"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

03 September 2014

ஆமடில்லோ எனும் அழுங்குகள்.

ஆமடில்லோ (Armadillo) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த உயிரினத்தில் பல விசேட பண்புகளை அல்லாஹ் வைத்திருக்கின்றான். பொதுவாக இது எமக்கு மிக அன்னியமான ஒரு உயிரினம். இதுவரை 20 வகையான அழுங்கினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது தமிழில் அழுங்கு என்று அழைக்கப்படுகின்றது. Armadillo என்பது ஸ்பானிய மொழிச் சொல்லாகும். இதன் விளக்கம் “little armored one” அதாவது சிறிய கவசத்தைக்கொண்ட ஒன்று என்பதாகும். அழுங்கின் மேற்புதறத்தில் ஆமையினதுபோன்ற ஓடு காணப்படுவதாலும் முதுகு முயலுடையது போன்று வளைந்து காணப்படுவதாலும் “turtle-rabbit” (ஆமை முயல்) என ஆங்கிலத்தில் செல்லமாக அழைக்கப்படுவதுண்டு.

உடலமைப்பு

அழுங்கின் விஷேட அம்சமே அதன் உடலமைப்புதான். கவச ஆடை அணிந்து போருக்குத் தயாராயிருக்கும் ஒரு போர்வீரனைப் போன்று இவற்றின் தோற்றம் காட்சியளிக்கின்றது. நீண்ட முக அமைப்பையும் அதன் நுனியில் மூக்கும், வாயும் அமைந்துள்ளது. இரண்டு பக்கமாக இரு கண்கைளயும் சிறிய இரண்டு காதுகளையும் கொண்டுள்ளன. அவற்றின் தலை கடினமான ஓடுபோன்ற தசை அமைப்பைக் கொண்டுள்ளது.

புஜம் உற்பட முதுகுப் பகுதியையும் பிற்பகுதியையும் முழுமையாக ஒரு ஓடு மூடியிருக்கின்றது. ஓட்டின் முன், பின் பகுதிகள் சாதாரணமாகவும் நடுப்பகுதி வளைந்து கொடுக்கக் கூடிய அமைப்பில் மடிப்பு மடிப்பாகவும் ஆக்கப்பட்டுள்ளன. சிறு பருவத்திலிருந்து அவற்றின் வளர்ச்சிக்கு ஏற்ப மடிப்புகளின் எண்ணிக்கையும் ஒன்பது வரை அதிகரிக்கும். எதிரியிடமிருந்து தப்பிப்பதற்காக சுருண்டுகொள்வதற்கு இம்மடிப்புகளே உதவுகின்றன.

அழுங்கின் வாலைச் சுற்றியும் கடினமான ஓடு அமைந்துள்ளது. ஒரு வகை அழுங்கினம் மரமேறும் ஆற்றல் பெற்றவை. அவற்றின் கால்களும் வாலும் மரங்களில் ஏறி இறங்க உதவுகின்றன. அதன் வயிற்றுப் பகுதியில் இத்தகைய ஓடு காணப்படுவதில்லை. அது மென் தசையாலானது. அடிப்பகுதியில் மயிர்கள் நிறைந்திருக்கும். அழுங்கு கடினமான தரையிலோ, கற்களின் மீதோ, முற் புதர்களின் மீதோ நகர்கையில் வயிற்றுப் பகுதி பழுதடையாதிருக்க இம் மயிர்கள் காக்கின்றன.

அவற்றின் நான்கு கால்களிலும் முன் கால்கள் பின் கால்களைவிட மெலிதானதாகவும் நீண்டதாகவும் இருக்கும். முன் கால்களில் நான்கு விரல்களும் பின் கால்களில் ஐந்து விரல்களும் காணப்படுகின்றன. ஒவ்வொரு விரலிலும் உள்ள நகங்கள் கூர்மையானவை. இக்கால்களைப் பயன்படுத்தி இவற்றால் மூன்று முதல் நான்கு அடி தூரம் பாயவும் முடியும். அதேபோன்று முன்னங்கால்களைத் தூக்கி பின்னங்களால்களில் நின்று எட்டிப் பார்க்கவும் செய்கின்றன.

சராசரியாக அழுங்குகள் தலை முதல் வால் வரை 75 செ.மீ. வரை வளரும். ஆபிரிக்க்க் காடுகளில் வாழும் ஒருவை பெரிய அழுங்குகளின் நீளம் 150 செ.மீ. களாகும். 59 கி.கி. நிறை கொண்டதாகவும் இருக்கும். இவையே அழுங்கினத்தில் பெரியவை. இவை கருப்பு, சாம்பல், சிவப்பு, மஞ்சள் நிறங்களில் காணப்படுகின்றன.

உணவு முறை

அழுங்குகள் கூர்மையான தமது முன் கால் நகங்களைப் பயன்படுத்தி ஈரப்பதனுள்ள நிலத்தையும், பாம்புப் பொந்துகளையும் எறும்பு மற்றும் கரையான் புற்றுகளையும் கிளரித் தோன்டுகின்றன. அப்போது வெளியாகும் புழு, எறும்பு, கரையான்களை விரும்பி உண்கின்றன. அவற்றின் நீண்ட நாவும் அதில் இருக்கும் விஷேடமான ஒட்டும் தன்மைகொண்ட எச்சிலும் இதற்கு உதவுகின்றன. எறும்பு அல்லது கரையான் புற்றினுள் அவற்றின் நீண்ட நாவைச் செலுத்தி ஒரு சுற்றுச் சுற்றி எடுத்தால் போதும் அனேகமான உணவு அதிலே ஒட்டிவரும். இவை தவிர சிறு வண்டுகளையும் பூச்சிகளையும் குறைந்தளவில் தாவரங்களையும், பழங்களையும் உணவாக்குகின்றன.

தமது முகத்தை மண்ணில் புதைத்து அதிலே புதைந்திருக்கும் புழு, பூச்சிகளை தேடி உண்ணும் போது அழுங்குகள் சுமார் 6 நிமிடங்கள் வரை மூச்சுவிடாமல் இருக்கும். இது அல்லாஹ் இவற்றுக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஒரு அமைப்பு. மண்ணில் மட்டுமன்றி நீருக்கு அடியால் நீந்திச் செல்லும்போது இவை மூச்சுவிடாமலிக்க இது உதவுகின்றது.

பகற்பொழுதில் ஆழமான வளைகளில் படுத்திருக்கும் அழுங்கு இரவில்தான் வெளியில் நடமாடும். ஒரு நாளில் சுமார் 16 மணி நேரங்கள் வரை படுக்கையில் இருக்கும். பகற்பொழுதை விடவும் இரவில் அவற்றுக்குக் கண்பார்வை அதிகம் என்பதாலும், வேட்டை விலங்குகளின் ஆபத்து இரவில் குறைவு என்பதாலும் இரவில் பனி படர்வதால் தமக்கான உணவை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதாலும் இத்திட்டத்தை கையாள்கின்றன. பார்வைச் சக்தியை விட மோப்ப சக்தி அதிகம் என்பதால் உணவு வேட்டைக்கு மோப்ப சக்தியே அதிகம் பயன்படுகின்றன.

வாழிடமும் வாழ்க்கை முறையும்

அழுங்குகள் வட, தென் அமெரிக்க காடுகளிலும். ஆபிரிக்க இந்திய வனாந்தரங்களிலும் அதிகமாக வாசம் செய்கின்றன. மழைக் காடுகள், புல்வெளிகள், சிறு பாலை நிலங்கள் போன்ற இடங்களில் இவற்றைக் காணலாம். குளிர் என்பது இவற்றின் எதிரி என்பதால் குளிர் பிரசேதங்களில் இவற்றைக் காண முடியாது. அதிகமான சந்தர்ப்பங்களில் தமது வாழிட வளைகளை நீரோடைகள், குலங்கள், ஆற்றுப் பள்ளத்தாக்குகளை அண்டிய பகுதிகளில் ஈரமான மணல் மேடுகளில அமைத்துக்கொள்கின்றன. இத்தகைய புவியியல் அமைப்பைத் தேர்ந்தெடுக்க்க் காரணம் அவற்றால் வளைகளை இலகுவாகத் தோண்ட முடியும் என்பதாலும் இலகுவாக வாக உணவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதாலும்தான். தமது முன் கால்களில் உள்ள கூரிய நகங்களைப் பயன்படுத்தி வளைகளைத் தோண்டுகின்றன. முன்கால் மண்ணைத் தோண்டி பின்னே தள்ள பின் கால்கள் அவற்றைப் பலமாக வளையிலிருந்து வெளியே தள்ளுகின்றன. இவை தனித்து வாழும் விலங்கினம் என்பதால் தமது வளைக்குள் வேறு எந்த அழுங்கையும் நுழைய விடுவதில்லை.

பெண் அழுங்குகள் இனப்பெருக்க காலத்தில் மட்டும் ஆணுடன் இணைந்து விட்டு கருத்தரித்த்தும் மீண்டும் பிரிந்து தன் வாழ்க்கையை தனியாகவே கழிக்கும். கருத்தரித்து சுமாராக 120 நாட்களில் குட்டியை ஈனும். குட்டி அழுங்கு மென்மையான மயிர்களுடன் மிகச் சிரிய பருமனில் காணப்படும். இவை பாலூட்டியே தமது குட்டிகளை வளர்க்கும். விலங்குகளில் முதுகில் ஓட்டைச் சுமந்த பாலூட்டி வகை இவை மட்டும் என்பதால் இவற்றுக்கு தனிச் சிறப்பிடம் உண்டு. 12 மாதங்களில் அவை இளம் பருவத்தை அடைகின்றன. அதன் பின்பு தாயிடமிருந்து பிரிந்து சுயமாக வாழப் பழகிக்கொள்ளும்.

பாதுகாப்புப் பொறிமுறை

நாம் சாதாரணமாகக் காண்கின்ற ஆமையிலும் ஓட்டு நத்தையிலும் இந்த தந்திரம் உண்டு. ஆபத்து என்று உணர்ந்ததும் அவை தலையையும் கால்களையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டு பக்குவமாக ஒளிந்துகொள்கின்றன. சாதாரணமாக இருக்கும் அழுங்கு தனக்கு ஆபத்து ஏற்படுவதாக உணர்ந்தால் உடனே தனது தலையை வயிற்றோடு ஒட்டி, மடக்கி வாலைச் சுருட்டி, கால்களையும் முகத்தையும் உள்ளே இழுத்து  உடலை பந்து போல சுருட்டிக் கொள்கிறது. அதன் ஓட்டுப் பகுதிகள் அனைத்தும் வெளிப் புரத்தில் அரணாக நிற்க அதன் வயிற்றுப் பகுதி உள்ளே சுருண்டு பாதுகாப்பாக அடங்கிவிடும். பார்ப்பதற்கு அதன் தோற்றம் தேங்காய் போலவே இருக்கும். இந்தத் தந்திரத்தின் மூலம் அழுங்கு எதிரியிடமிருந்து உயிர் தப்பிக் கொள்கிறது. அத்தோடு இவற்றின் மேலோடுகள் கடினமானவை என்பதால் வேட்டை விலங்குகளால்கூட அதனை உடைக்க முடியாது.

இத்துனை மிக நுட்பமான அமைப்புகளுடன் வியக்கத்தக்க குணவியல்புகளுடன் ஒவ்வொரு படைப்பையும் படைப்பது அல்லாஹ்வுக்கு மிக எளிதான காரியம்.

إِنَّمَا قَوْلُنَا لِشَيْءٍ إِذَا أَرَدْنَاهُ أَن نَّقُولَ لَهُ كُن فَيَكُونُ
ஏனெனில் நாம் ஏதேனும் ஒரு படைப்பை (உண்டு பண்ண) நாடினால் நாம் அதற்காகக் கூறுவது, “குன்என்பது தான். உடனே அது உண்டாகிவிடும். [16:40]

மனிதன் இப்போதுதான் பூமியில் வாழும் ஒவ்வொரு விலங்குகளையும் கண்டு, அறிந்து, ஆராய்ந்து என்ஸய்கலோபிடியா போன்ற புத்தகங்களில் தொகுத்து, பதிந்து வருகின்றான். இன்னும் முடிந்தபாடில்லை. இன்னும் நாம் கண்களால் காணாத எத்தனையோ உயிரினங்கள் இப்புவியில் உள்ளன. அவற்றில் சொற்பமானவற்றையே நாம் கண்டறிந்துள்ளோம்என்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் கருத்து. உண்மையில் நாம் அவை பற்றி எழுதினோமோ இல்லையோ எல்லாம் வல்ல படைப்பாளன் அல்லாஹ் அவற்றைப் படைக்கும் முன்பே ஒவ்வொரு படைப்பு பற்றியும் அவற்றின் வாழ்க்கை முறை, செயற்பாடுகள், இறப்பு, பிறப்பு உணவுமுறை என அனைத்தையும் ஒன்று விடாமல் அவனது லவ்ஹுல் மஹ்பூல் எனும் பதிவுப் புத்தகத்தில் எழுதிவைத்துள்ளான். அவன் சர்வ வல்லமை படைத்தவன்.

இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகியே) இருக்கின்றன. [11:6] [6:59] [10:61]

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...