"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

19 December 2020

ராட்சதப் பல்லி - கொமோடோ டிராகன்.

இந்தோனேசியத் தீவுகளில் அதிலும் கொமோடோத் தீவுகளில் அதிகமாக வாழும் ஒரு உயிரினம்தான் இந்த கொமோடோ டிராகன் (Comodo dragon). இவை தமிழில் கொமோடோ உடும்பு அல்லது கொமோடோ பல்லி என அழைக்கப்படுகின்றன. வாரனஸ் கொமோடோயென்சிஸ் என்ற அறிவியற் பெயரில் அழைக்கப்படும் இவை வரானிடே என்ற உடும்பு குடும்பத்தில் அடங்குகின்றன. உலகில் உள்ள பல்லி வகைகளிலேயே மிகப்பெரிய வகையும் இதுதான். பார்ப்பதற்கு அச்சத்தை ஊட்டும் தோற்றத்தைக் கொண்டிருக்கும். தோற்றத்தில் அகன்ற, தட்டையான தலை, உருண்டையான வாய்ப் பகுதி, வளைந்த குட்டைக் கால்கள், பெரிய சதைப்பற்றான நீண்ட வால், சாம்பல் நிறத் தோல் என்பவற்றைக் கொண்டுள்ளன. இவை சுமார் பத்து அடி நீளமும், 80 கிலோ எடையும் கொண்ட ராட்சதப் பல்லிகளாகும்.

 வாழிடமும் பாதுகாப்பும்.

இந்தோனேசிய நாட்டில் உள்ள கொமோடோ, ரிங்கா, ஃப்ளோர்ஸ், கிலி மோட்டாங் மற்றும் பாடர் ஆகிய ஆறு தீவுகளில் இவை பெருமளவு காணப்படுகின்றன. கொமோடோத் தீவுகளில் இவை அதிகமாக உள்ளதால்தான் அத்தீவின் பெயரைவைத்தே இவை அழைக்கப்படுகின்றன.  காடழிப்பு மற்றும் வேட்டையாடுதல் போன்ற மனிதர்களின் செயல்களால் உலகளிவில் கொமோடோ டிராகன்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகிறது.  சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் (IUCN) அழிவடைந்து வரும் இனங்களின் பட்டியலில் கொமோடோ டிராகன்களையும் சேர்த்துள்ளது. இதனால் அவை இந்தோனேசிய சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொமோடோ தேசிய பூங்கா நிறுவப்பட்டு  அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கும் இந்தோனேசிய அரசு உதவி செய்து வருகின்றது. இந்தோனேசியாவில் மட்டுமல்லாமல் உலகின் ஏனைய நாடுகளுக்கும் இவை கொண்டு செல்லப்பட்டு அங்கும் இனவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

 மனிதர்களுடனான உறவு

இந்தோனேசியாவின் கிராமப் புறங்களில் உள்ள கொமோடோக்கள் மனிதர்களுடன் சாதாரணமாக சேர்ந்து, வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தீவுக்கூட்டங்களில் வசிக்கும் மனிதர்களின் வீடுகள் முன்பு இவை அதிகாலை நேரங்களில் படுத்துக் கிடப்பது அங்கு சாதாரண காட்சிகளில் ஒன்று.  பெரும்பாலான நேரங்களில் மரங்களின் மீதும் ஏறி ஓய்வு எடுப்பதை அங்கு காணலாம். மனிதர்கள் வீசும் கழிவுகளையும் உணவு மிகுதிகளையும் உண்பதற்காக காட்டுப் பகுதிகளில் இருந்து வந்து மனிதர்களுடன் பழக்கப்பட்டுள்ளன. காட்டுப் பகுதியில் இருக்கும் டிராகன்கள் இதற்கு நேர் மாற்றமாக இருக்கும். எனவே கிராமவாசிகள் எப்போதும் எச்சரிக்கையுடன்தான் நடந்துகொள்கிறார்கள்.

 உணவு முறை

கொமோடோ ஒரு மாமிச உண்ணி. ஆடு, மாடு, மான், பாம்பு, மீன், நீர் எருமை, பறவைகள் ஆகியவற்றை உண்ணும். மிக அபூர்வமாக மனிதனைக் கூடத் தாக்கிக் கொன்று தின்னும். பெரிய டிராகன்கள் குட்டி டிராகன்களையும் சாப்பிடும். இவற்றின் உணவில் பத்து சதவீதம், புதிதாக வெளிவந்த குஞ்சு டிராகன்களாகும். பதுங்கியிருந்து வேட்டையாடி உண்ணும் திறமையும் ஆற்றலும் இவற்றுக்கு உண்டு. என்றாலும் கணிசமான அளவு இறந்த விலங்குகளின் உடல்களையே உண்கின்றன. உணவை வேட்டையாடுவதற்கும் தேடி உண்பதற்கும் அற்புதமான ஆற்றல்களை இறைவன் இவற்றுக்கு வழங்கியுள்ளான். வேட்டையாடும்போது இரை அருகில் வரும் வரை ஆடாமல் அசையாமல் இலை, தழைகளிடையே ஒளிந்திருக்கும். இரை அருகில் வந்ததும், வேகமாகப் பாய்ந்து தன் வலிமையான கால்கள் மற்றும் கூர்மையான நகங்களால் பிடித்து, கூரான பற்களால் கடிக்கும். அவற்றின் பற்கள் சுரா மீண்களின் பற்களைப் போல் கூர்மையானவை. அறுபது வரையான கூர்மையான பற்கள் உண்டு. பற்களின் நீளம் 2.5 செமீ (1 அங்குலம்) வரை இருக்கும். ஈறு திசுக்கள் பற்களின் பெரும்பகுதியை மூடியிருப்பதால் அதன் பற்கள் இரத்தச் சாயத்துடன் காட்சியளிக்கும்.  இப்பற்களின் மூலம் இரையின் எலும்பு, குளம்பு ஆகியவற்றைக் கூட மிச்சம் வைக்காமல் தின்றுவிடும்.

அதேபோன்று இந்த பயங்கர பல்லியின் சிவப்பு நிற எச்சிலில் 50 வகையான பாக்டீரியாக்கள் உள்ளதாக ஆராய்ச்சியாளர் கண்டறிந்துள்ளனர். கொமோடோக்கள் இரையை ஒரு கடி கடித்ததுமே, அதன் இரத்தத்தில் விஷம் ஏறி விடும். இதனால் கடிபட்ட விலங்கு விரைவில் பக்கவாதம், தசைபிடிப்பு, மயக்கம் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகும்.  எனவே இரை உடனே சாகாது தப்பிவிட்டாலும் கொமோடோ அதைப் பின் தொடர்ந்து சென்று, முடங்கிக் கிடக்கும் இடத்தைக் கண்டுபிடித்து இரையை உண்டுவிடும். பாம்புகளுக்கு இருப்பது போல் கொமோடோவுக்கு இரண்டாகப் பிளந்த மஞ்சள் நிற நாக்கு உண்டு. தன் நாக்கை அடிக்கடி வெளியே நீட்டிக் கொண்டிருப்பதால்தான் இதற்கு டிராகன் என்று பெயரும் வந்துள்ளது. இதன் நாக்கிற்கு இரையை மோப்பம் பிடிக்கும் சக்தி உள்ளது. இந்த நாக்கின் அபாரமான மோப்ப சக்தியின் மூலம் 1 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்குள் உள்ள இரையைக்கூட மோப்பம் பிடித்து விடும். கொமடோவின் வால் அதன் உடல் அளவிற்கு நீளமாகவும் விமை மிக்கதாகவு இருக்கும். அவற்றைக்கொண்டு எதிரி விலங்கையும் வேட்டை விலங்கையும் தாக்கி வீழ்த்த முடியும்.

தன் எடையில் 80 சதவிகித அளவு இரையை ஒரே சமயத்தில் உண்ணக்கூடிய மிருகம் கொமோடோ டிராகன்தான்.  கொமோடோ தீவின் உணவுச் சங்கிலியில் கொமோடோ டிராகன்தான் உயர் இடத்தில் இருக்கின்றது. ஏனென்றால், இந்த ராட்சதப் பல்லி வேறு எந்த மிருகங்களுக்கும் உணவாவதில்லை. அதற்குக் காரணம், இதன் உடலில் உள்ள பாக்டீரியாக்கள்தான். இந்த பாக்டீரியாக்கள் மற்ற விலங்குகளுக்கு கெடுதல் செய்யும்.

 இணப்பெருக்கமும் வாழ்க்கை முறையும்

கொமோடோக்கள் கூட்டாகவும் தனியாகவும் தமது தேவைக்கும் இடத்துக்கும் ஏற்ற அமைப்பில் வாழக்கூடியன. மே முதல் ஆகஸ்ட் வரையான மாதங்களில் இவை இணை சேர்கின்றன. பின்பு செப்டம்பர் மாதத்தில் முட்டைகளை இடுகின்றன. பெண் கொமோடோ மணற்பாங்கான தரையில் ஆழமாக வளைகளைத் தோண்டி 15 முதல் 30 முட்டைகள் வரை இடும். முட்டைகள், நீர் நிரம்பிய பலூன் போல் காட்சியளிக்கும். குறித்த முட்டைகள் ஏழு முதல் எட்டு மாதங்கள் வரை பக்குவமாய்ப் பாதுகாக்கப்படும். ஏப்ரல் மாதத்தில்தான் இந்தோனேசியத் தீவுகளில் பூச்சிகள் அதிக அளவில் இருக்கும். எனவே அதே பருவத்தில்தான் முட்டைகளும் பொரிக்கின்றன. வெளியே வரும் கொமோடோ குட்டிகளுக்கு இலகுவாக உணவும் கிடைத்து விடுகின்றன. இளம் கொமோடோ டிராகன்கள்  வலுவற்றதாக இருப்பதால் வெளியே வந்ததும் மரங்களில் ஏறி தமதுயிரைப் பாதுகாத்துக்கொள்கின்றன. இல்லாவிடில் ஏனைய பெரிய கொமோடோக்களுக்கு இவை இரையாக நேரிடும். இவ்வாறு அடுத்த 8 மாதங்கள் வரை மரங்களிலேயே வாழும்.

இவை குளிர் ரத்தப் பிராணிகளாகும். எனவே, உடலை சூடேற்றுவதற்காக அதிக நேரம் வெயிலில் கிடக்கும். இரவில் வெளியே வராது. மழைக் காலங்களில் பொந்துக்குள்ளேயே ஒளிந்திருந்து, உடல் சூடு குறையாமல் பார்த்துக் கொள்ளும். கொமோடோ அபாரமாக நீச்சல் அடிக்கும். ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்கு சுலபமாக நீச்சலடித்து உணவு தேடிச் செல்லும். மணிக்கு 13 மைல் வேகம் ஓடக் கூடிய திறமையும் இதற்கு உண்டு. கொமோடோ டிராகனின் ஆயுட்காலம் 30 ஆண்டுகளாகும்.

கொமோடோ டிராகன்கள் பல்லாண்டுகாலமாக இந்தப் பூமியில் வாழ்ந்து வருகின்றன. என்றாலும் இதில் ஓர் ஆச்சர்யமான உண்மை என்னவென்றால், இந்த பல்லி இனத்தைப் பற்றி யாருமே அக்காலங்களில் அறிந்திருக்கவில்லை. சுமார் 100 வருடங்களுக்கு முன்புதான் மனிதன் இந்த கொமோடோ டிராகனைப் பார்த்திருக்கிறான், கண்டறிந்துள்ளான். அது முதல்தான் உலகிற்கு இவை பிரபல்யமாகியுள்ளன. இறைவனின் அற்புதமான படைப்புகளில் இன்னும் நாமறியாதவை ஏராளம் ஏராளம்.

ஆலிப் அலி (இஸ்லாஹி) 

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...