ஆலிப் அலி (இஸ்லாஹி)
நோன்பு மாதம் வந்துவிட்டால் எம்மில் அநேகர் இரவைப் பகலாகவும் பகலை இரவாகவும் மாற்றிக் கொள்வதைக் காண்கின்றோம். அதிகாலையில் சஹர் செய்துவிட்டு எந்தவித இபாதத்களிலும் ஈடுபடாமல் நோன்பு திறக்கும் நேரம் வரை தூங்குபவர்களும் இருக்கின்றனர். பின்பு இரவு நேரங்களில் பாதைகளில் சுற்றித் திரிந்து வீண் கேலிக்கைகளில் ஈடுபடுகின்றனர். உண்மையில் நோன்பு மாதம் என்பது சோம்பேரிகளை உருவாக்குமொரு மாதமல்ல. மாறாக அது சிறந்த பண்பாடுடையவர்களையும் ஆளுமை உடையவர்களையும் வீரமிக்கவர்களையும் உருவாக்கும் மாதம்.
நோன்பாளிகளாக இருக்கும் நிலையில் நல்லமல்களில் ஈடுபடுவோமாயின் இப்பண்புகள் இயல்பாகவே எம்மில் உருவாகும். இஸ்லாமிய வரலாற்றில் நடந்த பல யுத்தங்கள் நோன்பு மாதமாகிய இந்த ரமழான் மாதத்திலேயே இடம்பெற்றுள்ளன. அதில் அந்த வீரர்கள் சற்றும் சலைத்துவிடாது வெற்றிகளையும் சுவீகரித்துள்ளார்கள் என்பதுதான் உண்மை. இது எமக்கோர் நல்ல படிப்பினை. அவ்வாறு நோன்பு மாதத்தில் நடந்த சில முக்கியமான வரலாற்றுப் போர்களைப் பற்றி சற்று அறிந்துகொள்வோம்.
2. மக்கா வெற்றி முஹம்மத் நபி (ஸல்) - ரமழான் - 10 ஹிஜ்ரி – 8
3. தபூக் யுத்தம் முஹம்மத் நபி (ஸல்) - ரமழான் - ஹிஜ்ரி – 9
4. காதிஸிய்யாப் போர் ஸஃதிப்னு அபீ வக்காஸ் - ரமழான் - 15 ஹிஜ்ரி – 14
5. ஸ்பைன் வெற்றி தாரிக் பின் ஸியாத் - ரமழான் - 28 ஹிஜ்ரி – 92
6. ஹித்தீன் யுத்தம் ஸலாஹுத்தீன் அல்அய்யூபி ரமழான் - ஹிஜ்ரி – 584
7. தாத்தாரியருக் கொதிராக முஸ்லிம்கள் மேற்கொண்ட யுத்தம் - ரமழான் - ஹிஜ்ரி – 658
இவ்வாறு இப்பட்டியல் இன்னும் நீண்டு செல்கின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...