"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

05 June 2012

இணையத்திற்கு அடிமையாதல் ஒரு பயங்கர உளநோய்

Internet Addiction Disorder

தகவல் பரிமாற்றத்தின் ஜாம்பவானாகத் திகழும் உலகளாவிய வலைப்பின்னல்தான் இணையம். பாவனையாளர்களையும் தகவல்களையும் கணினிகளையும் பிணைத்து இன்றைய தொழில்நுட்ப உலகிலே ஒரு பிரம்மாண்டமான தகவல் புரட்சியை நடாத்தி வருகின்றது. இணையம் எமது அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. சிறியோர் முதல் முதியவர்கள் வரை அனைவரது தேவையும் இணையமாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை. நகர்ப்புற மற்றும் படித்த சமூகத்திடம் இத்தேவை வயது வரையறையின்றி சகல மட்டத்திலும் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

தொலைத் தொடர்புக்கும் தகவல் பரிமாற்றத்திற்கும் இணைய விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கும் சமூக இணைய தளங்களுடாக அரட்டையடிப்பதற்கும் பாட்டுக் கேட்பதற்கும் திரைப்படங்கள் பார்ப்பதற்கும் சொப்பிங் செல்வதற்கும் இன்னும் எத்தனையோ தேவைகளுக்கும் நாம் இணையத்தை அதிகமாக நாடிச் செல்கின்றோம். மனிதன் எந்தளவு இணையத்தில் பிரவேசிக்க விரைகின்றானோ அதேபோன்று இணையமும் மனிதனை புதிய புதிய தொழில்நுட்பங்களில் எல்லாம் இலகுவாக வந்தடைந்து கொண்டிருக்கின்றது.

வலைமேய்ச்சலில் இத்தகைய பயன்களையெல்லாம் தேடித் தேடிப் பெற்றுக்கொள்ளும் மனிதன் அவன் அறியாமலேயே இன்று அதற்கு அடிமையாகி வருகின்றான். இதற்குக் காரணம் ஒன்று இணையம்என்ற சொல் மனிதர்களிடம் பூதாகரமாக முன்வைக்கப்பட்டுள்ளமையும் மற்றையது இணையத்தில் கொட்டிக்கிடக்கும் அறிவியற் பொக்கிஷங்களும்தான். இவ்வாறாக தமது தேவைகைள நிவர்த்தி செய்துகொள்ள இணையத்தில் ஆரம்பமாக நுழையும் மனிதன் பின்னர் படிப்படியாக அதற்கு அடிமைப்பட்டுப் போவது இன்று உலகளவில் பெரும் சவாலாக நோக்கப்படுகின்றது.

ஒரு பழக்கத்தையோ அல்லது ஒரு விடயத்தையோ விடுவதற்கு மனமின்றி அதிலேயே பிண்ணிப் பினைந்திருப்பதோடு அதனைப் பலவந்தமாக விட்டுவிடுவதால் ஏதோவொரு வகையில் நோயாளியாக மாறும் நிலை ஏற்படுமாயின் குறிப்பிட்ட பழக்கத்திற்கு அல்லது விடயத்திற்கு அடிமைப்படுதல் என்று பொருள்கொள்ளப்படுகின்றது. ஒரு விடயத்தில் விருப்புடன் ஈடுபடுவதற்கும் அதற்கு அடிமைப்படுவதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

இணையத்தைத் தமது அத்தியவசயத் தேவைகளுக்காகப் பயன்படுத்த நாடுபவர்கள்கூட சிலபோது அதற்கு அடிமையாகிவிடுவதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. இணையத்திற்கு அடிமையாதல் (Internet Addiction) என்பது ஒரு நோய் என்பதனை இன்னும் மறுத்துவ விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ளாவிடினும் அதனை ஒரு உளவியல் சார்ந்த நோய் (Internet Addiction Disorder - IAD) என்ற நிலையில் வைத்து நோக்கவேண்டுமென உளநள மறுத்துவம் ஏற்றுக்கொள்கின்றது. அமெரிக்க மறுத்துவ சங்கம் (American Medical Association) அவசியம் இதனை ஒரு உள நெருக்கீடாகக் கொள்ளப்படல் வேண்டும் என்று விதந்துரைத்துள்ளது.

தேவைக்கு அதிகமாக இணையத்தைப் பயன்படுத்தும்போதும் அதற்காக அதிக நேரத்தைச் செலவிடும்போதும் எம்மை அறியாமலேயே உள்ளத்தில் அசாதாரண நிலைமைகள் தோன்றி அதற்கு மனிதர்கள் அடிமைப்பட்டுவிடுகின்றனர்என்ற உண்மையை முதன் முதலில் 1995 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிரபலமான மறுத்துவரான அய்வன் கோல்ட் பர்க் என்பவர் கூறியிருந்தார். அத்தோடு இணையத்திற்கு அடிமையாதல் என்பது சாதாரணமாக ஏற்படும் மனநோயைவிட விபரீதமானதாகும் என்றும் தெரிவித்தார். இணையத்தினால் ஏற்படும் மனப் பிறழ்வுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சிறப்பான மறுத்துவ மற்றும் உளவியல் சிகிச்சை முறைகளைக் கண்டுகொள்வது கட்டாயம் என்றும் அய்வன் ஆரம்பமாகவே கூறியுள்ளார்.

உள்ளம் அல்லது மனம் தொடர்பான நோய்களை இனங்கண்டுகொள்வதற்கு மனநள மருத்துவர்கள் பரவலாக உபயோகிக்கும் ஒரு நூல்தான் Diagnostic and Statistical Manual of Mental Disorders (DSM) என்பது. இதில் அனைத்து உள நோய்களும் அதற்கான அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் அடுத்தவெளியீடு (DSM v) 2013 இல் வெளிவர இருக்கின்றது. இப்பதிப்பு வெளிவருகையில் இணையத்திற்கு அடிமையாதலினால் ஏற்படும் நோய்கள் பற்றியும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் குறிப்பிடப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அந்த அளவு இணையத்திற்கு அடிமையாதலினால் ஏற்படும் மன நெருக்கீடு இன்றளவில் முக்கயத்துவம் கொடுத்து நோக்கப்படுவதோடு பரவலாக வளர்ந்துவரும் ஒரு நோயாகவும் அது இணங்காணப்படுகின்றது.

இணையத்திற்கு அடிமையான ஒருவரின் சுபாவம், குணவியல்புகள் மற்றும் நடத்தைகள் எப்படி இருக்கும் என்பதற்கான சரியான விளக்கத்தைப் பல்வேறு மட்டங்களில் நடாத்திய ஆய்வுகளை வைத்து அமெரிக்காவின் ஒரிகோன் பல்பலைக்கழக்த்தின் விசேட உளவியற் பேராசிரியரான ஜெரால்ட் ப்லோக்என்பவர் குறித்துக் காட்டியுள்ளார். அமெரிக்காவில் உளவியல் தொடர்பாக வெளிவரும் பிரபலமான சஞ்சிகையான American Journal of Psychiatry என்ற சஞ்சிகையில் அவர் எழுதிய நோய் அடையாளங்களில் சில முக்கியமானவற்றைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.

•          நேரம் போவதே தெரியாமல், நேரத்திற்கு உண்ணாமல், பருகாமல், சரியாக நித்திரைகொள்ளாமல், அத்தியவசியமான வேலைகளில் பொடுபோக்குடனும் அவற்றைக் காலம் தாழ்த்திக்கொண்டும் இணையத்தில் கட்டுண்டு கிடத்தல்.

•          இணையத்தை விட்டு விடுபடுவதும் இணையத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பை இழப்பதும் கோபத்தையும்  உளரீதியாக ஒரு நெருக்கீட்டையும் கொண்டுவருதல்.

•          இணையத்தின் வேகமாகம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் இவ்வேகம் போதாதென்ற மனநிலையும் இருக்கும் கணினி மென்பொருட்கள் போதாதென்று எண்ணுவதும் கணினி வண்தட்டின் (Heard Disk) கொள்ளளவு அதிகமாக இருப்பினும் அதுவும் போதாதென்ற மன உறுத்தல்.

•          இணையப் பாவனையிலிருந்து தற்காலிகமாக விடுபட்டாலும் சாதாரண வாழ்விலும் குழப்பத்துடனும் பதகளிப்புடனும் செயற்படல். காலம் தாழ்த்தி வேலைசெய்தல். எப்போதும் தூங்குவதற்கோ அல்லது எப்பணியிலும் ஈடுபடாது நேரத்தைக் கழிப்பதற்கோ நாட்டம் கொள்ளல். விரக்தியுடன் இருத்தல்.

உளவியலாளர் ஜெரால்ட் ப்லோக் குறிப்பிட்டுள்ள இதுபோன்ற நோய் அடையாளங்களுடன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் அதிகமாகவும் ஆசிய நாடுகளில் அரிதாகவும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. என்றாலும் துல்லியமான புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இதுவரையில் குறைந்த அளவிலான கணிப்பீடுகளே செய்யப்பட்டிருக்கின்றன.

நாடளாவிய ரீதியில் இணையப் பாவனை:

உலகில் அதிகமாக இணையம் பயன்படுத்தப்படும் நாடு தென் கொரியாவாகும். பொதுவாக நோக்கினால் தென் கொரியாவைச் சேர்ந்து அனைவரும் ஏதோ ஒரு வகையில் அன்றாடம் இணையத்துடன் தொடர்புற்றவர்களாகவே இருக்கின்றனர். தென் கொரியர்கள் அதிகமாக இணையத்திற்கு அடிமைப்பட்டு வருவதும் அவதானத்திற்குட்பட்டுள்ளது. தென் கொரிய அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கைகளின் பிரகாரம் அங்குள்ள 210,000 அளவான சிறுவர்கள் இணையத்திற்கு அடிமையானதற்கான அடையாளங்கள் தென்பட்டுள்ளன. அவர்களை மறுத்துவ நிலையங்களில் தங்கவைத்து சிகிச்சை அளிக்கவேண்டிய நிலை உருவாகி இருப்பதகவும் அறிக்கையூடாகத் தெரியவருகின்றது. கொரியாவின் உயர்தரப் பாடசாலை மாணவர்கள் வாரத்தில் 23 மணிநேரங்கள் இணைய விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். இது அவர்கள் இணையத்தில் செய்யும் ஏனைய வேலைகள் தவிர்ந்த கணிப்பீடாகும்.

மேலும் தென் கொரிய நாட்டின் மூத்த குடிமக்கள் தமது ஓய்வுகாலங்களில் 40% ஆன நேரத்தை இணையத்தில் கழிக்கின்றனர். மொத்தமாகப் பார்த்தால் தென் கொரியர்களில் 30% ஆனவர்கள் முழுமையாகவோ அதைவிட சற்று குறைவாகவோ இணையத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்று அந்நாட்டு அறிக்கை குறிப்பிடுகின்றது.

சீன மக்கள் தமது ஓய்வு நேரத்தில் 44% ஆன காலத்தை இணையத்தில் கழிக்கின்றனர். அவர்களில் 13.7% ஆனவர்கள் கட்டாய சிகிச்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய அளவு இணையத்திற்கு அடிமைப்பட்டவர்களாக இருக்கின்றனர். சீனாவின் விஞ்ஞர்ன அகடமியின் ஹாவோ லீஎனும் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினர் இணையத்திற்கு அடிமையாகியுள்ள சீனர்களிடம் மேற்கொண்டு வெளியிட்டுள்ள ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது இணையத்திற்கு அடிமையானவர்களுடைய மூளையின் செயற்பாடும் மதுபாவனை அல்லது போதைவஸ்துப் பாவனைக்கு அடிமையானவர்களுடைய மூளையின் செயற்பாடும் சம அளவில் தொழிற்படுகிறதுஎன்பதாகும்.

எமது நாட்டில் இணையப் பாவனை :

கடந்த பத்து வருடங்களுக்குள் எமது நாட்டிலும் இணையப் பயணர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் சென்றுள்ளது. எமது நாட்டின் மொத்த சனத்தொகையில் 8.3% ஆனவர்கள் அடிக்கடி இணையத்தில் சஞ்சரிப்பவர்களென அறியப்பட்டுள்ளது. Google நிறுவனத்தின் புள்ளிவிபரப் படி இலங்கையிலிருந்து 12% ஆனவர்கள் நாளாந்தம் இணையத்தில் இணைவதாக அறிய முடிகின்றது.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிலமை இதனைவிடவும் ஆபத்தில் உள்ளது. இந்நாடுகளில் இணையத்தை உபயோகிக்கும் ஒவ்வொரு எட்டு நபர்களிலும் ஒருவர் இணையத்திற்கு அடிமையானவர்களாக உள்ளனர்.

இணையத்தில் செலவிடும் கால அளவு :

சர்வதேச ரீதியில் நோக்கினால் ஒவ்வொரு நாளும் இணையத்தில் இணைபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவரும் அதே சமயம் இணையத்திற்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றது. இன்று உலகில் 300 கோடி மக்கள் இணைய இணைப்பில் இணைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அரை வருடமும் 50 விழுக்காடுகளால் இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. இந்த அனைவரையும் சேர்த்து மொத்தமாகஇவர்கள் அனைவரும் இணையத்தில் செலவிடும் காலத்தைக் கணிப்பிட்டால் ஒரு மாதத்தில் 3000 கோடி மனித மணித்தியாளங்கள் செலவிடப்படுகின்றன. இதுவே ஒருவர் இரவு பகலாக ஓய்வின்றி இணையத்தில் செலவிடும் காலம் 35 இலட்சம் வருடங்களாகும்.

கூடுதலாக நேரம் செலவிடப்படும் இணைய தளங்கள் :

உலக மக்கள் அனைவருமாக தமது அன்றாட வேலைகளை ஒதுக்கிப் புறம் வைத்துவிட்டு இணையத்தில் இலட்சக்கணக்கான மனித மணித்தியாளங்களைச் செலவு செய்துகொண்டு இருக்கின்றனர். பயனர்கள் எந்த எந்த இணைய தளங்களில் கூடுதலான நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் Microsoft இணையப் பக்கத்தில் நுழைபவர்களால் 400 கோடி மணித மணித்தியாலங்கள் செலவிடப்படுகின்றன. Google இணையப் பக்கங்களில் 250 கோடி மணித மணித்தியாலங்களும் Yahoo இணையப் பக்கத்தில் 170 கோடி மணித மணித்தியாலங்களும் facebook இணையப் பக்கத்தில் 150 கோடி மணித மணித்தியாலங்களும் செலவிடப்படுகின்றன.

வயதடிப்படையில் இணையப் பாவனை :

இணையத்தில் பல தரப்பட்ட வயதினரும் தமது கால நேரங்களைப் பயணுள்ள விதத்திலும் வீணாகவும் கழித்துக்கொண்டிருக்கின்றனர். கூடுதல் விகிதமானோர் இளம் வயதினரே. அதிலும் பெண்கள்தாம் அதிக நேரம் இணையப் பக்கங்களில் வலம்வருகின்றனர். 18 வயதிற்கும் 29 வயதிற்கும் இடையே உள்ளவர்களில் 93% ஆனவர்கள் இணையத்தில் நேரத்தைக் கழிக்கின்றனர். 30 வயதிற்கும் 49 வயதிற்கும் இடையே உள்ள உலக மக்களில் 81% ஆனவர்கள் இணையத்தில் ஒவ்வொரு நாளும் இணைகின்றனர். 50 வயதிற்கும் 64 வயதிற்கும் இடையே உள்ளவர்களில் 70% ஆனவர்கள் இணையத்தில் இணைகின்றனர். மேலும் 65 வயதிற்கு மேலுள்ளவர்களில் 38% ஆனவர்கள் இணையத்தின் பயனைப் பெறுகின்றனர். இப்புள்ளி விபரங்களுடாக சாதாரணமாக நோக்கினாலே இணையத்திற்கு அடிமையானவர்களில் அதிகமானவர்கள் 18 வயதிற்கும் 49 வயதிற்கும் இடையே உள்ளவர்கள்தாம்.

பால் அடிப்படையில் :

இணையப் பயனர்களிலும் ஆண்களைவிட பெண்களே அதிக நேரங்களை இணையப் பக்கங்களில் செலவிடுகின்றனர். இணையத்தில் அதிக நேரம் செலவிடும் ஆண்களின் விகிதாசாரம் 55 எனின் பெண்களின் விகிதாசாரம் 64 ஆகும். தேவைக்கும் அதிகமாக மேலதிக நேரத்தைப் பெண்களே இணையப்பக்கங்களில் உலா வருவதற்காகச் செலவிடுகின்றனர்.

அலுவலக நேரங்களில் இணையப் பாவனை :

பொதுவாக அலுவலகங்களில் இணையப் பாவனையை வரையரை செய்திருப்பினும் அலுவலக வேலைகளுடன் வேலையாக அனேகமானவர்கள் தமது தனிப்பட்ட தேவைகளுக்காகவும் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். சர்வதேச அளவில் நோக்கினால் அலுவலக நேரங்களில் தனிப்பட்ட தேவைகளுக்காக 67% ஆனவர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 18% ஆனவர்கள் பாலியல்சார் இணையதளங்களை அலுவலகங்களில் இருந்துகொண்டே பார்வையிடுகின்றனர். 25% ஆனவர்கள் அன்றாட செய்திகளை உடனுக்குடன் வழங்கும் இணைய தளங்களை நாடிச்செல்கின்றனர். 24% ஆனவர்கள் ஒன்லயின் சொப்பிங் செல்கின்றனர்.

இத்தகைய துல்லியமான புள்ளிவிபரங்கள் மூலம் உலக மக்கள் நாளாந்தம் எந்நதளவு இணையத்துடன் தொடர்புற்றிருக்கின்றார்கள் என்பதனைப் புரிந்துகொள்ள முடியும். இத்தகைய எண்ணிக்கையிலானவர்களில் இணையப் பக்கங்களுக்கு அடிமையானவர்கள் தாராளமாக இருக்கலாம் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் செய்தி.

இணையத்திற்கு அடிமையாதல் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும் விசேட நிறுவனம் ஒன்று அமெரிக்காவின் ஹாவட் பல்கலைக்கழகத்தின் மெக்லின் வைத்தியசாலையுடன் இணைந்து செயற்படுகின்றது. அதன் பணிப்பாளரான மெரேஸா ஒர்ஸான் எனும் பெண்மனி இணையத்திற்கு அடிமையாதல் என்ற சமூகப் பிரச்சினை தொடர்பாக ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டவர். அவரது கணிப்பீட்டின்படி இணையம் தொடர்பான அறிவுள்ள எந்தவொரு சமுதாயத்திலும் 5 முதல் 10 சதவீதமானவர்கள் நிச்சயமாக இணையத்திற்கு அடிமைப்பட்டிருப்பார்கள் என்பதாகும்.

இணையத்திற்கு அடிமையாதல் தொடர்பாக Virtual Addiction என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ள அமெரிக்கரான பேராசிரியர் டேவிட் க்ரீன்பீல்ட் என்பவர் கூறுவதாவது இணையத்தைப் பாவிப்பவர்களில் 6% ஆனவர்கள் எப்படியும் அதற்கு அடிமைப்பட்டிருக்கின்றனர்என்பதாகும்.

இணையத்திற்கு அடிமையாதலின் விபரீதத்தை உணர்ந்துள்ள வளர்முக நாடுகள் இணையத்திற்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக சிகிச்சை நிலையங்களை நிறுவியுள்ளன. அமெரிக்காவில் பென்ஸில்வேனியா நகரில் உள்ள இணையத்திற்கு அடிமையாதல் தொடர்பான மத்திய நிலையம் (The Centre for Internet Addiction) அவற்றில் ஒன்றாகும். இணையப் பாவைனையாளர் யாரும் தான் இணையத்திற்கு அடிமைப்பட்டிருக்கின்றேனா என்று தன்னைத்தானே பரீட்சித்துக் கொள்வதற்காக இந்நிறுவனம் ஒரு தொகை கேள்விகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது.

இதுவே சர்வதேசரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரியான பரீட்சார்த்தமாகும். இதனை IAT – Internet Addiction Test என்று அழைக்கின்றனர். இதில் மொத்தம் 20 வினாக்கள் காணப்படுகின்றன. ஒரு வினாவுக்கு ஐந்து புள்ளிகள்  வீதம் 100 புள்ளிகள் வரை வழங்கப்படுகின்றது. இப்புள்ளிகளின் பிரகாரம் ஒவ்வொருவரும் தான் இணையத்திற்கு அடிமைப்பட்டிருக்கின்றேனா அல்லது எவ்வளவு தூரத்திற்கு இவ்விடயத்தின்பால் நான் இலக்காகியுள்ளேன் என்பதனை அளந்து பார்த்துக்கொள்ள முடியும். இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்கு http://www.netaddiction.com என்ற இணையத்திற்குச் செல்லவேண்டும்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சென்பது இணைய விடயத்திலும் நிரூபனமாகின்றது. இணையத்தில் உச்ச பயனடைவோம். இணையம் எம்மில் உச்ச பயனடையாமல் பார்த்துக்கொள்வோம்.

குறிப்பு : மேமாத எங்கள்தேசம் பத்திரிகையில் பிரசுரமான எனது ஆக்கம்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகாக, விளக்கமாக சொல்லி விட்டீர்கள் நண்பரே !

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...