"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

08 August 2011

கட்டுரை எழுத சில வழிகாட்டல்கள்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

மனிதனின் உள உணர்வுகளில் தோன்றும் சிந்தனைகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தும் ஊடகமாக  மெழி காணப்படுகிறது. ஒரு கருத்தை அல்லது சிந்தனையை வாய் மூலம் வெளிப்படுத்துவதை விடவும் எழுத்துருவில் முன்வைப்பது நீண்ட காலம் நிலைத்து நிற்பதற்கும் அவ் விடயம் திரிபடையாமல் பாதுகாக்கப்படுவகற்கும் வழியமைக்கின்றது. இன்றைய உலகில் எமுத்துத்துறைக்கு இருக்கின்ற முக்கியத்துவத்தையும் சிறப்பையும் நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டும் என்பதில்லை.

அந்தவகையில் இன்றைய உலகின் இந்த எழுத்து, வாசிப்புத் துறைகளின் ஓட்டத்திற்கேற்ப எம்மையும் இற்றைப் படுத்திக்கொள்வதென்பது அவசியமானவொன்றாக அமைந்துள்ளது. ஆகவே கருத்துக்களையும் சிந்தனைகளையும் அல்லது இவையல்லாதவற்றையும் எழுத்து வடிவில் முன்வைக்க விரும்புவோருக்கு இக்கட்டுறை வழிகாட்டியாக அமையுமென எதிர்பார்க்கின்றேன்.

எழுத்துலகினுள் முதன் முதலில் பிரவேசிக்கும் ஒருவருக்கு எமுதவேண்டும் என்ற ஆர்வம் வந்தவுடன் எடுத்த எடுப்பில் ஒரு ஆக்கத்தை எழுத முடியாது. அவ்வாறு எழுதினாலும் கூட அந்த ஆக்கம் கருத்துச்செறிவுள்ளதாக அமையாது. எனவே அவர் எழுத முன்பு தன்னை அதற்காக தயார்படுத்த வேண்டும் பானையில் இருந்தால் தான் அகப்பைக்கு வரும்என்பதுபோல முதலில் எமது மூளையில் சேமித்தால்தான் பேனா முனைக்கு வரும்.

ஆக முதற் படியாக எழுத விரும்புவோர் பல்வேறு துறைகளிலும் தனது அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும். ஆதற்கவர் பல்துறைசார்ந்த புத்தகங்ககையும், கட்டுரைகளையும் வாசிக்க வேண்டும். வாசிப்பதோடு மட்டுமின்றி அதில் குறிப்பிடப்படும் முக்கியமான கருத்துக்களையும் தகவல்களையும், தரவுகளையும் குறிப்பெடுக்க வேண்டும். நாம் சுயமாக ஒரு ஆக்கத்தை எழுதும்போது இக்குறிப்புக்கள் எமக்கு கைகொடுக்கக்கூடும். அது மட்டுன்றி எம்மைச் சூழ நடக்கும் நிகழ்வுகளை விமர்சனக் கண்ணோடு நோக்கி அது  பற்றி புதுமையாக சிந்திக்கவேண்டும். புதுமையாக சிந்தித்தல் என்பதனை அல்ப்ரட் ஜோஜ்என்பவர் இவ்வாறு விளக்குகிறார். புதுமையாக சிந்திதிதல் என்பது அடுத்தவர்கள் பார்க்கின்ற அதே விடயத்தை நீயும் பார்க்க வேண்டும். ஆனால் அவர்கள் சிந்திப்பதற்கு முற்றிலும் மாற்றமாக நீ சிந்திக்க வேண்டும்.இவ்வாறு சிந்திக்கும் போது அந்நிகழ்வுகள் ஒரு கதை எழுதுவோனுக்கோ அல்லது கவிதைபுனைவோனுக்கோ கருவாக அமையலாமல்லவா? இவ்வாறு எமது செயற்பாடுகள் அமைகையில் எம்முள் எண்ணத்தெளிவும், விடயங்களை வெளிப்படுத்துவதில் லாவகத்தன்மையும் புதுப்புது சிந்தனைகளும் உருவாகும்.

புதுப்புது சிந்தனைகள் தோன்றும் போது முக்கியமானதொரு விடயத்தைக் கைக்கொள்ள வேண்டும். எம்மில் அவ்வப்போது அபூர்வமான சிந்தனைகள் தோன்றுகின்றன. பின்பு அவை இயல்பாகவே மறந்து விடுகின்றன. பின்பு அவசியமானதொரு சந்தர்ப்பத்தில் அதனை ஞாபகத்துக்குக்கொண்டுவர சிரமப்பட்டு தோற்றுப்போனவர்களும் எம்மில் உளர். எனவே இவ்வாறு தோன்றும் சிந்தனைகள் மறைவதற்கு முன்பு ஒரு குறிப்பேட்டில் குறித்துக்கொள்ள வேண்டும். இதுபற்றி இப்னு ஜவ்ஸிஎனும் அறிஞர் எழுதும்போது பலவிடயங்கள் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும்போது சிந்தனைகள் சற்று நேரத்துக்கு சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கும். பின்னர் அப்படியே மறைந்துவிடும். எனவே மறக்காமல் இருக்க உள எண்ணங்களை பதிந்து வைப்பது சிறந்தது.என்று குறிப்பிடுகிறார். நபி ()அவர்கள் கூறுனார்கள் “எழுதுவதைக்கொண்டு கல்வியைக் கட்டிப்போடுங்கள்”. ஒரு மாணவனுக்கு அவன் போகுமிடமெல்லாம் எப்படி ஒரு வாளும் கேடயமும்  முக்கியமோ அதேபோன்று ஒரு மாணவனுக்கு ஒரு போனாவும் ஒரு குறிப்பேடும் முக்கியம்” என ஒரு அறிஞர்கூறுகின்றார். எனவே அவ்வப்போது தோன்றும் சிந்தனைகளை மறக்கும் முன் குறிப்பேட்டில் (Note Book) குறித்துக்கொள்ளவேண்டும்.

அழுத்தமான விடயம், ஆழமான சிந்தனை, வளமான கற்பனை என்பன ஓர் எழுத்தாளனிடம் இருக்க வேண்டிய முக்கியமான அடிப்படைகளாகும். அவற்றை அவன் பெற்றுக்கொள்வதற்கான சிறந்த ஊடகமாக வாசிப்பு விளங்குகிறது. ஏனென்றால் வாசிப்புதான் மனிதனை முழுமனிதனாக மாற்றுகிறது. வாசிக்க வாசிக்க எமது சிந்தனைக்கூர்மை அதிகரிக்கின்றது. எண்ணங்கள் மெருகு பெருகின்றன, கற்பனைகள் வளமடைகின்றன. எழுத்துக்கான அடித்தளம் அமைந்து விடுகின்றது. புதிய புதிய சொற்கள் அறிமுகமாகின்றன. எழுதும் முறைமைகளை அறியமுடிகிறது. ஆகமொத்தத்தில் அதிகமாக வாசிப்பவர்களால் மட்டுமே காத்திரமாக எழுதமுடியும்.

இவ்வாறு எமது எழுத்தாற்றலை வளர்த்தவாறே நாம் அடுத்தகட்ட நடவடிக்கைக்குச் செல்லவேண்டும். அதாவது, எமது சிந்தனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டும். நாம் எதனையும் எழுத முன்னர் அதற்காக கருவைத்தெரிவு செய்துகொள்வது கட்டாயம். அது கதையாகவோ, காவியமாகவோ அல்லது கட்டுரையாகவோ இருக்கலாம். அதன்பின்பு நாம் எழுதப்போகும் விடயம் தொடர்பான பொருத்தமான தகவல்களைத் திரட்டி அவற்றை ஒழுங்குபடுத்திகிகொள்ள வேண்டும்.

நாம் ஒரு விடயத்தை எழுத ஆரம்பிக்கும் போது அதன் அத்திவாரத்தில் முக்கிய கவனம் செலுத்தவேண்டும். உதாரணமாக ஒரு கதையை எழுத ஆரம்பிக்கும் போது முன்னொரு காலத்தில்…” என்றெல்லாம் கேட்டும் வாசித்தும் சலித்துப்போன முறைகளைக் கையாள்வதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் இப்போக்கு வாசகர்களை ஆரம்பத்திலேயே சலிப்படையச் செய்துவிடும். மாறாக வித்தியாசமானதொரு கோணத்தில் ஆரம்பிக்கவேண்டும்.

உதாரணமாக பிரபல எழுத்தாளர் ரூஸோஅவரின் புத்தகத்தை ஆரம்பிக்கும்போதே மனிதன் சுந்திரமாகத்தான் பிறக்கிறான். ஆனால் எல்லால் இடங்களிலும் இவன் விலங்கிடப்பட்டவனாகத்தான் இருக்கிறான்என்ற வித்தியாசமான அமைப்பில் ஆரம்பிக்கின்றார். இது போன்ற வாக்கியங்கள் மூலம் எமது ஆக்கத்திற்கு  அழுத்தம் கொடுக்கும்போது அடுத்து எழுத்தாளர் என்ன சொல்ல வருகிறார்என்ற ஆவல் வாசகர்களிடத்தில் உருவாகின்றது.

நாம் எழுதப்போகும் விடயத்தை வாசகர்கள் எளிமையாகப் புறிந்து கொள்ளும் விதத்தில் தெளிவான இலகு நடையில் எழுதுவது சிறந்தது. அத்தோடு எமது கையெழுத்துக்கள் அழகாகவும், நேர்த்தியாகவும் இருந்தால்தான் ஆக்கத்தைப் படிக்க ஆசை வரும். எனவே கையெழுத்துக்கள் சீரில்லாதிருந்தால் திருத்திக் கொள்ளவேண்டும். அதுவே கணிணியில் வடிவமைப்பதென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். உண்மையில் இவ்வாறு தொடர்ந்து எழுதுவதால் அன்றாடம் எமது மூளையில் களஙஞ்சியப்படுத்தப்படும் தகவல்கள் ஒழுங்கு (Order) படுத்தப்படுகின்றன. அதுமட்டுமன்றி எழுத எழுத எமது எழுத்தும் மெருகேற ஆரம்பிக்கின்றது. அதனால் எமக்கென்றே ஒரு தனியான பாணி உருவாகி விடுகின்றது.

கட்டுரையொன்றை எமுதும்போது சில விடயங்களைமக் கருத்திற் கொள்ளவேண்டும். அதாவது ஒரு கட்டுரை மூன்று பகுதிகளை உள்ளடக்கியிருக்கும். அவை ஒழுங்கு முறைப்படி சிறப்பாக அமையும் போதுதான் அக்கட்டுரை முழுவடிவம் பெருகின்றது. கட்டுரையின் முதற்பகுதி முகவுரையாக அமையவேண்டும். அதில் கட்டுரை எதைச்சொல்ல வருகின்றது என்ற மேலோட்டமான சாராம்சம் காணப்படவேண்டும். அடுத்து கட்டுரையின் உடல். இதில் தான் கட்டுரையின் முக்கிய விடயங்கள் குறிப்பிடப்படும். கட்டுரை எதனைக் கருவாகக் கொண்டுள்ளதோ அது இப்பகுதியில் பரவலாக விளக்கப்படும். கட்டுரையின் இறுதிப்பகுதியாக முடிவுரை அமையும். இப்பகுதி கட்டுரையில் கூறப்பட்டவற்றின்பால் விழிப்பூட்டுவதாகவோ அல்லது பிரசினங்கள் பற்றி ஆராயப்பட்டிருப்பின் தீர்வுகளை முன்வைப்பதாகவோ அமையலாம்.

கட்டுரை எழுதும்போது முக்கியமாக ஒரு விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும். அதாவது அக்கட்டுரையை வாசகருக்கு நேருக்குநேர் நின்று விளக்கும் போக்கில் எழுதுவது சிறந்தது. அதற்காக இடையிடையே நீங்கள் அறிவீர்களா?, சிந்தித்துப் பாருங்கள்போன்ற சொற்பிரயோகங்களைக் கையாள்வது சிறந்தது. அத்தோடு ஆக்கத்திற்குப் பொருந்தக்கூடிய விளக்கப் படங்களை இடுவதுகூட வாசகர்களின் கவனத்தை ஈர்கச்செய்கிறது. 

ஆக்கத்தை எழுதி முடிந்ததும் அதனைத் திரும்பத் திரும்ப வாசித்து பிழைகளைத் திருத்த வேண்டும். ஒரு ஆக்கத்திற்கு தலைப்பிடும் போது அதனை எழுதமுள்பே தலைப்பிட்டுக்கொண்டு எழுத முடியம். ஆனால் அதைவிட ஆக்கத்தைப் பூரணப்படுத்தியதன் பின்பு தலைப்பைத் தெரிவுசெய்து  தலைப்பிடுவது சாலச்சிறந்தது. தலைப்பிடும் போது கூட வித்தியாசமான முறையிலிட வேண்டும். அத்தலைப்பும் வாசகர்களைக் கவருவதாக அமைய வேண்டும்.

இவ்வழிமுறைகளைக் கைக்கொள்ளும்போது எம்மில் ஒரு சிறந்த எழுத்தாற்றல் வளரும் என்பதில் ஐயமில்லை.

ஒருவர் எழுத்தாளராவதற்கான மூன்று அடிப்படை அம்சங்கள் கூறப்படுகின்றன. ஒன்று; எழுத்தை எழுத்தாகவே நேசிக்கும் மனப்பாங்கு அவரிடத்தில் ஏற்படவேண்டும். இரண்டு; ஆக்கம் பிரசுரமாகாவிட்டாலும்கூட பொறுமையுடன் அது பிரசுரமாவதற்கு விடா முயற்சிசெய்ய வேண்டும். மூன்று; எழுத்துத் துறையில் என்ன இடையூறுகளைச் சந்திக்க நேர்ந்தாலும் அதைப் பொருட்படுத்தாது தொடர்ந்தும் அத்துறையில் ஈடுபடவேண்டும். இம்மூன்று பண்புகளும் ஒருவரிடம் இருந்தால் அல்லது உருவாக்கிக்கொண்டால் நிச்சயமாக அவா் ஓர் எழுத்தாளராக முடியும்.

உண்மையில் எழுத்தாற்றல் என்பது எமது தொடர்ச்சியான முயற்சியின் பயனாகக் கிடைப்பதாகும். ஒருவன் எழுத்தாளன் என்ற அந்தஸ்த்தைப் பெறும்போது அந்த எழுத்தின் மூலம் படிப்பவர்களை அனுபவம் பெறச்செய்வதை மறக்கலாகாது. ஏனென்றால் அவனுக்கு அவ்வந்தஸ்த்தைப் பெற்றுக்கொடுத்தது வாசகர்களே. ஆகவே இன்றைய எழுத்துப் புரட்சியில் எம்மையும் ஈடுபடுத்தி காத்திரமான படைப்புகளை சமூகத்துக்குச் சமர்ப்பிப்போம். எழுத்துத்துறையை முறையாகப் பயன்படுத்துவோம்.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...