"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

16 September 2011

புவியின் கவசம் ஓசோன் மண்டலம் (Ozone)

September 16 ம் திகதி சர்வதேச ஓசோன் தினம்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

இப்பூமியில் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்காக அல்லாஹ் இப்பூமியைப் பல்வேறு வகைகளிலும் பாதுகாப்பானதாக அமைத்துள்ளான். அதிலே பல்வேறு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளான். மனித வாழ்வாதாரத் தேவைகள் அனைத்தையும் பூரணப்படுத்தியுள்ளான். இப்பூமியே மனிதனுக்காகச் செயற்படுகின்றது. பூமி மாத்திரமல்ல இப்பிரம்மாண்டமான பிரபஞ்சமே இந்த ஆறு அடி மனிதனுக்காகத்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:

அதில் உங்களுக்கு வாழ்க்கைக்குரிய (அனைத்து) சாதனங்களையும் நாம் ஆக்கித்தந்திருக்கின்றோம்”(07:10)

பூமியில் உயிர் வாழ்க்கை சாத்தியப்படுவதற்காக அல்லாஹ் அமைத்துத்தந்திருக்கும் பிரதானமான ஒரு பாதுகாப்பு அம்சம்தான் பூமியைச் சூழ காணப்படுகின்ற ஓசோன் (Ozone) மண்டலம். ஓசோன்என்பது கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்ட ஒரு சொல்லாகும். இது மணம்என்ற பொருளைத் தருகின்றது. 18ஆம் நூற்றாண்டின் பின்பே பூமியைச்சூழ ஓசோன்படை அமைந்துள்ளமை அறியப்பட்டது.

புவியின் மேலுள்ள வளிமண்டலத்தின் வெப்பநிலையானது கடல் மட்டத்திலிருந்து மேலே செல்லச்செல்ல மாற்றமுறுகின்றது. இதனை வைத்து வளிமண்டலம் மூன்று பகுதிகளாகப் பிரித்துநோக்கப்படுகின்றது. கடலில் இருந்து 10 km வரையான பகுதி மாறன் மண்டலம் (Troposphere) என்றும்; 50 km முதல் 80 km வரையான பகுதி படைமண்டலம் (Mesosphere) என்றும்; 200 km இற்கு மேல் அயனமண்டலம் (Leno sphere) என்றும் வகைப்படுத்தப்படுகின்றது. வளிமண்டலத்தில் மாறன் மண்டலத்திற்கும், அயன மண்டலத்திற்கும் மத்தியில், பூமியில் இருந்து 10 km முதல் 50 km வரையான பிரதேசத்தில் பூமியைச் சுற்றிப் படைபோன்று இவ் ஓசோன் மண்டலம் அமைந்துள்ளது.

ஓசோன் படை உற்பத்தியாவதற்கு ஒட்சிசன் வாயு மிக மிக அவசியம். அதேபோன்று இவ்வொட்சிசன் வாயு உருவாக பச்சை நிறத்தாவரங்களும், சூரியஒளியும் அவசியப்படுகின்றது. தாவரங்களின் ஒளித்தொகுப்பு மூலம் வெளியாகும் ஒட்சிசன் வாயுவின் மூலமே இவ்வோசோன்படை உருவாகின்றது. எப்படியென்றால் ஒட்சிசன் வாயுக்கள் சூரியனில் இருந்து பூமியை நோக்கி வரும் UV (Ultra violet rays) கதிர்களைப் பயன்படுத்தி ஓசோன்களை உற்பத்தியாக்குகின்றன. இவ்வாறு மூன்று O2 அணுக்கள் ஒன்றுசேர்ந்தே ஓசோன் உருவாகின்றது. எனவே ஓசோனின் விஞ்ஞானக் குறியீடு O3 என்றவாறு அமைகின்றது. இவ்வாறு ஒட்சிசன் உற்பத்தியும் UV கதிர்களும் கூடுதலாகக் கிடைக்கின்ற வெப்பவலய நாடுகளிலேயே ஓசோன்படை அதிகமாக உற்பத்தியாகின்றது.

இத்துனை அம்சங்களையெல்லாம் சுமந்துள்ள இவ்வோசோன் படையின் தொழில்களைப் பற்றி சற்று நோக்குவோம். அல்லாஹ் சூரியனைப் படைத்த நாள் முதல் இன்றுவரை அது ஓயாது எரிந்துகொண்டே ஒளியையும், இன்னும் பல கதிர்களையும் காவிக்கொண்டிருக்கின்றது. சூழலில் காணப்படுகின்ற எல்லா Uv (Ultra violet rays) கதிர்களும் சூரியனால் வெளிக்காவப்படுகின்றவையே. சூரியனால் வெளிக்காவப்படுகின்ற கதிர்களில், Uv  கதிர்கள், காமாக் கதிர்கள், X கதிர்கள் என்பன முக்கியமானவை. Uv கதிர்கள் சக்தி வாய்ந்த மின்காந்த வீச்சுத்தன்மை கொண்டவை.

Uv கதிர்கள் பொதுவாக 200nmக்கும், 400nmக்கும் இடைப்பட்ட அலை நீளம் கொண்டவை. nm என்பது நனோமீற்றரைக் குறிக்கின்றது. 1mm10ஆகப் பிரித்தால் வருவதுதான் ஒரு நனோமீற்றாகும் (1 nanometer = 1.0 × 10-6 millimeter // 1 nm = 1.0 × 10-6 mm) ( 1 nanometer = 1.0 × 10-7 centimeter // 1 nm = 1.0 × 10-7 cm). வளி மண்டலத்தில் காணப்படுகின்ற ஒட்சிகன் (O2) மற்றும் நைதரசன் (N2) வாயுக்கள் 200nm இலும் குறைந்த Uv கதிர்களையே அகத்துரிஞ்சுகின்றன. இவற்றுடன் சேர்த்து ஓசோன் மூலக்கூறுகள் 200nmக்கும், 300nmக்கும் இடைப்பட்ட அலை நீளம் கொண்ட கதிர்களை அகத்துரிஞ்சுகின்றன. இக்கதிர்கள் சேய்மையான Uv கதிர்கள்எனப்படுகின்றன. இதனை ஆங்கிலத்தில் Far Uv Raysஎன அழைப்பர்.

சூரியனால் காப்படும் Uv கதிர்களில் 300nmக்கும் 400nmக்கும் இடைப்பட்ட அலை நீளமுடைய Uv கதிர்கள் புவியை வந்தடைகின்றன. இக்கதிர்கள் அண்மையான Uv கதிர்கள்எனப்படுகின்றன. இதனை விஞ்ஞானம் Near uv rays  எனப்பெயர்குறிக்கின்றது. சேய்மையான Uv கதிர்களுக்கும் அண்மையான Uv கதிர்களுக்கும் இடைப்பட்டதும், 290nmக்கும் 320nmக்கும் இடைப்பட்ட அலை நீளம் கொண்டதுமான Uv கதிர்கள் உயிரியல் தொழிற்பாட்டு Uv கதிர்கள் (Biological active uv rays)எனப்படுகின்றன. இவ்வகையான கதிர்களே உயிரினங்களில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆனால் அக்கதிர்களில் இருந்தும் ஓசோன் படை புவியைப் பாதுகாக்கின்றது. சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் இந்த புற ஊதாக் கதிர்கள் பூமியினுள் பிரவேசிக்கும் முன்பே மாறன் மண்டலத்திற்கும், அயன மண்டலத்திற்கும் மத்தியில் உள்ள ஓசோன் மண்டலம் அவற்றை உறிஞ்சி வடிகட்டி நல்ல கதிர்களை மாத்திரம் பூமியினுள் அனுப்பி நச்சுத்தன்மை வாய்ந்த கதிர்களை அவ்வாறே திருப்பி அனுப்பிவிடுகின்றன. இவ்வாறு திருப்பி அனுப்பும் இம்மண்டலங்கள் பற்றி அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

திருப்பியனுப்பும் வானத்தின் மீது சத்தியமாக” (86:11)

அவன் எத்தகையவனென்றால் பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகின்றான்” (57:04)

மனிதனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள  ஒன்றை (சூரியனை) அமைத்துவிட்டு பின்பு அதிலிருந்து மனிதனுக்கு வரும் தீங்குகளைத் தடுக்கவும் ஒன்றை (ஓசோனை) அமைத்த அல்லாஹ் மிக்க அன்புடையவன் தீர்க்கமான அறிவுடையவன். ஓசோன் படை வடிகட்டியதன் பின் அனுப்பும் சில சூரியக் கதிர்களிலும் நச்சுத்தன்மை காணப்படுகின்றது. அந்த நச்சுத்தன்மைகளைக் கூட உறிஞ்சி எடுப்பதற்காக அல்லாஹ் பூமியிலும் ஒரு ஏற்பாட்டை வைத்திருக்கின்றான். என்ன தெரியுமா? எமது சூழலில் காணப்படுகின்ற விச ஜந்துக்களான பூரான், விசப் பாம்புகள், தேள் போன்ற உயிரினங்களும் இவ்வகையான நச்சுக் கதிர்களில் உள்ள நச்சுத் தன்மைகளை உறிஞ்சி எடுப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்!

அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணுவீர்களாயின் அதனை நீங்கள் (கணக்கிட்டு எண்ணி) வரையறுத்துவிடமாட்டீர்கள்” (16:18)

ஓசோன் படை தேய்ந்து சிதைவடைவதால் பூமி பல இன்னல்களை எதிர்கொள்ளும். 1987களில்தான் வினஞ்ஞானிகள் ஓசோன் படை தேய்வடைந்து வருவதை ஆராய்ந்து உறுதிப்படுத்தினர். இத்தேய்வு துருவப்பகுதிகளை அண்டிய பகுதிகளில் கூடுதலாக நிகழ்ந்து வருகின்றமையும் அவர்களால் கண்டறியப்பட்டது. ஓசோனின் சிதைவு குறித்து முதன் முதலில் “Dr.போல் ஹேர்ட்சன் மரியோ மொலினா, சேர்வூட்ரோனல்ட்ஆகிய விஞ்ஞானிகளே உலகிற்கு அறிவித்தனர்.

ஐரோப்பிய விண்வெளி முகவர் நிலையத்தினால் ஓசோனின் அழிவு குறித்து அவதானிப்பதற்கென்றே Envisat என்று ஒரு செய்மதி அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்ச்சியாக ஓசோன் படையின் அழிவுகள் குறித்த தகவல்களை வழங்கிவருகின்றது. அதன்படி 1997ல் 30 சதவீதத்தில் இருந்த ஓசோனின் அழிவு தற்போது 40 சதவீதத்தை எட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி ஆஸ்த்ரியாவின் தலைநகரான வியன்னாவில் இடம்பெற்ற ஐரோப்பிய புவி அறிவியல் கூட்டமைப்பு (European Geosciences Union)இன் வருடாந்த ஒன்று கூடலில் ஓசோனின் தேய்வு குறித்து பல புதிய கவலைதரும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அதில் ஏலவே விடுவிக்கப்பட்டுள்ள குளோரோ புளோரோ காபன்களும் இன்னும் பல இரசாயனப் பொருட்களும் அழிவடையாமல் அவ்வாறே தேங்கியிருந்து மீண்டும் மீண்டும் ஓசோனை அழித்துவருவதாகவும் இதனால் காலநிலையில் குளறுபடிகள் ஏற்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஓசோன் படை தேயவும், அதில் ஓட்டைகள் ஏற்படவும் சில இரசாயனப் பொருட்களே காரணமாயுள்ளன. உதாரணமாக: மிதையில் புரோமைட் (MeBr), காபன்டெட்ரா குரோமைட் (CTC), குளோரோ புளோரோ காபன்கள் (CFCs), மிதையில் குளோரோபோம் (C2H2CI3)  மற்றும் கழிவுப் புகைகளிலிருந்து வளிமண்டலத்துடன் கலக்கும் இரசாயனப் பதார்த்தங்கள், விண்வெளி ஆராய்ச்சிக்குச் செல்லும் Rocket போன்ற இன்னும் பல காரணிகளால் ஓசோன் படை தேய்வடைந்து வருகின்றது. இவற்றோடு எம்மால் சூழலுக்கு விடுவிக்கப்படுகின்ற 96 வகையான இரசாயனப் பொருட்களால் ஓசோன் மண்டலம் அதிக அழிவுக்குள்ளாகிவருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Uv கதிர்களை வளிமண்டலத்துடன் சேரவிடாது ஓசோன் படை பக்கபலாமயிருந்து தடுக்கின்றது. அதையும் மீறி சேருமானால் மனிதன் உற்பட பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டியேற்படும். உதாரணமாக தோல் சுருங்குதல், தோல் புற்றுநோய் (Skin cancer) ஏற்படல், தோலில் கரும்புள்ளிகள் தோன்றல், கண் பார்வை குன்றுவதோடு கண்னில் வெள்ளை படர்தல் (Cataract), மற்றும் சுவாச நோய்கள் தோன்ற வாய்ப்புள்ளன. அத்தோடு தாவரங்கள் நலிவடைந்து இறந்துவிடும். புவியின் மேற்பரப்பு வெப்பமடைந்து பனிப்படலங்கள் உருகி கடல் மட்டம் உயரும். இதனால் தரைப்பகுதி கடலினால் படிப்படியாக மூழ்கடிக்கப்படும். இன்னும் இது போன்ற பல பிரச்சினைகளுக்கு மனிதன் முகம் கொடுக்கவேண்டிவரும். இத்தகைய தீங்குகளில் இருந்து அல்லாஹ்தான் எம்மைப் பாதுகாக்க வேண்டும்.

நாம்கூட இயன்றவரை ஓசோனைப் பாதிப்புக்குள்ளாக்கக்கூடி பொருட்களைப் பயன்படுத்துவதிலிருந்தும் அவற்றை கொள்வனவு செய்வதிலிருந்தும் தவிர்ந்துகொள்ளவேண்டும். நாடளாவிய ரீதியில் இதுதொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்டுவதற்காக இம்மாதம் (September) 16ம் திகதி சர்வதேச ஓசோன் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே நாமும் எமது சுற்றத்தாரையும் உறவினரையும் நண்பர்களையும் அறிவுருத்தி இதில் அவர்களையும் கவணமெடுக்கச் செய்யவேண்டும்.

துன்பத்தால் எது உங்களை வந்தடைந்தாலும் (அது) உங்கள் கரங்கள் சம்பதித்துக்கொண்ட (காரணத்)தினாலேயாகும்.” (42:30) மற்றுமொரு இடத்தில்
மனிதர்கள் தமது கைகளால் செய்துகொண்ட விணையின் காரணமாகக் கரையிலும் கடலிலும் (அழிவு) குழப்பங்கள் தோன்றிவிட்டன. அவர்கள் செய்தவற்றின் சில (விளைவுகளை) அவர்களுக்கு அவன் அனுபவிக்கச் செய்வதற்காக (இவ்வாறு சோதிக்கின்றான்)” (30:41)

குறிப்பு 2011 செப்டம்பர் மாத அகரம் சஞ்சிகையில் பிரசுரமானது.

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

realy very very use this sa

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...