அரபு பிரதேசத்தில் துனீசியா மக்கள் எழுச்சியினைத் தொடர்ந்து எகிப்து, யெமன், ஓமன், பஹ்ரைன், மொரோக்கோ, ஈரான், சிரியா, லிபியா என அரபுலகம் முழுவதும் மக்கள் எழுச்சி வேகமாகப் பரவி வருகிறது. மொத்தத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள லிபியா, அல்ஜீரியா, மொராக்கோ, மற்றும் வளைகுடா அரபு நாடுகளான ஜோர்டான், சிரியா, செளதி அரேபியா, ஏமன், எகிப்து, பஹ்ரைன், ஈரான் ஆகிய 10 நாடுகளில் அரசுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் பரவி உள்ளது. இதில் லிபியா, பஹ்ரைன், ஈரான், ஏமன், ஆகிய நாடுகளில் கலவரம் மோசமாக வெடித்துள்ளது. செளதி அரேபியாவில் சிறிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சீனாவிலும் மக்கள் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடான சீனாவிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் உருவாகியுள்ளது. ஆனால் காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டினர். கம்யூனிஸ ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் ஷாங்காய் மற்றும் பெய்ஜிங் நகரில் திரண்டனர். பெய்ஜிங் நகரில் மெக்டொனால்ட் விடுதிக்கு எதிரில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.இணையதளம் மூலமாக பரப்பப்பட்ட இப்போராட்ட தகவலின் அடிப்படையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இங்கு திரண்டனர். வர்த்தகப் பகுதியான வாங்புஜிங் தெருவில் ஒரு சில நிமிஷங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆரம்பத்திலேயே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு காவல்துறையினர் கூட்டத்தினரை விரட்டியடித்தனர். மேலும் சிலரைக் கைது செய்தனர்.
இத்தகைய போராட்டத்தை ஒருங்கிணைப்பு செய்ய பயன்படும் இணையதளத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை அரசு தடை செய்தது. ஆனால் அமெரிக்காவிலிருந்து செயல்படும் மற்றொரு இணையதளம் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு ஒன்று திரண்டனர். சீனாவில் 45 கோடி பேரிடம் இணையதள இணைப்பு உள்ளது. 5 கோடிக்கும் அதிகமான பிளாக்-குகள் இங்குள்ளன. ஆனால் அதிகாரபூர்வமற்ற வகையில் 10 கோடி பிளாக்-குகள் இருப்பதாக கூறப்படுகிறது.லிபியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்
கடந்த 42 ஆண்டுகளாக லிபியா அதிபராக இருக்கும் முவாம்மர் கடாபியை பதவி விலக கோரி அங்கு மக்கள் புரட்சிப் போராட்டமாக நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவம் எடுத்த கடும் நடவடிக்கையில் இதுவரை சுமார் 300 பேர் பலியாகியுள்ளனர் தலைநகர் டிரிபோலி, பென் காசி, கவுர்லி, கோபுரக், அல்-பாஸ்டா, மில்ரதா உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்தும்போராட்டம் நடந்தது நகரெங்கும் கலவரம் பரவியுள்ளது. கலவரத்தை அடக்க ராணுவத்தினர் துப்பாக்கி மற்றும் கனரக ஆயுதங்களை போராட்டக் காரர்கள் மீது பயன்படுத்தி வருகின்றனர்
லிபியா நாட்டு மக்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக, அந் நாட்டு அதிபர் கடாபி வெனிசுலா நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டதாக இங்கிலாந்து வெளி உறவு அமைச்சர் கூறியிருக்கிறார். அதனை வெனிசூலா அரசு மறுத்துள்ளது.
மொராக்கோவில் மக்கள் ஆர்ப்பாட்டம்
அதே போல மொராக்கோவிலும் மன்னர் முகம்மதை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளதால், சில அதிகாரங்களை விட்டுத் தருவதாகவும், அரசியல் சீர்திருத்தங்கள் செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
பஹ்ரைனில் மக்கள் ஆர்ப்பாட்டம்
பஹ்ரைனின் களநிலவரங்களும் இதே நிலை சூடுபிடித்துக்கொண்டு செல்கின்றது. தொடர்ந்தும் நடப்பவை குறித்து அவதானங்கள் தொடரட்டும்...
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து:
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...