ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ் வளாகம்)
அல்லாஹ் அல்குர்ஆனிலே வின்வெளி பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் விண்பொருட்களின் செயற்பாடுகள் குறித்தும் அவற்றில் காணப்படுகின்ற பல்வேறு அத்தாட்சிகள் பற்றியும் கூறுகின்றான். இதன் மூலம் விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு இறை வல்லமையை அறிந்துகொள்ளுமாறு எம்மைத் தூண்டுகின்றான். அதனை ஒரு இபாதத் என்றும் தெளிவுபடுத்துகின்றான். எனவே இத்தொடரில் விண்வெளியில் குவிந்து கிடக்கும் இறை அத்தாட்சிகளில் சிலதைப் பற்றிப் பார்ப்போம்.
விண்வெளி என்பது எமது புவியைச் சூழவுள்ள எல்லையற்ற மிக விசாலமான, பிரம்மாண்டமான பகுதியாகும். பூமிகூட இவ்விண்வெளியில்தான் அமைந்துள்ளது. விண்ணிலே பில்லியன் கணக்கான... திரில்லியன் கணக்கான... கெலக்ஸிகள், பால்வீதிகள், நட்சத்திரங்கள், கருந்துலைகள், கோல்கள், தூசுப்படலங்கள், விண் கற்கள், செய்மதிகள் என பல்வேறு பொருட்கள் காணப்படுகின்றன. மலக்குகள், ஜின்கள், ஷைதான்கள் கூட இங்கு குறிப்பிட்டதொரு எல்லைக்குள் சஞ்சரித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
சற்று அன்னாந்து வானத்தைப் பாருங்கள். அது பகற்பொழுதில் நீல நிறத்திலும் இரவில் இருண்டும் காட்சியளிக்கின்றது. வானத்தைப் பூமிக்கு முகடுபேன்று படைத்திருக்கும் அல்லாஹ் அதனைத் தாங்கி நிற்பதற்கு எவ்விதத் தூண்களையும் படைக்கவில்லை. அதில் வெடிப்புகளும் காணப்படுவதில்லை. மாறாக நட்சத்திரங்களைக் கொண்டு அதனை அலங்கரித்துள்ளான். அல்லாஹ் கூறுகின்றான். “அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்திருக்கின்றான். அதனை நீங்கள் காண்கிறீர்கள்” (31:10), (13:02) “அவன் ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்தான். அதில் நீர் எந்த முரண்பாட்டையும் காணமாட்டீர். (வேண்டுமானால் மீண்டும்) பார்வையை மீட்டிப்பாரும். (அதில்) பிளவுகளைக் காண்கிறீரா?” (67:03) என்றும் எம்மைப் பார்த்துக் கேட்கின்றான். “நிச்சயமாக நாம் வானத்தில் கிரகங்களை அமைத்துப் பார்ப்போருக்கு அதனை அலங்கரித்துள்ளோம்.”(15:16) என அல்லாஹ் கூறுகின்றான்.
இரவுவானில் சந்திரனை எம்மால் இலகுவாக, மிக அண்மையில் கண்டுகொள்ள முடியும். சந்திரன் பூமியின் உப கோள் என்பதனால் அது பூமிக்கு மிக அண்மையில் காணப்படுகின்றது. அது தவிர நாம் இருக்கும் இச்சூரிய மண்டலத்தில் பூமியைப் போன்றே புதன் (Mercury)> சுக்கிரன் (Venus)> செவ்வாய் (Mars)> வியாழன் (Jupiter)> சனி, யுரெனஸ் (Uranus)> நெப்டியூன் (Neptune) என எட்டு கோள்களும் அவற்றின் உப கோள்களும் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் அல்லாஹ் அவற்றுக்கு அமைத்துக்கொடுத்த நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி சீராகச் சுழன்று வருகின்றன.
இதுபற்றி அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது. “(கிரகங்கள், நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் (தமது) வட்டத்திற்குள் நீந்திச் செல்கின்றன” (36:40)
“அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். அவை ஒவ்வொன்றும் அண்டத்தில் தமக்குரிய மண்டலங்களில் நீந்திச்செல்கின்றன” (21:33).
“சூரியனும் அதற்குரிய தங்குமிடத்தின்பால் சென்றுகொண்டிருக்கின்றது. இது மிகைத்த அவனின் செயற்பாடாகும். இன்னும் சந்திரனை உலர்ந்து வளைந்த பேரீச்சங் குலையின் குச்சிபோன்று அது மீளும்வரையில் அதற்கு நாம் பல தங்குமிடங்களை ஏற்படுத்தினோம். சூரியன் அதற்கு சந்திரனை அணுக முடியாது. இரவு பகலை முந்தவும் முடியாது. (இவ்வாறே கிரகங்கள் நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் (தனது) வட்டத்தில் நீந்திச்செல்கின்றன.” (36:38-40)
விண்வெளியில் உள்ள பில்லியன் கணக்கான கோள்களும் ஞாயிற்றுத் தொகுதிகளும் பால்வீதிகளும் இவ்வாறுதான் ஒன்றுடன் ஒன்று மோதாது தமது பாதையில் நீந்திக்கொண்டிருக்கின்றன.
பூமியும் சந்திரனும்
பூமியும் சூரியனும்
பூமியும் சந்திரனும் சூரியனும்
சூரியனும் பால்வீதிகளும்
சூரியக் குடும்பமும் பால்வீதிகளும்
1 comments:
http://www.yayuthumaga.com/
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...