June 5th World Environment Day
வடபசுபிக் சமுத்திரத்தில்
கடற்கரையிலிருந்து 2000 மைல்களுக்கு அப்பால்
உள்ள ஒரு தீவு குறித்து MIDWAY
Film
நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட
3 நிமிட குறுந்திரைப்படம்
ஒன்று பார்க்கக்கிடைத்தது. மனித நடமாட்டமில்லாத தொலைதூரமிருக்கும் அத்தீவில் ஒரு நாளைக்கு
மட்டும் நூற்றுக் கணக்கான எல்பட்ராஸ் பறவைகள் இறந்து மடிகின்றன. காரணம் 2000 மைல்களுக்கு இப்பகுதியில்
இருக்கும் மனிதர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் நச்சுப் பொருட்கள்தான். இறந்த இடத்தில்
பறவைகளின் உக்கிப்போன எச்சங்கள் இருந்தாலும் இன்னும் உக்காது அவற்றின் வயிற்றில் இருக்கும்
பிளாஸ்டிக் பொருட்களை ஒரு சுற்றுச் சூழல் ஆர்வளர் புகைப்படமெடுப்பதை அக்குறுந்திரைப்படபம்
சுட்டிக்காட்டுகிறது.
ஆய்வுகூடங்கள், தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள், பண்ணைகள், வர்த்தக நிலையங்கள், மாடி வீடுகள் என பல்வேறு
இடங்களில் உற்பத்திசெய்யப்பட்டு பயன்படுத்தப்படும் 70,000 இற்கும் மேற்பட்ட நச்சு இரசாயனப் பொருட்கள் கழிவுப்பொருட்களுடன்
கழப்பதன் காரணமாக நிலம், நீர், வளி என்பன அண்மைக்
காலமாக மிக துரித கதியில் மாசுபட்டுவருவதை (இவற்றை உற்பத்திசெய்து தள்ளும்) விஞ்ஞான
உலகம் இனங்கண்டுள்ளது.
இதில் பாரதூரமான விடயம் என்னவென்றால்
உயிரினங்களைக் கருவிலேயே பாதிப்படையச் செய்து அவற்றை ஒட்டுமொத்தமாக அழிவுறச் செய்யும்
ஒருவகை மோசமான இரசாயனப் பதார்த்தம் நாம் பயன்படுத்தும் செயற்கைப் பொருட்களில் இருப்பதாக
சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இவ்வகை இரசாயனம் உயிரினங்களின் பரம்பலுக்குக்
காரணமான பால்விருத்தியை தொடர்ந்து பாதிப்பிற்குள்ளாக்கி வருவதால் அவற்றின் இன விருத்தி
குறைந்து வருவதாகவும் பூமியில் உயிரினங்களே இல்லாது அழிந்துபோகும் சாத்தியம் உருவாகும்
எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.
கருத்தடை மாத்திரைகள், ஆணுரைகள் மற்றும்
வீரியத்தை தூண்டும் மருந்துகள் போன்ற தயாரிக்கப்படும் சில வகை மருந்துகள் கழிவாக்கப்படும்போது
அவற்றிலிருந்து வெளியோரும் “ஒஸ்டஜின்” எனும் நச்சுப்பொருளே உயிரினங்களின் இனவிருத்தியைப் பாதிப்பதாக
இங்கிலாந்து சுற்றாடல் சபை (England Environment
Council) செய்தி வெளியிட்டுள்ளது.

இத்தகைய இனவிருத்தி அல்லது
கருவளப் பிரச்சினை ஒஸ்டஜினால் மட்டும் உருவாவதல்ல. பொதுவாக அனைத்து சந்தர்ப்பங்களிலும்
நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கொருட்களே இத்தகைய நச்சுப் பொருட்கள் எம்முடலில் கலக்கக்
காரணம். குறிப்பாக PVC குழாய்கள், பிளாஸ்டிக் நீர் தாங்கிகள், பொலித்தீன் உறைகள், ஒவ்வொரு வருடமும்
உற்பத்தி செய்யப்படும் மில்லியன் கணக்கான பெயின்டுகள் என நாம் உபயோகிக்கும் அனைத்திலும்
இத்தகைய நச்சு இரசாயனங்கள் கலக்கின்றன. அவற்றில் உள்ள BCB நச்சுப் பொருட்களும்
அதேபோன்று பிளாஸ்டிக் பொருட்களை வளையும் தன்மைகொண்டதாக மாற்றுவதற்குச் சேர்க்கப்படும்
“தலேற்று” எனும் இரசாயனப் பொருள்களும்
அதிக நச்சுத் தன்மை கொண்டவையாகும்.
இவ்வகை இரசாயனப் பதார்த்தங்களால்
தாக்கமுற்ற உயிரினங்கள் குறிப்பாக பறவைகளின் மூளை பாதிப்படைந்துள்ளதாகவும் இதனால் அவை
தொடர்ந்தும் அசாதாரண முறையில் ஒலி எழுப்பிக்கொண்டிருப்பதாகவும் இன்னும் சில விலங்குகளின்
குட்டிகள் இனவிருத்திச் சிக்கலுடன் பிறப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
அதிலும் அண்மைக்காலமாக மனிதர்களில் ஆண் சந்ததியாகப் பிறக்கவேண்டிய பல நூறு குழந்தைகள்
பெண் சிசுக்களாகப் பிறப்பதாகவும் அதற்கும் இத்தகைய இரசாயனப் பொருட்கள் உணவு, நீர், வளி என்பவற்றுடன்
கலந்து எம்முடலில் செலுத்தப்படுவதே எனவும் மேற்படி இங்கிலாந்து சுற்றாடல் ஆய்வாளர்கள்
கூறுகின்றனர்.
ஹோமோன் பிரதியீட்டுச் சிகிச்சையில்
பயன்படுத்தப்படும் ஒருவகை ஹோமோன்களை உணவுடன் கலந்து சில பெண் பறவைகளுக்கு ஊட்டியபோது
சில நாட்களில் அவை ஆண் பறவைகள் போன்று கத்த ஆரம்பித்ததாக கலிபோர்னிய பல்கலைக்கழக மிருகவியல்
துறை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
DTR போன்ற பூச்சி நாசினி மருந்து வகைகள் உள்ள உணவை உட்கொண்ட ரொபின்
பறவைகளின் குஞ்சுகள் மூளைப்பாதிப்புக்கு உட்பட்டிருப்பதை அல்பெஸ்ட்ரா பல்கலைக்கழக பேராசிரியர்கள்
கண்டுபிடித்துள்ளனர். மேலும் பாலியலில் ஆர்வம் இழந்து காணப்பட் சில ஆண் ரொபின் பறவைகளை
ஆராய்ந்து பார்த்ததில் அவற்றில் பெண் பறவைகளுக்கு இருப்பதுபோன்று முட்டை இடும் பாதைக்
குழாய்கள் உருவாகி விருத்தியாயிருந்ததைக் கண்டறிந்தனர். அதாவது ஆண் பறவைகள் பெண்மைத்
தன்மை பெற்று வருவதாகக் கூறுகின்றனர்.
புளோரிடா மாநிலத்தில் முதலைகளின்
இனவிருத்தி குறைவாக இருந்தமையை அவதானித்த ஆய்வாளர்கள் ஆண் முதலைகளை ஆராய்ந்ததில் அவற்றின்
இனவிருத்தி உறுப்புகள் மிகவும் சிறியதாகவும் அவற்றில் பெண் முதலைகளுடையதைப் போன்று
பெண் ஹோமோன் சுரப்பிகள் விருத்தியடைந்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். அதேவேளை அங்கிருந்த
தவளை இனத்தை ஆராய்ச்சிக்குட்படுத்தியபோது ஒரே தவளை ஆண், பெண் ஆகிய இரு இனத்தினதும்
ஜனன உறுப்புகளைக் கொண்டிருநத்தமையும் அவதானிக்கப்பட்டது. இது ஆய்வாளர்களைப் பெரிதும்
ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதற்குக் காரணம் அப்பகுதியில் கொட்டப்படும் வைத்தியசாலைக்
கழிவுப்பொருட்களில் காணப்பட்ட நச்சுப் பதார்த்தங்கள் இவற்றில் கலந்ததாகும்.
இங்கிலாந்தில் நீர் நிலைகளில்
வசித்துவந்த பூச்சியினங்களில் ஆய்வுக்குட்படுத்திய வற்றில் மூன்றில் ஒரு ஆண் பூச்சிக்கு
பெண் பிறப்பியல் உறுப்பு விருத்தியடைந்து முட்டை இட ஆரம்பித்துள்ளதாக தமது ஆய்வில்
இங்கிலாந்து சுற்றாடல் சபை (E.E.C.) செய்தி வெளியிட்டிருந்தது. சாக்கடை வாய்க்கால் வழியாக வரும்
ஒஸ்டஜின், டீஊடீ போன்றன காரணமாகவே
விலங்குகளில் இவ்வகை இனவிருத்திச் சிக்கல் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. ஒஸ்டஜின் காரணமாக
மனிதர்களிடத்திலும் இத்தகைய இனவிருத்திச் சிக்கல் ஏற்பட்டுவருகின்றது.
ஒரு சுப்பர் மார்க்கட்டில்
தட்டிலிருந்து எடுக்கப்பட்ட 14 வகை உணவுப் பொருட்களை ஆய்வுகூடத்தில் பரிசோதனை செய்தபோது அவற்றில்
இனவிருத்திச் சிக்களைத் தோற்றுவிக்கும் BCB மற்றும் தலேற்று போன்ற நச்சுத்தன்மை வாய்;ந்த இரசாயனப் பதார்த்தங்கள்
இருந்தமை உலக வனவிலங்கு நிதியத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த
இருவகை நச்சுப் பொருட்களும் உயிரினங்களின் குறிப்பாக மனித சந்ததியினரின் கருவளத்தைப்
பயங்கரமாகப் பாதிக்கும் தன்மைகொண்டவையாகும்.
BCB மற்றும் தலேற்று நச்சுப் பொருள் பாதிப்புக்கு உட்பட்ட தாய்மாருக்குப்
பிறந்த ஆண் குழந்தைகளின் ஆண் உறுப்பு விருத்தியாகாது மிகச் சிறியனவாகக் காணப்பட்டன
என நியூயோர்க் றொச்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வட அமெரிக்கப்
பகுதியிலும் இத்தகைய பாதிப்புக்குட்பட்ட ஒரு பகுதியில் வாழும் மக்களில் ஆண் சிசுக்களைவிட
இரட்டிப்பு எண்ணிக்கையான பெண் சிசுக்கள் பிறந்திருப்பதாக வைத்தியாசலைப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
நாம் அன்றாடம் பயன்படுத்தும்
இயற்கைக்குப் பங்கம் ஏற்படுத்தும் இத்தகைய காரணிகளால் ஆண்கள் விந்து வளம் குறைந்தவர்களாகவும்
பெண்கள் மலட்டுத் தன்மை கொண்டவர்களாகவும் மாறிவருகின்றமை இன்று சர்வதேச ரீதியில் பேசப்படும்
ஒரு பாரிய விடயம். இருபது நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கடந்த 50 ஆண்டு காலப்பகுதியில்
ஆண்களிடம் ஆண்மைக் குறைவு ஏற்பட்டுவருவதாகத் தெரிவிக்கின்றன.
ஆண்களிடம் விந்துகளின் சராசரி
அளவு ஏறத்தாழ அரைப்பங்காக வீழ்ச்சியடைந்திப்பதாக அவ் ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது.
சாதாரணமாக ஒரு மில்லி லீற்றர் விந்தில் 150 மில்லியன் விந்தனுக்கள் காணப்பட வேண்டும். ஆனால் இன்று சில
நாட்டவர்களிடம் இவ்வெண்ணிக்கை 60 மில்லியனாகக் குறைவடைந்திருப்பது காணக்கிடைத்துள்ளது. அதாவது
மனிதரில் இனவிருத்தி வலிமையானது அரைப்பங்காகக் குறைந்திருக்கின்றது என்றே கூறவேண்டும்.
“இந்த எண்ணிக்கை வருடாந்தம்
2 வீதத்தால் அதிகரித்து
வருவதாகவும் இந்நிலை தொடருமானால் இன்னும் சில தசாப்தங்களில் ஆண்கள் தங்களை “தகப்பன்” என்று கூறும் பாக்கியம்
அற்றவர்களாகிப் போவார்கள்”
என்றும் அவ்வாய்வு
கூறுகிறது.
பொதுவாகவே ஆண்கள் இன்று யுத்த
நடவடிக்கைகளால் அதிகம் இறப்பெய்தி வருகின்றனர். ஆரம்பத்தில் சமநிலையைப் பேணும் பொருட்டு
ஒவ்வொரு நூறு பெண் குழந்தைக்கும் 106 ஆண் சிசுக்கள் பிறந்தார்கள். ஆனால் காலப்போக்கில் இந்த விகிதம்
மாறுபட்டுள்ளது. தற்போது ஆண்களைவிட பெண் சிசுக்களின் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது.
அத்தோடு ஆயள் எதிர்பார்க்கை வீதமும் ஆண்களை விட பெண்களது அதிகம். அத்தோடு அமெரிக்காவிலும்
ஜப்பான் தேசத்திலும் 250,000 ஆண் மகவாகப் பிறக்கவேண்டிய
குழந்தைகள் இத்தகைய நச்சுப் பாதிப்பினால் பெண் குழந்தைகளாகப் பிறப்பதாக ஆதாரபூர்வமற்ற
ஒரு தகவலும் அறியக்கிடைத்தது.

1 comments:
நல்ல ஆக்கம்...
தொடர வாழ்த்துக்கள்...
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...