மறுத்துவம், தொழில்நுட்பம், விண்ணியல், விஞ்ஞானம் என பல துறைகளிலும் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டித் தன்மையானது உலகில் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பது போன்றே பல பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளன. மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் இப்போட்டித் தன்மையானது தவிர்க்க முடியாதவொன்றாக மாறியுள்ளது. அதே சந்தர்ப்பத்தில் இப்போட்டித் தன்மையில் தற்போது அரபு நாடுகளுக்கிடையில் நிலவும் ஒரு விடயம்தான் உயர உயரக் கட்டிடங்களைக் கட்டி சாகசம் புரியவேண்டும் என்பது.
சமீபத்தில் புர்ஜ் டுபாய் கட்டப்பட்டது. உலகில் தற்போது மிக உயர்ந்த கட்டிடமாக விளங்குவது இக்கட்டிடமே. 830 மீட்டர் உயரம். அதற்கு அடுத்த இடத்தில் மக்காவின் மிகப் பெரிய கடிகார டவர் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்துக்கும் போட்டியாக சவுதி அரேபியாவில் ஜித்தா நகரில் கிங்டம் ஹோல்டிங் என்ற நிறுவனம் மிக உயர்ந்த கட்டிடத்தைக் கட்டவுள்ளது. 6330 கோடி ரூபா செலவில் 63 மாதங்களில் இக்கட்டிடம் நிர்மானிக்கப்படவுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளின் அடையாளமாகக் கூறிய ஒரு ஹதீஸை இங்கு ஞாபகிப்பது பொருத்தம் என்று நினைக்கின்றேன். நபியவர்கள் கூறினார்கள்.
“தமக்கிடையில் போட்டி போட்டுக்கொண்டு மக்கள் கட்டிடங்களைக் கட்டாதவரை மறுமைநாள் ஏற்படாது” (புஹாரி)
“மக்கள் தங்களுக்குள் பெருமையடித்துக்கெள்ளும் விதத்தில் பள்ளிவாயில்களைக் கட்டுவார்கள்” (நஸயீ)
“ஆடு மேய்க்கும் ஏழைகளும் நிர்வாணமாக அழைந்து திரிந்தோரும் செருப்பணியக் கூட வசதியற்றோரும் உயர்ந்த மாளிகைகளை எழுப்புவர்” (முஸ்லிம்)
இவர்கள் உயர உயரக் கட்டுவார்களாம் அமெரிக்காவும் இஸ்ரேலும் வந்து குண்டு போட்டுவிட்டுப் போவார்களாம். கத நல்லாத்தான் இருக்கு...
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...