பொதுவாக கோழிகள் முட்டையிட்டபின் அதனை அடைகாத்தே
குஞ்சுகைளப் பொரிக்கின்றன. ஆனால் எமது நாட்டில் வெலிமடைப் பிரதேசத்தில் நடந்த
சம்பவம் ஒரு கோழி முட்டையிடுவதற்குப் பதிலாக நேரடியாக குஞ்சை ஈன்றுள்ளது. இது
பலரையும் ஆச்சரியத்திற்கு
உள்ளாக்கியுள்ளது.
வெளிமடை, கெந்திரிமுல்ல, நெடுன்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.ரஞ்சித் என்பவரின் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவரின் வீட்டிலுள்ள ஆறு கோழிகளில் ஒரு கோழி மாத்திரம் முட்டையிடாமல் நீண்ட காலம் இருந்தது. ஆனால் அது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும் வகையில் கோழிக் குஞ்சொன்றை ஈன்றது. குஞ்சை ஈன்றபின் தாய்க் கோழி இறந்துவிட்டது. எனினும் கோழிக்குஞ்சு நலமாக உள்ளது.
இவ்வாறான ஒரு சம்பவத்தை தான் கேள்விப்படுவது இதுவே முதல் தடவை என வெலிமடை பிரதேச தலைமை மிருக வைத்திய அதிகாரி பி.ஆர்.யாப்பா கூறினார்.
"அந்த கோழியின் உடலை பிரித்துப் பார்த்தேன். அந்த முட்டை கோழியின் உடலிலிருந்து
வழக்கமான வழியில் வெளிவரவில்லை. அது கோழியின் உடலுக்குள் அடை காக்கப்பட்டுள்ளது.
இறுதியில் கோழியின் உடலிலிருந்து நேரடியாக கோழிக்குஞ்சு வெளிவந்துள்ளது. அம்முட்டை
கோழியின் உடலுக்குள் 21 நாட்களுக்கு மேலாக இருந்துள்ளது" என அவர் கூறினார்.
குறிப்பு - ஈமெயிலில் கிடைத்த செய்தி.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...