"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

16 May 2012

பஃபின் பறவைகளின் அற்புதம்

ஆலிப் அலி (இஸ்லாஹிய்யா வளாகம்)
பஃபின் பறவைகள் தோற்றத்தில் மிகவும் அழகானவை. அவற்றின் இயல்புகளும் நடத்தைக் கோளங்களும் சுவாரஷ்யமிக்கவை. வாத்தினதும் பென்குயின்களினதும் கலவைபோன்றே இவை காட்சியளிக்கின்றன. ஏனெனில் இவற்றின் உடல் வாகு பென்குயின்களைப் போன்றும் பாதங்களில் விரல்களுக்கிடையே வாத்துகளினதைப் போன்ற தோல் மடிப்புகளும் பெரிய அலகும் இவற்றிடம் காணப்படுகின்றன. இப்பறவைகளிடம் காணப்படுகின்ற அற்புத இயல்புகள் அல்லாஹ்வின் படைப்பாற்றலின் மகிமையை மீண்டுமொருமுறை ஞாபகிக்கின்றன.
பபின் பறவைகளும் பென்குயின்களும் தோற்றத்தில் ஒரேவகையாகத் தோன்றினாலும் பபின் பறவைகள் பென்குயின்களில் இருந்தும் பல்வேறு குணாதிசயங்களில் வேறுபடுகின்றன. பஃபின் பறவைகளுக்கும் பென்குயின்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் பபின் பறவைகள் பறக்கக்கூயன. ஆனால் பென்குயின்களுக்கு சிறகு இருந்தாலும் அவற்றால் அவ்வாறு பறக்கமுடியாது. பஃபின் பறவைகள் வடதுருவத்திலும் பென்குயின்கள் தென்துருவத்திலும் வாழ்கின்றமை அவற்றுக்கிடையிலான மற்றுமொரு வித்தியாசமாகும்இவ்விரண்டுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை இவை குளிர்ப்பிரதேசங்களில் வாழ்வதுடன் அப்பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் தம்மை இசைவடையச் செய்துகொள்கின்றன.
அல்லாஹ் ஒவ்வொன்றையும் மிகப் பொருத்தமான கால சூழலுக்கேற்ப படைத்துள்ளான். ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான வாழிடத்தை அமைத்திக்கொடுப்பதில் அல்லாஹ்வுக்கு ஒன்றும் சிரமமில்லை. “…அன்றியும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப்பற்றியும் நன்கறிந்தோனாக இருக்கின்றான். (33:40) அத்தோடு பஃபின் பறவைகள் மிக வேகமாகப் பறப்பதோடு அவற்றால் பறந்துகொண்டிருக்கும் அதே கதியில் பின்நோக்கிப் (Reverse) பறக்கவும் முடியும். இது மற்ற பறவைகளிலிருந்தும் உள்ள வித்தியாசமானதொரு அம்சமாகும்.
ஒரு ஆண் பஃபின் பறவையும் பெண் பஃபின் பறவையும் முதல் முறை ஒன்று கூடியதிலிருந்து அவை இறக்கும் வரை பிரிந்து விடாது சேர்ந்தே வாழ்கின்றன. அப்படியானதொரு குடும்ப அமைப்பை அவற்றிடையே அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கின்றான். பபின் பறவைகள் இனப்பெருக்கம் செய்யத் தயாராகும் காலத்தில் அவற்றின் அலகுகளில் பிரகாசமான வரிகள் தோன்றும். அப்போது அப்பறவைகள் ஒருவகையான மந்த நிலையிலேயே இருக்கும். அலகில் தோன்றும் சிவப்;பு நிறத்திலான பிரகாசமான இவ் அடையாளத்தைக் கொண்டு இப்பறவைகள் தூரத்திலுள்ள மற்ற பறவைகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கின்றன. மேலும் இவை வருடா வருடம் முட்டை இட்டுக்கொண்டே இருக்கவும் செய்கின்றன. முட்டையிட்டு ஆறு வாரங்களில் குஞ்சி பஃபின் வெளியுலகத்திற்கு வரும். பின்பு சில காலம் கூட்டிலேயே தனது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும். குஞ்சுகளுக்கான உணவை தாய் மற்றும் தந்தைப் பறவைகளே கொண்டு வந்துகொடுக்கின்றன.
பபின் பறவைகளின் அலகு சற்றுப்பெரிதாகக் காணப்படுகின்றது. இதன் மூலம் இவை  நிறைய சிறிய மீன்களை அலகில் சேமித்து வைத்துக்கொண்டு பறந்து வந்து கூட்டை அடைகின்றன. பின்பு அலகிலுள்ள மீன்களை தமது குஞ்சுப் பறவைகளுக்கு இறையாகக் கொடுக்கின்றன. இவற்றால் சுமார் 62 சிறிய மீன்களை ஒரே முறையில் தமது அலகினுள் வைத்துக்கொள்ள முடியும். குஞ்சுப் பறவைகள் இளம் பருவத்தை அடைந்தும் தமது பெற்றோரிடமிருந்து பிரிந்து சுயமாக இறைதேடி வாழப் பழகிக்கொள்கின்றன. பொதுவாக ஒரு பஃபின் பறவை சுமார் 25 வருடங்ளே உயிர்வாழ்கின்றது.
பஃபின் பறவைகளால் நீரினுல் மிக ஆழத்திற்கு மூழ்கவும்முடியும். ஏனெனில் இவை கடற் பகுதியை அண்டி வாழ்வதாலும் தமது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள கடல் உணவுகளிலேயே தங்கியிருப்பதாலும் இவ்வாறானதொரு ஏற்பாட்டை அல்லாஹ் அவற்றுக்கு வழங்கியுள்ளான். சிந்தித்துப் பாருங்கள் இவ்வாரு இலகுவான முறையில் மனிதனால் மூழ்கமுடியமா? அப்படியும் அவன் மூழ்குவதாயின் நவீன சாதனங்ளைப் பன்படுத்தியே மூழ்கவேண்டும். அதல்லாமல் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மிகுந்த சிரமத்தோடு பாதுகாப்பு முறைகளுடன்தான் செல்லவேண்டும். பபின் பறவைகள் எப்படி அவற்றின் மூக்குத்துவாரத்ததினுள் நீர் உட்புகாத வகையில் பாதுகாத்துக்கொண்டு நீரின் ஆழத்திற்கச் சென்று மீண்டும் நீரின் மேற்பரப்பை வந்தடையும் தொழிநுற்ப முறைகளைக் கற்றுக்கொண்டன? என்று சிந்திப்பீர்கள். ஆம்! அல்லாஹ் அவனின் மேன்மையையும் ஒப்பற்ற தன்மையையும் நுணுக்கத்தையும் அவனுடை படைப்புக்களில் எமக்குக்காட்டுகின்றான். இவை நீரினுள் ஆழ்ந்து செல்லும்போது மூக்கினறுகிலுள்ள அடைப்பான் (Flaps) நீர் உற்புகாதவாறு தடுத்துவிடுகின்றது.
பஃபின் பறவைகளிடம் காணப்படுகின்ற இவ்வற்புதப் பொறிமுறைகள் யாவும் இயற்கைத் தேர்வினடிப்படையில் உருவானவையோ அல்லது திடீர் நிகழ்வினால் ஏற்பட்டவையோ அல்ல. வல்ல நாயன் அல்லாஹ்வே இவற்றைத் திட்டமிட்டுப் படைத்துள்ளான். மற்றுமோர் வகையில் பார்த்தால் அல்லாஹ் இப்படைப்புக்களைப் படைத்திருப்பது அவனின் அத்தாட்சிளையும் வல்லமைகளையும் எமக்குக் காண்பிப்பதற்காக என்பதும் விளங்குகின்றது.

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

fathima............
subahanallah..... sirappana atputhamana allahvin padaippu..............
superb articl.....
if u search more and more , u can get more and more miracles of allah......

தேடலில் தேட்டம் உள்ள வரை....
தேடலும் ஓயாது.......
தேவனின் (அள்ளாஹ்வின்) ஆற்றலும் ஒழியாது..
தேடு..இன்னும் தேடு......
தோன்றி எடுத்த புதையலெனவே,
தேகம் சிளிர்க்கும்,,,
அகம் சிந்திக்கும்,,,,
ஆற்றல் கொண்ட ,,,
ஆக்கங்கள் நிறையவே கிடைக்கும்.
ஆவலோடிருக்கும் வாசகர் நம்மை
சிந்திக்கவைக்கும் சிறப்பான ஆக்கங்களை
சீக்கிரம் தரவும்.....
நன்றி
fathima from Eravur

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...