"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

26 August 2012

பிரிட்டன் யுவதிகள் அதிகமாக இஸ்லாத்தைத் தழுவுகின்றனர்

பிரிட்டனில் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டோரில் பெரும்பாலானோர் பெண்கள்.  சென்ற வருடம், பிரபல "டைம்ஸ் ன்லைன்" இணையதளம் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் யுவதிகள் பற்றிய ஒரு கட்டுரையை "Young. British. Female. Muslim" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது.  அதில் பின்வரும் தகவல்களைக் கூறுகின்றது டைம்ஸ் ன்லைன். 

பிரிட்டன் தேவாலயங்களில் வாரயிறுதி பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்போர் எண்ணிக்கை இரண்டு சதவிதத்துக்கும் கீழாக இருக்கும் நிலையில், இஸ்லாத்தை தழுவும் பெண்களின் எண்ணிக்கையோ அதிகரித்து வருகின்றது.

லண்டன் மத்திய பள்ளிவாயலில் (London Central Mosque, Regent Park) இஸ்லாத்தை தழுவும் மூவரில் இருவர் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோர் முப்பது வயதுக்கும் குறைந்தவர்கள்.

இருபதுகளில் மற்றும் முப்பதுகளில் உள்ள படித்த பிரிட்டன் யுவதிகள் இஸ்லாத்தை தழுவுவது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று கெவின் ப்ரைஸ் (Kevin Brice, Centre for Migration Policy Research, Swansea University) கூறியுள்ளார்.

இந்த கட்டுரையில் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ஐந்து பிரிட்டன் சகோதரிகளின் கருத்துக்களையும் டைம்ஸ் ன்லைன் வெளியிட்டுள்ளது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

இனாயதுல்லாஹ் அஹ்மத் அலி said...

21 ஆம் நூற்றாண்டு இஸ்லாத்திற்கே என்று ஷஹீத் செய்யித் குதுப் அவர்கள் கூறிய கருத்தும் வத்திக்கானிலிருந்து பொப் ஆண்டவர் அடுத்த 50 வருடங்களில் உலக சனத்தொகையில் அதிக எண்ணிக்கையுடையோராக முஸ்லிம்கள் இருப்பர், இஸ்லாம் உலக மதமாக இருக்கும் என்று கூறிய கருத்துக்களை இங்கு ஞாபகிப்பது பயன் தரும் என நினைக்கிறேன்.

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...