்தாக மாறி இரத்தத்தில் கலந்து நமக்கு உடல் முழுதும் கடத்தப்பட்டு உடலுக்கு வலிமையைத் தருகிறது. ஆனால் இந்த வயிற்றுப்பகுதி ஒருசில கால்நடைகளுக்கு அதாவது மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகியவற்றிற்கு வித்தியாசமான முறையில் தனித்துவதமாக அமைந்துள்ளது. ஆனால் இந்த அமைப்பு பன்றி முதலான மற்ற மிருகங்களிடம் இருப்பதில்லை. மாட்டின் வயிறுப்பகுதி நான்கு தனித்தனி அறைகளாக அமைந்துள்ளது. அவைகளாவன… RETICULUM (ரெடிகுழம்), RUMEN, (ரூமென்), OMASUM, (ஓமசம்), ABOMASUM (அபோமசம்) என்பனவாகும்.

பசுமாட்டின் உணவுச் சமிபாட்டு முறை.

மாடு புல்வகைகளை தனது நீண்ட நாவினால் இழுத்துச் சுழற்றி உமிழ் நீருடன் கலந்து தனது வாயில் கீழ் பகுதியில் மட்டுமே அமைந்துள்ள அரைக்கும் பற்களால் நன்கு அரைத்து மென்று உணவாக விழுங்குகிறது. விழுங்கிய உணவு நேரடியாக ரெடிகுழம் பகுதிக்கு சென்று சேமிக்கப்படுகிறது. பின்னர் ஓரிடத்தில் வந்து இளைப்பாரும் மாடு தான் வயிற்றின் ரெடிகுழம் பகுதியில் சேமித்து வைத்த உணவை மீண்டும் வாய்ப் பகுதிக்கு இழுத்து அசை போட ஆரம்பிக்கிறது. இதன் மூலம் முதல் முறையாக உட்கொண்ட உணவு மீண்டும் மாட்டின் வாய் பகுதிக்கு இழுக்கப்பட்டு நன்றாக மீண்டும் ஒருமுறை அரைக்கப்படுகிறது.

பசுமாடு மறுசுழற்சி முறையில் அசைபோட்ட உணவை அதன் வயிற்றின் இரண்டாம் பகுதியான RUMEN (ரூமென்) என்ற அறைக்குள் தள்ளுகிறது. இங்குள்ள பல மில்லியன் கணக்கான மைக்ரோப்ஸ் - "நுண்ணங்கிகள்"  எனப்படும் அமைப்புகள் ஏழவே செரிமானம் செய்ய முடியாத கடினமான பகுதிகளையும்கூட மிக எளிதாக செரிமானம் செய்துவிடுகிறது. பிறகு செரிமானம் ஆன உணவு மூன்றாம் அறையான  OMASUM, (ஓமசம்) ஐ சென்றடைகிறது. பசுமாட்டின் வயிற்றிலுள்ள இறுதிப் பகுதியான அபோமசம் என்பது மற்ற பிராணிகளின் வயிறுகளை ஒத்து அமைந்துள்ளது. இந்த அபோமசம் பகுதியில் சேகரிக்கப்பட்ட அசைபோட்ட உணவுகள் சிறுகுடல் பகுதிக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள மைக்ரோபியல் - நுண்ணங்கி கலங்கள் எனப்படும் செல் கட்டமைப்புகளால் முழுவதுமாக ஜீரணமாக்கப்படுகிறது. புரதச் சத்துக்களான அமினோ ஆசிட் மற்றும் விட்டமின்கள் உருவாக இந்த பகுதியே பயன்படுகிறது. பிறகு முழுவதும் ஜீரணமான உணவு நேரடியாக இரத்தில் கலந்துவிடுகிறது!

2. வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில் உள்ள அம்ஷம்.
உணவுகளில் தலைசிறந்த உணவாகக் கருதப்படும் பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது மிகப் பிற்பட்ட காலத்தில்தான் கண்டு பிடிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னர் வரை இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று நம்பி வந்தனர். ஆனால் உண்மையில் இரத்தம் பாலாக மாறுவதில்லை. மாறாக உண்ணுகின்ற உணவுகள் சிறு குடலுக்குச்சென்று அரைக்கப்பட்டுக் கூழாக இருக்கும் நிலையில் அங்குள்ள உறிஞ்சுகள் மூலமாக அதிலிருந்து உறிஞ்சப்படும் சத்துகள் தான் இரத்தமாகவும், இன்னபிற பொருட்களாகவும் மாற்றப்படுகின்றன. இவ்வாறு உறிஞ்சப்படும் பொருட்களை இரத்தம் இழுத்துச் சென்று பாலை உற்பத்தியாக்கும் மடுக்களில் சேர்க்கிறது. அங்கே அவை பாலாக உருமாகின்றன.

அதாவது அரைக்கப்பட்ட உணவுக் கூழுக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்து தான் பால் உற்பத்தியாகிறது என்ற 21ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை 1400 ஆண்டுகளுக்கு முன்பு அதே வார்த்தைகளில் நேரடியாகவே திருக்குர்ஆன் கூறியிருப்பது ஆய்வாளர்களைப் பெரிதும் வியப்புக்குள் ஆழ்த்தியுள்ளது. இந்த வசனத்தைப் பாருங்கள்!
"அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக தாராளமாகப் புகட்டுகிறோம்."

சாணத்துக்கும் குருதிக்கும் இடையிலிருந்து பால் வெளிவந்த போதிலும் சற்றும் கூட அதில் சாணம், உதிரம் ஆகியவற்றின் நிறமோ, மணமோ, சுவையோ இருப்பதில்லை. இது வல்ல நாயனின் அற்புதமான ஏற்பாடன்றி வேறென்ன?

3. கலப்பற்ற பால்
பால் சகல சத்துக்களும் அடங்கிய ஒரு பூரண உணவு, சர்வரோக நிவாரணி. நோய் எதிர்ப்பு சக்தியுடன் எண்ணிறைந்த சத்துக்கள், ஒளடதங்கள் அதில் தாராளமாகப் பொதிந்துள்ளன. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற ஒரு ஊட்டச்சத்து மிகுந்த திரவ உணவுதான் பசும் பால். ஒரு மனிதனுக்கு ஊட்டச்சத்துக்களில் புரோட்டீன், கால்சியம் ஆகியவை இன்றியமையானவையாக உள்ளன. இவைகள் பசும் பாலில் அதிகமாக காணப்படுகின்றது. கால்சியம் எலும்பு நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. பசும்பாலில் விட்டமின் ஏ, பி12, தையாமின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. பசும்பாலில் தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய் போன்றவைகளில் கால்சியம் உள்ளதால் இது மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்தியை (IMMUNE SYSTEM) மேம்படுத்துகிறது.

அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கலப்பற்ற பால் என்று கூறுவதன் மூலம் அந்த பாலில் எப்படிப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன என்பதை சிந்திக்க வலியுறுத்துகிறான் ஆனால் மனிதன் அந்த பாலில் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்து விற்கிறான். இஸ்லாம் கலப்படத்தை வன்மையாக கண்டிக்கிறது!

4. இனிமையான பால்
சுவனத்தை வர்னிக்கும் ஹதீஸ்களிலும் சில அல்குர்ஆனிய வசனங்களிலும் அல்லாஹ் பாலையும் சேர்த்துக் கூறியுள்ளான். சுவனத்தில் ஓடும் நான்கு ஆறுகளில் ஒன்றுதான் பாலாறு. சுவனத்து பாணங்களில் ஒன்றாக பால் இருப்பதுபோன்று இங்கும் பசும் பால் அனைவருக்கும் ஒரு இனிமையான பாணம்தான். தெவிட்டாத உணவுப் பண்டம். அதன் வெண்மை நிறமும், இனிமையான சுவையும் யாரையும் கர்ந்துவிடும். பால் பற்றிக் கூறும் மேற்சொன்ன வசனத்தில் அல்லாஹ் அதை அருந்துபவருக்கு இனிமை என்று வர்ணிக்கிறான்.

 5. தாராளமாக புகட்டுகிறோம்
அல்லாஹ் பால் பற்றி குறிப்பிடும் போது இறுதியாக தாராளமாக புகட்டுகிறோம் என்று கூறுகிறான். அதாவது நாளுக்கு நாள் சனத்தொகை அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றது. அதிகரிக்க அதிகரிக்க பால் உற்பத்தியும் அதிரித்துக்கொண்டேதான் வந்துள்ளது. மாடுகளை இறைச்சிக்காக அறுக்கும் வீதம் அதிகரித்தாலும் சனத்தொகை பெருகினாலும் அதற்கு நிகராக பால் உற்பத்தியும் பெருகிய வண்ணம் உள்ளமை இந்த அல்குர்ஆனிய வசனத்தின் யதார்த்தத்தை விளக்குகின்றது. இந்த வார்த்தையின் உண்மை நிலையை அறிய நிருபிக்க உலகளாவிய ரீதியில் அதிகரித்துவரும் பால் உற்பத்தியைப் பார்ப்போம்.

1968 ம் ஆண்டு 21 மில்லியன் டன்களாக இருந்த இந்தியாவின் பால் உற்பத்தி 2001 ம் ஆண்டில் 81 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை பெருக பெருக பாலின் உற்பத்தியும் பெருகி வருகிறது மாறாக பாலின் உற்பத்தி குறைந்தபாடில்லை. அடுத்தபடியாக அமெரிக்கா ஆண்டுக்கு சராசரியாக 71 மில்லியன் டன்கள் பால் உற்பத்தியை மேற்கொள்கிறது. 1998ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலக நாடுகள் முழுவதினதும் பால் உற்பத்தியைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஆண்டுக்கு சராசரியாக 557 மில்லியன் டன்கள் குறைவில்லாமல் பால் உற்பத்தியாகியுள்ளது. உலகம் முழுதும் 6௦௦ கோடி பேர் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உட்கொள்கின்றனர். சுமார் 1.5 கோடி மக்கள் பால்பண்ணையை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். கடந்த முப்பது ஆண்டுகளில் பால் உற்பத்தி 5௦ விழுக்காடுகள் அதிகரித்துள்ளது. 211 FAO வின் மதிப்பீடின்படி உலகம் முழுவதும் உற்பத்தியாகும் பாலில் 85 சதவீதம் பசுமாடுகளிடமிருந்தே பெறப்படுகிறது. உலகளவில் அமெரிக்கா பால் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இந்தியா, சீனா, பிரேசில், மற்றும் ரஷ்யா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 197௦ஆம் ஆண்டு முதல் தெற்கு ஆசியா பால் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது. சுபஹானல்லாஹ்! இறைவன் எவ்வாறு பாலைத் தாராளமாகப் புகட்டுகின்றான் என்று பார்த்தீர்களா?

படிப்பினை பெறுவோம்

ஒரேயொரு திருமறை வசனத்தில் எத்தனை படிப்பினைகளை அல்லாஹ் சொல்லித்தருகின்றான். அல்லாஹ்வின் எண்ணிலடங்காத படைப்பினங்களில் பசு என்ற ஒன்றிலே இத்துனை அற்புதங்களும் படிப்பினைகளும் என்றால் அவனுடைய படைப்புகள் ஒவ்வொன்றையும் ஆராயும்போது அவனுக்கும் ன் அல்லாஹ்வுக்கும் இடையில் மிக இருக்கமான ஒரு உறவு ஏற்படும். அதன் உச்சகட்டம் தான் அல்லாஹ்வை அஞ்சுதல். ”நிச்சயமாக அல்லாஹ்வை மிக்க அஞ்சுபவர்கள் அறிஞ்சர்கள்தான்” (35:28)

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

2 comments:

Anonymous said...

நன்றாக உள்ளது. தாராளமாக புகட்டுகிறோம்-விளக்கம் அருமை!சாணத்துக்கும் குருதிக்கும் இடையில் இருந்து பால் உருவான்ற போதும் அது முற்றிலும் தூய்மையாக,கலப்பற்றதாக இருப்பது அல்லாஹ்வின் அத்தாட்சியே!
கட்டுரையில்" மைக்ரோப்ஸ் எனப்படும் அமைப்புகள், மைக்ரோபியல் எனப்படும் செல் கட்டமைப்புகள் " எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக -"நுண்ணங்கிகள் ,நுண்ணங்கி கலங்கள்" எனக் குறிப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.அடைப்பினுள் ஆங்கில பதத்தை பயன்படுத்தி இருக்கலாம்

Anonymous said...

Ma sha Allah sir,
your articals are very useful.
Those r help us to increase our eemaan..
Alhamdhulillah!!!

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...