ஒரு செல்வந்தரிடம் நீண்ட காலமாக வேலை பார்த்த உதவியாளரை அவர் அழைத்து “இதோ பார்! இந்த இடத்தில் ஒரு நல்ல வீட்டைக் கட்டவேண்டும். பணத்தைப் பற்றியெல்லாம் கவலைப் படாதே! அதன நான் பார்த்துக்கொள்கின்றேன். நல்ல சிமெண்ட், செங்கல், நல்ல இரும்பு, நல்ல மரம், என்று உன் மனம் விரும்பிய படி இந்த வீட்டைக் கட்டு. முதல்தரமாக இருக்கவேண்டும். கட்டி முடிந்தவுடன் சாவியுடன் என் வீட்டுக்கு வா” என்றார்.
உதவியாளருக்கு மட்டட்ட மகிழ்ச்சி. செல்வந்தர் எதுபற்றியும் விசாரிக்க மாட்டார். கணக்குப் பார்க்கவும் மாட்டார். எனவே விலை குறைந்த, தரம் குறைந்த மட்டமான பொருள்களாலான ஒரு வீட்டைக் கட்டி முடித்தார். விலை கூடிய பொருட்களை வாங்கியமைக்கான கணக்குச் சீட்டும் தயாரானது. அதிக நாற்களுக்கு நின்றுபிடிக்காத அந்த வீட்டின் சாவியும் தயாரானது. அதனை எடுத்து வந்து செல்வந்தரிடம் கொடுத்துவிட்டு “நீங்கள் சொன்னது போன்று ஒரு முதல்தரமான வீடு தயாராகிவிட்டது” என்றான்.
“அருமை பணியாளரே, இதனை எனக்காக் கட்டவில்லை. உனக்காககத்தான் கட்டச் சொன்னேன். இந்தா... இந்த சாவியை நீயே வைத்துக்கொள்” என்றார் செல்வந்தர். உதவியாளனோ கைகளைப் பிசைந்து பிசைந்து விழிபிதுங்கி நின்றுகொண்டிருந்தான்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...