"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 September 2014

கணவனக் காதலிப்பது எப்படி?

திருமணத்திற்கு முன்பு காதலன் சொல்கிறான் அன்பே! நீயின்றி நானில்லை.திருமணத்தின் பின்பு கணவன் கூறுகின்றான் மவளே! ஒன்னு நீ இருக்கனும்,  இல்ல நான் இருக்கனும்.

காதல் திருமணமோ, நிச்சயத் திருமணமோ எதுவானாலும் இன்று பெரும்பாலானோரின் திருமண வாழ்க்கை இவ்வாறுதான் உருண்டோடுகின்றது. மண வாழ்க்கைக்குள் நுழையும் முன்பு சுதந்திரப் பறவைகளாய் இருந்தவர்கள் திருமணத்தின் பின் கைதிகளாய்ச் சிறைப்பட்டுப் போவதாக உணர்கிறார்கள். இவர்கள் மணவாழ்வை குதூகலமாகக் கொண்டாடத் தெரியாதவர்கள்.

இந்த நிலை எமக்கு வேண்டாம்என்றுதான் மேற்குலகம் திருமணத்தைப் படிப்படியாக தவிர்த்து, மறுத்து வருகிறது. உடல் இச்சைகளைப் பூர்த்திசெய்துகொள்ள திருமண (Marriage Life) என்ற கட்டுக்கோப்புக்கு அப்பால் சென்று உடனிருத்தல் (Staying Together)> சேர்ந்து வாழ்தல் (Living Together)> Dating என்றெல்லாம் நவீனம் என்ற பெயரில் பல அழங்கார வார்த்தைகளில் விரசங்களைச் செய்துவருகின்றது. சந்ததிப் பெருக்கம் நடைபெற வேண்டுமா? அதற்கும் பிரத்தியேக ஏற்பாடுகளை அறிமுகம் செய்கின்றது. வாடகைத் தாய் (Mother for Rent)> பரிசோதனைக் குழந்தை (Test Tube baby)> க்ளோனிங் குழந்தை என்பன அதற்கான தீர்வென்கின்றது.தமது கருத்துக்களை நியாயப்படுத்துவற்காக திருமண வாழ்வை தப்பாகவும் பிழையாகவும் சித்தரிக்கும் பல்வேறு கூற்றுக்களை முன்வைத்துள்ளனர். அவை எமது சமூகத்திலும் பரவலடைந்து எமது வார்த்தைகளிலும் வாழ்க்கையிலும் அடிக்கடி வந்துபோகின்றன. மண வாழ்க்கையைப் பிழையாகச் சித்தரிக்கும் சில கருத்துக்களைப் பாருங்கள்.

திருமணமாகி முதல் ஆண்டில் கணவன் பேச மனைவி கேட்கிறாள், இரண்டாம் ஆண்டில் மனைவி பேச கணவன் கேட்கிறான், மூன்றாம் ஆண்டில் இருவரும் பேச பக்கத்து வீட்டார் கேட்கின்றனர்.

திருமணம் செய்துகொள்வதென்பது ஹோட்டலுக்குச் செல்வதுபோல. நமக்குப் பிடித்ததை ஓடர் செய்துவிட்டு பக்கத்து டேபல் பிளேட்டைப் பார்த்து அதையே ஓடர் செய்திருக்கலாமே என்று நினைப்பதுபோல.

கணவன் அமையும் வரை ஒரு பெண் கவலைப்படுகிறாள், மனைவி அமையும் வரை ஒரு ஆண் கவலையின்றி இருக்கிறான்.

திருமணம் ஒரு எலிப்பொறிபோல உள்ளே இருப்பவர்கள் வெளியே வரத் துடிக்கிறார்கள், வெளியே இருப்பவர்கள் உள்ளே புகத் துடிக்கிறார்கள்.”(பெர்னாட்ஷோ)குடும்பம் எனும் கோட்டையின் அத்திவாரமே திருமணம்தான். அவ் அத்திவாரத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டிருக்கும் இரண்டு பலமான தூண்கள்தான் கணவனும் மனைவியும். திருமணம் எனும் அத்திவாரத்தில் குடும்பம் எனும் கோட்டை வானுயர வேண்டுமா? கணவன், மனைவி எனும் இரு தூண்களும் திடமாக நிற்க வேண்டும்.  இதற்கு வலுச்சேர்ப்பது அன்புதான். ஒருவரை ஒருவர் அறிந்து, ஒருவரை ஒருவர்; புரிந்து ஒருவரை ஒருவர் காதல்செய்து வாழும்போதுதான் வாழ்க்கை இனிக்கும், ஜொலிக்கும்.

காதலர்களைப் பாருங்கள் காதல் என்ற போர்வையில் ஒருவர் மற்றவரைக் கவர்வாற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று. ஒருவர் மற்றவரது அன்பைப் பெறவும், தனது அன்பை மற்றவர்மீது சொரியவும் அளவில்லாது பாடுபடுகிறார்கள். உடையிலும், நடையிலும், பேச்சிலும் இதனை வெளிப்படுத்துகின்றார்கள். ஆனால் ஆகுமாக்கப்பட்ட மண வாழ்வில் ஏன் இந்த அர்பணிப்பை, தியாக உணர்வை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பரிமாரிக்கொள்ளாமல் இருக்கின்றார்கள்?இனிமையான, சந்தோசமான, மன நிம்மதியான திருமண வாழ்வின் சுகம் கிடைப்பது பணத்தின் மீதோ, ஆபரணங்களின் மீதோ, நில புலங்களின் மீது எழுந்துள்ள திருமணத்தில் அல்ல. அது அன்பின்மீது கட்டியெழுப்பப் பட்டிருந்தாலே ஒழிய. அதனால்தான் சந்தோசமான மண வாழ்வின் அடிநாதம் அன்பு என்பார்கள். திருமண உறவு அன்பினை அடிப்படையாகக் கொண்டது என்று பலகாலமாகப் பேசப்பட்டு வந்தபோதிலும் அண்மைக் காலம் வரை இந்த அன்புறவின் அமைப்புகள் பற்றி தெளிவாக ஏதும் சொல்லப்படவில்லை. இன்றைய உளவியல் ரீதியான ஆராய்ச்சிகளின் அடிப்படையில் திருமண அன்புறவானது மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டிருப்பதாக உளவியலாளர் ரொபர்ட் ஸ்டேர்ன்பேர்க் - (Robert Sternberg)தெரிவிக்கின்றார். நீங்கள் கணவனைக் காதலிக்கவும் கணவன் உங்களைக் காதலிக்கும்படி செய்யவும் இந்த அன்புறவின் முக்கோண அமைப்பை அறிந்திருப்பது சிறந்தது.

அன்புறவின் முக்கோண அமைப்பு - Triangular Model of Love

1.அர்ப்பணம் (Commitment)
2.அன்னியோன்யம் (Intimacy)
3.உடல் தொடர்புகள் (Passion/Physical Contact)1. அர்ப்பணம் (Commitment)

ஒரு ஆணும் பெண்ணும் திருமண வாழ்க்கையில் இணையும்போது தாம் இணைபிரியாமல் வாழ்வதாக தமக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கையே அர்ப்பணம்ஆகும். இது இஸ்லாமிய பரிபாஷையில் ஈஜாப்-கப10ல்எனப்படுகின்றது.

ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் ஒன்றிணையும்போது இந்த அர்ப்பண வாழ்வு ஏழவே சைய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துடன் ஆரம்பமாகின்றது. ஒவ்வொருவரும் மற்றவருக்காக தம்மை அர்பணித்து வாழும் ஓர் அற்புத வாழ்வு அங்கு ஆரம்பமாகின்றது. இதனால்தான் அல்குர்ஆன்  30:21 வசனத்தில் வானம், பூமி, நிறம், மொழி, இரவு, பகல், இடி, மின்னல், மழை என பல்வேறு விஞ்ஞான அற்புதங்களைக் கூறும் அதே தொடரில் திருமணத்தின் மூலம் ஏற்படும் அன்புறவிலும் அத்தாட்சிகள் இருப்பதாகக் கூறுகின்றான்.

அறிமுகமே இல்லாத இருவர் மண வாழ்வில் இணைந்து புது வாழ்வை ஆரம்பிக்கும்போது ஒருவருக்கொருவர் எந்தளவு அர்ப்பணங்களை செய்கிறார்கள். உண்மையிலே இது ஆச்சரியம்தான். இதனால்தான் அங்கு காதல் உருவாகின்றது. அர்பணத்தின் வாயிலாக வாழ்க்கை இனிக்கின்றது.

2. அன்னியோன்யம் (Intimacy)

ஸ்டேர்ன்பேர்க்கின் கருத்துப்படி அன்னியோன்யம் என்பது ஒருவரோடு ஒருவர் மிக அண்மித்து இருப்பதற்கான உளவியல் உணர்ச்சியைப் பெறுவதாகும். திருமணத்தின் ஆரம்ப நாட்களில் இவ் உணர்ச்சி கூடுதலாக வெளிப்படும். கணவனும் மனைவியும் எப்போதும் சேர்ந்திருக்கவும், இருவருமாகத் தனித்திருக்கவுமே, பயணங்கள் செல்லவுமே ஆசைப்படுவர். இது இயல்பானவொன்று. இவ் அன்னியோன்யத்தை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தலாம்:

1. உளப்பூர்வமாக மற்றவரை ஏற்று நடத்தல்.
2. ஒருவரை மற்றவர் உயர்வாகக் கருதுதல், மதித்து நடத்தல்.
3. ஒருவரின் நல்வாழ்வில் மற்றவர் அக்கரை செலுத்துதல்.
4. ஒருவரது மகிழ்ச்சியை மற்றவர் விரும்புதல்.
5. எச்சந்தர்ப்பத்திலும் ஒருவரை மற்றவர் நம்பி நடத்தல், நம்ப நடத்தல்.
6.  ஒருவரை மற்றவர் புரிந்துகொள்ளல்.
7.  தம் துணைக்காக நேரத்தை ஒதுக்குதல்.
8.  மனம் திறந்து, மனம் விட்டுப் பேசுதல்.
9.  ஒருவருக்கு ஒருவர் உணர்ச்சி பூர்வமாக ஆதரவு வழங்குதல்.
10 விட்டுக்கொடுத்தல், மன்னிப்புக் கேட்டல், மன்னிப்பு வழங்குதல்.

இத்தகைய அன்னியோன்ய உறவுத் தொடர்பை (Verbal Communication) மூலம் வெளிப்படுத்தலாம். உதாரணமாக கணவனைப் பார்த்து அடிக்கடி I Love You> I Like You, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, உங்க செயல்கள் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கு…” என்று கூறுதல். இத்தகைய அன்னியோன்யமான உறவுத் தொடர்புகளை கணவன் மணைவி இல்லற வாழ்வில் பேணுவதால் அதுவே நாம் ஆசைகொண்டிருக்கும் மன நிம்மதியையும் சந்தோசத்தையும் ஈட்டுத்தரும் ஒரு வாழ்க்கையாக இருக்கும். வாழ்க்கை ஜொலிக்கும்.

3. உடல் தொடர்புகள் (Passion/Physical Contact)

திருமணத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் மற்றுமொரு பிரதானமான அம்ஷம் இயற்கையான உடல் இச்சைகளை ஆகுமான முறையில் தீர்த்துக்கொள்ளுதல். ஐயறிவு படைத்த விலங்குகளுக்கு இதில் ஒரு பிரச்சினையும் இல்லை. விரும்பியவாறு, விரும்பிய இடத்தில் கூட முடியும். ஆனால் ஆரறிவு படைத்த மனிதனுக்கு இதில் சில விதிமுறைகள் உண்டு.இது ஓர் உணர்ச்சியாக இருப்பினும் உடல் சம்பந்தப்பட்டவொன்று. ஒருவரை ஒருவர் தொடுதல், தடவுதல், உரசுதல், சேர்தல், அணைத்தல், முத்தமிடல் போன்ற விடயங்களை இது உள்ளடக்கியுள்ளது. இவற்றையும் கடந்து உடல் புணர்ச்சி எனும் செயல்வரை இருவரையும் கொண்டு செல்லக்கூடிய உணர்ச்சி பூர்வமான அம்சமே உடல் தொடர்பாகும்.

அர்ப்பணத்தினதும் (Commitment) அன்னியோன்யத்தினதும் (Intimacy) உச்சகட்ட நிலை உடல் உறவாகும். மண வாழ்வில் ஒருவரை ஒருவர் காதல்செய்து, ஒருவரால் மற்றர் காதல்செய்யப்பட்டு வாழ்வதற்கு இந்த ன்று அம்சங்களையும் தெடராகப் பின்பற்றி வாருங்கள் மன வாழ்க்கையை குதூகலமாக அனுபவிக்கலாம். ஜொலிக்கச் செய்யலாம். இவை இல்லாதபோது வெறும் திருமணம் எனும் சம்பிரதாயமாக மட்டுமே அது இருக்கும்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...