"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

25 June 2013

அழகுசாதனங்களில் 500 வகை நச்சு இரசாயனங்கள்

சில வகை நச்சுத் தன்மையுள்ள ரசாயனங்களை பயன்படுத்துவோருக்கு நரம்பு சார்ந்த கோளாறுகள் மற்றும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நீண்ட காலமாக ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பெண்கள் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதனங்களில் 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் கலந்துள்ளதாக இங்கிலாந்தில் உள்ள வாசனை திரவிய நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

பெண்கள் பயன்படுத்தும் உதட்டுச் சாயத்தில் (லிப்ஸ்டிக்) 9 வகை ரசாயனங்கள் கலந்துள்ளன. சராசரியாக மனித உடல் கிரகித்துக் கொள்ளும் அளவிற்கும் 20 சதவீதம் அதிகமாக அலுமினியம், காட்மியம், மேங்கனீஸ், குடல் புற்று நோய்க்கு காரணமான குரோமியம் போன்ற உலோக கலவைகளும் லிப் ஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.

பற்பசை, ஷாம்பூ போன்றவை நீண்ட காலத்திற்கு காலாவதியாகாமல் இருப்பதற்காக அவற்றில் சிந்தெட்டிக் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயனம் பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக மார்பக புற்றுநோய் மற்றும் மலட்டுத் தன்மைக்கு பெண்கள் உள்ளாகும் அபாயம் உள்ளது.

இதுபோல், பெண்கள் உபயோகிக்கும் பல்வேறு வகையான அழ
கு சாதனங்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய 500க்கும் மேற்பட்ட நச்சு ரசாயனங்களில் கலவை பயன்படுத்தப்படுகிறது. தற்கால இளம்பெண்கள் விரும்பும் பருத்த மார்பகங்கள், புட்டங்களைப் பெரிதாக்குவதற்காக ஏற்றப்படும் ஊசி மருந்து மற்றும் முகமாற்று அறுவை சிகிச்சை போன்ற முறைகளிலும் அதிக ஆபத்துகள் உள்ளன.

இவ்வகைச் சிகிச்சைகளினால் விரைவில் முதுமை எய்துதல், முகச் சுருக்கம், நீரிழிவு நோய், மருந்து மாத்திரைகளின் சக்தியை கிரகித்துக் கொள்ள முடியாத இயல்பு, மலட்டுத் தன்மை  போன்ற பக்க விளைவுகளும் ஏற்படலாம் என அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பெண்கள் அறிய... உணர வேண்டும்... நன்றி...

fathima said...

vry impotnd articl

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...