"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

17 October 2011

ஒரு வெளிநாட்டுக் கணவனின் ஏக்கம்!



உன்னோடு பேசவே
ஒரு பங்கு என் ஊதியம்
இணையத்திற்காக
நம் இணக்கத்திற்காக!

அள்ளிக்கொடுக்க
எண்ணுவேன் – மாதமானால்
இருந்தும் கிள்ளிக்கொடுக்க
எண்ணுவேன் பணத்தை!

விலங்கிடப்படாத கைதியாக நான் இங்கே
உன் நினைவுகளில்...
விடுதலைக்காக ஏங்குவேன்
விடுமுறைக்காகவும்!

இணைப்பு துண்டித்ததும்
இறுக்கமாக இருக்கும்
இதயத்திற்குள் புழுக்கமாகவும் இருக்கும்!

உன் நிழற்படங்கள்
நிழற்குடையாய்…
சூடான சுவாசங்கள்
கண்களை இறுக்கும்
கண்ணீர்த் துளிகள் தெறிக்கும்!

குரல் கேட்டாலும்
மடல் கேட்டு
அடம்பிடிப்பாய்
வரைந்து அனுப்பினால்
விரைந்து அழைப்பாய்
குரல் கேட்க வேண்டுமென்று

இறுதி இரண்டு வரிகள்
தெரியவில்லை என புகார் செய்வாய்
அழிந்த எழுத்துக்களுக்குக் காரணம்
வழிந்த என் கண்ணீா் என்று தெரிந்தும்

இப்படிக்கு :
மறக்க முடியா உன்
நினைவுகளுடன்
மாதங்களை விரட்டும்
உன் மணாளன்.


உன்னோடு பேசவே
ஒரு பங்கு என் ஊதியம்
இணையத்திற்காக
நம் இணக்கத்திற்காக!

அள்ளிக்கொடுக்க
எண்ணுவேன் – மாதமானால்
இருந்தும் கிள்ளிக்கொடுக்க
எண்ணுவேன் பணத்தை!

விலங்கிடப்படாத கைதியாக நான் இங்கே
உன் நினைவுகளில்...
விடுதலைக்காக ஏங்குவேன்
விடுமுறைக்காகவும்!

இணைப்பு துண்டித்ததும்
இறுக்கமாக இருக்கும்
இதயத்திற்குள் புழுக்கமாகவும் இருக்கும்!

உன் நிழற்படங்கள்
நிழற்குடையாய்…
சூடான சுவாசங்கள்
கண்களை இறுக்கும்
கண்ணீர்த் துளிகள் தெறிக்கும்!

குரல் கேட்டாலும்
மடல் கேட்டு
அடம்பிடிப்பாய்
வரைந்து அனுப்பினால்
விரைந்து அழைப்பாய்
குரல் கேட்க வேண்டுமென்று

இறுதி இரண்டு வரிகள்
தெரியவில்லை என புகார் செய்வாய்
அழிந்த எழுத்துக்களுக்குக் காரணம்
வழிந்த என் கண்ணீா் என்று தெரிந்தும்

இப்படிக்கு :
மறக்க முடியா உன்
நினைவுகளுடன்
மாதங்களை விரட்டும்
உன் மணாளன்.

உங்கள் கருத்து:

3 comments:

Anonymous said...

உள்ளம் அழுகிறது...

சிறந்த கவிதை சகோ!

Anonymous said...

fathima ...........

sirantha kavithai.........

ithai velinatu manavikku matrinal.....
என் வாயைக் கட்டி .,
வயிற்றைக் கட்டி, அனுப்பும்
ஊதியத்தை ஊதிதள்ளுகிறாயே
இது உனக்கே நியாயமா இருக்கா...

ithu eppadi .....

Aalif Ali said...

பெண்களை இந்த இடத்திலிருந்து எழுதினா...
அவர்களின் நிலை இதவிடவும் கொடுமையாக, கவலையாக இருக்கும்.

தமது உடலை வறுத்திக்கொண்டு வாழ்வை வெளிநாட்டில் கழித்து சிலபோது கர்ப்பையும் இழக்கவேண்டிய நிர்ப்பந்தம்.

அந்த ஊதியத்தை இங்குள்ள கணவன் மார் சிகரட் புகை பிடித்தே ஊதி ஊதித் தீர்ப்பார்கள்.

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...