"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

18 December 2010

இஸ்லாமியப் புதுவருடம் ஹிஜ்ரி, ஹிஜ்ரத்....

இஸ்லாமியப் புதுவருடம் ஹிஜ்ரி 1432 இல் தற்போது நாம் கால்பதித்திருக்கின்றோம். இஸ்லாமியப் புதுவருடம் ஹிஜ்ரி அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றது. ஹஜர என்ற அரபுச் சொல்லிலிருந்தே ஹிஜ்ரி, ஹிஜ்ரத் போன்ற சொற்கள் பிறந்துள்ளன. ஹிஜ்ரத் என்பது இஸ்லாத்தின் எழுச்சிக்கான மிக முக்கியமானதொரு வரலாற்று நிகழ்வாகும்.

ஹிஜ்ரத் என்பதன் கருத்து ஒரு இடத்திலிருந்து பிரிதோர் இடத்திற்குப் பிராணிப்பதாகும். என்றாலும் இஸ்லாமியப் பரிபாஷையின் வரைவிலக்கணப் படுத்துவதாயின் ஹிஜ்ரத் என்பதன் பொருள் இறை மார்க்கத்தைத் தன்னில் முழமையாக எடுத்து நடக்கவும் பிறரை அதன்பால் அழைக்கவும் பாரெங்கும் இறையாட்சியை நிலைநாட்டுவதற்காகவும் நாடு துறந்து செல்வதையே இப்பதம் குறிக்கின்றது.

இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலில் ஹிஜ்ரத் செய்தவர் நபி இப்றாஹீம் (அலை) அவர்களே! தனது மனைவியை அழைத்துக்கொண்டு இறை மார்க்கத்தைப் போதிப்பதற்காக அன்னவர்கள் ஈராக் தேசத்திலிருந்து பலஸ்தீனம் நோக்கி ஹிஜ்ரத் செய்தார்கள்.

நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் தூய இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதற்காக மக்காவிலிருந்து 300 மைல் தொலைவிலிருந்த யஸ்ரிப் என்றழைக்கப்பட்ட மதீனாவுக்குச் சென்ற வரலாறும் ஹிஜ்ரத் என்றே அழைக்கப்படுகின்றது. நபியவர்கள் மாத்திரமன்றி பல நூறு ஸஹாபாக்களும் நாடு துறந்து, வீடு துறந்து, தம் சொந்த பூமியையும் சொந்த பந்தங்களையும் விட்டுவிட்டு மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்தார்கள். இவ்வாறு ஹிஜ்ரத் செய்தவர்கள் முஹாஜிரீன்கள் எனப்படுகின்றனர்.

நபியவர்கள் யஸ்ரிப் சென்றதும் அப்பெயர் மாறி மதீனதுந் நபி நபியவர்களின் நகரம் என்றழைக்கப்பட்டது. இந்நிகழ்வானது கி.பி.622 இல் நபியவர்களது 53 ஆம் வயதில் நடைபெற்றது. அதாவது நபியவர்கள் மக்காவிலிருந்து மதீனா நோக்கிச் சென்று இவ்வருடத்துடன் 1432 வருடங்களாகின்றன. இதனைவைத்தே ஹிஜ்ரி வருடம் கணக்கிடப்படுகின்றது. இம்முறையை அறிமுகப்படுத்தியவர் உமர் (ரழி) அவர்களாளாகும்.

இஸ்லாமியப் புதவருடத்தின் ஆரம்பம் முஹர்ரம் மாதத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. வருடத்தில் உள்ள 12 மாதங்களில் அல்லாஹ் நான்கு மாதங்களைப் புனிதப்படுத்தியுள்ளான். அதில் முஹர்ரம் மாதம் முதன்மையானது. துல்ஹஜ், றஜப், துல்கஃதா என்ப இதர புனித மாதங்களாகும்.

...ஆலிப் அலி...

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...