"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

08 June 2012

இரத்தம் உறிஞ்சும் நுளம்பு

ஈயைப் போன்றே நுளம்புகளும் மனித வாழ்வுடன் இரண்டறக் கழந்தவை. (தொல்லைதரும் ஈக்கள்) பல்வேறு நோய்களை ஈட்டித் தருவதிலிருந்து நுளம்புகள் இன்று பெரும் தொல்லையாக நோக்கப்படுகின்றன. இவற்றின் உயிரியற் பெயர் டிப்டெரா (Diptera) என்பதாகும். ஈயைவிடவும் சிறிய ஒரு உயிரினம்தான் நெளும்பு. இச்சிறிய நெளும்பில் உள்ள சில அற்புதங்களைப் பார்ப்போம்.

ஈயைப்போன்றே நுளப்பிற்கும் சிறிது சிறிதாக சுமார் நூறு கண்கள் உள்ளன. இரவில் தனது உணவுத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள nவிளிக்கிழம்பும் நுளம்புகளுக்கு இக்கண்கள் இருளிலும் பார்வைத் திறனை வழங்குகின்றன. எமது உடலில் இரத்தத்தைப் பம்புவதற்காகத்தான் இதயம் தொழிற்படுகின்றது. இரத்தத்தையே உணவாகக் குடிக்கும் நுளம்புகளுக்கு வௌ;வேறு தொழில்களைச் செய்வதற்காக அச்சிறிய உடம்பிலும் அல்லாஹ் மூன்று இதயங்களை வழங்கியுள்ளான். அவற்றின் வாயில் 48 பற்கள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இறத்தத்தை உறிஞ்சுவதற்காக அதன் வாய்ப்பகுதியில் நீண்ட ஊசியொன்றும் உள்ளது. எமது உடலில் மயிர் முளைக்கும் இடத்தினூடாகத் தனது ஊசியைச் செலுத்தி இந்நுளம்புகள் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. சற்றுப் பலமாக உந்தி உடலில் ஊசியைச் செலுத்துவதற்கு அவற்றின் நீண்ட ஆறு கால்களும் உதவுகின்றன.

சிலவகை நெளும்புகள் எந்த உடலில் அமர்ந்து இரத்தத்தை உறிகின்றனவோ அந்த உடலில் நிறத்திற்குத் தன்னை மாற்றி யாரும் உணராத வண்ணம் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. சுமார் 60 மீட்டர்களுக்கு அப்பாளிருந்தே மனிதனின் இரத்த வாடையை நுகரும் ஆற்றல் மிகு உணர்ச்சிக் கொம்பையும் அல்லாஹ் இவற்றுக்குக் கொடுத்துள்ளான்.

அல்லாஹ் இணைவைப்பாளர்களுக்கு உதாரணமாக 22:73 இல் ஈயைப் பற்றியும் 29:41 இல் சிலந்தி வலையைப் பற்றியும் கூறி வசனங்களை இறக்கியதும் இதனைச் செவியுற்ற இணைவைப்பாளர்கள் அல்குர்ஆனைக் கேலிசெய்யும் விதமாக உங்கள் அல்லாஹ்வின் வேதத்தில் ஈயைப் பற்றி, சிலந்தியைப் பற்றியெல்லாம் கூறப்பட்டுள்ளனவா?” என்று வினவினர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக அல்லாஹ் பின்வரும் அல்குர்ஆனிய வசனத்தை இறக்கிவைத்தான்.
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (22:73)
அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்). (29:41)
إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا
நிச்சயமாக அல்லாஹ் நுளம்பையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்பட மாட்டான்” (2:26)
அதாவது உண்மை என்று வந்துவிட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும் அதனைப்பற்றிக் கூறுவதில் அல்லாஹ் வெட்கப்படமாட்டான். இவ்வசனத்தில் بَعُوضَةً என்ற சொல் நுளம்பைக் குறிக்கின்றது. நுளம்பு ஈயைவிடவும் சிறியதொரு உயிரினம். நுளம்பை மாத்திரமல்ல فَمَا فَوْقَهَا என்ற சொற்களின் மூலம் அதனைவிடவும் அற்பமான ஒன்றையும் அல்லாஹ் உதாரணமாகக் கூற வெட்கப்பட மாட்டான் என்கின்றது இவ்வசனம். இது தவிர மற்றுமொரு பொருளும் இதற்கு உண்டு. இப்பொருள் குறிக்கும் விடயம் இன்றுதான் நவீன விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈயல்ல, நுளம்பல்ல நுளம்பின் மீதுள்ள (فَوْقَ என்றால் ஒன்றின் மேல் என்றும் பொருள்படுகிறது.) அதனைவிடவும் அற்பமான உயிராக இருந்தாலும் அதனைப் பற்றிக் கூறவும் நான் வெட்கப்பட மாட்டேன் என்று நுளம்பின் தலையின் மேல் இருக்கும் ஓர் அற்பக் கிருமியின் உண்மைத்தன்மையைப் பற்றி எந்த வித நுணுக்குக் காட்டிகளும் இல்லாத அந்த நாளில் திருமறை கூறியிருக்கின்றது. (படம்)

இங்கு படம் A முகத்தோற்றத்தையும் படம் B அதன் நுண்ணிய கண்களையும் படம் C அக்கண்களை இன்னும் பெரிதுபடுத்தியும் படம் D அக்கண்களுக்கிடையில் இருக்கும் அல்குர்ஆன் கூறும் அற்புத உயிரினத்தையும் காட்டுகின்றது.

இவ்வுயிரினத்திற்கு விஞ்ஞானம் ப்ளாஸ்மோடியம் (Plasmodium) என்று பெயரிட்டுள்ளது. 1898 ஆம் ஆண்டு ரொனால்ட் ரொஸ் என்வர்தான் Culex நுளம்புகளில் ப்ளாஸ்மோடியம் உள்ளதைக் கண்டுபிடித்தார். இதற்காக அவருக்கு 1902 ல் நோபல் பரிசும் வழங்கப்ட்டது. ஆனால் ரொனால்ட் ரொஸ் கண்டுபடிப்பதற்கு முன்னர் அல்குர்ஆன் இவ்வறிவியல் அற்புதத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தும் அதுபற்றி சிந்திக்க ஒரு முஸ்லிம் விஞ்ஞானி கூட இருக்கவில்லையே என்று கவலைதான் வருகின்றது.

ப்ளாஸ்மோடியம் எனும் இந்நுண் கிருமிகளை எமது வெற்றுக் கண்களால் காண முடியாது. இவ்வகை உயிரிகள் நுளம்புகளின் உடலில் ஒட்டிக்கொண்டு பிற உயிர்களைத் தாக்குகின்றன. எமது உடலில் நுழைந்து இவை செய்யும் செயற்பாடுகள் மிகப் பயங்கரமானவை. நுளம்புகள் எம்மைக் குத்துகையில் அவற்றின் உடலில் இருக்கும் இந்நுண் உயிர்கள் மனித உடலில் நுழைந்து செங்குறுதிச் சிறுதட்டுக்களில் ஊடுருவி அவற்றில் தங்கிவிடுகின்றன. பின்னர் அங்கு இணப்பெருக்கம் செய்துவிட்டு குறுதி வழியாக கல்லீரலைத் தாக்குகின்றன. இதனால் பல நோய்களுக்கும் மனிதன் ஆளாகின்றான். இந்தவகை நுண் கிரிமிகளால்தான் மலேரியா நோய் பரவுகின்றது.

நுளம்புகளின் தொல்லை காரணமாக அவற்றைக் கூடிய அளவில் கொன்றுவிடுவதற்காக Badminton மட்டை போன்றதொரு உபகரனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று பரவலாக அனைத்து வீடுகளிலும் காணலாம். மின்கலத்தின் மூலம் இயங்கும் இவ் உபகரணம் நுளம்புகளில் பட்டதும் அவை சுடுபட்டு அவ்விடத்திலேயே இறந்துவிடுகின்றன. ஒரு முறை நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்கள் சிலரும் ஒரு பிரயாணத்திலிருக்கும்போது ஓரிடத்தில் அவர்கள் தங்கவேண்டி ஏற்பட்டது. அவ்விடத்தில் இருந்த எரும்புகளை நெருப்பினால் சுட்டுவிட்டு அதனைத் தங்குமிடமாக ஸஹாபாக்கள் ஆக்க முற்பட்டனர். அவ்விடம் வந்த நபியவர்கள் நெருப்பினால் உயிர்களைச் சுடவேண்டாம். ஏனெனில் நெருப்பினால் தண்டிக்கும் அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே உரித்தானதுஎன்றார்கள். இந்த ஹதீஸை வைத்துப் பார்க்கும்போது குறித்த உபகரணத்தால் நுளம்புகளைத் தீண்டும்போதுகூட அதிலிருந்து ஒரு நெருப்புப் பொறி பறப்பதோடு நுளம்பும் சுடுபட்டு இறந்துவிடுகின்றது. இச்செயலைத் தவிர்ந்துகொள்ளவேண்டும்.

இறைவனின் படைப்புக்கள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் அவனது இருப்புக்கான சான்றாதாரங்கைள, அத்தாட்சிகளை எமக்குப் புலப்படுத்துவனவாகவே இருக்கின்றன. அதுபற்றி சற்று சிந்தித்தாலே பல நூறு அற்புதங்கள் எமது சிந்தையில் படும்.
“(நபியே!) அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம்” (38:29)
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...