"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

03 August 2011

உலகமயமாக்களின் பின்புலம்

ஆலிப் அலி (இஸ்லாஹி)

இந்த 21ம் நூற்றாண்டின் முக்கிய கதையாடலாக நோக்கப்படுவது புதிய உலக ஒழுங்கும் (Globalization) உலகமயமாக்கலும் (New world order) ஆகும். புதிய உலக ஒழுங்கு என்பது இதுவரை காலமும் இவ்வுலகம் அடியொட்டிவந்த மொழி, கலாசாரம், நாகரீகம், மதம் என்பவற்றை மூட்டை கட்டிவைத்துவிட்டு சர்வதேசரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படும் ஒரு புதிய திட்டத்தினடியில் உலகைக் கட்டியெழுப்புவதாகும்
உலகமயமாக்கலை வியாக்கியானப்படுத்துவதாயின் உலக நாடுகளுக்கிடையிலான எல்லைகளையும் தாண்டி நடக்கின்ற உற்பத்தி, வர்த்தகம், விநியோகம், தொழிநுட்பம் என்பவற்றின் சுதந்திரமான பரிமாற்றம் எனப்படுகிறது. உலகமயமாக்கலின் பரவலாக்கலுக்கு உந்துசக்தியாக 1960ம் ஆண்டின் பின் ஏற்பட்ட இலத்திரணியல் புரட்சி காரணமாயினும் சகல மட்டங்களிலும் அதன் பிரயோகம் 20ஆம், 21ஆம் ஆண்டுகளிலேயே எழுச்சியுற்றது.
உலகமயமாக்கல் தொடர்பான திறனாய்வுகளை மேற்கொள்ளும் பொருளியலாளர்களினதும் சமூகவியலாளர்களினதும் வரலாற்று ஆசிரியர்களினதும் சமகால பேசுபொருள்உலகமயமாக்கல் என்பது பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்பட்ட இயற்கையான மாற்றமா? அல்லது திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலா?” என்பதாகும்இது குறித்து பலரினதும் கருத்துக்களை ஆராய்ந்தோமேயானால் புதிய உலக ஒழுங்கின் கட்டமைப்பிற்கானதொரு படிமுறைச் செயற்பாடே உலகமயமாக்கல் எனலாம். அதாவது மேற்குலகின் உலகளாவியதொரு புதிய கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான செயற்பாடாகும்.
பூகோள மயமாக்களில் இருபக்க விளைவுகள் காணப்படுகின்றன. அதில் எந்தளவுக்கு அணுகூலங்கள் இருக்கின்றனவோ அதையும் தாண்டிய பிரதிகூலங்கள் எம்மால் இனங்காணப்படாமல் இலைமறை காயாகவே இருந்துவருகின்றன. பொதுவாக உலகமயமாக்கலின் அணுகூலங்களாக் கட்டற்ற சுதந்திரமான வர்த்தக நடவடிக்கை, நாடுகளுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வு, துரித தகவல் பறிமாற்றம் என்பவற்றைக் கூறலாம். அதேசமயம் அதன் பிரதிகூலம் குறித்து நோக்கினால் உலகமயமாக்கல் என்பது மேற்குலக நாடுகளால் அபிவிருத்தியெய்திவரும் மூன்றாம் மண்டல நாடுகளில் தமது பொருளாதார, கலாசார, பண்பாட்டு சிந்தனாரீதியான ஆதிக்கத்தையும், மனித உள்ளத்திலிருந்து இறைவன் பற்றிய சிந்தனையைக் கழற்றி எறிந்துவிட்டு சடவாத லோகாயுத சிந்தனையை (Secularism) விதைப்பதுமாகும்.
உலக ஒழுங்கு என்ற மேற்குலகின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் மூலம் ஏனைய நாடுகளின் மீது தமது பொருளாதார, கலாசார, பண்பாட்டு அம்ஷங்களைத் திணிக்க முயல்வது இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு விடயமல்ல. மாறாக 1883இல் இத்தாலிய மொஸோலினியினதும் 1889இல் ஜெர்மனிய ஹிட்லரினதும் பாஸிஸ, நாஸிஸக் கொள்கைகள் இதனை அமுல்படுத்தவே சர்வாதிகார ஆட்சிபுரிந்தன
ஜெர்மனியின் ஆரிய இனமே உயர்ந்ததென்றும் நாகரிகத்தின் முன்னோடி ஆரிய இனமென்றும் கூறி அயல் நாடுகளை ஆக்கிரமித்ததோடு பிரித்தானியா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற வல்லரசுகளுக்கே அச்சுறுத்தலாகவும் அமைந்தது. 18ஆம், 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய ஆதிக்கத்;திற்குட்பட்ட இலங்கை, இந்தியா போன்ற காலனித்துவ நாடுகளில் அதன் மொழி, பண்பாடு, கலாசாரம் போன்றவற்றைத் திணிக்க முயன்றமையையும் இதற்கு உதாரணமாகக்கொள்ளலாம்.
அன்று இராணுவரீதியான படையெடுப்புகளினூடாக மேற்கொண்ட நடவடிக்கைகளை இன்று மேற்குலகம் சிந்தனாரீதியான படையெடுப்பின் மூலம் சாதித்து வருகின்றது. தகவல் தொழிநுட்ப சாத்தியங்களின் செல்வாக்கோடு ஊடகங்களின் வழியாகக் கச்சிதமான முறையில் உலகளாவியரீதியில் இத்திணிப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொலைக்காட்சி, வானொலி, இணையம், சினிமா, துள்ளிசைப்பாடல்கள், சஞ்சிகைகள், விளம்பரங்கள், பெஷன் ஷோக்கள், அழகுசாதனப் பொருட்கள், நூல்கள், வீடியோக் கோப்புகள் என்பன மேற்குலகின் கலாசாரத்திணிப்பிற்கான நவீன படையெடுப்புச் சாதனங்களாக விளங்குகின்றன.
(Secularist Globalization) இருந்து இவ்வுலகை இஸ்லாமிய உலகமயமாக்கலின் (Islamic Globalization) பால் திசை திருப்பவேண்டும். இஸ்லாத்திற்கெதிரான கட்டமைப்புகளைக் கட்டுடைக்கும் கடப்பாடு ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை. எனவே இஸ்லாமிய உலகமயமாக்கலை நோக்கிய நகர்விற்கு இன்றே அடித்தளமிடுவோம்……!

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...