"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

06 August 2011

மிகப்பெரிய இணையதளத் திருட்டு. சந்தேகத்தில் சீனா!

ஆலிப் அலி (இஸ்லாஹி)

ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச ஒலிம்பிக் ஒன்றியம் போன்ற சர்வதேச ரீதியில் 72 அமைப்புக்களின் இணைய தளங்களில் கடந்த ஐந்து வருடங்களாக இடம்பெற்று வரும் மிகப் பெரிய இணைய தளத் திருட்டு குறித்து பிரபல கணனி பாதுகாப்பு நிறுவனமான மெகாபீ (MacAfee) தகவல் வெளியிட்டுள்ளது.

அத்தோடு கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் இராணுவம் மற்றும் உள்துறை தொடர்பான இணையத்தளங்களில் துருவிகள் (Hackers)  உட்புகுந்து சர்வசாதாரணமாக இரகசிய தகவல்களைத் திருடும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலகம், CBI> பெண்டகன் என்பவற்றின் இணையதளங்களில் இத்திருட்டு அடிக்கடி நிகழ்ந்துள்ளது. மேலும் சில வங்கிகள், தனியார் நிறுவனங்களினதும் இணையதள இரகசியங்கள் திருடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் பின்னால் ஒரு நாடு இயங்குவது குறித்து அமெரிக்கா கூறியிருந்த போதிலும் இந்த நாடுதான் என்று உறுதியாகக் கூற முடியாத நிலையில் அமெரிக்கா இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் இயங்கிவரும் பிரபல கணினி பாதுகாப்பு நிறுவனமான மெகாபீ, இணையதளத் திருட்டு குறித்து சில தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் 2006 முதல் இதுபோன்ற இணையதளத் திருட்டுக்களில் ஈடுபட்டுள்ள நாடு சீனாவாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளது.

சீனா, அமெரிக்கா என்பன ஏழவே இணைய யுத்தத்தில் (Cyber war) களமிறங்கியுள்ள நாடுகள். தமக்கான இணைய ஆயுதங்கள் (Cyber warfare)> பாதுகாப்புப் படைகளைக் (Cyber Security Commands) கூட தயார்படுத்திவைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...