"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

29 June 2014

ரமழானும் ஈத்தம் பழமும்

புனி மாதங்களில் ஒன்றான ரமழானை நாம் நெருங்கிவிட்டோம். அதிலே கடமையாக்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான அமல்தான் நோன்பு நோற்றல். பொதுவாக நோன்பு நோற்ற நாம் அதனைத் திரப்பதற்காகப் பயன்படுத்தும் ஒரு அருமையான பழம்தான் பேரீத்தம் பழம். இப்தார் வேலையில் அப்பிள் பழம், தோடம் பழம், வாழைப்பழம் மற்றும் என்ன இதர உணவுகள் இருந்தாலும் நாம் ஏன் ஈத்தம் பழத்தை முதலில் உண்கின்றோம் என்றால் அதில் பல நன்மைகள் இருக்கின்றன என்பதால் தான். அல்குர்ஆனிய வசனங்களிலும் நபியவர்களது பொன்மொழிகளிலும் கூட பேரீத்தம் பழங்கள் பற்றி அதிகமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை நாமறிவோம். அப்படியொரு சிறப்பம்சம் பேரீத்தம் பழங்களில் காணப்படுகின்றது.

ஈத்தம் மரத்தின் அமைப்பு

ஈத்த மரங்கள் தெண்ணை, பனை வகையைச் சார்ந்தவை. அதிலும் பல வகை உண்டு. சில மரங்கள் மிக உயர்ந்து வளர்ப்பவை. இன்னும் சிலவை குட்டையானவை. அண்மைய ஆய்வொன்றின் படி, உலகில் அண்ணலவாக 105 மில்லியன் ஈத்தம் மரங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 62 மில்லியன் அறபு நாடுகளில் காணப்படுகிற. இங்கிருந்து பெறப்படுகின்ற ஈத்தம் பழங்களே அனைவராலும் அதிகமாக வாங்கி உண்ணப்படுகின்றன. அரபு நாடுகளிலிருந்து மட்டும் 600 வகையான பேரீத்தம் பழங்கள் பெறப்படுகின்றன. அவற்றுல் அஜ்வா, பரகாவி, பரீர், துக்லதுன் நூர், மப்ரூம், சுக்கரி, அன்பரா போன்ற ஈச்சம் பழங்கள் மிகவும் பிரசித்தமானவை.

ஈத்தம் பழம்கொண்டு நோன்பு திறப்பதன் சிறப்பு

நோன்பு திறப்பதை பேரீத்தம் பழம் கொண்டு ஆரம்பிப்பது நபியவர்களது ஒரு சுன்னாவாகும். நபியவர்கள் கூறினார்கள். “ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழம் கொண்டு நோன்பு திறக்கட்டும். ஏனெனில் அது பாக்கியமுடையது. அல்லது தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்கட்டும். அது அனைத்தையும் சுத்தப்படுத்தக்கூடியது.என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

உண்மையில் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தையும் சேர்த்துக்கொள்வதால் அது மனித உடலுக்குப் பல்வேறு அனுகூலங்களை அளிக்கின்றது. ஒரு நோன்பாளி சுமார் 13½ மணிநேரங்கள் தொடர்ந்தும் பசித்திருப்பதனால் அவனது இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு வெகுவாகக் குறைகின்றது. எனவே பேரீத்தம் பழத்தை உட்கொள்ளும்போது அது விரைவாகச் சக்கரையின் அளவை ஈடுசெய்து விடுகின்றது. காரணம் ஈத்தம் பழத்தில் 75 – 87 இற்கு இடைப்பட்ட வீத அளவு சக்கரை காணப்படுகின்றது. அத்தோடு 55 வீதமான குலுகோஸும் அடங்கியுள்ளது. எனவே ஈத்தம் பழத்தை உட்கொள்ளும்போது அதிலுள்ள சக்கரையும் குலுகோஸும் விரைவாக உறிஞ்சப்பட்டு இரத்தத்துடன் கலக்கின்றன. பின்பு உடல் பூராகவும் விணியோகமாகி எமக்குப் புத்துணர்வு ஏற்படுகின்றது.

பொதுவாக நாம் எந்த உணவுப் பண்டங்களை உண்டாலும் அவை சமிபாட்டுத்தொகுதியை அடைந்து சுமார் 4 மணிநேரங்களின் பின்பே குலுகோஸாக மாற்றப்பட்டு இரத்தத்துடன் கலந்து உடல்முழுக்க பரிமாற்றப்படுகின்றன. அதனால் நோன்பு திறந்த்தும் உடல் எதிர்பார்க்கின்ற அளவு துரிதமாக சக்கரை, குலுகோஸு போன்றவற்றை உடலால் பெற முடிவதில்லை. ஆனால் ஈத்தம் பழம் ஏழவே பெரும் அளவிளான சக்கரை மற்றும் குலுக்கோஸைக் தன்னகத்தே கொண்டிருப்பதால் உடனடியாக உடல் எதிர்பார்க்கும் சக்தியைக் கொடுத்து உடலைத் தெம்படையச் செய்கின்றன. மற்றும் எமது ஈரலுக்குப் பலத்தை அளித்து உமிழ் நீரிலுள்ள நோய்க்கிருமிகளையும் அழித்துவிடுகின்றது. நபியவர்கள் ஈச்சம் பழகொண்டு நாம் நோன்பு திறந்ததற்கு இதுவும் ஒரு காரணம்தான்.

கர்ப்பிணித் தாய்மாருக்கு மிகச் சிறந்த உணவு

பிரசவ நாளை அண்மித்து இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அதிகமாக சக்கரை உணவுகளை வழங்கவேண்டும் என்பது வைத்தியர்களின் ஆலோசனை. காரணம் நலிவுற்றுக் கிடக்கும் அவர்களது உடலை பலப்படுத்தவும் பிரசவ நேரத்தில் அவ்வலியைக் குறைக்கவும் பிரசவத்தில் அதிகமாக இரத்தம் வெளியேறும்போது அதனை ஈடுசெய்துகொள்ளவும் அதேசமயம் தாய்ப் பாலை அதிகமாகச் சுரக்கச் செய்யவும் இவ்வாறு கூறுகிறார்கள். அதற்கான சிறந்த உணவாக அவர்கள் பேரீத்தம் பழத்தை சிபார்சு செய்கிறார்கள். ஏனெனில் சாதாரணமாக பேரீத்தம் பழத்தில் 75 – 87 இற்கு இடைப்பட்ட வீத உச்ச அளவு சக்கரையும்  55 வீதமான குலுகோஸும் அடங்கியுள்ளது. எனவே ஈத்தம் பழம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாகும். மர்யம் (அலை) அவர்கள் ஈஸா நபியைப் பிரசவிக்கும் போது அல்லாஹ் அவருக்கு இட்ட கட்டளை ஈத்தம் பழம் சாப்பிடுமாறுதான். அல்லாஹ் கூறுகின்றான்.

அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார் பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார். பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது "இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா" என்று கூறி (அலரி)னார். அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து "(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழால் ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்" என்று அழைத்து கூறினான். "இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும். "ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக!” (19:23-26)

ஈத்தம் பழம் ஒரு நிறையுணவு
ஈத்தம் பழம், ஒரு பழம் என்ற வரையரைக்கப்பால் அது ஒரு நிறையுணவாகவும், அரு மருந்தாகவுமுள்ளது. மனித உடலுக்குத் தெவையான ஊட்டச் சத்துகளை  பிரதான ஊட்டச் சத்துக்கள் (Macro Nutrition), இரண்டாம் தர ஊட்டச்சத்துக்கள் (Micro Nutrition)  என இரு வகையாகப் பிரிக்கலாம். புரதம், மாப்பொருள், கொழுப்பு என்பன Macro Nutrition என அழைக்கப்படும் மனித உடலுக்கு இன்றியமையாத பிரதான ஊட்டுச்சத்துக்களாகும்.  நமது உடலுக்கு நாளொன்றுக்குத் தேவையான இந்த பிரதான ஊட்டச் சத்துக்கள் (Macro Nutrition) னைத்தும் சிறிதளவு ஈத்தம் பழங்களில் காணப்படுகின்றன. 100 கிராம் ஈத்தம் பழத்தில் 75 கிராம் மாப்பொருளும், 2 கிராம் புரதமும் காணப்படுகின்றன.

அவ்வாறே இரண்டாம் தர ஊட்டச்சத்துக்களும் ஈத்தம் பழத்தில் செரிந்து காணப்படுகின்றன. சற்று மூச்சுப் பிடித்து வாசியுங்கள். சோடியம் 2 மில்லி கிராம், சீனி 63 கிராம், விட்டமின் A 10 மில்லி கிராம், விட்டமின் C 4 மில்லி கிராம், விட்டமின் E 5 மில்லி கிராம், விட்டமின் கே 2.7 மைக்ரோ கிராம், மைக்ரோ தயமின் 0.052 மில்லி கிராம், ரைபோ பிலாவிட் 0.066 மில்லி கிராம், நயாஸின் 1.274 மில்லி கிராம், விட்டமின் B6  0.165 மில்லி கிராம், விட்டமின் B1 20 மைக்ரோ கிராம், போலேட் எசிட் 19 மைக்ரோ கிராம், கல்சியம் 39 மில்லி கிராம், அயன் 1.02 மில்லி கிராம், மெக்னீஸியம் 43 மில்லி கிராம், பொஸ்பரஸ் 62 மில்லி கிராம், பொட்டாஸியம்6 56 மில்லி கிராம், ஸின்க் 2.29 மில்லி கிராம், கொப்பர் 2.206 மில்லி கிராம், மென்கனீஸ் 0.262 மில்லி கிராம், செலேனியம் 3 மைக்ரோ கிராம் மற்றும் அனைத்து கொழுப்பு வகைகளும் 100 கிராம் ஈத்தம் பழத்தில் காணப்படுவதாக அறிவியல் கூறுகின்றது.
ஊட்டச்சத்துக்களில் சேராத நார்ச்சத்தும் (Fiber) குறிப்பிடத்தக்களவில் ஈத்தம் பழத்தில் காணப்படுகின்றது. மலச்சிக்கலிலிருந்து நிவாரணமளித்தல், உடலின் கழிவுகளை வெளிப்படுத்தல், உடலுக்கு அழகைக் கொடுத்தல் போன்றவை நார்ப்பொருளாலேயே நமக்குக் கிடைக்கின்றன. சுருங்கச் சொல்வதென்றால் ஒரு மனிதனுக்கு அன்றாடம் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும், பிற சத்துக்களும் சிறியளவு பேரீத்தம் பழங்களில் காணப்படுகின்றன என்று சொல்லலாம். இதனால்தான்மனித சமூகம் ஈத்தம் பழம், தண்ணீர் என்பவற்றுடன் மாத்திரம் வருடக்கணக்கு வாழலாம் - Modern-day scientists state that human beings can actually live for years on nothing more than dates and water”  என V. H. W. Dowson என்பவர் குறிப்பிடுகின்றார்.
இவர் கூறுவதற்கு முன்பே அந்தப் பாலைவன அரபு சமூகம் தமது உணவுத் தேவையை அதிகமாகப் பூர்த்திசெய்துகொண்டது ஈச்சம் பழத்தையும் பாலையும் கொண்டுதான். அவர்கள் திடகாத்திரமான உடற்கட்டுடையவர்களாகவும் இருந்தனர்.
விச, நஞ்சுகளிலிருந்து பாதுகாப்பு
தினந்தோறும் காலையில் ஏழு அஜ்வாபேரீச்சம் பழங்களைச் சாப்பிடுவருக்கு, அந்த நாளில் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் (புஹாரி 5445, 5768, 5769, 5779, முஸ்லிம் 5460, 5461, 5459, அபூதாவூத் 3876, முஸ்னதுல் ஹுமைதீ 70, அஹ்மத் 1571, 24735, முஸ்னதுல் பஸ்ஸார்: 1133)  ஆயிஷா (ரழி) அவர்களின் மற்றுமொரு அறிவிப்பில்மதீனாவின் ஆலியாஎன்ற பகுதியில் காணப்படும் அஜ்வாஈத்தம் பழத்தில் நோய்க்கு மருந்திருக்கின்றது. ஒவ்வொரு காலையிலும் அதைச் சாப்பிடுவது நஞ்சுக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.” (முஸ்லிம் : 5462) 
மற்ற ஈத்தம் பழங்களைவிடவும் இந்த அஜ்வா ஈத்தம் பழங்கள் மருத்துவக் குணம் மிக்கவை. அதனால்தான் நபியவர்கள் இதனைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். இந்த வகை அஜ்வா இன்றும் மதீனாவில் தாராளமாகக்கிடைக்கிறது. விலை சற்று அதிகம். அஜ்வா ஈத்தம் பழங்களைப் பற்றி ஆய்வு செய்த ஒரு யூதர் இதிலுள்ள உண்மைகளையுணர்ந்து இஸ்லாத்தைத் தழுவி இது தொடர்பில் நூலொன்றையும் எழுதியிருக்கிறார்.
பொதுவாக நச்சுத்தன்மையை நீக்கும் வேலையை நார்ச்சத்துக்களே(Fiber)  செய்கின்றன. அந்த நார்ச்சத்துக்கள் ஈத்தம் பழங்களில் காணப்படுகின்ற. அதேபோன்று நயாஸின் என்பது நச்சுத்தன்மைக் கெதிரான அதிசிறந்த பொருளாகும். இது ஒருவருக்கு ஒரு நாளைக்கு சில மைக்ரோ மில்லி கிராமளவில் தேவைப்படுகின்றது. இது 1.274 மில்லி கிராம் அளவில் ஈத்தம் பழத்தில் காணப்படுவதாக மேலே பார்த்தோம். இது போலத்தான் விட்டமின் B6 என்பதும் நச்சுத்தன்மைக் கெதிரான அதிசிறந்த விட்டமினாகும். இது 100 கிராம் ஈத்தம் பழத்தில் 0.165 அளவில் காணப்படுகின்றது. இது போலவே 100 கிராம் ஈத்தம் பழத்தில் போலேட் எசிட் 19 மைக்ரோ கிராம் காணப்படுகின்றது. இவ்வாறே 100 கிராம் ஈத்தம் பழத்தில் 3 மைக்ரோ கிராம் செலேனியம் உள்ளது. இதுவும் அதி சிறந்த சத்துக்களில் ஒன்றாகும்.
எனவே ஒருவர் ஒரு நாளைக்கு ஏழு அஜ்வா ஈத்தம் பழங்களைச் சாப்பிட்டால் அதில் காணப்படும் நார்ச்சத்து, நயாஸின், விட்டமின் B6, போலேட் எசிட், செலேனியம் போன்ற விஷேட சத்துக்ளிலிருந்து நச்சுத்தன்மை நீக்கும் சத்து நமக்குக் கிடைக்கின்றது என்பதை நபியவர்கள் சொன்ன செய்தியிலிருந்தும் இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளிலிருந்தும் எம்மால் அறிய முடிகின்றது.
இச்சத்துக்கள் மிக சொற்பளவிலேயே அன்றாடம் நமதுடலுக்கு அவசியப்படுகின்றது. அளவுக்கதிகமான இச்சத்துக்கள் நமதுடலில் காணப்படுமாயின் அது ஆபத்தாகிவிடும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அலவுக்கு மிஞ்ஞினால் அமுதமும் நஞ்சல்லவோ?
ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A (Cey)
Dip. in Psychological Counseling.
www.aliaalif.tk / aalifali@gmail.com

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...