"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

13 December 2017

உயிர்தரும் மரங்கள்

பூமியின் பிரதானமான இயற்கை வளங்கள் நான்கு. நீர், காற்று, மண், மரம் என்பனவே அவை. மற்ற கோல்கள் காய்ந்து வரண்ட நிலையில் காட்சியளிக்க பூமி மட்டும் குளிர்ச்சியாக நீல நிரத்திலும் பசுமையாகப் பச்சை நிறத்திலும் காட்சியளிப்பதற்கு மிகப்பிரதானமான காணரம் இவ் இயற்கை வளங்கள்தான். இவற்றில் மரங்கள் முக்கியமானவை. இவை உயிரின வாழ்கைக்கு பெரிதும் பங்காற்றி வருகின்றன. மனிதனின் முதல் நண்பன் மரம். அம்மரங்கள் பற்றி இத்தொடரில் அலசுவோம்.

மரம் இன்றி வாழ்வில்லை.

ஒரு நாளைக்கு மனிதன் 3 சிலிண்டர் அளவு ஒட்சிசனை சுவாசிக்கின்றான். ஒரு சிலிண்டரின் விலை 1000 ரூபா. அப்படியாயின் ஒரு நாளைக்கு 3000 ரூபாவை சுவாசிப்பதற்கு மாத்திரம் மனிதன் ஒதுக்கவேண்டும். ஒரு வருடத்திற்கு 1095000 ரூபாய்கள் சுவாசிப்பதற்காக செலவுசெய்தாகவேண்டும். சாதாரணமாக நாம் 60 வருடங்கள் வாழ்வோமென்றால் வாழ் நாளில் மொத்தமாக 65,700,000 ரூபாக்களை ஒட்சிசன் சிலிண்டர்களுக்காக மட்டும் செலவு செய்யவேண்டும். சுப்ஹானல்லாஹ். இத்தகைய எந்த செலவீனமும் இன்றி மரங்கள் நமக்கு இலவசமாக ஒட்சிசனைத் தருகின்றன. ஒரு மரம் ஒரு நாளைக்கு நான்கு பேருக்குத் தேவையான ஒட்சிசனை வெளியிடுகின்றது. அப்படியென்றால் மரம் செய்யும் இலவச சேவையின் வெகுமதி புரிகிறதா? பூமியில் மனிதன் இன்றி மரங்களால் வாழ முடியும். ஆனால் மரங்கள் இன்றி மனிதனால் வாழ முடியாது. காரணம் நாம் வெளியிடும் காபனீரொட்சைட்டை உள்ளீர்த்து சுத்தம் செய்து ஒட்சிசனாக அவற்றை மாற்றி வெளியிட்டு எமது சுவாசத்துக்குப் பங்காற்றுவது இம்மரங்கள்தான்.  இது ஒரு அற்புதமான பரிமாற்றச் செயற்பாடுதான்.

உலகில் மரங்கள்.

இப் பூமிப் பந்தில் முதன் முதலில் உருவாகிய உயிர் மரம் என விஞ்ஞானம் கூறுகின்றது. தாவரங்களின் உருவாக்கத்தின் பின்புதான் விலங்கினங்கள், பறவையினங்களையெல்லாம் அல்லாஹ் இப் புவியில் சிறுஷ்டித்திருப்பான். ஏனெனில் உயிர் வாழ்வதற்கு மரங்களின் தேவை மிக அவசியமாகும். ஆதம், ஹவ்வா (அலை) அவர்களைப் படைப்பதற்கு முன்பே மரங்கள் இருந்துள்ளனவே. அதனால்தானே அவ் இருவரையும் குறிப்பிட்ட மரத்தை நெருங்க வேண்டாம் என்றும் கணியைப் புஷிக்க வேண்டாமென்றும் அல்லாஹ் கட்டளையிட்டிருந்தான்.

மரம், செடி, கொடி, புற்கள், பூண்டுகள், பாசிகள் அனைத்தும் தாவரம் எனும் பெரும் உயிரினப் பிரிவாகும். உலகில் 350,000 இற்கும் அதிகமான தாவர வகைகள் இருப்பதாக தாவரவியற்துறை விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். இவற்றுள் 287,655 இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட தாவரங்களுள் ஏறத்தாழ 258,650 பூக்கும் தாவர வகைகள். 29% ஆன நிலப்பரப்பில் 7% காடுகளால் சூழப்பட்டுள்ளது. குளிர்ப் பிரதேசங்கள், பாலைவன நிலங்கள், நீர் பகுதிகள் என எல்லா இடங்களிலும் அச் சூழலுக்கு இசைவடைந்த தாவரங்கள் உயிர் வாழ்கின்றன.

உயிருள்ள மரங்கள்.

“Everything that can grow has life - வளரக்கூடிய ஒவ்வொன்றுக்கும் உயிர் உண்டுஎன விஞ்ஞானம் கூறுகின்றது. எனவே மரம் வளர்கின்றது, தனது சந்ததியைப் பெருக்குகின்றது. எனவே அவற்றுக்கு உயிர் உள்ளது என உறுதியாகக் கூறலாம். தாவரங்களுக்கு உயிர் இருப்பதால்தான் அது ஒட்சிசன், சூரிய ஒளி, நீர், பச்சையம், கனியுப்புக்கள் என்பவற்றைப் பயன்படுத்தி தமக்காக உணவு தயாரித்துக்கொள்கின்றது (Photo Synthesis). அதே போன்று சில பூச்சியுண்ணித் தாவரங்கள் புழு, பூச்சிகளை வேட்டையாடி உண்டு வாழ்கின்றன. இவை தாவரங்களுக்கு உயிர் உள்ளது என்பதைக் காட்டுகின்றது. பிற உயிர் ஜீவிகளைப்போன்று தாவரங்களுக்கும் கலங்கள், கலச் சுவர்கள், கலத்தின் கரு, அதற்குள் நிறமூர்த்தங்கள், DNA க்கள், காபன் அணுக்கள், இலத்திரன், புரோத்திரன் அணுக்கள் என பல சமாச்சாரங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் உட்பொதிந்துள்ள ஒரு இலையைக்கூட அல்லாஹ் வீணுக்காகப் படைக்கவில்லை.

உணர்வுள்ள மரங்கள்.

மலிக் ஸுஊத் அரச பல்கலையின் தாவரவியற் துரைப் பேராசிரியர். Dr. பைஸல் அவர்கள் மரத்திற்கும் உணர்வுண்டு என்பதை நிரூபித்துள்ளார். அவர் கூறுகையில் தாவரங்கள் தம்மைக் கையாள்பவருடைய தன்மைகளைப் பற்றிய தகவல்களைத் தமது இரசாயன நரம்புத் தொகுதியில் தொகுத்து வைத்துக்கொள்கின்றன. ஒருவர் ஒரு தாவரத்தோடு நல்லவிதத்தில் நடந்துகொண்டால் அவர் நெருங்கும்போது அத்தாவரம் அமைதியாக இருக்கும் என்றும் அதனுடன் கடுமையாக நடந்துகொண்டால் அது நடுங்கியவாறு ஒரு வகை இரசாயனத்தை வெளியிடுவதாகவும்கண்டறிந்தார். சுப்ஹானல்லாஹ்! மரங்களுக்கும் உயிர், உணர்வுகள் இருப்பதால்தான் அவையும் அல்லாஹ்வை சிரம் பணிவதாக அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகின்றான். செடி, கொடகளும் மரங்களும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிகின்றன.” (55:6)

சுவனத்திலும் மரங்கள்.

சுவனம் ஜன்னா என அரபு மொழியில் அழைக்கப்படுகின்றது. ஜன்னதுன் என்றாலே தோப்பு, தோட்டம் என்ற பொருளைத்தான் தருகின்றது. அப்படியென்றால் சுவனத்திலும் மரங்கள் இருக்குமா? நிச்சயமாக இருக்கின்றது. அல்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் சுவனத்தைப் பற்றி வர்ணிக்கும் போதெல்லாம் கட்டாயம் மரங்களும், சோலைகளும் குறிப்பிடப்படுகின்றன. பாருங்கள் தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு சுவர்கத்தில் இரண்டு தோட்டங்கள் இருக்கின்றன.”(55:46) “அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை.”(55:48) “மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.”(55:62) “அவ்விரண்டும் கடும் பச்சையான நிறமுடையவை.” (55:66) இன்னும் பேரீத்த மரம், திரட்சைக் கொடி, அத்தி, மாதுளை, ஒலிவ் என பல்வகை கனிகள் தரும் மரங்களும் சுவனத்தில் இருக்கின்றன.

மரங்களின் பயன்கள்.

கவிஞர் வைரமுத்துவின் மரம் பற்றிய அழகானதொரு கவிதையில் மரங்களின் பயன்கள் குறித்து அழகுர எழுதியிருக்கின்றார். அதில் சில பகுதிகளையே இங்கு தருகின்றேன். உண்ணக்கனி - ஒதுங்க நிழல் - உடலுக்கு மருந்து - உணர்வுக்கு விருந்து - அடையக்குடில் - அடைக்கக் கதவு - அழகு வேலி ஆடத்தூளி (தொட்டில்) - தடவத் தைலம் - தாளிக்க எண்ணெய் - எழுதக் காகிதம் - எரிக்க விறகு பிறந்தோம் தொட்டில் மரத்தின் உபயம், எழுதினோம் பென்சில், பலகை மரத்தின் உபயம், மணந்தோம் - மாலை சந்தனம் மரத்தின் உபயம், துயின்றோம் - தலையணைப் பஞ்சு மரத்தின் உபயம், நடந்தோம் - பாதுகை ரப்பர் மரத்தின் உபயம், இறந்தோம் - சவப்பெட்டி பாடை மரத்தின் உபயம், எரிந்தோம் - சுடலை விறகு மரத்தின் உபயம்.இவ்வாறு பிறப்பு முதல் இறப்பு வரை எமது அனைத்து வாழ்க்கை வட்டங்களிலும் மரங்கள் சங்கமிக்கின்றன.

அழிவுக்குள்ளாகும் மரங்கள்.

1852 ஆம் ஆண்டு முதல் உலகில் காடழிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகின்றது. உலகின் பாதிக்கும் மேற்பட்ட மழைக்காடுகள் 1990 இலிருந்து அழிந்துகொண்டு வருகின்றன. 1990 முதல் 2015 வரை உலகில் 120 மில்லியன் ஹெக்டயர் காடுகள் அழிந்துள்ளன. இது தென் ஆபிரிக்காவின் நில அளவுக்கு சமனானது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) 2005 ஆம் ஆண்டின் அறிக்கையில் பூமியின் மொத்த காட்டு பகுதி தொடர்ந்தும் ஆண்டுக்கு 13 மில்லியன் ஹெக்டேர்கள் குறைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காடழிப்பினால் ஒரு ஆண்டுக்கு 137 தாவரவகைகளும் 50,000 விலங்கு, பூச்சி இனங்களும் அழிந்து வருகின்றன. ஒரு டன் கடதாசி தயாரிக்க 17 மரங்கள் வெட்டப்படுகின்றன.

எமது அண்டை நாடான இந்தியாவில் 33% இருந்த காடுகள் குறைந்து தற்போது 22% காடுகள் மட்டுமே உள்ளன. மீண்டும் 33% காடுகளை உருவாக்க 54 கோடி மரங்களை நடவேண்டுமாம். 1880 களில் இலங்கை 80% காடுகளால் மூடப்பட்டிருந்தது. இது 1920 இல் 49% ஆகக் குறைந்து மீண்டும் 2015 ஆம் ஆண்டாகும்போது 29% ஆக குறைந்துள்ளது. 1990 இற்கும் 2000 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதயில் ஒரு வருடதத்திற்கு சராசரியாக 26800 ஹெக்டயர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இன்று மனிதன் காடுகளை அழித்து கொங்கிரீட் காடுகளை வளர்த்து வருகின்றான். கட்டிடங்களைக் கட்டி கண்களால் அழகுபார்க்கும் மனிதன் கண்களைக் கட்டிக்கொண்டு மரங்களை அழித்துவருகின்றான்.

மரங்களை நடுவோம், காப்போம்.

இன்று உலகம் முழுதும் மரங்களைக் காப்பதற்கும் நட்டு வளர்ப்பதற்கும் பல்வேறு விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சிகளும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் அஸாம் மாநிலத்தின் வரண்டு போன ஒரு பகுதியில் கடந்த 35 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு 1,360 ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டை உருவாக்கிய தனிமனிதனைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா? ஆம் அவர்தான் ஜாதவ் பயேங். ஒரு சாதாரண விவசாயி. அதே இந்தியாவில் தமிழ் நாட்டில் காய்ந்துபோன தர்மபுரி மாவட்டத்தில் தனிமனிதனாக நின்று 200 ஏக்கர்களுக்கு ஒரு வனாந்தரத்தை உருவாக்கிய இன்னுமொருவர்தான் பியுஷ் மனுஷ்இவர் ஓர் சமூக ஆர்வளர்.  இவர்கள் தனிமனிதனாக நின்று காடுகளையே உருவாக்கியிருக்கின்றார்கள் என்றால் எம்மால் ஒரு மரம் கூட நட்ட முடியாதா?

மரம் நடுவது ஓர் இபாதத்.

இஸ்லாம் மரங்களை நட்டு வளர்ப்பதை ஓர் இபாத்த்தாகப் பார்க்கின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அடுத்த கணம் மறுமை வருவதாக இருந்தாலும் உங்கள் ஒருவரின் கையில் ஒரு மர விதை இருந்தால் அதை நாட்ட முடியுமான சந்தர்ப்பமாக இருந்தால் அதை நாட்டி விடுங்கள்” (புஹாரி, அஹ்மது) இன்னுமொரு முறை ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது ஒரு உயிரினமோ உண்டால் அதனால் அவருக்கு ஒரு தர்மம் செய்ததற்கான நன்மை கிடைத்துவிடும்.” (முஸ்லிம்) நாம் மரணித்தாலும் மரம் உயிர் வாழும் வரை நமது மண்ணறைக்கு தசகா ஜாரியாவுடைய நன்மைகள் வந்து சேர்ந்துகொண்டே இருக்கும் இன்ஷா அல்லாஹ்! மரம் மண்ணின் வரம், வளர்ப்பதே மனித அரம்.

அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) 

உங்கள் கருத்து:

1 comments:

Unknown said...

பயன் மிக்கதாக உள்ளது. வளர்ச்சி அடையும் ஒவ்வொன்றுக்கும் உயிர் இருப்பதாக கூற முடியாது.பாறைகள் வளர்ச்சி அடையும்.அவை உயிர் அற்றவை.
உயிருக்கு உரிய தனித்துவமான சிறப்பியல்பாக வளர்ச்சி ,அசைவு என்பவற்றை கூற முடியாது. காற்று அசையும் உயிர் அற்றது..

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...